அணுசக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அணுசக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 ஜனவரி, 2012

உலகம் அணுமின் சக்தியை நாடுவது விருப்பத்தால் அல்ல

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிற்கு வடகிழக்கில் ரிக்டர் அளவுகோலில் 9.1 அளவிற்கு நிலநடுக்கம் சென்ற மார்ச் 11 அன்று கடலுக்கடியில் ஏற்பட்டது. இந்த மிகக்கடுமையான நிலநடுக்கத்தால் புகுஷிமா டெய்ச்சி அணுமின் நிலையம் பாதிப்புக்குள்ளானது. அந்நிலையத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த 3 உலைகளும் தானாகவே செயல்பாட்டை நிறுத்திக் கொண்டன. அம் மின்நிலையத்தில் இருந்த 6 உலைகளில் 3 பராமரிப்புப் பணிக்காக ஏற் கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ராட்சஷ சுனாமியால் செயல்பாட்டில் இருந்த 3 அணுஉலைகளின் குளிர்விப் பான்கள் செயலிழந்தன. குளிர்விப்பான் களுக்கு சென்ற மின்சாரத்திற்கு தடை ஏற் பட்ட தாலும்,பேக்கப் பேட்டரிகள் செயல் படாததாலும்,அவசர டீசல் மின்னாக்கிகள் நீரில் மூழ்கியதாலும்,இதர சில காரணங் களாலும் குளிர்விப்பான்கள் செயலிழந்தன.

அணுஉலையை குளிர்விக்கும் அமைப்பு பாதுகாப்பானதாக இருந்திருந்தால், அவசர கால மின்னாக்கிகளும் போதிய அளவு உயர மான இடத்தில் இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது.முற்றிலும் தவிர்க் கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு புகுஷிமா அருகில் உள்ள ஒனகாவில் உள்ள டொகொகூ மின் நிறுவனத்திற்கு சொந்தமான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அணு மின் நிலையத்தின் குளிர்விப்பான் அமைப்பு கள் கடல்மட்டத்தில் இருந்து உயரமான இடத்தில் இருந்ததால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை.சுனாமியால் வீடுகளை இழந்த ஒனகாவா மக்கள் மூன்று மாதம் வரை அம்மின் நிலைய உடற்பயிற்சிக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர் என்பது சிறப்புச் செய்தியாகும்.

சர்வதேச அணுசக்தி முகமையால், விபத்து நடப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்பு சுட்டிக்காட்டப்பட்டிருந்த குறைபாடுகளை, அந்நிலையத்தின் உரிமையாளரான டோக்கியோ எலக்ட்டிரிக் பவர் கார்ப்பரேசன் சரி செய்திருந்தால் இவ்விபத்து ஏற்பட்டிருக் காது.அலட்சியமாக இருந்த டெப்கோ நிறுவனமும்,முறையான கண்காணிப்பை செய்யாத அரசுமே இவ்விபத்திற்கு காரணம்.

புகுஷிமா விபத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் அணுஉலைகள் மூடப்படுவதாக கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இது உண்மைக்கு மாறானது.

ஜெர்மனி 2022 க்குள் தனது அணு உலைகள் அனைத்தையும் படிப்படியாக மூடப்போவதாக அறிவித்துள்ளது. தற்போது இயங்கிவரும் அணு உலைகளின் செயல் பாட்டுக் காலம் முடிந்த உடன் அவற்றிற்குப் பதிலாக புதிய அணுமின் நிலையங்கள் தொடங்கப்படாது என சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.

செர்னோபில் விபத்துக்குப்பிறகு கருத்துக் கணிப்பு நடத்தி, அணு உலைகளை இத்தாலி மூடியது.புதிதாக அணுஉலை தொடங்கிட மீண்டும் கருத்துக்கணிப்பை அண்மையில் நடத்தியது.அதில் பெருவாரியான மக்கள் அணு உலைகள் மீண்டும் வேண்டாம் என வாக்களித்தனர். இருப்பினும், இத்தாலி தனது தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியுடன் அல்பேனியாவில் அணுமின்நிலையத்தை அமைத்து அங்கிருந்து மின்சாரத்தை பெற உடன்பாடு கண்டுள்ளது. அணுமின்சாரம் வேண்டும், ஆனால் அணு உலையை தங்கள் நாட்டில் அமைக்கக்கூடாது என்பது தான் இத்தாலியின் நிலை.

ஜப்பான் அணுக் கொள்கையை மாற்றப் போவதாக அறிவித்தது.இருப்பினும் அணு மின் உற்பத்தியை அது முற்றிலும் நிறுத்து வதாக அறிவிக்கவில்லை. புகுஷிமா விபத் தையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில உலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கி யுள்ளன. புதிதாக 16 அணுஉலைகள் கட்டப் படும் என ஜப்பான் சென்ற மாதம் அறிவித்துள் ளது. அணு உலைகளுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை குறைப்பதற்காகவும், பாதுகாப்பை கருத்தில் கொண்டும் அணு உலைகள், அவற்றின் ஆயுட்காலமான 40 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் தடுப் பதற்காக ஜப்பான் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவர உள்ளது.உள்ளூர் மக்களின் ஒப்புதலுடன் தான் புதிய அணு உலைகள் தொடங்கப்படும் என்றும் ஜப்பான் கூறியுள் ளது. இது எதிர்காலத்தில் பல புதிய அணு உலைகளை தொடங்க உதவும் என ஜப்பான் கருதுகிறது.

அணுஉலைகளின் பாதுகாப்பைப் பற்றிய அச்சம் பரவலாக இருந்த போதிலும், இதர உலக நாடுகள் அணுசக்தியை ஆக்கப்பூர்வ மாக பயன்படுத்தும் கொள்கை நிலையி லிருந்து மாறவில்லை.45 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் அணுமின் சக்தி தங்களுக்கு அவசியம் என கருதுகின்றன.உலகம் முழு வதும் தற்பொழுது 60 க்கும் மேற்பட்ட அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அமெரிக்காவின் அணுக்கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என புகுஷிமா விபத்துக் குப் பிறகு திட்டவட்டமாக அறிவித்தார்.

புஷ்ஷரில் கட்டப்பட்ட தனது முதல் அணுமின் நிலையத்தில் ஈரான் மின் உற்பத்தியை துவக்கியுள்ளது. குஷ்ஷிஸ்தான் பிரதேசத்தில் டார்கோவின் என்ற இடத்தில் 360 மெகாவாட் திறன் கொண்ட அணு உலையை ஈரான் கட்டிவருகிறது.அடுத்த 20 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின்சாரத்தை அணுசக்தி மூலம் உற்பத்தி செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளது. இதற்காக 19 அணுஉலைகளை கட்டிட திட்டமிட்டுள்ளது.

சீனா 2011 மார்ச் அன்று பாதுகாப்பு நட வடிக்கையாக அனைத்து புதிய அணு உலை களுக்கான அனுமதியை தற்காலிகமாக நிறுத்திவைத்தது.பின்னர் மார்ச் 26 அன்று தனது புதிய அணுமின்திட்டப் பணிகள் அனைத்தும் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்தது.

சீன சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள நியூக்ளியர் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் தியான் சுஜியா “அணுமின் திட்டங்கள் கைவிடப்படாது. சீனா 2020க்குள் 66 அணு உலைகளை புதிதாக கட்ட உள்ளது. இதன் மூலம் 66 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

மேலும்,சீனா நான்காவது தலைமுறை அணுஉலைகளை கட்ட திட்டமிட்டு வருகிறது.இது முழுக்க முழுக்க சீன தொழில் நுட்பமாகும். இதில் ஹீலியம் வாயு குளிர்விப்பானாக பயன்படும். இந்த அணுஉலையின் குண்டங்கள் மிக அதிகமான வெப்பத்தையும் தாங்கும் திறன் கொண்டதாகும். விபத்து ஏற்பட்டாலும் குளிர்விப்பான்கள் அவசியம் இல்லை எனக் கூறப்படுகிறது.1600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நூற்றுக்கணக்கான மணிநேரத்திற்கு அணுஉலையின் குண்டம் இருந்தாலும்,அதன் உள்ளே உள்ள முலாம் பூசப்பட்ட யுரேனிய எரிபொருள் உருளைகளுக்கு எந்த பாதிப்பும் வராது எனக்கூறப்படுகிறது. இத்தகைய நான்காவது தலைமுறை அணுஉலையின் மாதிரியை 2003 ஆம் ஆண்டு சீனா உருவாக்கியது. பரிச்சார்த்த முறையில் செயல்பட்டுவரும் அந்த உலை 100 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவருகிறது.

ரஷ்யா இப்பொழுது 23200 மெகாவாட் மின்சாரத்தை அணுசக்திமூலம் உற்பத்தி செய்கிறது. அதை 2020 க்குள் 43300 மெகா வாட் அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. தற்பொழுது நாட்டின் மொத்த மின் உற்பத்தி யில் 16.6 விழுக்காட்டை அணுமின்சக்தி மூலம் பெறுகிறது.அதை 2016க்குள் 18.6 விழுக்காடாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. 2011டிசம்பர் 13 ஆம் தேதி முதல் ககாலி னின்-4 என்ற புதிய அணு உலை செயல் படத் தொடங்கியுள்ளது. அது 950 மெகாவாட் திறன் கொண்ட வி-320 என்ற மாடலில் அமைந்த விவிஇஆர்1000 வகை அணு உலையாகும் .ரஷ்யாவில் செயல்படும் 33 வது அணு உலை என்ற பெருமையை பெற்றுள்ளது.அதை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசிய பிரதமர் புடின், ரஷ்யாவில் மேலும் 10 அணு உலைகள் கட்டப்படுவதாக அறிவித் தார்.ரஷ்யாவில் மட்டுமின்றி பல்வேறு நாடு களிலும் அணுஉலைகளை ரஷ்ய நிறுவனம் கட்டி வருவதாகவும் தெரிவித்தார்.2011 வரை 21 அணு உலைகளைக் கட்ட ரஷ்யா ஒப்பந் தம் போட்டுள்ளதாக புடின் கூறினார். அணுசக்தி மறுமலர்ச்சி பெற்றுள்ளதாகவும் பகர்ந்தார்.

தைவான் அரசும் அணுமின் திட்டங்கள் கைவிடப்படாது என 15.3.11 அன்று அறிவித் தது. புதிதாக கட்டப்பட்டு வரும் நான்காவது அணு உலையின் கட்டுமானப்பணிகள் தொட ரும் என தைவான் உறுதிபட கூறியுள்ளது.

தென்கொரியா தனது மின் உற்பத்தியில் 35 விழுக்காட்டை அணுமின் நிலையங்கள் மூலமே உற்பத்தி செய்கிறது.2024க்குள் மேலும் 35 அணு மின்நிலையங்களை உரு வாக்கத் திட்டமிட்டுள்ளது.தற்பொழுது புதி தாக ஒரு உலை செயல்பட தொடங்கியுள் ளது.இதன் மூலம் 2024 ல் தென்கொரியாவின் மொத்த மின் உற்பத்தியில் 50 விழுக்காடு அளவிற்கு அணுமின்சாரம் இருக்கும்.

ஐக்கிய அரபு எமிரேட் “டிசம்பர் 2009 ல் தென்கொரியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத் தின் அடிப்படையில் கட்டப்பட்டுவரும் 1000 மெகாவாட் திறன் கொண்ட 4 அணு உலைகளின் கட்டுமானப்பணிகள் தொடரும்’’என அறிவித்துள்ளது.

வியட்நாம், தனது நாட்டில் 2020 க்குள் ஜப்பான் மற்றும் ரஷ்யா உதவியோடு 8 அணு மின்நிலையங்கள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்தோனேசியா புதிய நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அணுமின் நிலையங் களை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.

மலேஷியா புகுஷிமா விபத்துப்பற்றிய முழு விபரங்களும் வந்த உடன் அணுமின் திட்டம் தொடங்குவது பற்றி முடிவு செய்யப் படுமென அறிவித்துள்ளது.

ஜோர்டான், 2035 க்குள் தனது மின் தேவையில் 60 விழுக்காட்டை அணுமின் நிலையம் மூலம் பெறும் வகையில் அணுமின் திட்டங்கள் செயல்படுத்துப்படும் என அறிவித்துள்ளது.

தென்ஆப்பிரிக்காவின் மின்துறை அமைச்சர் டீப்புவா பீட்டர்ஸ் 26.5.11 அன்று அணுமின் திட்டங்கள் தொடரும் என அறிவித்தார். 6 புதிய அணுமின் நிலையங் களை 2030க்குள் உருவாக்கிட தென்ஆப் பிரிக்கா அரசு 2011 மார்ச் இறுதியில் அனுமதி வழங்கியது.

