பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 அக்டோபர், 2011

முன்னூறு ராமாயணங்களும் இந்து பயங்கரவாதிகளும்

டெல்லி பல்கலைக்கழகம் இப்போது சிலரின் மகிழ்ச்சிக்கும் பலரின் கோபத்திற்கும் உள்ளாகி உள்ளது. மீண்டும் ஓருமுறை இந்துவம் தனதுகொடுர முகத்தை காட்டி சிரிக்கிறது. அதை எதிர்த்து முற்போக்கு சக்திகள் களம் இறங்கி உள்ளன.


டெல்லி பல்கலைக்கழகம் வரலாறு பாட புத்தகத்தில் இருந்து ஒரு கட்டுரையை நீக்கியிருப்பது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. 

மறைந்த மொழியியல் மேதை ஏ.கே.ராமானுஜம் எழுதிய ‘முன்னூறு ராமாயணங்கள்: மொழிபெயர்ப்பு குறித்த ஐந்து உதாரணங்களும் மூன்று சிந்தனைகளும்’ என்ற கட்டுரைதான் கல்விக்குழுவால்  தடைசெய்யப்பட்டுள்ளது. 

அந்த கட்டுரையை எதிர்த்து 2008ல் பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பு ரகளையில் ஈடுபட்டது. கட்டுரை இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வழக்கு தொடரப்பட்டது.  நிபுணர் குழு அமைத்து கட்டுரையை ஆய்வு செய்து, கல்விக்குழுவிடம் அறிக்கை அளித்து, அதன் பேரில் பல்கலைக்கழகம் தீர்மானிக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது.


நிபுணர் குழுவில் மூவர் ‘கட்டுரை இருக்கட்டும்’ என்றும், ஒருவர் மட்டும் ‘நீக்கலாம்’ என்றும் பரிந்துரை செய்தனர். துணைவேந்தர் கல்விக்குழுவை கூட்டியபோது  111 உறுப்பினர்கள் கட்டுரையை  நீக்கவும், 9 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். பெரும்பான்மை ஆதரவு என்ற அடிப்படையில் அந்த முடிவை குறைகூற முடியாது. எனினும், இந்து மதவாதிகளின் மிரட்டலுக்கு  அடிபணிந்து விட்டதாக  கல்வியாளர்கள் குமுறுகின்றனர். வெளிப்படையாக பலத்தை காட்டி மிரட்டும் கூட்டம் சிறிதாக இருந்தாலும், அதன் கோரிக்கை அநியாயமாக இருந்தாலும், எந்த எதிர்ப்பும் காட்டாமல் சமரசம் செய்துகொள்வது ஃபேஷனாகி வருகிறது. ராமாயணம் ஒருவர் மட்டுமே எழுதிய நூல் அல்ல. எல்லா கவிஞர்களும் ஒரே மாதிரியாக ராமாயண கதை சொல்லவில்லை. அவரவர் கற்பனைக்கும் கலாசாரத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப பாத்தி ரங்களையும்  வார்த்தைகளையும் மாற்றியிருக்கிறார்கள். வால்மீகிக்கும் கம்பனுக்கும் நிரம்ப வேறுபாடுகள். ஒரே திருக்குறளுக்கே எண்ணற்ற உரைகள். அதுபோல இந்தியாவின் புராண காவியத்துக்கும்  அநேக முகங்கள். அதை வரலாற்று தொகுப்பாக வழங்குவது அறிவுசார் ஆராய்ச்சி. மதத்துக்கு அங்கே எந்த வேலையும் இல்லை. 



மதம் சம்பந்தமான பிரச்னைகளில்கூட நான் சொல்வதுதான் சரியானது என அறிவிக்கும் அதிகாரம் இந்து மதத்தில் எந்த தனி மனிதருக்கும் அமைப்புக்கும் கிடையாது. இந்த நிலையில், மாணவர்களி டம் சுதந்திரமான சிந்தனையை தூண்ட வேண்டிய கல்வி நிலையங்கள் ஒதுங்கிப்போக நினைப்பது ஆரோக்யமான போக்கல்ல.

எங்களின் சிந்தனைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அனுமதியோம் என்ற முழக்கத்துடன் தில்லிப் பல்கலைக் கழக மாணவர்களும் பேராசிரியர்களும் மாபெரும் அறிஞரும் கவிஞருமான ஏ.கே.ராமானுஜம் ராமாயணம் குறித்து எழுதிய உன்னதக் கட்டுரையை மீண்டும் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் சேர்த்திட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் மேற் கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டம் தில்லிப் பல் கலைக்கழகத்தின் துணை வேந்தர் அலுவலகத்தின் முன்பு திங்களன்று நடைபெற்றது. போராட்டத்தில் ஈடு பட்ட வரலாற்றுப் பேராசிரியர் டாக் டர் சுனில் குமார், ‘‘பல்கலைக் கழகத் தின் செயல் எங்கள் படிப்புச் சுதந்தி ரம், எழுத்துச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரத்தில் தலையிடும் செயலா கும்’’ என்றும் ‘‘எங்களுக்குப் பிரிய மானதை நாங்கள் தக்க வைத்துக் கொள்வதற்காக இப்போராட் டத்தை மேற்கொண்டிருக்கிறோம்’’ என்றும் கூறினார். ‘நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ அல்லது உங்களுக்கு சவுகரியமாக இருக்கிறதோ இல்லையோ ராமாயணத்திற்கு பல்வேறு விதமான மொழிகளில் பல்வேறுவிதமான மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன என்னும் உண்மையை மாற்றிட முடியாது.


 ராமானுஜத்தின் கட்டுரை மிக நுணுக்கமாக எழுதப்பட்ட அற்புதமான படைப்பு. அதனை கணிதப் பேராசிரியரான நமது துணை வேந்தர் ரத்து செய்திடத் தீர்மானித்திருக்கிறார். இது அறிவுக்கு விரோதமான , அறிவாற்றலுக்கு விரோதமான மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும்’’ என்று ராம்ஜாஸ் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர் முகுல் மங்காலிக் கூறினார். முன்னதாக பேரணியில் வந்த மாணவர்களும் பேராசிரியர்களும் தில்லிப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கிடும் ராம்ஜாஸ், கிரோரிமால், செயின்ட் ஸ்டீபன்ஸ் மற்றும் இந்து கல்லூரிகள் வழியாக பேரணியாக வந்து நிறைவாக துணை வேந்தரின் அலுவலகத்தின் முன்பு சங்கமித்தனர்.

 பேரணியில் வந்த இளம் வயது மாணவர்கள் மட்டும் அல்ல, வய தான பேராசிரியர்கள் கூட, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’’ (புரட்சி ஓங்குக) என்று முழக்கமிட்ட வண்ணம் வந்தது குறிப்பிடத்தக்கது.



