சிரியா, உக்ரைன் விவகாரங்களை தொடர்ந்து மீண்டும் கடந்த சில நாட்களாக இராக்கில் நடக்கும் பயங்கர மோதல்கள் உலகம் முழுவதும் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்துள்ளன.கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக, மனிதகுல நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்று என போற்றப்படும் இராக்கில் அமைதி இல்லை; போர், மேலும் போர், குண்டுவெடிப்புகள், மீண்டும் உள்நாட்டுப் போர்... ரத்தவெள்ளத்தில் ஆயிரமாயிரமாய் அப்பாவிகள் இரையாவது தொடர் கதையாக மாறியிருக்கிறது.மீண்டும் இதோ, இராக்கில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசுக்கும், அதற்கெதிராக செயல்படத் துவங்கியுள்ள - மிகப்பெரும் பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்துள்ள ஒரு அமைப்புக்கும் இடையில் மிகப் பெரும் மோதல் - கலவரம் வெடித்துள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால், இராக்கின் தற்போதைய அரசாங்கமும், அதை எதிர்த்து பயங்கர வன்முறையை துவக்கியுள்ள அமைப்பும் - இரண்டுமே அமெரிக்காவின் கைக்கூலிகள் என்பதுதான்.திங்கள், 16 ஜூன், 2014
பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்
சிரியா, உக்ரைன் விவகாரங்களை தொடர்ந்து மீண்டும் கடந்த சில நாட்களாக இராக்கில் நடக்கும் பயங்கர மோதல்கள் உலகம் முழுவதும் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்துள்ளன.கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக, மனிதகுல நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்று என போற்றப்படும் இராக்கில் அமைதி இல்லை; போர், மேலும் போர், குண்டுவெடிப்புகள், மீண்டும் உள்நாட்டுப் போர்... ரத்தவெள்ளத்தில் ஆயிரமாயிரமாய் அப்பாவிகள் இரையாவது தொடர் கதையாக மாறியிருக்கிறது.மீண்டும் இதோ, இராக்கில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசுக்கும், அதற்கெதிராக செயல்படத் துவங்கியுள்ள - மிகப்பெரும் பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்துள்ள ஒரு அமைப்புக்கும் இடையில் மிகப் பெரும் மோதல் - கலவரம் வெடித்துள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால், இராக்கின் தற்போதைய அரசாங்கமும், அதை எதிர்த்து பயங்கர வன்முறையை துவக்கியுள்ள அமைப்பும் - இரண்டுமே அமெரிக்காவின் கைக்கூலிகள் என்பதுதான்.செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012
உயிர்காக்கும் மருந்தில் பன்னாட்டு படையெடுப்பு
திங்கள், 30 ஜனவரி, 2012
உங்களுக்கு தெரியாத கியூபாவின் உண்மைகள்
திங்கள், 9 ஜனவரி, 2012
‘மீண்டும் மீண்டும் கூடாரம் அமைப்போம்!’
வெள்ளி, 18 நவம்பர், 2011
அடுத்த சதிவேலையைத் துவக்கிய அமெரிக்கா
சனி, 22 அக்டோபர், 2011
“முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை”: ஜூனியர் விகடன்
றிக்கொள்ளும் கலாச்சாரம் அங்கு உரு வெடுத்து வருகிறது.
வியாழன், 13 அக்டோபர், 2011
வால் ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்!
டல்லாஸ், அட்லாண்டா, சியாட்டில் மற்றும் பாஸ்டன் ஆகிய நகரங்களில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங் களைக் கலைக்க காவல்துறை யினர் வன்முறையையே கை யாண்டிருக்கிறார்கள். பாஸ் டனில் 130 பேர் கைது செய் யப்பட்டனர். “எழுச்சி பெறு சிகாகோ கூட்டணி” சார்பில் சிகாகோ நகர வீதிகளில் பெருந்திரள் பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்தப் பேரணி யை சீர்குலைக்கும் நோக்கத் தில் 27 பேர் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.ஞாயிறு, 9 அக்டோபர், 2011
அமெ. தொழிலாளி வர்க்கத்தால் நொறுங்கி விழும் அமெரிக்கா
வெள்ளி, 9 செப்டம்பர், 2011
ஏகாதிபத்தியத்தின் எண்ணெய் அரசியல்
பெட்ரோலிய எண்ணெய் வளம் நிரம்பிய பகுதி களை தனது ஆதிக்கத்துக்குள் வைத்திருப் பது என்ற ஒரு கொள்கையை அமெரிக்க அரசு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடித்து வருகிறது. 1973ம் ஆண்டில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், ஓபெக் என்ற அமைப்பை ஏற்படுத்தி எண்ணெய் விலையைத் தாங்களே நிர்ணயிப்போம் என்று அறிவித்தன. இதனால் ஏறிய தாறுமா றான விலையேற்றக்காலம் எண்ணெய் அதிர்ச்சிக்காலமாக அழைக்கப்படுகிறது. எண்ணெய் வளப்பிராந்தியம் எப்போதுமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அமெரிக்கா அப்போதே வகுத்துவிட்டது. வேறு அந்நிய நாடு எதுவும் வளைகுடாப் பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முய லுமானால் அது அமெரிக்காவின் முக்கிய நலன்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குத லாகக் கருதப்படும். இதனை எதிர் கொள்வ தற்கு ராணுவபலத்தைப் பயன்படுத்தவும் அமெரிக்கா தயங்காது என்று அன்றைய அமெரிக்க அதிபரான ஜிம்மி கார்ட்டர் ஒரு கொள்கைப் பிரகடனத்தையே வெளியிட்டார். தனது மண்ணில் பெட்ரோலிய எண்ணெய் யை சுமந்திருக்கும் எந்தவொரு நாட்டிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ராணுவ பலத்தை பயன்படுத்தியோ, அவ்வாறின் றியோ குறுக்கிடும் கொள்கையை அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது. இராக்போர் தொடங்கி இன்றைய லிபிய யுத்தம் ஈறாக அனைத்து போர்களும் எண்ணெய் வளத்தை தனது கட் டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அமெரிக்கா வும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் நடத்தி யுள்ள யுத்தங்களே.