கென்யா 3 ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நிலையங்களை கெய்ரோவிலிருந்து 50 கி.மீ தொலைவில் அமைக்க திட்டமிட்டுள்ளது.சர்வதேச அணு சக்தி முகமை 31.3.11 அன்று அனுமதி வழங்கி யுள்ளது.

ரஷ்ய உதவியுடன் அணுமின் திட்டம் தொடங்கிட நைஜீரியா-ரஷ்யா இடையே 2011 ஜூலை 26-28 தேதிகளில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.விரைவில் உடன்பாடு நிறைவு பெற உள்ளது.

புகுஷிமா விபத்தோ உள்நாட்டு அரசியல் மாற்றங்களோ அணுமின் திட்டப்பணிகளை பாதிக்காது என எகிப்து அறிவித்துள்ளது.

புகுஷிமா விபத்திற்குப்பிறகு அணுமின் திட்டங்கள் தொடரும் என தென்அமெரிக்க நாடான சிலி அறிவித்துள்ளது.அமெரிக்கா, அர்ஜெண்டினா, பிரான்ஸ் உடன் அணுமின் திட்டங்களுக்காக உடன்பாடு கண்டுள்ளது.

இந்நிலையில் தான் 2020 ல் 20ஆயிரம் மெகாவாட்டும்,2050 ல் 2 லட்சம் மெகாவாட் டும் மின் உற்பத்தியை அணுமின் நிலையங் கள் மூலம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள தாக நமது இந்திய அரசும் அறிவித்துள்ளது.

அடர்த்தியான,தொடர்ச்சியான மின் சாரத்தை உற்பத்தி செய்ய உதவிடவல்ல புதுப் பிக்கத்தக்க மாற்று எரிசக்தி கிடைக்கின்ற வரையில், அணுசக்தியை மின்சாரத்திற்காக பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் பல நாடுகள் உள்ளன.எனவே தான் உலகின் பல நாடுகள் புகுஷிமா விபத்துக்குப் பிறகும் கூட அணுமின் நிலையங்கள் அமைத்திட திட்டமிட்டு வருகின்றன.

உலகம் அணுமின் சக்தியை நாடுவது விருப்பத்தால் அல்ல காலத்தின் கட்டாயத்தால் தான். உரிய மாற்றை காணும் வரை நாமும் அணுசக்தியை கைவிட்டு விடமுடியாது. செர்னோபில், புகுஷிமா போன்ற விபத்துகளிலிருந்து படிப்பினை களை கற்று பாதுகாப்பாக அணுசக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதே இன்றைய தேவை.

டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத்

சனி, 24 செப்டம்பர், 2011

கூடங்குளமும் புகுஷிமாவும்



தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் ஜப்பானில் விபத்துக்குள் ளாகிய புகுஷிமா அணுமின் நிலையத்துக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. கூடங்குளம் தமி ழகத்தின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. புகுஷிமாவும் அப்படித்தான். அது ஜப்பானின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.

தமிழகத்தை 2004-ல் சுனாமி அலைகள் தாக்கின. புகுஷிமாவை இதேபோல கடந்த மார்ச் மாதம் சுனாமி தாக்கியது. ஆனால், ஒற்றுமைகள் இதோடு சரி, புகுஷிமாவில் உள்ள நிலைமைகள் வேறு. கூடங்குளத்தில் உள்ள நிலைமைகள் வேறு. ஆகவே, புகுஷிமா அணு மின் நிலையத்துக்கு ஏற்பட்ட கதி கூடங்குளத்துக்கு ஏற்பட வாய்ப்பே கிடையாது. முக்கிய காரணம் பூகோள நிலைமைகள்.

நிலப்பகுதியில் ஏற்படுவதைப்போலவே கடலுக்கு அடியிலும் பூகம்பங்கள் ஏற்படுகின் றன. கடலடி பூகம்பங்கள் சில இடங்களில் மட்டுமே நிகழ்கின்றன. பூமியின் மேற்பரப்பா னது பல சில்லுகளால் ஆனது. ஆங்கிலத் தில் இவற்றை “பிளேட்’ என்கிறார்கள். உல கின் கண்டங்களும் கடல்களும் இந்தச் சில் லுகள் மீது தான் அமைந்துள்ளன. சில்லுகள் என்பவை பூமியின் மேற்பரப்புக்கு அடியில் அமைந்த பிரம்மாண்டமான பாறைப் பாளங்கள்.

ஒரு சில்லு என்பது பல ஆயிரம் கிலோ மீட்டர் நீள அகலம் கொண்டதாகவும், பல கிலோ மீட்டர் தடிமன் கொண்டதாகவும் இருக்கலாம். உதாரணமாக, இந்தியத் துணைக் கண்டமும் அதைச் சுற்றியுள்ள கடல்களும் இந்தியச் சில்லு மீது அமைந்துள்ளது. சில்லு கள் ஆண்டுக்குச் சில சென்டிமீட்டர் வேகத் தில் நகருகின்றன. இந்தியச் சில்லு வடகிழக் குத் திசையை நோக்கி நகர்ந்து ஐரோப்பாவும் ரஷியாவும் மத்திய ஆசிய நாடுகளும் அமைந்த யூரேசிய சில்லுவை நெருக்குகிறது.

அண்மையில் சிக்கிமில் ஏற்பட்ட பூகம் பத்துக்கு இதுவே காரணம். ஒரு சில்லு இன் னொன்றை நெருக்காமல் அதை உரசிச்செல் வது உண்டு. வேறு இடங்களில் ஒரு சில்லு இன்னொரு சில்லுக்கு அடியில் புதையுண்டு போவதும் உண்டு. பூமியின் மேற்பரப்பில் பிரதானமாக ஏழு பெரிய சில்லுகளும் மற்றும் பல சிறிய சில்லுகளும் உள்ளன. இந்தச் சில் லுகள் சந்திக்கும் இடங்களில்தான் பிரச்ச னைகள் தோன்றுகின்றன.

இந்தியா அமைந்த சில்லுவின் கிழக்குப் பகுதியானது வங்கக் கடலுக்கு அடியில் பர்மா சில்லுக்கு அடியில் புதைகிறது. இப்படி நிக ழும்போது கடலடியில் கடும் பூகம்பம் ஏற் படும். 2004-ல் இப்படி நிகழ்ந்தபோதுதான் சுனாமி தோன்றி தமிழகத்தைத் தாக்கியது. மிகக் கடுமையான கடலடி பூகம்பங்களே சுனாமியை உண்டாக்குகின்றன. சுனாமி யைத் தோற்றுவிக்கக்கூடிய கடலடி மடு தமி ழகக் கரையிலிருந்து குறைந்தது 1,500 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது. 2004-ல் சுனாமி தோன்றியதற்குக் காரணமான கடலடி பூகம்பம் தமிழகக் கரையிலிருந்து சுமார் 1,860 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது.

தமிழகத்துடன் ஒப்பிட்டால், ஜப்பானைச் சுற்றி பசிபிக் சில்லு, யூரேசிய சில்லு, வட அமெரிக்க சில்லு, பிலிப்பின்ஸ் சில்லு எனப் பல சிறிய சில்லுகள் அமைந்துள்ளன. இந்தச் சில்லுகளின் சந்திப்புகள் ஜப்பானின் கரை களுக்கு மிக அருகில் உள்ளன. ஜப்பானில் ஓயாது பூகம்பங்கள் நிகழ்வதற்குக் காரணம், இந்தச் சில்லுகளின் நகர்வுகளே.

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் சில்லுகள் ஒன்றுக்கு அடியில் இன்னொன்று புதைவதும் நிகழ்ந்து வருகிறது. இவை கடலடி பூகம்பங் களை உண்டாக்கும்போது சுனாமிகள் தோன் றுகின்றன. ஜப்பானில் சுனாமி தாக்குதல் என்பது சகஜம். சுனாமி என்பதே ஜப்பானியச் சொல்லாகும். ஜப்பானில், பூகம்ப எச்சரிக்கை நிலையங்களும், சுனாமி எச்சரிக்கை நிலை யங்களும் நிறையவே உள்ளன. ஆனால், எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின் உஷார் ஆவதற்குப் போதுமான அவகாசம் இருந்தால் தான் எச்சரிக்கைக்கு அர்த்தம் உண்டு.

இந்த ஆண்டு மார்ச் 11-ம் தேதி புகுஷிமா வைத் தாக்கிய பூகம்பம் ரிக்டர் அளவுகோ லில் 9-ஆக இருந்தது. உடனே பூகம்ப எச் சரிக்கையும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட் டன. ஆனால், சுனாமிக்குக் காரணமான கட லடி பூகம்பம் புகுஷிமாவிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்தது. சுனாமி அலைகள் மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத் தில் செல்பவை. ஆகவே, சுனாமியிலிருந்து தப்ப, போதுமான அவகாசம் கிடைக்கவில்லை.

இத்துடன் ஒப்பிட்டால் தமிழகத்தின் கரை ஓரமாகக் கடலடியில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பே இல்லை. கடலடி பூகம்பம் ஏற்படக் கூடிய, அதாவது சுனாமி தோன்றக்கூடிய பகுதி என்பது தமிழகத்திலிருந்து குறைந்தது 1,800 கிலோமீட்டரில் உள்ளது. ஆகவே, அப் பகுதியில் எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் பெரிய சுனாமி தோன்றியது என்றால் தமி ழகக் கரை ஓரமாக உள்ள இடங்களில் முன் னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் குறைந் தது மூன்றரை மணி நேரம் அவகாசம் கிடைக்கும்.

2004-ம் ஆண்டுக்கு முன்னர் வங்கக் கடல் பகுதியில் சுனாமியைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்ய எந்த ஏற்பாடும் இல்லா திருந்தது. அவ்வித ஏற்பாடு இல்லாமல் இருந்த நிலையிலும், தமிழகத்தின் கரை ஓரமாக அமைந்துள்ள கல்பாக்கம் அணுமின் நிலை யத்துக்குப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இப் போது சுனாமி எச்சரிக்கை நிலையங்கள் உள் ளதால், சுனாமி தாக்குதல் ஏற்படும் என்றால் கல்பாக்கத்திலும் சரி, கூடங்குளத்திலும் சரி முன்கூட்டி தக்க நடவடிக்கைகளை மேற் கொள்ள நிறைய அவகாசம் கிடைக்கும்.

எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் முக் கியமான பகுதி அணு உலையாகும். யுரேனி யம் அடங்கிய உலோகத் தண்டுகள் கட்டுக் கட்டாக அணு உலைக்குள் வைக்கப்பட்டி ருக்கும். யுரேனியம் அடங்கிய தண்டுகளை அருகருகே வைத்த மாத்திரத்தில் சில நூறு சென்டிகிரேட் அளவுக்குப் பயங்கர வெப்பம் தோன்றும். யுரேனியத்தின் விசேஷத்தன்மை இதற்குக் காரணம். இத்தண்டுகளை அப்படி யேவிட்டால் உருகும், ஆவியாகும், காற்றில் கலந்து சுற்று வட்டாரத்தில் கதிர்வீச்சு ஆபத்தை ஏற்படுத்தும்.

ஆகவே, அணுஉலை எப்போதும் தண் ணீருக்குள் இருக்க வேண்டும். ஒருபுறத்திலி ருந்து குளிர்ந்த நீர் வந்து கொண்டிருக்கும். மறுபுறம் அந்த நீர் பயங்கரமாகச் சூடேறி நீராவி யாகி வெளியே சென்று கொண்டிருக்கும். இவ்விதமாகத் தோன்றும் நீராவியைக் கொண்டு ஜெனரேட்டரை இயக்கி மின்சாரத் தை உற்பத்தி செய்கிறார்கள்.

பூகம்பம் ஏற்பட்டால் அணுமின் நிலை யம் பாதிக்கப்படலாகாது என்பதற்காக, எல்லா அணுமின் நிலையங்களிலும் அணுமின் நிலையம் தானாகவே செயல்படாது நின்று விடும். ஆகவே, மின்சார உற்பத்தி அடியோடு நின்றுவிடும். அப்படியானால் அணு உலை என்னாவது? அதற்குத் தொடர்ந்து நீர் கிடைக் காவிட்டால் ஆபத்தாயிற்றே. ஆகவே, எல்லா அணுமின் நிலையங்களிலும் டீசலால் இயங் கும் ஜெனரேட்டர்களை வைத்திருப்பர். அணு உலைக்கு நீரை அளிப்பதற்கான பம்புகள் செயல்படுவதற்கான மின்சாரத்தை டீசல் ஜெனரேட்டர்கள் அளிக்கும்.