நன்றி : தீக்கதீர், தினகரன்,தி. இந்து நாளேடு

வியாழன், 20 அக்டோபர், 2011

மோடி எதிரான போராட்டம் தொடரும்: சஞ்சீவ் பட்


குஜராத் மாநில மோடி அரசாங்கத்திற்கு எதிரான என் போராட்டம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது, இது தொடரும் என்று குஜராத் மாநில அரசால் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி யான சஞ்சீவ் பட், திங்களன்று பிணையில் (ஜாமீனில்) வெளி வந்தபின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குஜராத் மாநில மோடி அர சாங்கத்திற்கு எதிராகக் கருத் துக்கள் கூறியதை அடுத்து ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட், செப்டம்பர் 30 அன்று கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம்,மெகானிநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவ லர் கே.டி.பந்த் என்பவர், கட் லோடியா காவல்நிலையத்தில் சஞ்சீவ் பட்டிற்கு எதிராக முறையீடு பதிவு செய்ததை அடுத்து சஞ்சீவ் பட் இவ்வாறு கைது செய்யப்பட்டார். மேற் படி காவலர் கே.டி.பந்த், உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள விசா ரணை வழக்குரைஞர் முன்பு, தான் 2002 பிப்ரவரி 27 அன்று முதலமைச்சர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்த கூட்டத்தில், மோடி, ‘‘முஸ்லிம்களுக்கு எதி ராக இந்துக்கள் கோபத்தை வெளிப்படுத்திட அனுமதிக்கு மாறு’’ காவல்துறையினருக் குக் கட்டளையிட்டதாக, தன் னைப் ‘‘பொய்யாக’’ உறுதி வாக்குமூலம் (அபிடவிட்) தாக்கல் செய்யுமாறு சஞ்சீவ் பட் அச்சுறுத்தினார் என்பதே அந்த முறையீடாகும். இதன் மீதே சஞ்சீவ் பட் கைது செய் யப்பட்டு, சிறையில் அடைக் கப்பட்டார்.

சஞ்சீவ் பட், மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்தார். இப் பிணை மனுவை எதிர்த்திட, மாநில அரசாங்கம் எஸ்.வி. ராஜூ என்பவரை சிறப்பு அரசு வழக்குரைஞராகவே நியமனம் செய்துள்ளது. பிணை மனுவை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்றம், சஞ்சீவ் பட், இவ் வழக்கு தொடர்பாக நடை பெறும் புலனாய்வுக்குக் குந் தகம் விளைவிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் சஞ் சீவ் பட்டை பிணையில் விடு வித்தது.

சஞ்சீவ் பட் பிணை விடு தலையை, பல்வேறு மனித உரிமைகள் ஆர்வலர்களும், சமூக அமைப்புகளும், எண் ணற்ற சுயேச்சை அமைப்பு களும் மகிழ்வுடன் வரவேற் றுள்ளன. அவரது இல்லத்தின் முன்பும் நகரின் பல பகுதி களிலும் மகிழ்ச்சியைப் பிரதி பலிக்கும் வகையில் பேரணி- ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

சிறையிலிருந்து வெளி வந்த சஞ்சீவ் பட், செய்தியா ளர்களிடையே கூறுகையில், தனக்கு முன்னுள்ள மாபெரும் போராட்டத்திற்கு இது ‘‘தொடக் கம்’’ மட்டுமேயாகும் என்றார். மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி தொடர்ந்து அமலில் இருந்து வருவது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். தான் பிணையில் விடுதலையாகி யிருப்பது, 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற மதவெறிக் கல வரங்களில் பலியானவர்களின் வெற்றி என்றும் பட் கூறினார்.

தான் சிறையிலிருந்த நாட் களை ‘‘வார ஓய்வு நாட்கள்’’ என்று குறிப்பிட்ட சஞ்சீவ் பட், ‘‘என்னைவிட மாபெரும் லட் சியத்திற்கான என் போராட் டத்தைத் தொடர்ந்து மேற் கொள்வேன்’’ என்றார். தான் கைது செய்யப்பட்டு, நீதிமன் றத்தில் காவல் அடைப்பிற்காக ஆஜர் செய்விக்கப்படுவதற்கு முன்பு குற்றப் பிரிவு காவல் துறையினர் தன்னிடம் நடந்து கொண்டவிதம் குறித்து கருத்து எதுவும் கூற சஞ்சீவ் பட் மறுத்துவிட்டார். இது தொடர் பாக சஞ்சீவ் பட் மனைவி, உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருப்பது குறிப் பிடத்தக்கது. ‘‘நான் இது தொடர்பாக சரியான நேரத்தில், சரியான மன்றத்தின் முன் மட் டுமே பேசுவேன்’’ என்று சஞ் சீவ் பட் கூறினார்.

மோடி அரசாங்கம் தன்னை சுதந்திரமாக வாழ அனுமதிக் காது என்று தனக்குத் தெரியும் என்று சஞ்சீவ் பட் கூறினார். ‘‘அவர்கள் தங்கள் வேலை யைச் செய்யட்டும், நானும் என் வேலையைச் செய்வேன். அர சாங்கம் அடுத்து என்ன செய்ய இருக்கிறது என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் என் வேலையைச் செய் வேன். அவர்கள், அவர்களது வேலையைச் செய்யட்டும். நான் அவர்களை சும்மா விட்டு விடப் போவதில்லை. அதே போன்று அவர்களும் என்னை சும்மா விட்டுவிட மாட்டார்கள்’’ என்று சஞ்சீவ் பட் கூறினார்.

தான் சிறையில் அடைக் கப்பட்டிருந்த சமயத்தில் தன் பக்கமும் தன் குடும்பத்தார் பக்கமும் உற்ற துணையாக இருந்த அனைவருக்கும் சஞ் சீவ் பட் நன்றி கூறினார். குறிப் பாக தன்னுடன் பணியாற்றும் ஐபிஎஸ் சகாக்களுக்கும், ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத் திற்கும் நன்றி கூறினார். தான் சிறையிலிருந்த காலத்தில் அவர்கள் தன் இல்லத்திற்கு வந்து தன் மனைவிக்கு ஆறு தல் கூறி தைரியம் அளித்தி ருக்கிறார்கள். ‘‘நான் மேலும் வலுவுடன் வெளியே வந்திருக் கிறேன். என் போராட்டத்தைத் தொடர தயாராகவே இருக்கி றேன்,’’ என்று சஞ்சீவ் பட் கூறினார்.

தனக்கு எதிராக ஒரு காவ லர் கொடுத்த முறையீட்டை, குஜராத் மாநிலத்திற்கு வெளியே உள்ள ஒரு ஏஜென்சி விசா ரணை செய்வதையே தான் விரும்புவதாக பட் தெரிவித் தார். ‘‘அவ்வாறு விசாரிக்கப் படுமானால், இம்மாநிலத்தில் அரசு எந்திரம் எந்த அளவிற்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்பதும், வழக்குகளில் சாட் சிகள் மிரட்டப்பட்டார்கள் என் பதும் வெளியாகும்’’ என்றார்.

தன் வீட்டில் காவல்துறை யினர் நடத்திய சோதனை, மோடிக்கும் மாநில அரசாங் கத்திற்கும் எதிராகத் தன் வீட் டிலிருந்த முக்கிய ஆவணங் களை அழிக்கும் நோக்கத் துடனேயே மேற்கொள்ளப்பட் டதாக சஞ்சீவ் பட் குற்றம் சாட்டினார். அதேபோன்று இதே நோக்கத்துடன்தான் தன் தாயாரின் வீட்டிலும் சென்ற ஆண்டு திருடு போனது என் றார்.

சஞ்சீவ் பட் பிணையில் வெளிவந்ததை அடுத்து மகிழ்ச் சியை வெளிப்படுத்திய அவ ரது மனைவி, நாட்டின் நீதித் துறையில் உள்ள தன் நம் பிக்கை மேலும் வலுப்பட்டிருக் கிறது என்றும், ‘‘உண்மை எப் போதும் நிலைக்கும்’’ என்ப தில் தான் எப்போதும் நம் பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்

புதன், 21 செப்டம்பர், 2011

கொலைகார சைவப் பூனையின் விரதம்:ஹிந்துஸ்தான் டைம்ஸ்


நூற்றுக்கணக்கான எலிகளை விழுங் கிவிட்ட ஒரு பூனை தனது பாவங்களைக் கழுவும் பிராயச்சித்தமாக புனிதப்பயணம் புறப்பட்டதாம். அந்த சைவப் பூனையின் கதைதான் மோடியின் கதையும்.