சவுதி அரேபியா, குவைத், கத்தார் போன்ற சில நாடுகளின் பிற்போக்குத்தனமான மன் னராட்சிகளுக்கு முட்டுக்கொடுத்து, ராணுவ உதவி போன்றவற்றை வழங்குவதன் மூலம் அவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் அமெ ரிக்கா வைத்துள்ளது. ஆனால் எண்ணெய் வளத்தை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய எண்ணெய் கம்பெனிகளின் சூறையாடலுக்கு அனுமதிக்காத நாடுகளில் ஆட்சிமாற்றத் தைக்கொண்டுவருவதையே தனது லட்சிய மாகக்கொண்டு அமெரிக்கா செயல்பட்டு வரு கிறது. 1953ல் ஈரான் நாட்டு அதிபரான முகமது மொசாதே தனது நாட்டின் எண்ணெய்த் தொழி லை தேசியமயமாக்கினார் என்பதற்காக சிஐஏவினால் பின்னாலிருந்து இயக்கப்பட்ட அதிரடிப்புரட்சி மூலம் அகற்றப்பட்டார்.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண் ணெய் வளநாடான இராக்கில் நடந்தது என்ன என்பதை உலகம் அறியும். பேரழிவு ஆயுதங் களை இராக் குவித்துள்ளது என்ற அப்பட்ட மான பொய்யைப்பரப்பி சதாம் உசேனின் ஆட்சி அகற்றப்பட்டது. தனது எண்ணெய் வளத்தின் பலன்களை தனது நாட்டு மக்களே அனுபவிக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததே அவர் இழைத்த குற்றம். அதற்காக இராக்கின் மீது திணிக்கப்பட்ட யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான இராக்கியர் கள் கொல்லப்பட்டனர்; சதாம் உசேனின் ஆட்சி அகற்றப்பட்டது.புதன், 17 ஆகஸ்ட், 2011
முழுகும்அமெரிக்கா திருந்தாத இந்தியா
தர நிர்ணய வரலாற்றில் முதல்முறை யாக அமெரிக்க அரசாங்கத்தின் கடன் தரம்மிக உயர்ந்த AAA நிலையிலிருந்து AA+ என ஒரு படி கீழிறக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் என்ற தர நிர்ணய நிறுவனம் இதைச் செய்திருக்கிறது. (அமெரிக்கா வில் 2008ல் திவாலான பல கம்பெனி களுக்கு, அதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை உயர்நிலை தரச்சான்று வழங்கி, அதனால் சந்திசிரித்த நிறுவனமே இது என்பது தனிக்கதை) அமெரிக்க அரசின் கடன் அளவு 14.3 டிரில்லியன் (இலட்சம் கோடி) டாலர் அளவினைத் தாண்டிய நிலையில், ஆளும் ஜனநாயகக் கட்சிக் கும், எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சிக் கும் இடையில் சட்டப்பூர்வமான கடன் உச்சவரம்பினை உயர்த்துவது குறித்த சர்ச்சை நடந்துகொண்டிருக்கும் நிலை யில்தான் இந்தக் கீழிறக்கம் நடை பெற்றிருக்கிறது. இதையடுத்து, அமெரிக் காவில் மட்டுமல்லாது இந்தியா உட்பட உலக முழுவதுமுள்ள பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. முதலில் அமெரிக்கக் கதையினைப் பார்ப்போம்.சர்ச்சையும் சமரசமும்!
அமெரிக்காவின் கடன் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துகொண்டே வருவது ஒன்றும் புதியதல்ல. 1917ம் ஆண்டில் அரசாங்கக் கடனுக்கான உச்சவரம்பு குறித்து ஒரு சட்டம் இயற்றப்பட்டது. சுமார் 43 பில்லியன் (4300 கோடி) டாலரில் தொடங்கிய அந்த உச்சவரம்பு, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வந்தது. 1980களில் பெரு மளவு வரிக்குறைப்பு செய்ததன் விளை வாக, ரீகன் ஆட்சிக்கால முடிவில் கடன் 3 டிரில்லியன் (3 இலட்சம் கோடி) டாலரைத் தொடும் நிலைக்குச் சென்றது. நவீன-தாராளவாதக் கொள்கைகள் காரணமாக தொடர்ந்த வரிக்குறைப்பு 2010 பிப்ரவரியில் இந்த நிலையினை உருவாக்கியிருக்கிறது. வரி வருமானத் திற்குப் பதிலாக கடன் வாங்குவது அர சுக்கு வழக்கமாக மாறியது. அக்டோபரில் தொடங்கி மறு ஆண்டு செப்டம்பரில் முடியும் அமெரிக்கப் பட்ஜெட்டில் சென்ற ஆண்டில் அனுமதிக்கப்பட்ட நிதி ஒதுக் கீடுகள் தீர்ந்துவிட்ட நிலையில், இவ் வாண்டு ஆகஸ்ட் 2க்குள் கடன் வரம்பு உயர்த்தப்படாமல், தனது ஊழியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டது. இப்பின்னணியில் தான் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கு மிடையில் சர்ச்சை முற்றியது. இறுதியில் 2 டிரில்லியன் (இலட்சம்கோடி) டாலர் கடன் அளவினை உயர்த்துவது என்றும், 3 டிரில்லியன் (இலட்சம் கோடி) டாலர் அரசுச்செலவினங்களைக் குறைப்பது எனவும் இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு சமரசம் ஏற்பட்டது. இந்த பரஸ் பர சமரசம் குறித்து சிலர் அமெரிக்காவில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். இது ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை.