புகுஷிமா அணுமின் நிலையத்தைச் சுனாமி தாக்கியபோது டீசல் ஜெனரேட்டர்கள் கடல் நீரில் மூழ்கிப்போயின. அவை கடலோ ரமாகத் தாழ்வான இடத்தில் வைக்கப்பட்டி ருந்ததே காரணம். இவை மட்டும் உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தால் புகுஷிமா வில் எந்த விபத்தும் ஏற்பட்டிராது. கல்பாக்கத் தில் டீசல் ஜெனரேட்டர்கள் உயரமான இடத் தில் இருந்ததால் 2004-ல் சுனாமி தாக்கிய போது பிரச்சனை ஏற்படவில்லை. இப்போ தெல்லாம் அணுமின் நிலையங்களில் நீரை அளிக்கும் பம்புகளை இயக்குவதற்குக் கூடு தல் ஏற்பாடாக பெரிய மின்சார பாட்டரி களையும் வைத்திருக்கின்றனர்.

டீசல் ஜெனரேட்டர் செயலிழந்தால் பாட் டரிகளைப் பயன்படுத்துவர். புகுஷிமாவில் இப்படியான நவீன ஏற்பாடுகள் இல்லாத தற்கு அது கட்டி 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது என்பதேயாகும். தவிர, சில ஆண்டுக ளில் புகுஷிமா அணுமின் நிலையத்தை மூடி விடத் திட்டமிட்டிருந்தனர்.

ஆகவே, அங்கு நவீன ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. சுருங்கச்சொன்னால் புகுஷிமாவில் விபத்து ஏற்பட்டதற்கு டீசல் ஜெனரேட்டர்கள் இயங்காமல் போனதே காரணம்.

உலகில் இப்போது 30 நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் உள் ளன. புகுஷிமா விபத்துக்குப் பிறகும் இவை தொடர்ந்து இயங்கி வருகின்றன. எனினும், புகுஷிமா விபத்துக்குப் பிறகு பொதுவில் மக்களிடையே அணுமின் நிலையங்கள் பற்றி ஒரு பயம் தோன்றியுள்ளது.

எங்கோ ஒரு ரயில் விபத்தில் 100 பேர் மடிந்ததாகச் செய்தியைப் படிக்கின்ற ஒருவர், மறுநாள் காலையில் ரயிலில் ஏறும்போது அவர் மனதில் ஓர் அச்சம் நிலவும். இது இயல்பு. கூடங்குளம் பற்றிய அச்சமும் கிட் டத்தட்ட இது போன்றதே. எனினும் ரயில் விபத்தையும் அணுமின் நிலைய விபத்தையும் ஒப்பிட முடியாதுதான்.

எல்லாம் சரி, அணுமின் நிலையங்களுக்கு மாற்று உள்ளதா? நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களை அமைப்பது தலைவலிபோய் திருகுவலி என்பதற்கு ஒப்பானது. காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாலை கள் மூலம் ஆண்டில் சில மாதங்களுக்கு மட் டுமே மின்சாரம் கிடைக்கும். சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற இயலும். ஆனால், ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ. 25 வீதம் செலுத் தத் தயாராக இருக்க வேண்டும். எரிவாயு மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

தமிழகத்தில் போதுமான எரிவாயு கிடைக்கவில்லை. ஆந்திர மாநிலத்தின் கரை ஓர மாகக் கடலுக்கு அடியில் ஏராளமான அளவில் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராட்சதக் குழாய்கள் மூலம் இதைத் தமிழகத் துக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படுமா னால் எரிவாயுவைப் பயன்படுத்தும் மின் நிலையங்களை அமைக்க முடியும்.

ஏற்கெனவே நிறுவப்பட்டுத் தயார் நிலை யில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை என்ன செய்வது? அது பாதுகாப்பானதுதான் என்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரையில் காத்திருப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்றே தோன்று கிறது.

என்.ராமதுரை
நன்றி: தினமணி (23.9.2011)

வெள்ளி, 18 மார்ச், 2011

கையும் களவுமாக மாட்டிய காங்கிரஸ்: விக்கிலீக்ஸ்


அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட மன்மோகன் சிங் அரசு முடிவு செய்த தைத் தொடர்ந்து, ஐ.மு.கூட் டணி-1 அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து 2008ம் ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசுக்கு ஆதரவாக வாக் களிக்க எம்பிக்களுக்கு காங் கிரஸ் கட்சி லஞ்சம் கொடுத்த விவகாரம் அப்பொழுதே அம்பலமானது.

விக்கிலீக்ஸ் இணைய தளம் மற்றும் இந்து பத்தி ரிகை இதுகுறித்து அமெ ரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட் டுள்ளது. இதுகுறித்து அவைக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்க மளிக்க வேண்டும், குற்றச் சாட்டை மறுக்காவிட் டால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மக்களவை துவங்கிய தும் சிபிஐ தலைவர் குரு தாஸ் தாஸ் குப்தா இந்தப் பிரச்சனையை எழுப்பி னார். இந்திய ஜனநாயக வர லாற்றில் இதுவரை செய்தித் தாள்களில் இத்தகைய தொரு செய்தி வெளிவந்த தில்லை; எம்.பிக்களுக்கு லஞ்சம் தரப்பட்டுள்ளது. இது ஒரு ஜனநாயகப் படு கொலையாகும்; இந்தக்குற் றச்சாட்டை பிரதமர் மன் மோகன் சிங் மறுக்க வேண் டும் அல்லது தனது பதவி யை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத் தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசும் போது, இந்திய ஜனநாயகத் தில் அவமானகரமான பக் கங்களை பத்திரிகை அம் பலப்படுத்தியுள்ளது; பாஜக எம்பிக்களுக்கு தரப்பட்ட லஞ்சப்பணத்தை அவைக்கு அவர்கள் கொண்டு வந்த னர்; ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு எதி ராக நடவடிக்கை எடுக்க சபாநாயகர் உத்தரவிட் டதை அவர் சுட்டிக்காட்டி னார்.

ஐ.மு.கூட்டணி-1 அரசை பாதுகாப்பதில் தமது அரசும் முக்கியப்பங்கு வகித் தது. இப்போது எழுந்துள்ள விவகாரம் குறித்து விவாதம் நடத்த சபாநாயகர் உத்தர விட வேண்டும் என்று சமாஜ்வாதிக்கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் வலி யுறுத்தினார்.

இதுதொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சி தரப்புக்கிடையே கடு மையான வாக்குவாதமும் அமளியும் ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

சீத்தாராம் யெச்சூரி

மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீத்தாராம் யெச்சூரி பேசும்போது, 2008ம் ஆண்டு அரசைக் காப்பாற்ற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக விசாரிக்க நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதன் முடிவு வெளியிடப் படவில்லை. இதில் சம்பந் தப்பட்டவர்கள் மீது கிரி மினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளு மன்ற குழு சிபாரிசு செய் திருந்ததாக தெரிகிறது என்று குறிப்பிட்டார்.

சோனியா காந்தி குடும் பத்திற்கும் சில தனி நபர் களுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் அபாயகரமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிபிஐ தலைவர் து.ராஜா பேசுகையில், ஐ.மு.கூட் டணி-1 அரசை பாதுகாப்பதில் பணபலம், அதிகார பலம் மற்றும் அந்நிய சக்திகளின் கைவரிசையும் இருப்பது தெளிவாகியுள்ளது. பதவியில் தொடர இந்த அரசுக்கு அருகதையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அதிமுக உறுப்பினர் ஏ. இளவரசன் பேசும்போது, திருமங்கலம் தொகுதியில் மு.க.அழகிரி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது அம்பலமாகியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

பிரணாப் மழுப்பல்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அரசு இந்த தகவல்களை உறுதி செய்வதோ அல்லது மறுப்பதோ சாத்தியமல்ல என்று மழுப்பலாக குறிப்பிட்டார்.

மாநிலங்களவையிலும் இந்த விவகாரம் பெரும் அமளியை ஏற்படுத்தியதால் அவை ஒத்திவைக்கப் பட்டது.

வீக்கிலீக்ஸ் கண்டறிந்த ஆவணங்களை இந்து ஏடு வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மாவின் உதவியாளர் அமெரிக்கத் தூதரக ஊழி யர் ஒருவரிடம், இரண்டு கைகளிலும் கட்டுக்கட்டாக பணத்தை காண்பித்து அரசைக்காப்பாற்ற ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை தயாராக இருப்பதாக கூறியதாக அமெரிக்கத் தூதரகம் செய்தி அனுப்பியுள்ளது. ஆர்எல்டி கட்சி யைச் சேர்ந்த 4 எம்பிக்களுக்கு தலா ரூ.10 கோடி வழங்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை சதீஷ் சர்மா மறுத்துள்ளார்.


செவ்வாய், 7 செப்டம்பர், 2010

பிரதமர் கடைசியில் வாய்திறந்து பேசிவிட்டார்

அணுவிபத்து பொறுப்பு மசோதா- தார்மீகச் சீரழிவு

பிரதமர் கடைசியில் வாய்திறந்து பேசிவிட்டார். விலைவாசி உயர்வுக்கு எதிராக சாமானிய மக்களை அரசு பாது காக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம். இது வழக்கமான நடைமுறைகளை மீறி நாடாளுமன்றத்தில் அண்மையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது பிரதமர் தலையிட்டு ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. காஷ்மீரில் நிலவும் பயங் கரமான சூழ்நிலை, போபால் விஷவாயு பிரச்சனை - இப்படி நாட்டின் நலன் சார்ந்த பிரச்சனைகள் பலவும் விவாதிக் கப்பட்டன. இதில் எதிலும் பிரதமர் தலையிட்டுப் பேசவில்லை. இப்படி இத்தனை பிரச்சனைகளிலும் மவுனம் சாதித்த பிரதமர், அணுவிபத்துப் பொறுப்பு மசோதாவில் மட்டும் தலையிட்டுப் பேசி யிருக்கிறார். அரசின் உண்மையான நோக் கங்களும், முன்னுரிமைகளும் எத்தகைய தெனப் புரிந்துகொள்வதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு. அது மட்டுமல்ல, பிற பிரச்சனைகளில் அவரது மவுனத்தின் மகத்துவத்தினைப் புரிந்துகொள்ளவும் இது உதவும்.

அமெரிக்க நலன்களுக்காகப் பேசுகிற வன் என்ற குற்றச்சாட்டு தனக்கு ஒன்றும் புதியதல்ல எனவும், 1992 பட்ஜெட் விவாதத்தின் போதே இத்தகைய குற்றச் சாட்டுக்கள் எழுந்தன எனவும் பிரதமர் கூறினார். ஆனால் அவர் தொடங்கி வைத்த அந்த சீர்திருத்தங்கள் காரண மாக இன்று “புத்துயிர் கொண்ட, வலிமை பொருந்திய இந்தியா” உருவாகியிருக்கி றது எனவும், அதேபோன்று அணுமின் சக்தி விஷயத்திலும் இருபது ஆண்டு கள் கழித்து இந்தியா உயரப்போகிறது எனவும் மார்தட்டிக் கொண்டார்.

புத்துயிரும், வலிமையும் யாருக்கு?

இந்தியாவின் இன்றைய மொத்த உற் பத்தி (ஜி.டி.பி) மதிப்பில், நான்கில் ஒரு பங்கு, டாலர் பில்லியனர்கள் (சுமார் ரூ.4600 கோடி சொத்து மதிப்புள்ளவர்கள்) 52 பேர்கள் கைகளில் இருக்கிறது. மறு புறத்தில், 77 சதவீத இந்திய மக்கள் ஒரு நாளைக்கு ரூ.20 கூட செலவழிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூறு கின்றன. இது நாம் அறிந்ததே. ஆனால், இன்று இதே விஷயத்தினை காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க பொதுச் செயலாளர் ஒருவர் அப்பட்டமாகப் பேசி யிருப்பதுதான் சுவையானது.

1992ல் தொடங்கப்பட்ட நவீன - தாராளவாதச் சீர்திருத்தங்கள், ஏழை - பணக்காரர் இடைவெளியினை அதிகரிக் கும் என்பது ஏற்கெனவே தெரிந்ததுதான். “நமது நாட்டில் நாம் தொடங்கியிருக்கும் சீர்திருத்தங்கள் காரணமாக” “ஏழை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை” எழுந்துள்ளது என 1995ல் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் கூறியதும் நமக்கு நினைவிருக்கிறது. அதாவது, சீர்திருத்தங்கள் அமலான 3 வருடங்களிலேயே அதனுடைய முக விலாசம் தெரிந்துவிட்டது என்பதுதானே இதற்கு பொருள்?

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்தியப் பொருளாதாரக் கழகத்தின் மாநாட்டில், மன்மோகன் சிங் என்ன கூறினார்? ஒவ்வொரு ஆண்டும் வறு மை குறையும் அளவு, சீர்திருத்தங்களுக்கு முன்பு எந்த அளவில் இருந்ததோ, அதே அளவில்தான் இருக்கிறது என்று கூறி னார். வறுமை குறைப்பிற்கு சீர்திருத்தங் கள் உதவவில்லை என்பதற்கான ஒப்பு தல் வாக்குமூலம்தானே இது? இதுதான் புத்துயிரும் வலிமையும் பொருந்திய பாரதம் உருவாகும் இலட்சணமா?