பிராயச்சித்தம் என்பது எல்லா மதங்களி லும் கலாச்சாரங்களிலும் ஏற்றுக்கொள்ளப் படுகின்ற ஒன்றேயாகும். யூத மதத்தினர் (தங் களது ஆண்டு முதல் மாதம் பத்தாவது நாளான) ‘யோம் கிப்புர்’ தினத்தன்று பாவங் களுக்கு பிராயச்சித்தமாக உண்ணாவிரதம் இருப்பார்கள். கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும், முஸ்லிம்கள் ரம்ஜான் மாதம் என்றும் இவ்வாறு உண்ணா நோன்பு மேற்கொள்வது வழக்கம். “உனக்கு நன்மை செய்யும் என்று உணர்ந்து நீ நோன்பு இருந்தால்தான், அது உனக்கு நன்மை செய்யும்” என திருக்குரான் கூறுகிறது. நமது நாட்டின் கலாச்சாரத்திலும் இதே போன்று பிராயச்சித்தமாகவும், புனிதப் படுத்திக் கொள்வதற்காகவும் நோன்புகள் பல வற்றை இந்து மதமும் ஜைன மதமும் கூறு கின்றன. மகாத்மா காந்தி, விடுதலைப் இயக்கத்தில், உண்ணா நோன்பினை ஒரு ஆன்மீக போராட்டக் கருவி என்ற நிலைக்கு உயர்த்தினார்.

கேலிக்கூத்து!

மோடியின் உண்ணா நோன்பு, இத்தகைய உயர்ந்த இலட்சியங்களை கேலிக் கூத்தாக் கியிருக்கிறது. 2002 குஜராத் மதவெறிப் படுகொலை, அனைத்து அரசியல் சாசனம் சார் அமைப்புகளின் கண்டனத்திற்கும் ஆளாகியிருக்கிறது. தேசிய மனித உரிமைக் கமிஷன், தேர்தல் கமிஷன், சமூக ஆர்வலர் அமைப்புக்கள் என அனைவரும் அதை கண்டித்திருக்கின்றனர். படுகொலைகள், மிகக் கொடூரமான கற்பழிப்புகள், உடல் உறுப் புக்களை வெட்டியெறிதல் என பல்லாயிரக் கணக்கானோர் அன்று சித்ரவதைக்கு ஆளானார்கள். இன்று, ஒன்பது ஆண்டுகள் ஆகிய பின்னரும் கூட, 21,448 பேர் தங்களது பழைய இடங்களுக்கு திரும்ப முடியாமல், 11 மாவட்டங்களில் உள்ள 45 முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இது பற்றியெல்லாம் எவ்வித வருத்தமும் தெரிவிக் காத மோடி, “வளர்ச்சி என்ற மந்திரத்தின் மூலம், அவர்களது காயத்தினை குணப்படுத்தி விட்டதாக” கூறுகிறார். ஆனால், அப்படியும் ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை. ஆழ மான வறுமையும், கடுமையான வருமான ஏற் றத்தாழ்வுகளும் குஜராத்தில் நீடிக்கின்றன என பிரபலமான பொருளியல் அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார். இதுவரை நடத்தப்பட்ட அனைத்து பொருளாதார ஆய்வுகளும் அத னையே உறுதி செய்கின்றன. அம்மாநிலத்தில் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் முஸ்லிம்கள்தான். இந்த மாநி லத்தில் உருது மொழியில் ஒரு நாளிதழ் கூட வெளிவருவதில்லை என ஆய்வுகள் தெரி வித்திருக்கின்றன.

வளர்ச்சியின் பயன்கள் சாதி -மதங் களைக் கடந்து அனைவரையும் சென்றடைந் திருக்கிறது என்ற வாதத்தின் பொய்மையினை இந்த ஆய்வுகள் வெளிக்கொண்டு வந்திருக் கின்றன.

திசை திருப்ப...

இந்த நேரத்தில் ஏன் இந்த உண்ணா நோன்பு என்பது குறித்து, பல வகை காரணங் கள் கூறப்படுகின்றன. “மத வெறி அரக்கன்” என்ற வார்ப்படத்திலிருந்து வெளிவரவேண் டும் என்பது ஒரு தெளிவான காரணமாகத் தோன்றுகிறது.

அண்மையில் உச்சநீதிமன்றம் வெளி யிட்ட ஒரு முடிவினை தவறாகப் புரிந்து கொண்டதிலிருந்து இது தொடங்குகிறது.

குஜராத் கலவரங்களுக்கும் மோடிக்கும் சம்பந்தமில்லை என உச்ச நீதிமன்றம் நற் சான்றிதழ் வழங்கி விட்டது போன்று ஒரு தோற்றத்தினை பிஜேபி ஏற்படுத்தி வருகி றது. ஆனால், உச்சநீதிமன்றம் கூறியிருப் பதே வேறு. குல்பர்கா சொசைட்டி தீவைப்பு கொலை வழக்கில் மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து, நடுநிலையாளர் (ஹஅiஉரள ஊரசயைந) மற் றும் சிறப்புப் புலனாய்வுத் துறையின் ஆவ ணங்கள் என தனது கையிலிருந்த ஆவணங் கள் அனைத்தையும் விசாரணை நீதிமன்றத் திற்கு அனுப்பியிருக்கும் உச்ச நீதிமன்றம், அவற்றை சாட்சியமாக கொண்டு விசாரணை யினை விரைவு படுத்த வேண்டுமென்று

உத்தரவிட்டிருக்கிறது. இது மோடியின் மீது முதல் தகவல் அறிக்கை (குஐசு) பதிவு செய்வது என்ற கட்டத்தினையும் தாண்டிய நிலைமை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன என்பதே அதன் பொருள்.

குஜராத்தில் அண்மையில் அமைக்கப் பட்டிருக்கும் லோக் அயுக்தா, தன் மீது பெரு மளவில் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து விடும் என்ற அச்சத்தில் அதிலிருந்து மக் களின் கவனத்தைத் திசை திருப்புவதற் காகவும் இது நடைபெறுவதாகக் கொள்ளலாம்.

பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்ற திசையில், தனது தேசிய அரசியல் பிரவேசத் திற்கு கட்டியம் கூறுவதே இதில் மோடியின் பிரதான நோக்கம். “கூட்டுத் தலைமை” என்ற அடிப்படையிலேயே 2014 தேர்தலை எதிர்கொள்வோம் என அண்மையில் பி.ஜே.பி தலைவர் அறிவித்திருக்கிறார். பிற அம்சங் களில் மாற்றம் இல்லாத போது, ஒரு குறிப் பிட்ட அம்சத்தினை மட்டும் அதிகரித்தால் உற்பத்தி கூடிவிடும் என்று சொல்ல முடி யாது; சில வேளை அது உற்பத்திக் குறை விற்கும் இட்டுச்செல்லும் என்பது ஒரு பொரு ளாதார விதி (டுயற டிக னுiஅinளைாiபே சுநவரசளே). இந்த விதி இன்று அத்வானிக்கு நன்றாகவே பொருந்தும். இருப்பினும், அதையும் மீறி தனது ஆறாவது ரத யாத்திரையினை தொடங்குவது என அத்வானி முடிவு செய்திருக்கிறார்.