பாதிப்பு யாருக்கு?
கடன் உயராமல் இருப்பதற்கு, ஒன்று வரி விதிக்க வேண்டும் அல்லது செல வினங்களை குறைக்க வேண்டும். வரியை உயர்த்துவதற்குக் குடியரசுக்கட்சி தயாராக இல்லை. செலவினங்களைக் குறைப்பதற்கு ஜனநாயகக் கட்சி தயாராக இல்லை. ஆனாலும் இறுதியில் குடி யரசுக்கட்சியே வெற்றிபெற்றது. அரசுச் செலவுகள் வெட்டப்படுவதில் பெரும் பகுதி மருத்துவ உதவி, உணவுக்கூப்பன், கல்வி மானியங்கள், வேலையின்மைக் கால இழப்பீடுகள் போன்ற சமூகப் பாது காப்புத்திட்டங்களே. எனவே இயல்பாக ஏழை எளிய மக்களின் வாழ்நிலை யினை மிகவும் பாதிக்கும் சமரசமே இது. வாஷிங்டன் போஸ்ட் - ஏ.பி.சி நடத்திய கருத்துக்கணிப்பில் வரிகளை உயர்த்த வேண்டும் என 72 சதவீத மக்களும், உயர்த்தக்கூடாது என 27 சதவீதத்தின ரும் கூறியிருக்கிறார்கள். வரி உயர்வை எதிர்ப்பவர்கள் செல்வந்தர்கள். இருப்பி னும் சமரசம் என்ற பெயரில், ஏழைகளின் நலன்களை காவு கொடுப்பதென ஒபாமா முடிவு செய்துவிட்டார். வளர்ச்சியடைந்த பல நாடுகளுடன் ஒப்பிடும்போது 40 சதவீத அதிகச்செலவு கொண்ட அமெ ரிக்க மருத்துவத்துறையில் செயல்படும் பகாசுர மருந்துக்கம்பெனிகள், நிதி நிறுவனங்கள் பலவும் இந்த முடிவினை நிர்ப்பந்தித்தவர்களில் முக்கியமானவை. கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்களின் வருமானம் 18 சதவீதம் அதிகரித்திருக்கிறது. மறுபுறத் தில் உழைக்கும் மக்களின் வருமானம் 12 சதவீதம் குறைந்திருக்கிறது. வேலையின் மை அதிகரித்து வருகிறது. ஆனாலும், இதுதான் சரியான முடிவு என சிலர் வாதிட்டு வருவது துரதிருஷ்டமே.
மாற்று வழிகள்
இந்த 1917 சட்டத்தில் கடன் வரம்பு, சதவீத அடிப்படையில் அல்லாமல், தொகை அடிப்படையில் குறிப்பிடப்பட் டுள்ளது. இது ஒரு தேவையற்ற சட்டம். இதில் இரண்டு ஓட்டைகள் உள்ளன. ஒன்று, ஒவ்வொரு ஆண்டும் நிதிப்பற்றாக் குறை உயரும்போது கடன் தொகையின் அளவு உயரும். இரண்டாவது, அரசின் வரி வருமானம் உயர்ந்தாலும் கூட, அர சின் செலவுகள் உயரும் நிலையில் கடன் தொகையின் அளவும் உயரத்தானே செய்யும்? தொகை அளவில் உச்சவரம்பு என்பதற்கு ஏதாவது பொருள் உண்டா? ஐரோப்பிய நாடுகளிலும், நமது நாட்டிலும் நிதிப்பற்றாக்குறை (=அரசுக்கடன் உச்ச வரம்பு) மொத்த உள்நாட்டு வருமானத் தில் (ழுனுஞ) இத்தனை சதவீதம் என்று தான் குறிப்பிடப்படுகிறது. நம் நாட்டில் நிதிப்பொறுப்பு மற்றும் பட்ஜெட் நிர்வாக (குசுக்ஷஆ) சட்டத்தில் நிதிப்பற்றாக்குறை 6 சதவீதம் என உச்சவரம்பு இடப்பட்டிருக் கிறது. அந்த ழுனுஞ சதவீத அடிப்படையில் பார்த்தால், இன்று அமெரிக்காவின் கடன் 100 சதவீதத்திற்கு மேல் எகிறிவிட்டது. (அதாவது ழுனுஞ 14.53 டிரில்லியன் டாலர், கடன் அளவு 14.58 டிரில்லியன் டாலர்). 1945க்கும் 1950க்கும் இடைப்பட்ட காலத்தில் அது 120 சதவீதம் வரையிலும் கூட சென்றிருக்கிறது. இன்றைய நிலை மையும் ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல, அப்படியானால், இன்று ஏன் அது இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறியது?
ஒபாமா அரசிற்கு மாற்று வழிகள் இல் லாமல் இல்லை. ஒன்று வரிகளை உயர்த் தியிருக்க முடியும். அல்லது டாலர் கரன் சியினை அச்சடித்திருக்க முடியும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் - இல் இருக்கும் அரசுக்கடன் பத் திரங்களின் மதிப்பு 1.7 டிரில்லியன் டாலர். இதற்கு இணையாக கரன்சியினை அச்சடித்தால் அது கடன் என்ற கணக் கில் வராது. வரம்பிற்கு அதிகமாக 1.5 டிரில்லி யன் டாலரே அதிகம் இருக்கும் நிலை யில், கடனை எளிதில் சமாளித்திருக்க முடியும். ஆபிரகாம் லிங்கன் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுப்போர் காரணமாக பொருளாதார மந்தம் ஏற்பட்ட நிலையில் அவர் டாலர் நோட்டுக்களை அச்சடித் துத்தான் நிலைமையினைச் சமாளித் தார். அன்று அந்த அரசு அடித்த டாலர் கரன்சிக்கு கிடைத்த ‘கிரீன் பேக்’ (ழுசநநn க்ஷயஉம) என்ற பெயர்தான் இன்றுவரையி லும் நீடிக்கிறது. இன்று பணவீக்கம் மிகக் குறைந்த நிலையில் இருக்கும்போது இதைச்செய்வதில் தடையேதுமில்லை. ஆனால், ஒபாமாவிற்கு ஏன் இந்தத் தயக்கம்?