எடுக்கப்பட்டதும் கொடுக்கப்பட்டதும்!

ஆம் ஆத்மி (சாமானிய மனிதன்) குறித்து வாய் கிழியப் பேசினாலும், ஏழை-பணக்காரர் இடைவெளியினை அதிகரிப்பதுதான் நவீன - தாராளவாதக் கொள்கைகளின் நோக்கமே என்பது மிகவும் தெளிவாகிப் போனதொன்று. ஒளிரும் இந்தியாவிற்கு எவ்வளவு கொடுக்கப்பட்டதோ, அவை அனைத் தும் துயருறும் இந்தியாவிலிருந்து எடுக் கப்பட்டதேயாகும். இன்று அணுவிபத்து மசோதாவிலும், அமெரிக்கக் கம்பெனி களுக்கும் அவர்களது இந்திய இளைய பங்காளிகளுக்கும் அணுவர்த்தகத்தில் உதவும் நிலையினையே அரசு மேற் கொண்டு வருகிறது.

40 ஆயிரம் மெகா வாட் அணுமின் உற் பத்தி செய்யப்படும் என பிரதமர் அறி வித்திருக்கிறார். அனல் மின்சாரம், புனல் மின்சாரம் தவிர வேறு பல வகைகளிலும் மின் உற்பத்தி செய்யலாம். ஆனால், இவ் வளவு மெகாவாட் அணுமின் உற்பத்தி செய்வதற்கு, மற்ற வகை மின்சாரங்களை விட அணுமின்சார உற்பத்திக்கு ரூ.3 லட்சம் கோடி அதிகமாக தேவைப்படும். இது தான் இந்தக் கம்பெனிகளுக்கு இலா பமாக மாறவிருக்கும் தொகை. இந்தத் தொகையினை வைத்து, 100 படுக்கை கள் கொண்ட 20 ஆயிரம் மருத்துவ மனைகள் கட்டமுடியும். 100 மாணவர்கள் கொண்ட 2.5 இலட்சம் நவோதயா பள்ளி களை உருவாக்க முடியும். அப்படி யெனில், அமெரிக்கர்களுக்கு அதிகபட்ச இலாபமா அல்லது சாமானிய இந்தியர் களுக்கு குறைந்தபட்ச நிவாரணமா என் பதுதானே இன்று எழும் கேள்வி? அர சின் பதில் என்னவோ, துரதிருஷ்டவச மாக, அமெரிக்கர்களுக்குச் சாதகமான தாகவே உள்ளது.

ஆளும் வர்க்கங்களே காரணம்!

அணுவிபத்து எதுவும் நடக்கக் கூடாது என்றுதான் எவருமே நினைப் பார்கள். ஆனால் நடந்துவிட்டால் என்ன என்பதுதான் பிரச்சனை. எனவேதான், அணுமின் உலை சப்ளை செய்யும் கம் பெனிகளுக்கும், அணுமின் உற்பத்தி செய் யும் கம்பெனிகளுக்கும் நஷ்ட ஈட்டிற்கான பொறுப்பினை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. போபால் விஷ வாயுப் பிரச்சனையில் பேசிய உள்துறை அமைச்சர், கடந்த 26 ஆண்டு காலமாக இத்தகைய சூழ்நிலையினை எதிர் கொள்ள சரியான கண்காணிப்போ, முன் னெச்சரிக்கையோ இல்லை; நாடாளு மன்றமும், நிர்வாகமும் இதைச் செய்யத் தவறிவிட்டன என்ற குற்ற உணர்வுடன் பேசுவதாகத் தெரிவித்தார். எனவே, இதற்குப் பொருத்தமான பொறுப்புச் சட்டங்கள் இல்லாததற்கு, இந்நாட்டின் அரசியல் வர்க்கங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று பேசினார். இவ்வாறு அரசியல் வர்க்கம் என்று பொதுவாகப் பேசித் தப்பித்துக் கொள்ள முடியாது. இதற்கு முழுப்பொறுப்பும் ஆட்சியில் இருந்த ஆளும் வர்க்கங்களையே சாரும். காங்கிரசும், பாஜகவும்தான் பொறுப்பேற்க வேண்டும். இப்போது இந்த அணுவிபத்து பொறுப்பு மசோதாவில் கூட இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படு வதைப் பார்க்க முடிகிறது. இதிலிருந்தே உண்மையைப் புரிந்து கொள்ள முடி கிறதல்லவா?

இடதுசாரிகளின் தொடர்ந்த எதிர்ப்பு?

இவர்களது குற்றங்களை அம்பலப் படுத்தும் வேலையைத்தான் நான் மாநி லங்களவையில் செய்தேன். 1984ல் இருந்து இடதுசாரிகள் இந்தப் பிரச்ச னையை தொடர்ந்து எழுப்பி வருகிறார் கள். துரதிருஷ்டவசமாக, ஆம் ஆத்மி யின் இப்பிரச்சனையை இந்தக் கனவான் கள் காது கொடுத்துக் கேட்கவில்லை. இன்று யூனியன் கார்பைடு கம்பெனியை வாங்கியிருக்கும் டவ் கெமிக்கல்ஸ் கம் பெனியைப் பொறுப்பாக்க வேண்டும் என்ற இடதுசாரிகளின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இப்போது, சரியான சட்டப் பாதுகாப்பு இல்லை யென்றால், போபால் விஷவாயு விபத்தில் நடந்ததைவிட அணுவிபத்தில் மோச மான நிலைமை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எச்சரித் திருக்கிறது

மாற்று அரசியல் பாதை!

உலகின் பல நாடுகள் அனுபவத்தி லிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கின் றன. எனவே நிவாரணத்திற்கான குறைந் தபட்சத் தொகையைத்தான் அவை நிர் ணயித்திருக்கின்றன. ஆனால், நாம் அதிக பட்சத் தொகையை நிர்ணயம் செய்கி றோம். ஒரு பெரும் அணுவிபத்தில் உச்ச பட்ச பொறுப்பு என்று பேசுவதற்கு ஏதா வது பொருள் உண்டா? இந்தக் கோரிக் கையை ஏற்றுக் கொள்ளாத இந்திய ஆளும் வர்க்கங்கள், அமெரிக்கக் கம் பெனிகளின் இலாபத்திற்காக சாமானிய இந்திய மக்களின் நலன்களைக் காவு கொடுக்கத் தீர்மானித்துவிட்டார்கள் என் பதைத் தவிர இதற்கு வேறு ஏதாவது விளக்கம் உண்டா? காங்கிரசும், பாஜக வும் நவீன-தாராளவாதக் கொள்கைக ளில் இணைந்து நிற்கும்போது, இதற்கு மாற்றான அரசியல் பாதை அவசிய மாகிறது.

எங்களது எச்சரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்! துளி அளவிலான “புத் துயிர் பாரதத்தையும்”, கடல் அளவிலான “துயருறும் பாரதத்தையும்” வேறுபடுத்திப் பார்க்கும் சக்தி அணுவிபத்திற்கு கிடை யாது. அதற்காகவாவது எங்களது எச்சரிக் கையினை ஏற்றுக் கொள்ளுங்கள்!

நன்றி : இந்துஸ்தான் டைம்ஸ்

31-8-2010)-சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,

கட்டுரை சுருக்கம் - இ.எம்.ஜோசப்

புதன், 11 ஆகஸ்ட், 2010

ஹிரோஷிமா- நாகசாகி ஆதிக்கத்தை நிலைநாட்ட அணுகுண்டு வீச்சு

(நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி)

அணுகுண்டு வீசப்படுவதை எதிர்த்த ஸிலார்ட் ஒரு கடுமையான கருத்துப் போரையே நடத்தினார். நோபல் பரிசு பெற்ற ஜேம்ஸ் ஃபிராங்க் என்பவர் பெயரில் இயங் கிய ஃபிராங்க் குழுவில் மற்றவர்களுடன் அவர் இணைந்து அணு ஆயுதத்தைப் பயன் படுத்துவதற்கு எதிரான விவாதங்களில் ஈடு பட்டார். ஜப்பானைச் சரணடையச் செய்வ தற்கு அணுகுண்டின் வல்லமையை நிரூபிக் கும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு ஒரு சோதனையைச் செய்தாலே போதுமானது என்று அக்குழுவினர் யோசனை தெரிவித்த னர். போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உடனடியாக நிறை வேற்றவில்லையெனில் உலகில் பயங்கர மான ஆயுதப் போட்டியே நிகழும் என்று அவர்கள் வலிமையாக வாதிட்டனர். அது எவ்வளவு தீர்க்கதரிசனமானது !

“நாஜிக்களுடைய அக்கிரமங்களுக்கு எதி ராக எதிர்ப்பு தெரிவிக்காத ஜெர்மானியர்களின் மவுனம் உலகெங்கிலும் பரவலாகக் கண்டிக் கப்பட்டது. மான்ஹட்டன் சோதனைத் திட் டத்தில் உள்ள விஞ்ஞானிகளாகிய நாம் அணு ஆயுதத்திற்கு எதிராகப் பேசத் தவறினால், ஜெர்மானியர்களுக்குக் கிடைத்த மன்னிப்பு கூட நமக்குக் கிடைக்காது” என்றார் ஸிலார்ட்.

இதற்காகவெல்லாம் ஜெனரல் குரோவ்ஸி னால் உளவாளி என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகவேண்டிய ஆபத்தினை அவர் எதிர் கொண்டார். ஸிலார்டினுடைய முயற்சிகள் அமெரிக்க அதிபர், ராணுவத் தலைமை மற்றும் இதர விஞ்ஞானிகளிடம் எந்த மனமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. (புதிய ஆயுதத்தைக் கண்டுபிடிக்கும்வரைதான் ஆட்சியாளர்களுக்கு விஞ்ஞானிகளின் உதவி தேவை. ஆயுதத்தைக் கண்டுபிடித்த பிறகு, அதை யார் மீது பயன்படுத்த வேண்டும், எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதெல் லாம் அரசியல் முடிவுகள். அதை விஞ்ஞானி கள் தீர்மானிக்க முடியாது என்பதற்கு சிறந்த உதாரணம் அணுகுண்டு வீச்சுதான்)

ஓப்பன்ஹீமர், காம்ப்டன், ஃபெர்மி மற்றும் லாரன்ஸ் ஆகிய விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவும் ஸிலார்ட் முன்வைத்த வாதங்களை நிராகரித் தது. அணு ஆயுதத்தை உடனே பயன்படுத்த வேண்டுமென அது பரிந்துரைத்தது !

இவர்களெல்லாம் மிகச் சிறந்த விஞ்ஞானி கள் என்பதில் சந்தேகம் இல்லை. நோபல் பரிசு பெற்றவர்கள். மேதைமைத்தனமும் மனித நேயமும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

ஜூலை 16 அன்று

டிரினிட்டி சோதனை

டிரினிட்டி அணுகுண்டு சோதனை பெரிய அளவுக்கு வெற்றியைப் பெற்றது. 6 கிலோ கிராம் புளூட்டோனியம் 20,000 டிஎன்டி சக்தி யுடன் நியூ மெக்சிக்கோவின் பாலைவனங்க ளின் மேல் வெடித்துச் சிதறியது. கதிர்வீச்சி னால் 20 மைல் தூரம் தள்ளியிருந்த குடும்பங் கள் கூட பாதிப்புக்கு உள்ளாகின. கதிர்வீச் சின் விளைவுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகளும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டனர். 20 மைல்களுக்கு அப்பால் இருந்த என்ரிக்கோ ஃபெர்மி அணு குண்டின் வலிமையைக் கையில் சில தாள் களை வைத்துக் கொண்டு கணக்கிட்டுக் கொண்டிருந்தார். தாள்கள் 9 அடி தூரத்திற்கு தூக்கியெறியப்பட்டன. தரைமட்டத்தில் குண்டின் சக்தி 10,000 டன் டிஎன்டிக்குச் சமமாக இருக்கும் என அவர் மதிப்பிட்டார்.

“அணுகுண்டு வேலை செய்யும் எனத் தெரிந்துவிட்டது... உலகம் இதுவரை இருந்த மாதிரி இனி இருக்காது. சிலர் சிரித்தனர், சிலர் அழுதனர், பெரும்பாலான மக்கள் அமைதி யாக இருந்தனர். இந்துமதப் புனித நூலான பகவத்கீதையின் `தற்போது நான் உலகங் களை அழிக்கக் கூடிய மரணமாக இருக்கி றேன்’ என்ற வரி நினைவுக்கு வருகிறது” என்றார் ஓப்பன்ஹீமர்.