இரத்தக் களறியாக ...

“ராமர் கோவிலை கட்டியே தீருவோம்” என்ற முழக்கத்துடன் 1990ல் அவர் சென்ற முதல் யாத்திரை, நவீன, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியக் குடியரசின் வரலாற்றில் கறைபடிந்த இருண்ட பக்கங்கள் என அனைவராலும் கருதப்படுகிறது.

யாத்திரை கடந்து சென்ற ஒவ்வொரு இடமும் இரத்தக்களறியாக மாறியது. இரண்டு மாதங்களுக்குள், அதாவது டிசம்பர் மாதம் வாக்கில் கலவரங்களில் ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

பிரடரிக் ஹெகெல் என்ற அறிஞர், “வர லாறு மீண்டும் திரும்பும்” என்று கூறினார். அது குறித்து கார்ல் மார்க்ஸ் கூறும்போது, “முதல் முறை துயரமாக வரும் வரலாறு , மறுமுறை வரும்போது கேலிக்கூத்தாக மாறும்” என்றார். அவ்வகையில், அத்வானி யின் இந்த ஆறாவது யாத்திரை கேலிக்கூத் தானதே யாகும்.

இந்த நிலைமையில், பி.ஜே.பி தலைவர் நிதின் கட்காரி தனது உடல் பருமனைக் குறைப்பதற்காக, அண்மையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். அவரது உடல் நிலை பரிவுடன் நோக்கப்பட வேண் டிய தொன்றேயாகும். ஆனாலும், அவர் கூட களத்தில் இறங்குவதற்காகவே இதைச் செய்திருப்பதாக சில பார்வையும் உள்ளது.

எந்த நிலைமைக்கும் தன்னை உடல் ரீதியாக தயார் நிலையில் வைத்துக்கொள்வது என்ற முடிவில் அவர் இருப்பதாகவும் கூறப் படுகிறது. இது தவிர, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் பி.ஜே.பி தலைவர்களுமே, எதிர்காலப் பிரதமர் நாற்காலிப் போட்டியில் உள்ளார்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

தேவை ஆத்ம பரிசோதனை!

மீண்டும் அத்வானியின் யாத்திரைக்கு வருவோம். இம்முறை அது ஊழலுக்கு எதி ரான யாத்திரை என அவர் அறிவித்திருக் கிறார். ஊழலுக்கு எதிரான மக்களின் கோபத் தினை அண்ணா ஹசாரேயின் உண்ணா விரதம் ஒன்று திரட்டியிருக்கிறது. அதை அப் படியே தனக்கு கைமாற்றிக்கொள்ள முடியும் என அத்வானி நம்புகிறார். அத்வானியும், பி.ஜே.பியும் சற்று ஆத்ம பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சத்தீஸ்கர் மாநிலத்தில் பி.ஜே.பி கட்சியின் ராமன் சிங் தலைமையில் நடைபெறும் ஆட்சி குறித்து அந்த மாநில லோக் அயுக்தா மிகப்பெரும் ஊழல் குற்றச் சாட்டினைக் கூறியிருக்கிறது. அனைத்துத் துறைகளும் ஊழல் முடை நாற்றம், “குளத்தி லுள்ள தண்ணீரை அதிகமாகக் குடித்துக் குடித்தே இறந்துவிடும் மீன்களைப் போன்ற அதிகாரிகள்”. இதுவெல்லாம், ஊழல் ஆட்சி குறித்த லோக் அயுக்தாவின் வர்ணனை. பி.ஜே.பி ஆட்சி குறித்து கர்நாடக மாநில லோக் அயுக்தாவின் கடுமையான குற்றச்சாட் டிற்குப் பின்னர் சத்தீஸ்கர் ஆட்சி குறித்த குற் றச்சாட்டு. பி.ஜே.பி, மிகவும் தயக்கத்துடன் வேறு வழியில்லாமல்தான், முதல்வர் பி.எஸ்.

எடியூரப்பாவின் ராஜினாமாவினைக் கோரிப்பெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மா நிலத்தின் மாஜி அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், சட்ட விரோத சுரங்க நடவடிக் கைகளுக்காக கைது செய்யப்பட்டனர். உத்தர்காண்ட் மாநிலத்திலும் ஊழல் குற்றச் சாட்டுக்கள் அம்மாநில பி.ஜே.பி அரசினை காவு கொள்ளவிருந்த நிலையில், அதை தவிர்ப்பதற்காக, முதல்வரின் ராஜினாமா அவசர அவசரமாகப் பெறப்பட்டது. இதுதான் ஊழல் திசையில் பி.ஜே.பியின் இன்றைய சாதனை வரலாறு.

யாரை பிரதமர் பதவிக்கு முன்நிறுத்துவது என்பதில் ஆர்எஸ்எஸ்ஸூக்குள் நடைபெறும் சச்சரவுகள், அவர்களது உள் விவகாரம். ஆனால், இதில் நமக்கு ஒரு தெலுங்கு பழ மொழி நினைவுக்கு வருகிறது. “கல்யாணமும் ஆகவில்லை, குடியிருக்க வீடுமில்லை. ஆனால், பிள்ளைக்கு பெயர் மட்டும் சோம லிங்கம் என்றானாம்” என்பதே அப்பழமொழி. தேர்தலும் வரவில்லை. பி.ஜே.பிக்கு ஆதரவும் குவிந்து விடவில்லை. எனினும், எலிப் பந்த யம் என்னவோ தொடங்கி விட்டது.

“1992 இந்தியா”வும், “2011 இந்தியா”வும் ஒன்றல்ல எனக் கூறுபவர்கள் இருக்கிறார் கள். அவர்களுக்கு ஒன்றை மட்டும் நினைவு படுத்த வேண்டும். இன்றைக்கும் மதக் கலவரங்கள் நடைபெறுகின்றன; அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.


அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூரில் பன்னிரண்டு உயிர்கள் இவ்வகை யில் பறிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு மேல் இதில் ஒன்றும் கூறத் தேவையில்லை.

சீத்தாராம் யெச்சூரி எம்.பி.

தமிழில் : இ.எம். ஜோசப்

நன்றி : ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ - 20.9.2011

திங்கள், 19 செப்டம்பர், 2011

(நரேந்திர ) மோடி மஸ்தான் வேலை எடுபடாது


சென்னை போன்ற இடங்களில் ஏமாற்று வித்தை காட்டி பிழைப்பவர்களை மோடி மஸ் தான் என்று கூறுவதுண்டு. தற்போது குஜராத் முதலமைச்சரான நரேந்திர மோடிக்கு இந்த பெயர் பொருத்தமாக உள்ளது. காரணம் மத நல் லிணக்கம் காக்க அவர் புதிய அவதாரம் எடுத் திருப்பது தான்.

குஜராத்தில் தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள மக்களை இரு கூறு களாக பிரித்து அரசியல் நடத்தி வரும் மோடி, தனது அதிகாரப் பசிக்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களின் உயிரைக் குடித்தவர். இதற் காக சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையை எதிர் நோக்கியுள்ளார். குஜராத் கலவரத்தில் மோடி உள்பட 63 அதிகாரிகளை சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்து அகமதாபாத் விசா ரணை நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண் டுமே தவிர, நேரடியாக உச்சநீதிமன்றம் அல்ல என்று தான் சமீபத்தில் தீர்ப்பு வந்ததே தவிர குஜ ராத் கலவரத்தில் மோடி குற்றமற்றவர்; அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அல்ல.