ஒபாமா என்ற தனி நபரின் நடத்தை சம்பந்தப்பட்ட விஷயமாக இதைப் பார்ப்பதில் பயனில்லை. அமெரிக்காவின் இரண்டு கட்சிகளும் ஆளும் வர்க்கங் களின் பிரதிநிதிகளே என்பதை இங்கு மறக்கக்கூடாது. அமெரிக்காவின் முதலா ளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்பான அம்சமாகவே ஒபாமா இதைப்பார்க்கிறார். சென்ற ஆண்டு பட்ஜெட்டில் வரிகளை உயர்த்தக்கூடாது என்று குடியரசுக்கட்சி வைத்த கோரிக் கையினை ஒபாமா ஏற்றுக்கொண்டார். இவ்வாண்டு கடன் வரம்பு உயர்விற்கு அவர்கள் உடன்படுவார்கள் என்ற நம்பிக் கையில் அவர் அதைச்செய்தார். ஆனால் குடியரசுக்கட்சியினர் வரி குறித்த வாக்குறுதியினைப் பெற்றுக்கொண்டு, இப்போது சமூகப்பாதுகாப்புத் திட்டச் செலவுகளைக் குறைப்பதற்கும் நிர்ப்பந் தித்திருக்கிறார்கள். 2008 நெருக்கடி நிலைமையினையொட்டி அன்று திவால் நிலையிலிருந்த நிதி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் கோடி டாலருக்கு மேல் நிவாரணம் அளித்த பின்னணியில் தான் மொத்தக்கடன் அளவு உயர்ந்தது என்ற பேருண்மை யினையும் அவர்கள் மறந்துவிட்டார்கள். இன்று ஏழை எளிய மக்களுக்குக் கிடைத்துவரும் சமூகப்பாதுகாப்பின் மீது கைவைக்கும் நிலைமைக்குச் சென்றி ருக்கின்றனர். தங்களது ஊதாரித்தனத் தினால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் பழிவாங்கும் வஞ்சகம் என்பதைத் தவிர இது வேறென்ன?
மூன்று வகை பாதிப்பு!
இந்த சமரச ஒப்பந்தத்தின் விளை வாக, அமெரிக்க சமூகம், அமெரிக்க அர சியல், உலகப்பொருளாதாரம் என மூன்று தளங்களில் பாதிப்புகள் அமையும். ஒன்று, அமெரிக்க சமூகத்தில் மக்களின் வருமான பகிர்மானத்தில் ஒரு கடுமை யான பின்னடைவு ஏற்படும். சமூகப்பாது காப்புத்திட்டங்கள் வெட்டிச்சுருக்கப்படு கிறபோது அதற்கான செலவுகளை பய னாளிகள் ஏற்கும் நிலைமை ஏற்படும். அவர்களது செலவுகள்கூடும். மறுபுறத் தில் கல்வி, மருத்துவம், இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் செயல்படும் நிறு வனங்களின் கொள்ளை லாபம் அதிகரிக் கும். 1929ம் ஆண்டில்,அமெரிக்காவின் 1 சதவீத மேட்டுக்குடியினரின் வருமானம் 23 சதவீதமாக இருந்தது. இதுவே 1980களில் 9 சதவீதமாகக் குறைந்தது. அதாவது, உழைப்பாளி மக்களின் எழுச் சியின் விளைவாக 50 ஆண்டுகளில் மிகப்பெரும் செல்வந்தர்களிடமிருந்து 14 சதவீத வருமானம் சாமானிய மக்களின் கைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், மீண்டும் 2001ல் அந்த 1 சதவீத மேல்தட்டு வருமானம் 23 சதவீதமாக மாறியது. அதாவது, நிதி மூலதனத்தின் நிர்ப்பந்தங்களின் பின்னணியில் அம லாக்கப்பட்ட நவீன-தாராளவாதக் கொள் கைகளின் காரணமாக 14 சதவீதம் மீண் டும் சாமானியர்களிடமிருந்து தட்டிப்பறிக் கப்பட்டுவிட்டது. இந்த சமரச ஒப்பந்தம் உள்நாட்டில் மக்களின் வாங்கும் சக்தியி னைக் குறைக்கும். அதனால் ஏற்படும் பின்னடைவு, பொருளாதார மந்தம், உற்பத்திக்குறைவு, வேலையின்மை ஆகியவற்றினை மேலும் விரிவுபடுத்தும்.இரண்டாவது, அமெரிக்க அரசியல் தீவிரமாக வலதுசாரித் திசைக்குள் செலுத்தப்படுகிறது. நிதி மூலதனம் அரசின் நலத்திட்டங்களை எப்போதும் ஏற்பதில்லை. சோவியத் யூனியன் காலத்தில் ஏழைகளுக்கு ஆதரவானவர் கள் போன்று வேடம் தேவைப்பட்ட காலம் மறைந்துவிட்டதால், இப்போது அதி தீவிர வலதுசாரித் திசைக்கு அமெரிக்க அரசி யல் திட்டமிட்டுத் திருப்பப்படுகிறது.