ஸ்டாலின், சர்ச்சில், ட்ரூமன் சந்திப்பு

ஜோசஃப் ஸ்டாலினைச் சந்திப்பதற் கான தேதியை டிரினிட்டி சோதனைக்குப் பின்னர் இருக்குமாறு தேர்வு செய்கிறார் ட்ரூமன். அந்த சந்திப்பு ஜூலை 24 அன்று பெர்லின் அருகே உள்ள போட்ஸ்டாமில் ஹேவல் நதிக்கரையில் இருந்த செசி லிநாஃப் அரண்மனையில் நிகழ்ந்தது.

இந்த செய்தியை ஸ்டாலினிடம் தெரி வித்த விதமே ஒரு சுவாரசியமான நாடகம் போல் நடந்தது. தன்னுடைய வெளியுறவுச் செயலாளர் ஜேம்ஸ் பைர்னஸிடமும் வின்ஸ் டன் சர்ச்சிலிடமும் செய்தியைக் கேட்டபிறகு ஸ்டாலினுடைய முகபாவங்கiளைப் பார்த்து அவர் புதிய ஆயுதத்தின் பயங்கரத்தன்மை யைப் புரிந்து கொண்டாரா என்பதைக் கவ னிக்குமாறு ட்ரூமன் கேட்டுக் கொண்டாராம்!

ட்ரூமன் : ஜோசஃப், என்னிடம் உங்க ளுக்கு ஒரு செய்தி இருக்கிறது. மிக அதிக சக்தி வாய்ந்த ஒரு புதிய ஆயுதம் எங்களிடம் இருக்கிறது.

ஸ்டாலின் (முகபாவத்தில் பெரிய மாற்ற மில்லை) : அப்படியா? ஜப்பானியர்களுக்கு எதிராக அதை நீங்கள் பயன்படுத்திக்கொள் வீர்கள் என்று நினைக்கிறேன்.

ஸ்டாலினுடைய முகத்தைக் கவனித்த பிறகு, அவர் புதிய ஆயுதத்தைப் பற்றி ஒன்று பெரிதாக நினைக்கவில்லை, அல்லது அவர் கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவில்லையென்று பைர்னஸும் சர்ச்சிலும் நினைத்தனர். (ஆனால் ஸ்டா லினா ஏமாறுவார்? தன்னுடைய பதட்டத்தை அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை, அவ்வளவுதான்! ) சோவியத் மார்ஷல் ஷுகாவ் தன்னுடைய நினைவுக் குறிப்பு களில் “உண்மையில் தன்னுடைய அறைக் குத் திரும்பிய பிறகு அணுஆய்வுத் திட்டத் திற்குப் பொறுப்பான விஞ்ஞானி குர்சடா விடம் விரைந்து செயலாற்றி அணு ஆயுதத் தை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார்” என்று குறிப்பிடுகிறார்.

ஏகாதிபத்திய நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள...

பனிப்போரில் வலிமையான நிலையில் தன்னை வைத்துக்கொள்ள அணுகுண்டு உதவும் என்பதை அமெரிக்கா புரிந்துகொண் டது. அதனால் தன்னுடைய ஏகாதிபத்திய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டுமென அமெரிக்க அரசு விரும்புவது தெளிவாகத் தெரிந்தது என்கிறார் ஷுகாவ்.

அதுதான் அமெரிக்காவின் நோக்கம் என் பது ஆகஸ்ட் 6, 9 தேதிகளில் உலகிற்குத் தெளிவாகியது. ராணுவ நோக்கிலிருந்து எந்தத் தேவையும் இல்லாமலேயே மக்கள் தொகை அதிகம் கொண்ட அமைதியான ஜப் பான் நகரங்கள் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கர்கள் அணுகுண்டைப் போட்டனர். (இந்த மாபாதகச் செயலுக்காக உலகெங் கிலுமிருந்து எழுந்த கண்டனங்கள் நிச்சயம் போதுமானவையல்ல. இன்றுவரை அமெ ரிக்கா தன் வருத்தத்தைத் தெரிவிக்க வில்லை. தனது செயலை நியாயப்படுத்தியே வருகிறது).

போர்ச் செயலாளர் ஸ்டிம்ஸனிடம் “ராணுவ நோக்கங்களுக்கே அணுகுண்டைப் பயன்படுத்த வேண்டும், ராணுவ வீரர்களே நமது இலக்கு-பெண்களும் குழந்தைகளும் அல்ல.. ஜப்பானியர்கள் காட்டுமிராண்டிக ளாக, ஈவிரக்க மில்லாத வெறிபிடித்தவர்களாக இருந்தாலும் கூட, பொதுநன்மைக்கான உலகத் தலைவர்களான நாம் (இவர்கள் பொதுநன்மைக்கான உலகத் தலைவர்களாம் ! அந்தப் பட்டத்தைத் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொள்வதில்தான் அமெரிக்கர்கள் வல்லவர்களாயிற்றே..?) அந்த பயங்கரமான குண்டை போடமுடியாது..” என்று கூறியதாக ட்ரூமன் தன் டயரியில் குறிப்பிடுகிறார். ஆனால் அணுகுண்டு பற்றிய ஆணையில் இந்த மாதிரி யார் மீது போட வேண்டும், யார் மீது கூடாது என்ற விவரங்களெல்லாம் இல்லை. ஹிரோஷிமாவும் கோக்குராவும் இறுதியில் தேர்வு செய்யப்பட்டன.

1945 ஆகஸ்ட் 6 அன்று காலையில் 8 மணிக்கு ஹிரோஷிமா மீது குண்டு போடப் பட்டது. இதை ஜெனரல் குரோவ்ஸ் பிற்பகல் 2 மணிக்கு ஓப்பன்ஹீமரிடம் இப்படித் தெரிவிக்கிறார் :

குரோவ்ஸ் : உங்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள் ! அணுகுண்டு வேலை செய்தது.

ஓப்பன்ஹீமர் : அது நன்றாக வெடித்ததா?

குரோவ்ஸ் : மிக அருமையாக, பெரிய சத் தத்துடன் வெடித்தது ! உங்களை இயக்குந ராக நான் தேர்ந்தெடுத்தது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஓப்பன்ஹீமர் : எனக்கு அதைப் பற்றி சந் தேகம் உண்டு, ஜெனரல் !

ஆகஸ்ட் 9 அன்று கோக்குராவுக்கு விமான ஓட்டிகள் சென்றபோது நகரைப் புகை சூழ்ந் திருந்தது. குண்டைப் போட இயலவில்லை. எனவே, இரண்டாவது தேர்வான நாகசாகி யை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். பாவம், நாகசாகி மக்கள் !

ட்ரூமனின் பொய்யுரை

ட்ரூமன் ரேடியோவில் உரையாற்றினார் : “முதல் அணுகுண்டு ராணுவத்தளமான ஹிரோஷிமா மீது போடப்பட்டது... நாங்கள் பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க விரும்பினோம்... ஜப்பான் சரணடைய வில்லையெனில் அழிவிலிருந்து யாருமே அவர்களைக் காப்பாற்ற முடியாது..”

அவர் கூறியது உண்மையல்ல. முழுப் பொய். ஹிரோஷிமாவும் நாகசாகியும் ராணுவத் தளங்கள் அல்ல. ராணுவ நோக்கங்களுக்காக அவை தேர்வு செய்யப்படவும் இல்லை. உண்மையில் மக்களை எச்சரிக்கை செய்யும் துண்டுப் பிரசுரங்களை நாகசாகி மீது ஆகஸ்ட் 10 அன்று (அதாவது குண்டுவீச் சிற்கு மறுநாள்) வீச அமெரிக்கா ஏற்பாடு செய்தது ! (ஜனநாயக காவலர்கள் அல்லவா, நாங்கள் மக்களை முன்கூட்டியே எச்சரிக் கை செய்தோம் என்று காட்டிக் கொள்வதற் காக இதைச் செய்தார்கள். ஆனாலும் உண்மை வெளிவந்துவிட்டது)

ஜப்பானின் தோல்வியை அணுகுண்டு தீர்மானிக்கவில்லை

ஐன்ஸ்டீன் மிகவும் அதிர்ச்சி அடைந் தார். உடனடியாக அவரால் எதையும் எழுத முடியவில்லை. ஒரு வருடம் கழித்து நியூயார்க் டைம்ஸில் அவர் “அதிபர் ரூஸ்வெல்ட் உயிருடன் இருந்திருந்தால் ஹிரோஷிமா மீது அணுகுண்டு போடுவதைத் தடுத்திருப்பார். ரஷ்யா பங்கெடுப்பதற்கு முன்னதாக போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் ஒரு வேளை அது போடப்பட்டிருக்கலாம்... ஜப்பானுக்கு எதிராக அணுகுண்டைப் பயன் படுத்துவதை நான் எப்போதுமே கண்டித்து வந்திருக்கிறேன்...எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்தால், ஜப்பானின் தோல் வியை அணுகுண்டா நிர்ணயித்தது? இல் லவே இல்லை...அமெரிக்காவின் அணு குண்டு பற்றிய ஆய்வறிக்கை (ருளு ளவசயவநபiஉ bடிஅbiபே ளரசஎநல) அணுகுண்டுகள் ஜப்பா னைத் தோற்கடிக்கவில்லை..1945 மே மாதத் திலேயே ஜப்பானிய சக்கரவர்த்தி எந்த நிபந் தனைகளானாலும் அவற்றை ஏற்று சரண டைவது என்று முடிவு செய்து விட்டார். ஜூலை மாதத்தில் ரஷ்யா மூலமாக சமரச முடிவைத் துரிதப்படுத்தும்படி வலியுறுத்தி னார். ஆனால் அவர் போட்ஸ்டாம் மாநாட்டிற் காகக் காத்திருக்க வேண்டியிருந்தது... அணுகுண்டுகளைப் போட்டிருக்காவிட்டா லும் ஜப்பான் சரணடைந்திருக்கும்” என்று எழுதினார்.

பத்து வருடங்களுக்குப் பிறகு

1954 -ல் வேதியியல், சமாதானம் ஆகிய வற்றுக்காக இரு முறை நோபல் பரிசு பெற்ற லைனஸ் பாலிங்கைச் சந்தித்த போது ஐன்ஸ் டீன் அவரிடம் “என்னுடைய வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டேன்... அணுகுண்டுகளைத் தயாரிக்க வேண்டும் என்று அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு கடிதம் எழுதினேன்..அது தவறுதான். ஆனால் ஜெர் மானியர்கள் அவற்றைத் தயாரித்துவிடுவார் கள் என்ற ஆபத்து அப்போது இருந்ததால் என்னுடைய கடிதத்திற்கு ஒரு நியாயம் இருந்தது..” என்றார்.

ஓப்பன்ஹீமர், ஸிலார்ட் உட்பட மான் ஹட்டன் சோதனைத் திட்டத்தில் இருந்த பலர் செனட்டர் மெக்கார்த்தியினால் `அமெரிக் காவுக்குப் பொருந்தாத நடவடிக்கைகளி’ல் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தின் பேரில் பின்னர் பழிவாங்கப் பட்டார்கள். அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றும் சோவியத் யூனிய னோடு அணுஆயுத ரகசியங்களைப் பகிர்ந்து கொண்ட வர்கள் என்றும் குற்றம் சாட்டப் பட்டார்கள்.

வரலாறு நமக்கிட்டிருக்கும் கடமை

ஒரு மர்மநாவலில் வருவது போன்ற திருப்பங்கள், குற்றப் பின்னணி, மனிதநேயம் சிறிதுமற்ற ஏகாதிபத்திய செயல்பாடுகள் எல்லாமாகச் சேர்ந்து வரலாறு சந்தித்திராத மிகப் பெரிய கொடுமை 1945 ஆகஸ்ட் 6, 9 தேதிகளில் நடந்தேறியது. ஹிரோஷிமா-நாகசாகி மக்கள் அனுபவித்த நரக வேதனை கற்பனைக்கெட்டாதது. இந்தக் கொடுமை யைச் செய்த அமெரிக்க வல்லரசு இன்றளவும் உலகத்தில் பொருளாதார ரீதியிலும் ராணுவ ரீதியிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக் கிறது. இராக், ஆப்கானிஸ்தான் தொடர்ந்து வடகொரியா, ஈரான், கியூபா என அது குறி வைக்கும் பட்டியல் நீளமானது. உலக மக்க ளின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப வேண் டிய மாபெரும் கடமை முற் போக்காளர்க ளுக்கும் மனிதநேயர்களுக்கும் இருக்கிறது.

வரலாறு நமக்கிட்டிருக்கும் இந்தக் கட மையை நிறைவேற்ற உறுதி பூணுவோம் !