ஆனால் ஈறை பேனாக்கி பேனை பெரு மாளாக்கும் கலையில் தேர்ச்சி பெற்ற இந்துத்வா சக்திகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மோடிக்குக் கிடைத்த வெற்றியாக சித்தரிப்பது ஏமாற்று வேலை என்பதை நாட்டு மக்கள் நன் கறிவார்கள். குஜராத் கலவரம் நடந்தபோது காவல்துறை உயர் அதிகாரிகளாக இருந்த பலர் இப்போது மோடிக்கு எதிராக நீதிமன்றத்திலேயே சாட்சியம் அளித்துள்ளனர். கலவரத்திற்கு முக் கிய காரணகர்த்தா மோடி தான் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கலவரத்தைத் தடுக்கா மல் வேடிக்கை பார்க்குமாறு காவல்துறையின ருக்கு உத்தரவிட்டார் என்ற உண்மைகள் எல் லாம் இப்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டி ருக்கின்றன. அவரது உண்மை முகம் இப்படி இருக்கையில், நாட்டு மக்களை ஏமாற்ற உத்தமர் போல் மூன்று நாள் மத நல்லிணக்க உண்ணாவிரதத்தில் அவர் ஈடுபட்டிருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இதுபோன்ற மோசடிக்காரர்களால் தான் சமீப காலமாக உண்ணாவிரதம் என்ற போராட்ட வடி வத்தைச் சொன்னாலே பலர் கேலியாகப் பார்க்கி றார்கள். பல லட்சம் ரூபாய் செலவில் குளு குளு அறையில் இந்த உண்ணாவிரதம் நடைபெறு கிறது. எளிமைக்கு பெயர்போன காந்தி பிறந்த மண்ணில் தான் இந்தக் கொடுமைகள் நடக்கின் றன. இந்த உண்ணாவிரதத்திற்காக நாடு முழுவ தும் பத்திரிகைகளுக்கு அரசு செலவில் கோடிக் கணக்கான ரூபாயில் முழுப்பக்க விளம்பரம் வேறு.



இதுபோன்ற மோசடி வேலைகளால் மோடி தன்மீதுள்ள ரத்தக் கறையை மறைத்துவிட முடி யாது. கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ் பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட சம்பவம், அதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம், அதில் ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டது, குல்பர்கா வீட்டு வசதி கழக வளாகத்தில் இருந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஈசான் ஜாப்ரி உள்பட 36 பேர் உயி ரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஆகி யவை மோடியின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் முன்பு காட்டிவிட்டது. விரைவில் விச ாரணை நீதிமன்றத்தால் தமக்கு ஆபத்து வரப் போகிறது என்று தெரிந்தவுடன் சிறுபான்மை மக்களின் நண்பன் போல் நடிக்கிறார். இதற்காக கூலிக்குச் சிலரை அழைத்துவந்து அருகி லேயே வைத்துக் கொண்டார். இப்படிப்பட்ட நாடகத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் அதிமுக போன்ற மதச் சார்பற்ற கட்சிகளும் வாழ்த்துத் தெரிவித்திருப் பது உண்மையிலேயே கவலையளிக்கிறது.

திங்கள், 20 ஜூன், 2011

சங்பரிவாரத்தின் பாபா ராம்தேவ் முகமூடி







மத, ஆன்மீக அல்லது மற்ற காரணங்களுக்காக கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் ஒருவர் அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை அரசியல் கோரிக்கைகளுக்காக அணி திரட்டினார் என்றால் அது மதச்சார்பற்ற அரசியலை சீர்குலைக்கும் வேலையாகும். அத்தகைய ஒரு நபரை தாஜா செய்யும் ஒரு அரசாங்கம் அந்த சீர்குலைவு வேலைக்கு துணை போகின்றது-பிரபாத் பட்நாயக்

மாட்டுக் கறி சாப்பிடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றவர் ராம்தேவ். சங்பரிவாரம் அவரை ஏன் ஆதரிக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. ஆனாலும், அவர் தன்னுடைய லேகியங்களில் மாடுகள் உள்ளிட்ட பிராணிகளின் எலும்புகளைக் கலந்து விற்பவர். அதைவிட மனித எலும்புகளையும் கலந்து விற்பவராம். அதாவது, மனித எலும்பு கச்சாப் பொருளாகவும், மாட்டு எலும்பு லேகியத்திற்கு புனிதம் சேர்க்கும் பொருளாகவும் பயன்படுத்துகிறார் போல. ஆதலால், அவர் சங் பரிவாரத்திற்கு இன்னும் நெருக்கமாக ஆகிவிடுகின்றார்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் சங்பரிவாரின் தலைவர்களுடைய குழந்தைகள் மாட்டுக்கறி சாப்பிடுவது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அது போலத்தான் பாபா மாட்டு எலும்புகளை மகத்தான லேகியங்களாக மாற்றுவதும். மாட்டு இறைச்சி உண்மையில் உடம்புக்கு நல்லதுதான். நிற்க.

ராம்தேவின் சொத்து மதிப்பு 1000 கோடியிலிருந்து 11000 கோடி வரை மதிப்பிடப்படுகின்றது. ‘விக்கிடாப்5’ என்கிற இணையதளம் 15000 கோடி என்கிறது. இதில் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தீவும், அமெரிக்காவில் உள்ள 85 ஏக்கர் நிலமும் அடங்கும் என்கிறார்கள். எப்படியாயினும் ஒரு பரதேசிக்கு இவ்வளவு சொத்து எதற்கு என்கிற கேள்வி (நன்றி:அன்பரசன் மா, முகநுhல்) எழுவதைத் தவிர்க்க முடியாது. சாமியார்கள் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று எந்த ஆசையையும் துறக்கவில்லை என்பது மட்டும் நிச்சயம். பூசாரிக்கு பயன்படாத எதுவும் கடவுளுக்கு படைக்கப்படுவதில்லை என்று அறிஞர் இங்கர்சால் கூறுவார். அமெரிக்க நிலமும், ஸ்காட்லாந்து தீவும் அவரது பக்தர்கள் வாங்கிக் கொடுத்ததாம்.

ஏதோ ஒரு தமிழ் திரைப்படத்தில் ஆடு திருடிய சுனா பானா கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு அவரே ‘யார்ரா ஆட்டை திருடியது’ என்று பஞ்சாயத்தில் ரவுசு பண்ணுவார். அதாவது, திருடியவரே ‘யார்ரா திருடியது’ என்று மிரட்டுவார். அதுதான் எனக்கு ராம்தேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டச் செய்திகளைப் படிக்கும்போது நினைவிற்கு வந்தது.

சாமியார்கள் என்றாலே போலிகள்தான் என்பதை நாம் அறிவோம். உண்மைச் சாமியார்கள், போலிச் சாமியார்கள் என்கிற பேதம் எதுவுமில்லை. இந்த நிலையில் சொத்து சுகம் என்று வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த பாபாவிற்கு நாட்டு நலனில் என்ன திடீர் அக்கறை? வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தின் மீதும், ஊழல் ஒழிப்பின் மீதும் என்ன கரிசனம்?