மூன்றாவது, உலகப்பொருளாதார மந்தத்தினை இது மேலும் ஆழப்படுத் தும், தென்னை மரத்தில் தேள் கொட்டி னால் பனை மரத்திற்கு நெரி கட்டுமா என சம்பந்தமில்லாத இரண்டு சம்பவங்கள் குறித்து வேடிக்கையாய் பேசுவார்கள். ஆனால், இன்று நிதி மூலதனம் அத்த கைய சம்பந்தத்தினை உலகம் முழுவ தும் ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நெருக்கடி உடனடியாக உலக நெருக்கடி யாக மாறுகிறது. அதாவது அமெரிக்கா தனது நெருக்கடியினை உலக நெருக்கடி யாக்கும் வல்லமை பெற்றுள்ளது.
நமக்கு பாதிப்பு இல்லையா?
அமெரிக்க நெருக்கடியால் இந்தியா விற்கு பாதிப்பு இல்லை என்று நமது நிதி அமைச்சரும், பிரதமரும் கூறிவருகிறார் கள். ஆனால், இந்தியப் பங்குச்சந்தைச் சரிவு அதைப் பொய்யாக்கியிருக்கிறது. 2008ம் ஆண்டில் பிரதமர், நிதி அமைச்சர் சிதம்பரம், திட்டக்கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா ஆகிய மூவரும் மூன்று குரலில் பேசினர். ஏற்றுமதி நெருக் கடிக்குப் பின்னர் சோர்ந்து போனார்கள். பின்பு எல்லாரும் சேர்ந்து நிதித்துறை யில் எவ்விதப்பாதிப்பும் இல்லை என பெருமை பொங்க கூறினார்கள். அவர் களது ஆசை, ஆர்வம், முயற்சி அனைத் தையும் மீறி இடதுசாரி கட்சிகளும் நிதித் துறைத் தொழிற்சங்கங்களும் நிதித்துறை சீர்திருத்தங்களை செய்யவிடாமல் தடுத் ததால்தான் அது சாத்தியமானது என் பதை மட்டும் அவர்கள் சொல்ல மறுத்த னர். மீண்டும் அவர்கள் நிதித்துறை சீர் திருத்தங்களை செய்வதற்கு கச்சைகட்டி நிற்கிறார்கள் என்பது தான் வெட்கக்கேடு. அமெரிக்காவில் ஏற்படும் கிராக்கி மந்தம் உலக வர்த்தகத்தினை பாதிக்கும், நமது ஏற்றுமதியினைப் பாதிக்கும் என்பதெல் லாம் நாம் அறிந்ததே. சென்ற முறை நாம் சந்தித்த நெருக்கடிகளை அவ்வளவு விரைவில் மறக்கமுடியுமா? 2008 உலக நெருக்கடியிலிருந்தே நாம் இன்னும் மீளவில்லை. இப்போதாவது பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா?
இ.எம்.ஜோசப்
(ஆதாரம் : சீத்தாராம் யெச்சூரி கட்டுரை (ஹிந்துஸ்தான் டைம்ஸ் 9.8.11)
பிரபாத் பட்நாயக் கட்டுரை(மேக்ரோ ஸ்கேன் 5.8.11) நோம் சோம்ஸ்கி உரை (இணையதளம்) மற்றும் பிற இணையதள தகவல்கள்.
வெள்ளி, 29 ஜூலை, 2011
ஹிலாரி கிளிண்டனின் வஞ்சக வார்த்தைகள்
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்து சென்றிருக் கிறார். இந்திய அதிகார வர்க்கமும், ஊடகங் களும் அவரது பயணத்தைக் கொண்டாடி மகிழ் கின்றன. இந்த உற்சாகப் பெருவெள்ளத்தில், மயக்கத்தில் இந்திய இறையாண் மையைக் கேள்விக்குறியாக்கும் சில உண்மைகளை மறந்துவிடக் கூடாது.தனது பயணத்தின் முதல் நாள் புதுதில்லியில் ஹிலாரி வெளியிட்ட அறிக்கையில், அணுவிபத்து இழப்பீட்டுச் சட்டம், சர்வதேச அணுசக்தி முகமையின் அணுசக்தி விபத்துத் தொடர்பான சாசனத்தை முழுமையாக உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மிகவும் கவனமாக, அர்த்தம் பொதிந்த விதத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை சாமானியர்கள் புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை. ஆனால் அந்த வார்த்தைகளுக்குள் வஞ்சகம் ஒளிந் திருக்கிறது.
ஹிலாரியின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பது என்றால் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதாகும். வெளிநாடுகளிடம் வாங்கும் அணுஉலைகளில் விபத்து ஏற்படுமானால் அந்த விபத்துக்கான இழப்பீட்டுக்கு அந்த நிறு வனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பது அணுசக்தி இழப்பீட்டுச் சட்டத்தில் உள்ள ஒரு பிரிவாகும். நம் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இந்த அம்சத் தை நாம் கைவிட வேண்டும் என்பதே ஹிலாரி சொல்லியிருப்பதன் வெளிப்படையான அர்த்தம்.
மேலும் சர்வதேச அணுசக்தி முகமையின் சாசனம் என்பது உலக நாடுகளைக் கட்டுப் படுத்தும் சட்டம் கிடையாது. நம் நாட்டு நாடாளு மன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தை அது கட்டுப்படுத்தாது. எனவே அமெரிக்க தனியார் அணு உலை நிறுவனங்களின் நலன்களுக்காக பேசும் ஹிலாரியின் வார்த்தைகளுக்காக இந்திய ஆட்சியாளர்கள் நமது 120 கோடி மக்களின் நலன்களைப் பிணையாக வைக்கக் கூடாது.
அதுமட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் சட்ட மாக்கப்பட்டு ஓராண்டு காலம் கடந்த பின்னும் அந்த சட்டத்தை வெளிப்படையாக அறிவிக்கை செய்யாமல் இழுத்தடித்து வருகிறது மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. அதன் நோக்கம் வெளிப்படை யானது. தங்கள் அமெரிக்க எஜமானர்கள் எக்கார ணம் கொண்டும் கோபித்துக் கொள்ளக்கூடாது என்பதே அது.