ஆதாரங்கள் : லியோ ஸிலார்ட், ஐன்ஸ்டீன் பற்றிய இணையதளங்கள்- இதில் உள்ள பல தகவல்கள் நமது தகவல் பெறும் உரிமைச் சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் பெறப்பட்டவை.

முனைவர் டியார்ஜி - பேராசிரியர் கே.ராஜூ

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

ஹிரோஷிமா- நாகசாகி பின்னணியில் நடந்தது என்ன?

1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில் ஜப்பானிய நகரங்கள் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் போடப்பட்டன. உட னடியாகவே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் கதிர்வீச்சி னால் பாதிக்கப்பட்டனர். அந்த இரு நகரங்க ளும் அவற்றின் சுற்றுப்புறங்களும் அடியோடு நாசமாகின. அணுகுண்டு வீச்சைப் பற்றியும் மனிதகுலம் அதுவரை சந்தித்திராத மோச மான விளைவுகள் குறித்தும் ஏராளமான கட் டுரைகள் வந்துவிட்டன. ஆனால் நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போவது முற்றிலும் வேறானது. அணுகுண்டை மக்கள் மீது வீசு வதா, வேண்டாமா என்பது பற்றி அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகளுக்கு இடையே குண்டுவீச்சுக்கு முன் நடந்த விவாதங்கள் பற்றியும் இறுதி முடிவு எடுக்கப்பட்ட விதம் குறித்தும் சில சுவாரசியமான விவரங்களைத் தற்போது பார்க்கலாம்.


அணுகுண்டை மக்கள் மீது போடக் கூடாது என்ற விஞ்ஞானிகளில் லியோ ஸிலார்ட் , ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இந்த இருவரும் அணுகுண்டின் ரகசியத்தைக் கண்டுபிடித்ததில் பிரதான பங்கினை வகித் தவர்கள். அதனால் அவர்களால் அது விளை விக்கக்கூடிய மிகப்பெரிய நாசத்தையும் முன்கூட்டியே நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.

அணுகுண்டு வீச்சின் பின்னணியைப் புரிந்துகொள்ள 1945-க்கு ஆறாண்டுகள் பின்னே போகவேண்டியுள்ளது. இங்கே சில கற்பனையான உரையாடல்கள் கொடுக்கப் படுகின்றன. உரையாடல்கள் கற்பனையாக இருந்தாலும் உண்மையில் நடந்த விஷயங் கள் அடிப்படையிலேயே அவை அமைக்கப் பட்டுள்ளன.

நமது கதை 1939 கோடையில் தொடங்கு கிறது. அணுப்பிளவு வினைகள் பற்றிய ஆய் வுகள் பிரான்சில் ஃப்ரெடெரிக் ஜோலியோட், ஐரீன் க்யூரி ஆகியோராலும் அமெரிக்காவில் ஸிலார்ட், என்ரிக்கோ ஃபெர்மி ஆகியோரா லும் செய்து முடிக்கப்பட்டு விட்டன. அணு ஆயுதங்கள் எவ்வளவு பயங்கரமானவை என் பதை ஸிலார்டினால் உடனே உணர முடிந் தது. மற்ற நாடுகளுக்கு முன் ஜெர்மனி அணு குண்டைக் கண்டுபிடித்து உலகை ஆட்டி வைக்கும் தன் நோக்கத்திற்கு அதைப் பயன் படுத்திவிடக் கூடாதே என்ற கவலை அவ ரை வாட்டியெடுத்தது. அவரும் யூஜின் விக் னர் என்ற மற்றொரு விஞ்ஞானியும் ஐன்ஸ்டீ னைச் சந்தித்தனர்.

விக்னர் : பெர்லினிலிருந்து உங்களது பழைய நண்பரை அழைத்து வந்திருக்கிறேன். அணுவிலிருந்து ஆற்றலைப் பெறுவது சம்பந் தமாக உங்களுடன் அவர் விவாதிக்க விரும்பு கிறார்.

ஐன்ஸ்டீன் : சரி.. அங்கே என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?

ஸிலார்ட் : யுரேனியம் அணுவைப் பிளந்தால் ஏராளமான சக்தி வெளிப்படும் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கேயும் பிரான்சிலும் அது பற்றி சில சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ஐன்ஸ்டீன் : நானும் அது பற்றிப் படித்தேன். பொருள் சக்தியாக மாறுவதால் அது நிகழ்கிறது.

ஸிலார்ட் : அணுப்பிளவு வினைகளை ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலித் தொடர்போல குறுகிய காலத்தில் நடத்த முடியுமானால் அது கட்டுப்படுத்த முடியாத ஏராளமான சக்தி யை வெளிப்படுத்தும். அது மனிதகுலம் இது வரை சந்தித்திராத ஒரு புதிய ஆயுதமாக ஆக முடியும் !

ஐன்ஸ்டீன் : ஆம், அது நிச்சயம் நடக்கக் கூடியதே. முனைந்து ஆய்வுகள் நடத்தி னால் அப்படி ஓர் ஆயுதத்தை சில ஆண்டு களிலேயே கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் அது மனிதகுலத்திற்கு மிக ஆபத்தானது !

ஸிலார்ட் : அதுதான் என்னுடைய கவலை. செக்கோஸ்லாவாக்கியாவிலுள்ள யுரேனியம் சுரங்கங்களை ஜெர்மனி ஏற்றுக் கொண்டிருக் கிறது. யுரேனியம் விற்பனையை அது நிறுத்தி யுள்ளது. நமது பழைய நண்பர் வெர்னர் ஹைசன்பர்க் அவர்களுக்கு உதவுகிறார் என்று நினைக்கிறேன்.

ஐன்ஸ்டீன் : உண்மை. நான் முற்றிலும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். ஆனால் என்ன செய்யலாம்? நான் எந்தவித குண்டுகளும் தேவையில்லை என்று நினைக் கிறேன். நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.

ஸிலார்ட் : கனடா, பெல்ஜியன் காங்கோ போன்று உலகத்தின் சில இடங்களில் யுரே னியம் கிடைக்கிறது. பெல்ஜியன் காங்கோவி லிருந்து யுரேனியம் ஜெர்மனிக்குக் கிடைக்கா மலிருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அது மட்டுமல்ல, சங்கிலித் தொடர்வினைகள் பற்றி நாம் இங்கே ஆய்வுகள் செய்ய வேண் டும். என்ரிகோ பெர்மி இந்த விஷயத்தில் நம் மோடு இல்லை. நாம் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்டிற்கு கடிதம் எழுத வேண்டும்.

ஐன்ஸ்டீன் : அது நல்ல யோசனை. அந்த கடிதம் எப்படி இருக்க வேண்டும் என் பதை நீங்கள் ஏன் தயாரிக்கக் கூடாது? அக் கடிதத்தை நான் அனுப்புகிறேன்.

அணுகுண்டு நோக்கி ஓட்டம் தொடங்கி விட்டது !

ஐன்ஸ்டீனும், ஸிலார்டும் முடிவு செய்த படி ஒரு கடிதம் 1939 ஆகஸ்ட் 2 அன்று அமெ ரிக்க அதிபருக்கு அனுப்பப் பட்டது. அந்த ஆண்டு செப்டம்பரில் ஜெர்மனி, போலந்தின் மீது படையெடுத்தது. இரண்டாவது உலக யுத்தம் அதிகாரபூர்வமாக அதிலிருந்து தொடங்கிவிட்டது. ஐன்ஸ்டீன்-ஸிலார்ட் கடிதத்தின் விளைவாக ஒரு `யுரேனியம் குழு’ அமைக்கப்பட்டது. ஆனால் அணு விஞ்ஞா னிகள் அடுத்த சில ஆண்டுகளில் குறிப்பி டத்தகுந்த ஆய்வு எதையும் செய்யவில்லை.

1941 டிசம்பரில்தான் இதற்கு முக்கியத் துவம் கொடுத்து ஒரு பெரிய அணு ஆய்வுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதுதான் பின்னா ளில் `மான்ஹட்டன் சோதனைத் திட்டம் (ஆயnாயவவயn ஞசடிதநஉவ)’ என்ற பெயரைப் பெற்றது. அது ஒரு ராணுவத் திட்டம் என்பதால் ஜெனரல் குரோவ்ஸ் அதற்குத் தலைமை ஏற்றார். அகில உலகப்புகழ் வாய்ந்த ஆயிரக் கணக்கான இயற்பியல், வேதியியல் விஞ் ஞானிகளும் பொறியாளர்களும் தங்களை ஈடு படுத்திக் கொண்ட மாபெரும் திட்டமாக அது உருவெடுத்தது. சில விஞ்ஞானிகளைக் குறிப்பிட வேண்டுமென்றால் என்ரிக்கோ பெர்மி, லியோ ஸிலார்ட், ஓப்பன்ஹீமர், வான் நியூமன், டோல்மன் போன்றோரைக் கூற லாம். திட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலோருக்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பது கூடப் பெரிதாக எதுவும் தெரியாது. ஜெர்மனி யில் நடைபெற்ற ஆய்வுக்கு ஆட்டோ ஹான், வைசாக்கர், வெர்னர் ஹைசன்பர்க் போன்ற விஞ்ஞானிகள் தலைமையேற்றனர். சோவி யத் யூனியனிலும் கூட குர்சடாவ் தலைமை யில் ஒரு சிறிய திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஜெர்மன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பிரான்ஸ் நடத்திய எதிர்ப்புப் போரில் முக்கிய பங்காற் றிய கம்யூனிஸ்ட் தலைவர் ஃப்ரெடரிக் ஜோலியோட் க்யூரி தன்னுடைய ஆய்வு அறிக்கைகளுடன் இங்கிலாந்திற்குக் குடி பெயர்ந்தார். அணுகுண்டை நோக்கிய ஓட்டம் தொடங்கிவிட்டது !

மேலே கூறப்பட்ட அனைத்துக் குழுக்க ளும் கட்டுப்படுத்தப்பட்ட சங்கிலித் தொடர் வினைகளை நடத்துவது குறித்த ஆய்வு களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர். இந்த பந்தயத்தில் 1943 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மான்ஹட்டன் சோதனைத் திட்டமே வெற்றியடைந்தது.

1942-க்குப் பிறகு சோவியத் யூனியன் மீது ஜெர்மனி நடத்திய தாக்குதலும், பேர்ல் ஹார்பர் மீது ஜப்பான் நடத்திய தாக்குதலும் இரண்டா வது உலகப் போரின் திசையையே மாற்றிவிட் டன. ஆனால் 1944 இறுதியில் ஜெர்மனி எல்லா இடங்களிலும் தோல்வியைத் தழுவத் தொடங்கியது. ரோமில் முசோலினி பகிரங்க மாகத் தூக்கிலிடப்பட்டார். கிழக்கே ஜப்பான் மிகப் பெரிய தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. நேச நாடுகளின் ராணுவம் பிரான்சை விடுவிப்பதில் வெற்றியடைந்தது. 1945 மே மாத மத்தியில் சோவியத் யூனியனின் செஞ்சேனை பெர்லினை நெருங்கிவிட்டது. ஹிட்லருக்கு எங்கும் தோல்வி.

மீண்டும் அமெரிக்க சோதனைச்சாலை லாஸ் அலமாசுக்கு வருவோம். குண்டுவீச்சு சோதனைக்கு மூன்று மாதங்களுக்கு முன் னால் நடந்த நிகழ்வுகள் முக்கியமானவை.

இலக்கு நிர்ணயிக்கும் குழு

(கூயசபநவ உடிஅஅவைவநந)

1945 மே மாதம் இலக்கு நிர்ணயிக்கும் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஓப்பன்ஹீமர் தான் குழுத் தலைவர். ராணுவத் தலைவர் களுடன் வான் நியூமன், டோல்மன், பெதே போன்ற விஞ்ஞானிகளும் இந்தக் கூட்டத் தில் கலந்து கொண்டு இலக்கைத் தேர்ந்தெ டுப்பது, குண்டு வீசப்படும் இடத்தின் உயரம், பருவநிலை, புதிய குண்டு விளைவிக்கப் போகும் கதிர்வீச்சு மற்றும் உளவியல் பிரச் சனைகள் ஆகியவை பற்றி விவாதித்தனர். அந்த நேரத்தில் சிறிய பையன் (டுவைவடந க்ஷடில), குண்டு மனிதன் (குயவ ஆயn) என்று பெயரிடப்பட்ட இரண்டு குண்டுகளே கைவசம் இருந்தன.

ஓப்பன்ஹீமர் : குண்டுகளை எந்த இடத் தில் வெடிக்கச் செய்யலாம்?

பெதே : `சிறிய பையன்’ குண்டிலிருந்து அதிக அளவு சக்தியான 15000 டன் டிஎன்டி யைப் பெற உயரம் 2400 அடி இருக்கலாம். `குண்டு மனிதனி’டமிருந்து 5000 டன் சக்தி யைப் பெற 1500 அடி உயரம் தேவை.