உண்மையில் அவருக்கு ஊழல் ஒழிப்பின் மீதோ அல்லது கருப்புப் பணத்தை கணக்கில் உள்ள பணமாக மீட்க வேண்டும் என்பதில் அக்கறை இருக்கிறதா இல்லையா என்பதே சந்தேகத்திற்கு இடமானதாக இருக்கிறது. பிரதம மந்திரிகளை லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வரக் கூடாது என்கிறார்.நாட்டின் உச்ச அதிகாரம் படைத்த ஒருவரை விசாரிக்கவே கூடாது என்பது எந்த வகையில் சரியென்றே தெரியவில்லை.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு 18 கோடி ரூபாய் செலவழிப்பவர், தன்னுடைய யோகா வகுப்புகளுக்கு 1000 முதல் 50000 வரை கட்டணம் வசூலிக்கும் ஒருவர் எப்படி நியாயமானவராக இருக்க முடியும் என்றே தெரியவில்லை. (மாதம் வெறும் 500 ரூபாய்க்கு யோகா சொல்லிக் கொடுக்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள்).

திரை மறைவில் வேறு என்ன நடந்திருக்கிறது என்பது பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இந்து மதவெறி சங்பரிவாரம் அவருக்கு எல்லாவுமாக இருக்கிறது. சங்பரிவாரம் ஏன் இவர் பின்னால் போய் நிற்க வேண்டும்? அல்லது இவரை ஏன் துhண்ட வேண்டும்?

பாஜக மீண்டும் மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு மேலும் மேலும் அருகிக் கொண்டே வருகின்றது. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வெறும் 5 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. தனது அரசியல் அங்கமான பாஜக எல்லா வகையிலும் மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்பதால் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு வேறு வழி தெரியததால் ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற முகமூடிகளைப் போட்டுக் கொண்டு வருகிறது.

பாஜக ஊழலைப் பற்றிப் பேசினால் யாரும் பொருட்படுத்துவதில்லை. நனைகிற ஆடும் கவலைப்படுகின்ற ஓநாயும்தான் எல்லோருக்கும் நினைவிற்கு வருகிறார்கள். அதிலும் எடியூரப்பா அதை நினைவூட்டுவதில் முன்னணியில் நிற்கிறார்.  பிடிவாதமாக ஊழல் செய்கிறார்.  அதற்காக பிடிவாதமாக பதவியைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்.

மேலும், யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பது பற்றி தங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று சங்பரிவாரத்தின் உச்ச பட்சத் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பதையும் நினைவில் கொள்ளவும். கட்சி சார்பற்ற வேடந்தரித்து பாஜகவை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்கான வழக்கமான உத்தி. 

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று கூடிக் கூடி ஆலோசித்த சங்பரிவாரம் இந்த நிலையில் நேரடியாக பாஜக அடையாளம் இல்லாத ஒரு ‘கலகத்தைத்’ தூண்ட திட்டமிட்டிருக்க வேண்டும். தன்னுடைய பழைய உத்திகளில் ஒன்றையே மீண்டும் தேர்வு செய்கிறது. எந்த பழைய உத்தி?
1970களில் இந்திரா காந்தி அரசாங்கத்தின் ஊழலையும், அராஜகத்தையும் எதிர்த்து காந்தியவாதி ஜெயப்பிரகாஷ் நாராயண் நடத்திய இயக்கத்திற்கு தொண்டர் பலத்தை வழங்கி, அதற்குள் ஊடுருவி, அவசர நிலைப் பிரகடனத்திற்குப் பின்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஜனதாக் கட்சியின் ஒரு அங்கமாக தன்னுடைய ஜனசங்கத்தை ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வைத்த அதே உத்தி.

அப்போதாவது மதச்சார்பற்ற அடையாளத்திற்குள் ஒளிந்து கொள்ள வேண்டியிருந்தது. இப்போது அதுவும் இல்லை. வெளிப்படையாகவே காவி அடையாளம் தரித்து வந்து விட்டார்கள். பாஜக ராம்தேவை ஆதரிக்கிறது. விஎச்பி ஆதரிக்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் இருப்பது ஒன்றும் இப்போதைய நிகழ்வல்ல. அது மிகப் பழைய விஷயம். ஆறு வருடங்கள் அதிகாரத்தில் இருந்தபோது அது பற்றி எதுவும் செய்யாத சங்பரிவார பாஜக இப்போது படோடபமாக ஆர்ப்பாட்டம் செய்கின்றது.

கருப்புப் பணத்தை எதற்கு மீட்க வேண்டும்? ஊழலை ஏன் ஒழிக்க வேண்டும்? கருப்புப் பணம் அரசாங்கத்திற்கு வர வேண்டிய வரி வருவாயை ஏய்க்கிறது. ஊழல் அரசாங்கத்திற்கு வர வேண்டிய பணத்தைத் தின்கிறது. அதாவது ‘மக்களுக்கு’ வர வேண்டிய பணத்தை சில தனியார்கள் சுருட்டிக் கொண்டு போகிறார்கள்.

வரி ஏய்ப்பின் மூலம், ஊழல் மூலம் மட்டும்தான் மக்கள் பணத்தைப் பறிக்க முடியுமா? விலைகளை உயர்த்துவதன் மூலம் மக்களின் பணத்தை பறிக்கலாம். குறைவாகக் கூலி கொடுப்பதன் மூலம் மக்களின் பணத்தைப் பறிக்கலாம். கல்விக் கட்டணம் என்கிற பெயரில் பறிக்கலாம். மருத்துவ சேவைகள் என்கிற பெயரில் பறிக்கலாம்.  உணவுப் பொருட்களுக்கான மான்யங்களை வெட்டுவதன் மூலம் பறிக்கலாம். லட்சக்கணக்கில் மதிப்புள்ள மக்களின் நிலத்திற்கு ஆயிரக்கணக்கில் கொடுத்து விட்டு நிலத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் பறிக்கலாம். மக்கள் சொத்தை குறைவான விலைக்கு விற்பதன் மூலம் பறிக்கலாம். ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஆயிரம் வழிகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. பாபா இவற்றைப் பற்றியெல்லாம் எப்போதும் முணுமுணுத்தது கூட கிடையாது. ஊழல் பெருக்கத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் உலகமயத்தைப் பற்றி அவர் பேசியது கூட கிடையாது.

 பாஜகவோ மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதும், இப்போது அதிகாரத்தில் இருக்கும் இடங்களிலும் இவற்றில் பலவற்றைச் செய்தது. செய்கின்றது. உதாரணம் வேண்டும் எனில், தனியார் மயத்தின் பெயரால் மும்பையில் பொதுத்துறை நிறுவனமான செந்தூர் ஹோட்டலை அடிமாட்டு விலைக்கு விற்றதையும். அதை வாங்கியவர் சில மாதங்களிலேயே நுhறு கோடி ரூபாய்க்கு மேல் லாபத்திற்கு விற்றதையும் நினைவில் கொள்ளுங்கள். அது போல்தான் மாடர்ன் பிரட் நிறுவன விற்பனை ஊழலும். பால்கோ எனும் பெரிய பொதுத்துறை நிறுவனத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்றது வாஜ்பாய் அரசு.  கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு என வாங்கப்பட்ட சவப்பெட்டிகளுக்கு கூடுதல் விலை வைத்து வாங்கியதையும், அந்தக் கூடுதல் பணம் பாஜகவினரின் பாக்கெட்டுக்ளுக்குப் போனதையும் நினைவில் கொள்ளுங்கள்.