மொத்தத்தில் ஹிலாரியின் பயணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை முன்நிறுத்தியே அமைந்தது என்பதை நம் நாட்டின் நல் எதிர்காலத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
திங்கள், 25 ஜூலை, 2011
அடிமையின் பயம் முதலாளியின் மூலதனம்
டக்ளஸ் தன் முதலாளி கொவே (மிக கொடியவன்) என்பவரை ஒரு கட்டத்தில் திருப்பி அடிக்கிறார். அதாவது முதலாளிக்கு ரத்தம் வரும் வரை. அதன் பிறகு அம் முதலாளி டக்ளஸ் மீது கை வைப்பது நிறுத்தப்பட்டது. இந்த விஷயத்தைப் படிக்கும் போது கீழத் தஞ்சை மாவட்டத்தில் பண்ணை அடிமைகளை ஒருங்கிணைக்கும் போது, தோழர் பி. சீனிவாசராவ் ‘‘அடித்தால் திருப்பி அடி’’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது. ஒரு அத்தி யாயத்தில் டக்ளஸ் சொல்கிறார். “அடிமையின் பயம் - முதலாளியின் மூலதனம்’’ எவ்வளவு ஆழமான அர்த்தம் பொதிந்த வார்த்தை. இரு வர்க்கங்களை அடையாளம் காட்டும் அற்புத வாசகம்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க நாட்டில் இருந்த நிறவெறி இன்றும் பல்வேறு வடிவங்களில் இருக்கின்றது என்பதை நினைக்கும் போது அன்று நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை யோசிக்க முடிகின்றது. வேறு ஒரு மொழியில் வந்த ஒரு பொக்கிஷத்தை தாய் மொழியில் அதன் ஆழம் மற்றும் தன்மை மாறாமல் மொழி பெயர்த்து அளிப்பது அற்புதமான கலை. எப்போதும் அதை நிதானத்துடன் சுவை மாறாமல் தமிழ் வாசகர்களுக்கு அளித்து வரும் இரா. நடராசன் டக்ளஸ் வாழ்க்கை வரலாற்றை வாசகர்கள் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் மொழிபெயர்த்துள்ளார்.என்.சிவகுரு
செவ்வாய், 5 ஜூலை, 2011
ஜார்ஜ் புஷ்சையும், பாரக் ஒபாமா வையும் எந்த நீதிமன்றத்தில் நிறுத்துவது?
லிபியாவின் ஜனாதிபதி மும்மர் கடாபியை கைது செய்து கூண்டில் ஏற்றுமாறு சர்வதேச குற் றவியல் நீதிமன்றம் (ஐசிசி) கடந்த வாரம் வெள் ளிக்கிழமை வாரண்ட் பிறப்பித்தது. கடாபியின் மகன் செய்ப் அல் - இஸ்லாம் மற்றும் லிபியா வின் உளவுத்துறை தலைவர் அப்துல்லா அல்- சென்யூசி ஆகியோருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்தது.“மனிதநேயத்திற்கு எதிராக கொடிய குற்றங் கள் புரிந்த போர்க்குற்றவாளிகள் இவர்கள்” என்று குற்றம் சாட்டி, வாரண்ட் பிறப்பித்துள்ளது தி ஹேக் நகரில் உள்ள இந்த நீதிமன்றம்.
உண்மையில், தனது நாட்டில் போராட்டத் தில் ஈடுபடும் கிளர்ச்சிக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், நேட்டோ படைகள் தனது நாட்டை சல்லடை யாக துளைத்து வருவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என் றும் லிபிய ஜனாதிபதி கடாபி வேண்டுகோள் விடுத்த மறுநாளே, அவரை சர்வதேச போர்க்குற்றவாளி என்று மேற்படி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
லிபியாவின் எண்ணெய் வளத்தை முழுமை யாக கைப்பற்றும் நோக்கத்தோடு, அங்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கடாபியின் அரசை ஒழித்துக் கட்டும் நோக்கத்தோடு அமெ ரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அந்நாட்டின் மீது கொடிய யுத்தத்தை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் அமெரிக்கா வுக்கு இணையாக ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளான பிரிட்டனும், பிரான்சும் நாசகரப் படைகளை அனுப்பி தாக்குதலை தீவிரப்படுத்தி யுள்ளன. இந்தத் தாக்குதல்களில் ஆயிரக்கணக் கானோர் பலியாகியுள்ளனர். அதுகுறித்த உண்மை விபரங்களை உலகிற்கு சொல்லாமல் மேற்கத்திய ஊடகங்கள் மூடி மறைக்கின்றன. கடாபியின் உயிரைப் பறிக்கும் எண்ணத்துடன் அவரது மாளிகையின் மீது தொடர்ந்து நேட்டோ போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி வருகின்றன. அவரது மகனையும், 3 பேரக் குழந்தைகளையும் சில வாரங்களுக்கு முன்பு குண்டுவீசி கொன்றொழித்தது நேட்டோ படை.படுகொலைகள் புரிந்து வரும் நேட்டோ படைகளை விட்டுவிட்டு, தாக்குதலுக்கு உள் ளாகியிருக்கும் கடாபியை குற்றவாளி என்று அறிவித்திருப்பதன் மூலம், சர்வதேச குற்ற வியல் நீதிமன்றத்தின் உண்மை முகத்தை அறி யலாம்.