ஓப்பன்ஹீமர் : இந்த குண்டுகளை எங்கே போடலாம்?

ஸ்டேன்ஸ் (ராணுவம்) : நாம் குண்டு வீசும் இடம் 3 மைல்கள் ஆரம் உள்ள நகரமாக இருக்க வேண்டும். நிறைய மக்கள் தொகை உடைய நகரமாக அது இருக்க வேண்டும். (அடடா, எவ்வளவு நல்ல மனசு ! ) ஆகஸ்ட் வரை இதுதான் இலக்கு என நிர்ணயிக்கப் படாத இடமாக அது இருக்க வேண்டும் ! கியோட்டோ, ஹிரோஷிமா, யோக்கோஹமா, கோக்குரா ஆர்சினல், நிகாட்டா போன்ற இடங்களைப் பரிசீலிக்கலாம். கியோட்டோ, ஹிரோஷிமா இரண்டும் ஹஹ இலக்குகள். யோக்கோஹமா, கோக்குரா ஆர்சினல் ஆகிய வை ஹ இலக்குகள். கடைசியாகக் குறிப்பிட்டது க்ஷ இலக்கு. சக்கரவர்த்தியின் அரண்மனை இலக்காக இருக்கக் கூடாது ! (சாதாரண மக் கள்தான் சாகவேண்டும் என்பதில் அத்தனை குறியாக அமெரிக்க ராணுவம் இருந்திருக் கிறது!) இறுதிப் பரிந்துரை ராணுவத் தலை மையிலிருந்து வர வேண்டும்.

குண்டை எங்கே போடுவது?

இந்த விவாதத்தை அடிப்படையாக வைத்து ஹிரோஷிமா, கியோட்டோ, யோக் கோஹமா, கோக்குரா ஆர்சினல் ஆகிய நான் கும் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றன. கடைசி நேரத்தில் கியோட்டோவை எடுத்து விட்டு அந்த இடத்தில் நாகசாகி சேர்க்கப்பட்டது.

இந்த எல்லா முயற்சிகளையும் தொடங்கி வைத்த லியோ ஸிலார்ட் இந்தக் கட்டத்தில் முற்றிலும் அணுகுண்டுகள் பற்றிய பிரமை கள் நீங்கிய மனிதராக ஆகிவிட்டார். அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவை அறிந்ததும் அவர் கலங்கிப் போனார். அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண் டும் என்று நினைத்தார். ஐன்ஸ்டீன் மூலமாக அதிபர் ரூஸ்வெல்ட்டை முதலிலும் பின்னர் ட்ரூமனையும் அவர் சந்திக்க எடுத்த முயற்சி கள் பலிக்கவில்லை. அவரோடு சேர்ந்து மான் ஹட்டன் சோதனைத் திட்டத்தில் ஈடுபட்ட 69 பேர் கையெழுத்திட்ட ஒரு மனு மூலம் அணு ஆயுதத்தை தார்மீக ரீதியிலும் மனித நேய அடிப்படையிலும் பயன்படுத்த அனும திக்க வேண்டாம் என்று அதிபரை கிட்டத் தட்டக் கெஞ்சினார் என்றே சொல்ல வேண்டும்.

விஞ்ஞானிகளின் மனு

“கீழே கையெழுத்திட்டுள்ள விஞ்ஞானி கள் அணு சக்தித் துறையில் பணிபுரிந்து வரு கிறோம். அண்மைக் காலம் வரை இந்தப் போரில் அமெரிக்கா மீது அணு ஆயுதத் தாக்கு தல் நடக்கக் கூடும் என்பது எங்களது அச்ச மாக இருந்தது. அதனால் திருப்பித் தாக்கும் வகையில் அணு ஆயுதம் வைத்திருப்பது ஒன்றே நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் என நம்பினோம். இன்று, ஜெர்மனி தோற்கடிக்கப் பட்டிருக்கும் சூழலில், அந்த ஆபத்து நீங்கி விட்டது. எனவே நாம் கீழ்க்கண்டவாறு சொல் லக் கடமைப்பட்டிருக்கிறோம் :

“போரை விரைவிலேயே வெற்றிகரமான ஒரு முடிவிற்குக் கொண்டுவர வேண்டும். அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் கள் நடத்துவது மிகச் சிறந்த ஒரு போர்முறை யாக இருக்கலாம். ஆனால் ஜப்பான் மீது இத்த கைய தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது என நாங்கள் கருதுகிறோம்.”

-லியோ ஸிலார்ட் மற்றும் 69 பேர்

முனைவர் டியார்ஜி - பேராசிரியர் கே.ராஜூ

(இக்கட்டுரையின் அடுத்த பகுதி நாளை வெளியாகும்)

சனி, 17 ஜனவரி, 2009

இந்தியாவை வலையில் வீழ்த்தியதே என் சாதனை! கடைசிப் பேச்சில் அமெரிக்க ஜனாதிபதி புஷ் கொக்கரிப்பு

இந்தியாவை அணு சக்தி உடன்பாட்டில் கையெழுத் திட வைப்பதன் மூலம் ஒரு புதிய வரலாற்றை, இந்தியா வுடனான கேந்திர ரீதியான கூட்டை உருவாக்கியதே எனது ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனை என்று அமெரிக்க ஜனாதி பதி ஜார்ஜ் புஷ் கூறினார்.


இன்னும் 2 நாட்களில் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறவுள்ள ஜார்ஜ் புஷ், தனது கடைசி உரையை அந்நாட்டு மக்க ளுக்கும், அயல்துறை அதி காரிகளுக்கும் நிகழ்த்தி னார். அப்போது, 2004 முதல் 2008 வரை தான் மேற் கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்க நலனை பிரதானமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகள் என்று கூறினார்.

ஜனவரி 20ம்தேதி அமெ ரிக்காவின் புதிய ஜனாதிபதி யாக பாரக் ஒபாமா பொறுப் பேற்கவுள்ளார்.

அமெரிக்கா இராக்கி லும், ஆப்கனிலும், நடத்தி வரும் முடிவில்லாப் போர் கள், காசாவில் தீவிரயுத்தம், அமெரிக்காவின் பொருளா தாரப் பின்னடைவு, உல கெங்கும் சிதைந்து கிடக்கும் அமெரிக்க கவுரவம் ஆகிய வற்றை தனது எச்சங்களாக ஒபாமாவுக்கு புஷ் விட்டுச் செல்கிறார்.

தனது சுதந்திரச் சந்தை வியூகத்தால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்ன டைவை ஈடு செய்ய அரசு வழங்கிய மீட்பு நிதித் திட் டத்தை புஷ் நியாயப்படுத் தினார்.

2001 செப்டம்பர் 11 தாக் குதல் போல் மற்றுமொரு பயங்கர தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு உண்டு என்று அவர் ஒபாமாவுக்கு எச்ச ரிக்கை விடுத்தார். ``எங்களு டன் இரு அல்லது எதிரியு டன் இரு’’ என்ற புஷ்சின் வியூகம் உலகம் முழு வதும் கடும் எதிர்ப்புக்கு உள் ளானது. அக்கொள்கையின் விளைவாகவே கடந்த 7 ஆண்டுகளாக அமெரிக்கா மீது தாக்குதல்கள் இல்லை என்று அவர் கூறிக் கொண்டார்.

இந்தியாவுடன் உறவு

அயல்துறை அமைச்சக அதிகாரிகளிடம் பேசுகை யில், இந்தியாவுடன் ஒரு வரலாற்றுப்பூர்வமான கேந்திர கூட்டணியை உரு வாக்கிக் கொண்டதே தனது சாதனைகளில் முக்கியமா னது என்று கூறிய புஷ், அணுசக்தி உடன்பாட்டை மேற்கொண்டது இந்திய பிராந்தியத்தில் அமெ ரிக்காவின் கேந்திர ரீதியான நலன்களுக்கு பெருமளவில் உதவும் என்றும், வர்த்தக நலன்களுக்கு உதவும் என் றும் குறிப்பிட்டார்.

இந்தப் பாதையில் அடுத்து ஒபாமா நிர்வாகத் தில் அயல்துறை அமைச் சராக பொறுப்பேற்க ஹிலாரி கிளிண்டனும் முன்னேற வேண்டும் என்றும் கூறினார்.

மத்திய கிழக்கு ஆசியா வில் இஸ்ரேலும் பாலஸ் தீனமும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வரையறையை தனது நிர் வாகம் உருவாக்கிக் கொடுத் திருக்கிறது என்றும், உலகம் முழுவதிலும் `ஜனநாயகத் திற்கு’ ஆதரவான கலகக் காரர்களின் பக்கம் அமெ ரிக்கா நிற்கிறது என்றும் புஷ் கூறினார்.

ஆசியாவில் ஒரே நேரத் தில் ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் உறவை வலுப்படுத்தியது தனது நிர்வாகமே என்று குறிப் பிட்ட புஷ், ஐரோப்பாவில் பால்டிக் பிரதேசம் முதல் பால்கன் பிரதேசம் வரை புதிய ``ஜனநாயக’’ நாடு களை நேட்டோ அமைப் பில் இணைத்து விரிவாக்கி யதும் தனது சாதனை என் றும் குறிப்பிட்டார்.

ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளை பலமுனைகளிலிருந்து சந் தித்ததாகவும், உலகம் முழு வதிலும் தான் உருவாக்கிய கூட்டணியில் 90-க்கும் மேற் பட்ட நாடுகள் இணைந்து கொண்டிருப்பதாகவும், தனது காலத்தில் மிகப் பெரிய தத்துவார்த்த போராட்டத்தை - அதாவது `சுதந்திரம்’ என்ற தத்து வார்த்த போராட்டத்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனது காலத்தில் ஆப் பிரிக்க நாடுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்ததாக குறிப்பிட்ட புஷ், இந்த உல கையே அச்சத்தில் இருந்து விடுதலை செய்து விட்ட தாகவும் கூறிக் கொண்டார்.

அமெரிக்க வரலாற்று ஆய்வாளர்கள் அமெரிக்க ஜனாதிபதிகளில் மிகவும் மோசமானவர்கள் பட்டி யலில் புஷ் முதலிடத்தைப் பிடிப்பார் என்கின்றனர். மக்களிடம் அவருடைய கவுரவம் 20 சதவீதமாகச் சரிந்து நிற்கிறது. அவரு டைய வெளியுறவுக் கொள் கைகள் அனைத்தையும் அவர் நியாயமானவை என்று கூறினார். தன்னைப் பற்றி வரலாறு கணிக்கட் டும் என்று முன்பே புஷ் கூறியுள்ளார்.

சனி, 13 செப்டம்பர், 2008

இடதுசாரிகளின் எச்சரிக்கை உண்மையாகிறது!


அணுசக்தி உடன்பாடு விஷயத்தில் மன்மோகன்சிங் அரசு நாட்டு மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறது என்பதை, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு புஷ் அனுப்பிய ரகசிய கடிதக் குறிப்புகள் மீண்டும் ஒரு முறை அம்பலப் படுத்தியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது. 

இந்தியாவுக்கு நிரந்தரமாக அணு எரிபொருள் சப்ளை மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக அமெரிக்காவிடம் பெற்று விட்டதாக இந்திய அரசு கூறிய உத்தரவாதங்களுக்கு, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதியால் அனுப்பப்பட்ட குறிப்புகள் முற்றிலும் முரணாக உள்ளன. புஷ் அனுப்பியுள்ள கடிதத்தில் வைக்கப்பட்டுள்ள தனிக்குறிப்பு, அணு எரிபொருள் சப்ளை செய்வது தொடர்பாக அமெரிக்கா அளித்த உறுதிமொழிகளுக்கு சட்டப் பூர்வ கட்டாயம் ஏதும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் இரண்டாவது பாராவில் குறிப்பிடப்பட் டுள்ள வார்த்தைகள், சர்வதேச அணுசக்தி கழகத்தின் பாது காப்பு விதிமுறைகள் நிரந்தரமானவை என்றும், அது தொடர் பாக இந்திய அதிகாரிகள் கூறுவதில் உண்மையில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இவ்வாறாக, இந்தியா வுக்கு அணு எரிபொருள் சப்ளை செய்வதாக அமெரிக்கா உத் தரவாதம் அளிக்காத நிலையிலேயே, இந்தியா, அது வகுத் தளித்த பாதுகாப்பு விதிமுறைகளை நிரந்தரமாக ஏற்றுக் கொண்டது. மேலும், ஈரான் தொடர்பாக அமெரிக்கா மேற் கொண்டு வரும் கொள்கைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண் டும் என்ற குறிப்பிட்ட நிபந்தனையையும் இந்த உடன்பாட்டை ஒட்டுமொத்தமாக செயல்படுத்தும் ஹைடு சட்டம் விதித் துள்ளது என்பதையும் நினைவு கூர வேண்டும். 