உலகமயம் ஊழலை சட்டபூர்வமாக்கிவிட்டது. வருவாய் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பெட்ரோல் விலையை, கேஸ்விலையை இடைவிடாமல் உயர்த்திக் கொண்டே இருக்கும் அரசாங்கங்கள். பட்ஜெட் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பொதுத்துறை நிறுவனங்களை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கின்றன.  ஆனால், உண்மையான நோக்கம் எல்லாவற்றையும் தனியார்மயமாக்குவது, சந்தைமயமாக்குவதுதான். விலைகளை சந்தை தீர்மானித்துக் கொளுமாம். சந்தைப் போட்டியில் விலைகள் குறைந்து   விடும் என்று அன்று சொன்னார்கள். ஆனால், அவை எப்போதுமே குறையவில்லை.
ஊழல் பணத்தை மீட்டால் மட்டும் அது மக்களுக்கு வந்துவிடப் போகின்றதா என்ன என்கிற கேள்வியும் இருக்கிறது. பட்ஜெட் பற்றாக்குறையைக் காரணம் காட்டி உணவு மான்யங்களை வெட்டி மக்களின் வயிற்றில் அடிக்கும் ஐமுகூ அரசாங்கம் ஆண்டுக்கு சராசரியாக சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள் அளவிற்கு பெரும் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகின்றது. ஊழல் மூலம் மட்டுமின்றி, சட்டப்படியாகவும் மக்கள் பணம் பெரு முதலாளிகளின் கல்லாப் பெட்டிகளுக்குத்தான் போகின்றது. ஊழல் பணத்தை மீட்டால் என்ன செய்வார்கள்? அதை சட்டப்படியாக அதே முதலாளிகளிடம் வரி விலக்கு என்கிற பெயரில் திரும்பவும் கொடுத்து விடுவார்கள். முதலாளித்துவ உலகமயக் கொள்கைகளை எதிர்க்காமல் ஊழலை எதிர்ப்பதாக ஐந்து நட்சத்திர ஆர்ப்பாட்டங்கள் செய்வதெல்லாம் மக்களுக்கு எந்த வகையிலும் பயன்தராது. ஆளும் வர்க்கங்களுக்கும், கட்சிகளுக்கும் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டுமானால் பயன்படலாம்.

திங்கள், 6 ஜூன், 2011

ராம்தேவ்வை கொல்ல சதியா? ஆர்எஸ்எஸ் அரசியல் நாடகம்

ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வை மழுங்கடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சமீபத்தில் சமூக சேவகர் அன்னா ஹசா ரேயை உண்ணாவிரதம் இருக்கச் செய்ததன் மூலம், ஊடகங்களைப் பயன்படுத்தி அவரை மகாத்மா காந்தி அளவிற்கு உயர்த்தி மக்களிடையே முன்னிறுத்தியதன் மூலம், ஊழல் எதிர்ப்பு என்பது ஒரு தனி நபர் போராட்டமாக ஒடுக்கப்பட்டது.

ஹசாரேயின் போராட்டத்தை அறுவடை செய்து கொள்ள காங்கிரசும், பாஜகவும் தீவிரமாக முயற்சித் துக்கொண்டிருக்கின்றன. இந் நிலையில், ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வை தனது மதவெறி அரசியலுக்கு பயன்படுத்தி, இந்திய அரசியலில் வீழ்ந்து கிடக்கும் மத வாத பாஜகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலுக்கு கொண்டுவரும் நோக் கத்தோடு ஆர்எஸ்எஸ் அமைப்பு, தனது தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும், யோகா கலையின் மூலம் மக்களிடையே ஓரளவு அறிமுகம் செய்யப்பட்டிருப்பவருமான சாமி யார் ராம்தேவை உண்ணாவிரதத் தில் இறக்கிவிட்டு

அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுப்பட நினைத்தபோது அதை முறியடிக்க நினைத்து இரவு 1 மணிக்கு இந்த கையாலகாத காங்கிரஸ் போலிஸ் போக!
இதுதான் சரியான நேரம் என்று ஆர். எஸ்.எஸ் கும்பல் பத்தலுக்கு தீவைக்க.
கலவரத்திற்கு தொடக்கத்தை ஏற்படுத்த இதைப்பயன்படுத்தி ராம்தேவ்வை கொலை செய்துவிட்டு நாடு முழுவதும் கலரத்தை உண்டாக்கும் நோக்கம் தோல்வி அடைந்துவிட.
ராம்தேவ் பொம்பள வேசத்தில் தப்பித்து ஓட
சுமார் 18 கோடியில் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது.

இந்நிலையில்

என்னை கொன்று ஒழித்துவிட வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இதற்காக சதி திட்டம் தீட்டப்பட்டது. டெல்லி போலீசார் என்னை கொல்வதுடன் என் ஆதரவாளர்களையும் அதிக அளவில் கொன்று குவிக்க திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை.

மின்சார ஜெனரேட்டர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பெரிய அளவில் மக்களை கொன்று குவிக்கும் நோக்கத்துடன் நடந்து கொண்டனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் தான் நான் சுடிதார் அணிந்து தப்பிச் சென்றேன்.என்று ராம்தேவ் பத்திரிக்கையாளரிடம் புலம்பி உள்ளார்.


செவ்வாய், 23 நவம்பர், 2010

பெரும் வர்த்தகர்கள் - ஆளும் அரசியல்வாதிகள் - உயர் அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளை : டிச. 5-11 பிரச்சார இயக்கம்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவல்



காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், கர் நாடகத்தில் எடியூரப்பா தலைமையி லான பாஜக அரசும் நடத்தியுள்ள வர லாறு காணாத ஊழல்கள் மூலம் இந்திய நாட்டின் ஏழை - எளிய மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடிய தாக்கு தலை எதிர்த்து, நாடு முழுவதும் டிசம்பர் 5 முதல் 11ம்தேதி வரை மாபெரும்

பிரச்சார இயக்கத்தில் ஈடுபடுமாறு அனைத்துக் கிளைகளுக்கும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக் குழு அறைகூவல் விடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு கூட்டம் நவம்பர் 19 - 21 தேதிகளில் தில்லியில் நடை பெற்றது. கூட்டத்தின் முடிவில் வெளி யிடப்பட்ட அறிக்கை வருமாறு -

வரலாறு காணாத ஊழல்

சமீப காலத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு மற்றும் கர்நாடகத்தில் எடியூரப்பா அரசின் மிகக் கடுமையான ஊழல்கள் என அதிகாரத்தின் உயர் மட்டங்களில் நடந்துள்ள மிகப்பெரும் ஊழல்கள் அம்பலமாகியிருப்பதால் இந்த நாடே கடும் அதிர்ச்சியில் ஆழ்ந் துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது, நவீன தாராளமய காலகட்டத்தில் பெரும் வர்த்தகர்கள் - அரசியல்வாதி கள் - அதிகாரிகள் இடையே ஏற்பட் டுள்ள தீய உறவிற்கு முதன்மையான எடுத்துக்காட்டாக இருக்கிறது. 2008 பிப்ரவரி மாதத்திலேயே, 2ஜி ஸ்பெக்ட் ரம் உரிமங்கள் ஒதுக்கீடு செய்வதில் இந்த நாட்டின் கருவூலத்திற்கு மிகப் பெரும் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், மிகவும் சட்ட

விரோதமான முறையில் இதில் மிகப்பெரும் முறை கேடு நடந்துள்ளது என்றும் நாட்டு மக்களின் கவனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே கொண்டு வந் துள்ளது. இதில் தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்த ஆ. ராசாவின் பங்கு தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.