1999ம் ஆண்டு மார்ச் 24ம்தேதி யுகோஸ்லே வியாவில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் படைகளை கொண்ட நேட்டோ ராணுவத்தினர் கொடூரமான யுத் தத்தை துவக்கினர்; அந்நாட்டைத் துண்டாட முயற்சித்த அல்பேனிய தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி, கொசோவா பிரதேசத்தில் ரணகளத்தை ஏற்படுத்தினர்; அதையொட்டி யுள்ள செர்பியாவிலும் குண்டுமழை பொழிந்த னர்; பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அழிந்தனர். இறுதியில், எந்த யுகோஸ்லேவியா சல்லடையாக துளைக்கப்பட்டதோ, அந்த யுகோஸ்லேவியாவின் ஜனாதிபதி ஸ்லோ போடன் மிலோசெவிக்கை போர்க் குற்றவாளி என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறி வித்தது. அவர் நாடு கடத்தப்பட்டார். தி ஹேக் நகரிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு சிறையிலேயே மர்ம மான முறையில் உயிரிழந்தார்.
தாங்கள் கைப்பற்றத் துடிக்கும் நாடுகளைத் தாக்குவது; அந்த நாடுகளின் தலைவர்களை திட்டமிட்டு போர்க்குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றத்தின் பெயரால் அறிவிப்பது; நீதிமன் றமே சொல்லிவிட்டதால் அவரை கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டுமென்று உலக அளவில் கருத்தை உருவாக்குவது; சம்பந்தப் பட்ட நாடுகளை கபளீகரம் செய்வது என வர லாற்றில் அமெரிக்க - ஐரோப்பிய ஏகாதிபத்தி யங்களின் குற்றங்கள் தொடர்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு சூடான் ஜனாதி பதி அல் பஷீருக்கும் இவர்கள் வாரண்ட் பிறப் பித்தார்கள்.
சர்வதேச நீதிமன்றம் என்ற பெயரில் நடை பெறும் இந்த அட்டூழியத்தை சீனா, ரஷ்யா, ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்க நாடு கள், மத்திய கிழக்கு நாடுகள் என உலகின் அனைத்துப் பகுதி நாடுகளும் கடுமையாக எதிர்க்கின்றன.
உள்நாட்டில் போராட்டத்தை ஒடுக்கினார் என்ற குற்றச்சாட்டிற்காக கடாபியை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவது சரியென்றால், அண் டை நாடான பாலஸ்தீனத்தில் அனுதினமும் அப்பாவி மக்களை குண்டுவீசிக் கொல்கிறதே அந்த இஸ்ரேலின் பிரதமரை எந்த நீதிமன்றத் தில் நிறுத்துவது?
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் உல கம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் கொடிய யுத்தங்களை நடத்தி, சுமார் இரண்டேகால் லட் சம் மக்களை அழித்தொழித்த அமெரிக்க ஜனா திபதிகள் ஜார்ஜ் புஷ்சையும், பாரக் ஒபாமா வையும் எந்த நீதிமன்றத்தில் நிறுத்துவது?
ஞாயிறு, 3 ஜூலை, 2011
2001க்கு பிறகு அமெரிக்கா கொன்றுபோட்ட 2.25 லட்சம் பேர் வீடியோ
2001ம் ஆண்டு செப்டம் பர் 11ம் தேதி நியூயார்க் நக ரில் நடந்த தீவிரவாத தாக் குதலுக்குப் பின்னர் உலக அளவில் பல்வேறு நாடு களில் அமெரிக்கப் படை யினர் நடத்திய தாக்குதல் களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ள னர். அமெரிக்கப் படைகள் இந்த வேட்டைக்காக செய்த செலவுத் தொகை மட்டும் 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் நடத்திய புள்ளிவிவர சேகரிப்பில் இது தெரிய வந்துள்ளது.
2001ம் ஆண்டு செப்டம் பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் தீவிரவாதிகள் தாக்கு தல் நடத்தினர். இரட்டை கோபுரம் விமானம் மூலம் தகர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, உலகளாவிய தீவிரவாத வேட்டையைத் தொடங் கியது. ஆப்கானிஸ்தான், இராக், பாகிஸ்தான், ஏமன் என பல நாடுகளிலும் அமெ ரிக்கப் படைகள் வேட் டை யில் இறங்கின.
இதில் இராக், ஆப்கா னிஸ்தானில்தான் பெருமள வில் உயிர்ச்சேதத்தை ஏற் படுத்தின அமெரிக்கப் படைகள். அமெரிக்கப் படைகள் இதுவரை நடத் திய தாக்குதல்களில் 2 லட் சத்து 25 ஆயிரம் பேர் உயி ரிழந்துள்ளதாக இந்தத் தக வல் தெரிவிக்கிறது.
அமெரிக்கப் படைக ளின் தாக்குதலில் சிக்கி 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் பல் கலைக்கழக தகவல் தெரி விக்கிறது.
இதில் அமெரிக்க கூட்டுப் படைகளின் தரப்பில் மட்டும் 31 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருமே ராணுவத்தினர் ஆவர். இவர் களில் 6000 பேர் அமெரிக்கர்கள், 1200 பேர் கூட்டுப் படையினர், 9900 பேர் இராக்கியர்கள், 8800 பேர் ஆப்கானிஸ்தானியர்கள், 3500 பேர் பாகிஸ்தானியர் கள். இவர்கள் தவிர அமெ ரிக்காவுக்காக பாதுகாப்பு குறித்த தகவல்களைத் திரட் டித் தந்தவர்கள் 2300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அப்பாவி மக்கள்தான் பெருமளவில் உயிரிழந்துள் ளனர். இவர்களின் எண் ணிக்கை மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் ஆவர். இவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் இராக்கியர்கள், 35,000 பேர் பாகிஸ்தானியர் கள், 12,000 பேர் ஆப்கா னிஸ்தானியர்கள் ஆவர்.
அமெரிக்க மற்றும் கூட் டுப் படையினரிடம் சிக்கி உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. இருப்பி னும் இது 20,000 முதல் 51,000 ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.
தாக்குதலில் உயிரிழந்த வர்களில் 168 பேர் செய்தியாளர்கள், 266 பேர் மனிதா பிமான பணியாளர்கள் ஆவர்.