இந்திய அரசு, ஹைடு சட்டம் தன்னைக் கட்டுப்படுத்தாது என்று கூறுகிறது. ஆனால், அணு வர்த்தக குழுமத்தில் இந்தி யாவுக்கு அளிக்கப்பட்ட தடை விலக்கு தீர்மானத்தில், செப்டம் பர் 5-ம்தேதி அயல்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டுகிறது. அந்த அறிக்கையின்படி, இந்தியா, அணு எரிபொருளை செறிவூட்டுதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றுக்கான தொழில்நுட்பங்கள் பரவுவதை தடுப்பதற்கு சர்வதேச அளவில் மேற்கொள்ளப் படும் முயற்சிகளுடன் இந்தியா இணைந்து கொள்ளும் என்று, ஈரானின் பெயரைக் குறிப்பிடாமல் கூறப்பட்டுள்ளது. 

தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி எழுதியுள்ள கடிதமும் இதை தெளிவுபடுத்துகிறது. அந்த கடிதத்தில், “அணு எரிபொருளை செறிவூட்டுதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றுக்கான தொழில்நுட்பங்கள் பரவுவதை தடுப்பதற்கு அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்தியா தனது ஆதரவை தெரிவித்துள்ளது; அதே நேரத்தில் இது ஏற்கெனவே முழு அள வில் அணு ஆயுதங்களைப் பெற்றுள்ள, எரிபொருள் செறிவூட் டுதல் மற்றும் மறு சுழற்சி உலைகளை செயல்படுத்திக் கொண்டுள்ள நாடுகளுக்கு பொருந்தாது” என்று கூறப்பட் டுள்ளது. 

அணு ஆயுதப் பரவல் தடை உடன்பாட்டில் கையெழுத் திட்ட ஒரு நாடாகவே மாறியுள்ள இந்தியா, ஈரானின் இந்த உரிமைகளை மறுக்க வேண்டுமென்ற அமெரிக்க நிர்ப்பந்தத் திற்கு முழுமையாக இரையாகியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த அனைத்து அம்சங்களிலும், அமெரிக்காவின் ஹைடு சட்டம் செயல்படுகிறது. இதைத்தான் இடதுசாரிக் கட்சிகள் ஏற்கெனவே எச்சரித்தன. அமெரிக்க நாடாளுமன் றத்திற்கு புஷ் எழுதியுள்ள கடிதம், இந்திய அரசு தனது நாட்டு மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்பதையே மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. 

திங்கள், 14 ஜூலை, 2008

இந்தியப் பிரதமருக்கு ஒரு சாமானியனின் கடிதம்

மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு, இந்தியா எனும் மகத்தான தேசத்தின் பிரதமாரான உங்களுக்கு ஒரு சாமானிய இந்தியப் பிரஜையின் வணக்கங்கள். பல மதங்கள், பல இனங்கள் சேர்ந்து கட்டிய பூமாலையான நமது இந்தியாவில் வாழும் தேச பக்தன் என்பதே எனக்கு பெருமைதான். ஆனாலும் சமீப காலமாக நீங்கள் நடந்து கொள்ளும் விதம் என்னை சங்கடப் படுத்துகிறது. மகாத்மா காந்தி படுகொலையில் ஆரம்பித்து இந்திய தேசத்தின் அமைதியை, அதன் ஒற்றுமையை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று குவித்து, பிணங்களின் மீது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பா.ஜா.க வை கடந்த பாராளுமன்றத் தேர்தலில், அதன் “இந்தியா ஒளிர்கிறது” என்ற பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து வென்றீர்கள்.

உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் மீதான அதிருப்தியை இருந்தாலும் இந்திய மதச்சார்பின்மை தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்று இடதுசாரிகளும் உங்களுக்கு ஆதரவு தந்தார்கள். அதன் பிறகு உங்கள் தலைமையிலான அரசு இடதுசாரிகளின் ஆலோசனைகளை ஏற்று மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் “உணவுக்கு வேலைத் திட்டம்”, “கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம்”, “தகவல் அறியும் உரிமை” என சரியான பார்வையில் தான் ஒடிக் கொண்டிருந்தது. உங்கள் செயல்பாடுகளுக்கு அவ்வப்போது விமரிசனம் தந்துகொண்டிருந்த இடதுசாரிகளும் மக்கள் சார்பான நிலைப்பாடுகளையே தந்து வந்தார்கள்.

உண்மையை சொல்லவேண்டுமானால் நீங்கள் சரியான பாதையில் செல்வதற்க்கே அவர்களின் எச்சரிக்கைகள்தானே காரணம்? அன்புக்குரிய பிரதமர் அவர்களே நாங்கள் வாங்கிகொண்டிருந்த

1/2 லிட்டர் பாலின் விலை 3.50 ரூபாயிளுருந்து 10.00 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

காய் சேர்ப்பது உடலுக்கு நல்லது என்று எனக்கு மருத்துவர் தினமும் அறிவுறுத்துகிறார். காய்-கரிகளோ பனை மரத்தில் காய்க்க ஆரம்பித்தது போல கைக்கு எட்டாமல் இருக்கின்றன. இவை எல்லாவற்றிர்க்கும் பணவீக்கம்தான் காரணம் என்று சொல்லுகிறார்கள். உங்களுக்கு தெரியாததில்லை. இந்தியாவில் புதிதாக 23,000 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளார்கள். (அமெரிக்க அளவுகோள்படி ரூ. நான்கு கோடி வைத்திருப்பவர்கள் ,இதில் அவர்களது வீட்டு மதிப்பு சேராது) ஏற்கனவே இந்தியாவில் ஒரு லட்சம் கோட்டீஸ்வரர்கள் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. மறுபுறத்தில் ஒரு

நாளைக்கு ரூ. 40க்கும் குறைவான ஊதியம் பெறுபர்கள் 35 கோடி பேரும்,

ரூ. 20 குறைவான ஊதியம் பெறுபர்கள் 70 கோடி பேரும் உள்ளனர். ஒரு நாளைக்கு ரூ 100 வருமானமுள்ள குடும்பமே இப்படி தள்ளாடும் என்றால் ஒரு நாளைக்கு வெறும் இருபது ரூபாயில் குடும்பம் தள்ளும் மக்களின் நிலை?இப்போது நீங்கள் அணுசக்தி உடன்பாட்டுக்கு காட்டும் இந்த உறுதிப் பாட்டை "பெட்ரோல் விலை உயர்வின் மீதோ" அல்லது "விலைவாசி உயர்வின் மீதோ" காட்டியிருந்தால் நாங்கள் சந்தோசப் பட்டிருப்போம்.இத்தனைக்கு

பிறக்கும் "நான் எங்கள் மீது கரிசனம் காட்டுங்கள்" என்று கெஞ்சுவதர்க்காக இந்தக் கடிதத்தை எழுதவில்லை.டாக்டர்.ஏ.கோபால கிருஷ்ணன் - இந்திய அணுசக்தி விஞ்ஞானி கூறுகிறார். நாட்டின் எரிசக்தியை நமது நாட்டில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு அமைத்துக்க் கொள்ளுவது முக்கியமானது என்று கூறுகிறார், நமது நாட்டுக்கு தெரிந்த தொழில் நுட்பத்தில் அதனை அமைத்துக் கொள்ளுவதே சிறந்தது என்றும் கூறுகிறார்.

அவர் சொல்லுவது போலவே 2006இல் 33 ஜிகாவாட்ஸ் உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு அமைக்கப் பட்ட நீர் மின் உற்பத்தி நிலையாங்களை போல கூடுதலாக, மேலும் 55 ஆயிரம் மெகா வாட் நேபாளம் மற்றும் பூடானி லிருந்து நாம் இறக்குமதி செய்து நீர் மின் உற்பத்தியை அதிகப் படுத்துவதன் மூலமாக நம் தேவையை பூர்த்தி செய்யலாமே?

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால், அணு ஈனுலை களை வாங்குவதற்காக, அமெரிக்க நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இந்தியா அளித்திட வேண்டும். அதில் பாதியளவு மட்டும் செலவு செய்து, நம்முடைய எரிசக்திக் கொள்ளளவை அதிகரிக்க முடியுமில்லையா? அதோடு சேர்த்து ஒவ்வோராண்டும் ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கும் ஆறுகளையும் கட்டுப்படுத்தலாமே ?இந்தியாவில் நிலக்கரி இருப்பு அபரிமிதமான அளவில் இருப்பதைக் திட்ட கமிசன் கண்டறிந்திருக்கிறது. இத்தனை கணக்கில் எடுத்துக்கொண்டு அனல் மின் நிலையங்கள் அமைக்கலாமே ?

நம்மிடம் இந்த ஒப்பந்தம் போட துடிக்கும் அமெரிக்கா, தன்னுடைய சொந்த நாட்டில், கடந்த முப்பதாண்டுகளில் ஓர் அணு ஈனுலையைக் கூட நிறுவிடவில்லை என்பது உங்களுக்கு தெரியாததில்லை? .

பின் ஏன் நாம் அமெரிக்காவின் பொருளாதார நலன்களுக்கு முட்டுக் கொடுப்பதற்காக இந்த ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?இன்றைய சூழலில், பல்துருவ உலகக் கோட்பாட்டை நோக்கிய சர்வதேச உறவுகள் அமைவதுதான் நமக்கு சாதகமாக அமையும். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் விரும்பும் படி அதனை ஓர் ‘ஒருதுருவ உலகக் கோட்பாடாக’ மாற்றி அமைக்க முயற்சிக்கிறது,

உலக நாடுகளை தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர காய் நகர்த்துகிறது. நீங்கள் நமது தேசத்தை அதற்க்கு பலியிடுகிறீர்கள். வளரும் நாடுகளின் தலைவனாக கடந்த காலங்களில் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து செயல்பட்டு வந்த இந்தியா, உங்கள் தலைமையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைந்துகொண்டு, ‘ஒருதுருவ உலகக் கோட்பாட்டைத் திணித்தால், உலக அரசியலில் நமக்கு இருக்கும் தனித்தன்மை கரைந்து காணாமல் போய்விடும். இது இடதுசாரிகளின் நியாமான கோரிக்கை.இந்த அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவிற்கு, இராணுவம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களிலும் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையிலும் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கும் ,

நம்முடைய அற்ப அளவிலான வள ஆதாரங்களையும் பெருமளவிற்கு வற்ற வைத்துவிடும் உண்மைதானே? இந்தியா என்ற வளம் மிகுந்த தேசத்தில் வாழ்வில் பசையற்றுப் போய் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதும். நாட்டின் வீதிகளில் கண்ணீர் துளிகளோடு பசியால் குழந்தைகள் பலர் மாண்டு விழுந்த போதும். வேலையின்மை, அறியாமை, வறுமை போன்ற கொடுமையான வியாதிகளால் இந்திய தேசம் பீடிக்கப் பட்டிருந்த போதும், கசியாத உங்கள் கண்கள், சிந்திக்காத உங்கள் இதயம் விலை வாசி பணவீக்கம் பற்றி இப்போது மட்டும் என்ன செய்யப்போகிறது.மாண்பு மிகுந்த பிரதமர் அவர்களே, குறைந்த பட்சம் உயர்ந்த பதவிக்கான அந்த மான்பினையாவது காப்பாற்றுங்கள்,மதர்ச்சார்பின்மை வேண்டும், சகோதரத்துவம் வேண்டும் என்றுதான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள், இடதுசாரிகளும் அதற்காகத்தான் உங்களுக்கு ஆதரவளித்தார்கள். ஆனால் இன்று ஏகாதிபத்தியத்தின் கால்களில் நமது சுதந்திர செயல்பாடுகளை காவு கொடுக்கிறீர்கள். அதோடு சகோதரத்துவத்தையும் குழிதோண்டி புதைத்து மீண்டும் மதவெறியர்களை அரியணை அமர்த்தும் விதமாக நடந்துகொள்ளுகிறீர்கள்.மீண்டும் சொல்லுகிறேன் இந்தக் கடிதம் கருணை வேண்டிப் போடப்பட்ட மனுவல்ல, "நாளைய இந்தியா உங்களை 'துரோகி' என்று தூற்றும்" அதிலிருந்து பிழைக்க முயலுங்கள் என எச்சரிக்கத்தான் எழுதுகிறேன். குதிரை பேரங்களும், கத்தை நோட்டுகளும் இன்று சில அரசியல் ஆதாயங்களை தந்து, எம்.பி எண்ணிக்கையை உயர்த்தி உங்கள் அரசை நிலைக்க செய்யலாம், ஆனால் நாளைய வரலாறில் உங்கள் மீதான பழி என்றைக்கும் .அகலாது

-சிந்தன்