அமெரிக்காவின் தீவிர வாதத்திற்கு எதிரான போரில் சிக்கி இடம் பெயர்ந்து அக திகளாக உள்ளோரின் எண் ணிக்கை மட்டும் 70.8 லட் சம் பேர் ஆவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இராக் மற்றும் ஆப்கானிஸ்தா னைச் சேர்ந்தவர்கள்.
புதன், 11 மே, 2011
நோம் சாம்ஸ்கி :ஒரு மனசாட்சி உள்ள அமெரிக்கரின் குரல்

பின்லேடன் கொலை என்பது திட்டமிட்ட ஒரு படுகொலை என்பதும், அடிப்படையான சர்வதேச விதிகள் மற்றும் சட்டங்களை அப்பட்டமாக மீறிய செயல் என்பதும் தெளிவானது. எந்தவிதமான ஆயுதமும் இல்லாமல் இருந்த ஒருவரை சுமார் 80 கமாண்டோக்கள் சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றுள்ளனர். வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் அவ ரது மனைவி ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் சட்டத்திற்கு குறைந்த பட்ச மரியாதையாவது தரப்பட வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர்கள் நீதியின் முன்பு விசாரணைக்கு நிறுத் தப்பட வேண்டும். 2002 ஏப்ரலில் அமெரிக்க உளவுத் துறையான எப்பிஐ-யின் தலைவர் ராபர்ட் முல்லர் தீவிரமான புலன் விசாரணைக்கு பின்பு, அமெரிக்க இரட்டை கோபுரங் கள் மீதான தாக்குதல் ஆப்கானிஸ் தானில் திட்டமிடப்பட்டது என்றும், யுஏஇ மற்றும் ஜெர்மனியிலிருந்து செயல்படுத்தப்பட்டது என்று நம்புவ தாக மட்டுமே கூறினார்.
இதற்கு 8 மாதங்களுக்கு முன்பே, ஆப்கானிஸ்தானில்தான் பின்லே டன் தங்கியிருப்பதாக ஆதாரத்துடன் தகவல் அளித்தால், அவரை ஒப்ப டைப்பதாக தாலிபான்கள் வெளிப் படையாகவே தெரிவித்தனர். ஏப்ரல் 2002ல் நம்மால் நம்பப்பட்ட ஒரு விஷயம் குறித்து அப்போது எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஆனால், பாரக் ஒபாமா தன்னுடைய வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிட்ட அறிக்கையில் மிகவும் சாதாரணமாக பொய் சொல்கிறார், “2001 செப்டம்பர் 9ல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின் லேடன்தான் காரணம் என்பதை நாம் உடனடியாக தெரிந்து கொண்டோம்” என்று.
அபோதாபாத்தில் பின்லேடனை ஒளித்து வைத்திருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரின் ஒரு பகுதியினர் குறித்து வாஷிங்டனின் கோபம் பற்றி ஊடகங்களில் பெருமளவு விவாதிக் கப்படுகிறது. ஆனால், அதே நேரத் தில் தங்களது நாட்டுக்குள் அமெ ரிக்க படையினர் அத்துமீறி நுழைந்து ஒரு அரசியல் படுகொலையை நிகழ் த்தியிருப்பது குறித்து பாகிஸ்தானின் கோபம் பற்றி யாரும் கவலைப்படு வதாக தெரியவில்லை. அமெரிக்கா வுக்கு எதிரான ஆவேசம் என்பது பாகிஸ்தானில் ஏற்கெனவே பெரு மளவு அதிகரித்துள்ளது. இப்போது நடந்துள்ள செயல் அதை மேலும் அதிகமாக்கும். பின்லேடனின் உடலை கடலில் தூக்கி எறிந்தது குறித்து ஆத்திரமும் கோபமும் முஸ்லிம் உலகத்தில் ஏற்பட்டுள்ளது.
இராக் நாட்டைச் சேர்ந்த கமாண்டோ படையினர் ஜார்ஜ் டபிள்யு புஷ் வீட்டுக்குள் புகுந்து, அவரை சுட்டுக் கொன்று, உடலை தூக்கி அட் லாண்டா கடலில் வீசிவிட்டு போனால் நாம் எவ்வாறு இதை எதிர்கொள் வோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். சர்ச்சைக்கு இடமின்றி பின்லேடனின் குற்றம் சித்தரிக்கப்படுகிறது.
கியூப விமானத்தை குண்டு வைத்து தகர்த்த போட்ச், புளோரிடா வில் அமைதியாக மரணமடைய அனுமதிக்கப்பட்டிருக்கிறார். துறை முக பயங்கரவாதத்தில் தொடர்பு டையவர்களும், இதுமாதிரியே நடத் தப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்கா அத்துமீறி நடத்திய படுகொலைகள் குறித்து புஷ்சின் கவனத்திற்கு யாருமே கொண்டு வரவில்லை போலிருக் கிறது.
ஜெர்னிமோ திட்டம் என்ற பெய ரில் நிகழ்த்தப்பட்ட செயலின்மூலம் ஏகாதிபத்திய ஆதிக்க மனநிலை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. மேற்கத்திய சமூகம் முழுவதும் பின் லேடன் மரணம் பெருமளவு கொண் டாடப்படுகிறது. ஆனால், அதே நேரத் தில் அமெரிக்காவால் நடத்தப்பட்ட முந்தைய மரணங்கள் புனிதப்படுத் தப்படுகின்றன.
சுருக்கமாக சொல்வதானால் இவ் விஷயத்தில் அடிப்படையான, எளி மையான உண்மைகள் வெளிப்படை யாக தெரிவிக்கப்படுவதுமில்லை; மதிக்கப்படுவதுமில்லை என்பது தான் உண்மை.