ஆனால் காங்கிரஸ் தலைமையி லான அரசாங்கம் நடவடிக்கை மேற் கொள்ள மறுத்தது. தனது அரசாங்கத் தைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு இத்தகைய மிகப்பெரும் ஊழலை, பிரதமர் அலட்சியப்படுத்தினார். மக்கள வைத் தேர்தல் முடிந்த பின்னரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2வது முறையாகப் பதவியேற்ற பின்பும் இதே அணுகுமுறையே நீடித்தது.

தற்போது மத்திய தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடு தொடர்பாக எழுப்பப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் உறுதி செய்துள் ளார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். ஆனால், மிக மிகப் பெரிய இந்த ஊழலுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அதனால் தான், இந்த ஊழல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் முழுமை யாக விசாரணை நடத்த நாடாளுமன் றக் கூட்டுக்குழு அமைக்க

வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவும் அரசு மறுத்து வருகிறது.

இதில் முக்கியப் பிரச்சனை என் னவென்றால், குற்றம் இழைத்தவர்கள் அனைவரும் நடவடிக்கைக்கு உள் ளாக்கப்பட வேண்டும் என்பதுதான். முன்னாள் அமைச்சர், ஊழல் அதி காரிகள், இவர்களுக்கு அனைத்துவித மான உதவிகளையும் செய்த கார்ப்ப ரேட் நிறுவனங்கள் என அனைவரும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இதில் முதல் நடவடிக்கை யாக, சட்ட விரோதமான முறையில் எந்த நிறுவனங்களெல்லாம் உரிமங் கள் பெற்றனவோ அவற்றின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண் டும். அதுமட்டுமின்றி, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) குறிப்பிட்டுள்ளதுபோல, விதி முறைகளைப் பூர்த்தி செய்யாத நிறு வனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங் களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், இதில் இழந்த வருமானத்தை ஈடுகட்டும் பொருட்டு புதிதாக ஏலம் நடத்தப்பட வேண்டும்.

இவற்றை எப்படி மேற்கொள்கிறார் கள் என்பதைப் பொறுத்தே பிரதமரை யும், அவரது அரசையும் மதிப்பீடு செய்ய முடியும்.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடு களில் நடந்த ஊழல்கள் தொடர்பாக வும் இந்த அரசு மேற்கொண்ட அணுகு முறை மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை விசாரிப்பதற்கு எந்த அதி காரமும் இல்லாத ஒரு குழுவினை அரசு நியமித்

துள்ளது. மத்திய புல னாய்வுக் கழகம் (சிபிஐ) மற்றும் அம லாக்கப் பிரிவு உள்ளிட்ட இதர விசா ரணை அமைப்புகளை ஒருங்கி ணைத்து ஒரு கூட்டுக் குழுவை உட னடியாக அமைக்க வேண்டும். காமன் வெல்த் ஊழல்களில் தொடர்புள்ள அனைத்துக் குற்றவாளிகளும் முழு மையாக விசாரிக்கப்பட்டு நடவடிக் கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இந்த விசாரணையில், காமன்வெல்த் போட்டி அமைப்புக்குழு மட்டுமின்றி, இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் சம்பந்தப்பட்ட அனைத்துக் காண்ட் ராக்டுகள் மற்றும் பேரங்களை நடத்திய தில்லி மாநில அரசு, மத்திய அரசின் பல்வேறு துறைகள் ஆகியவையும் முழுமையாகக் கொண்டுவரப்பட வேண்டும்.

கர்நாடகத்தில் மிகப்பெரும் கொள்ளை - ஊழல்

போலி அரசாங்கத்தை நடத்துவதி லும், மிகப்பெரும் கொள்ளையர்களுக்கு உதவி செய்வதிலும், தானே முன் னின்று பொதுச் சொத்துக்களை சூறை யாடுவதிலும் கர்நாடகத்தில் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு “புதிய சாதனை” படைத்துள்ளது என்றே கூற லாம். சுரங்கக் கொள்ளைக் கும்பலைத் தனது அமைச்சரவையில் ஒரு பகுதி யாக வைத்திருக்கிற பாஜக அரசு, அனைத்து வடிவங்களிலான ஊழல் களுக்கும் தாயகமாக மாறி நிற்கிறது. முதலமைச்சரே, தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் சாதகமாக நடந்து கொண்டிருக்கிறார். தனக்கு முன் பிருந்த முதலமைச்சர்கள் இப்படியெல் லாம் செய்தார்கள் என்று தனது செயலை நியாயப்படுத்தவும் செய்கிறார். எடியூரப்பா முதலமைச்சர் பதவியிலி ருந்து ராஜினாமா செய்துவிட்டு வெளி யேறுவதைத் தவிர வேறு வழியில்லை. பெரும் வர்த்தகர்களுடனான தீய உறவைத் தழுவிக் கொள்வதிலும், எவ் விதக் கூச்ச நாச்சமுமின்றி மக்களின் சொத்துக்களைக் கூட்டுக் கொள்ளை யடிப்பதிலும் காங்கிரசிடமிருந்து எந்த விதத்திலும் பாஜக வேறுபட்டதல்ல என்பதை இது அப்பட்டமாகத் தெளிவு படுத்துகிறது.

ஊழலுக்கு எதிராக பிரச்சாரம்

ஒருபுறம் பெரும் வர்த்தக நிறு வனங்களும் காண்ட்ராக்டர்களும் தங் கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள கூட்டுச்சேர்ந்து கொள்ளையடிக்கிறார் கள்; மறுபுறம் ஆளும் அரசியல்வாதி களும் அதிகாரிகளும் இந்தக் கூட்டுக் கொள்ளையைத் தாங்களும் சேர்ந்து கொண்டு ஊக்கப்படுத்துகிறார்கள்; ஊழல் மலிந்த, மோசடி நிறைந்த முத லாளித்துவத்தைக் கட்டி வளர்க்கிறார் கள்; பொதுச் சொத்துக்களையும், பொது நிதிகளையும் தங்கள் நலன்களுக்கு ஏற்றவாறு மாற்றி விடுகிறார்கள்; தங்கள் நலன் காப்பவர்களுக்குச் சாதகமாக அனைத்து விதிகளையும் மாற்றுகிறார் கள். இதுதான் புதிய தாராளமய உல கின் ராஜ்ஜியம். நவீன தாராளமயக் கொள்கைகளின் இந்த அதிகாரம் தற்போது பொது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் நாசப்படுத்துகிறது; அசுத்தமாக்குகிறது; ஊழல்மயமாக் குகிறது.

இத்தகைய மிகப்பெரும் ஊழல்களும், இந்திய நாட்டின் கருவூலத்தையே மோசடி செய்வதும், பொது நிதிகளைக் கைமாற்றி விடுவதும் போன்ற நடவடிக்கைகள் இந்த நாட் டின் மக்கள் மீது, குறிப்பாக ஏழைகள் மீது நடத்தப்படுகிற கொடூரமான தாக்குதலாகும். 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் ஏற்பட்டுள்ள ரூ. 1.76 லட் சம் கோடி வருவாய் இழப்பும், இதே போன்ற இதர ஊழல்களில் இழந்த பணமும், அனைவருக்கும் பொது விநி யோக முறையை அமல்படுத்தப் பயன் படுத்தப்பட்டிருக்க வேண்டிய நிதியா கும்; கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தர வாதத் திட்டத்தை மேலும் விரிவுபடுத் தவும், பொது சுகாதாரத்தையும், பொது கல்வி முறையையும் மிகப்பெரும் அளவில் விரிவுபடுத்தவும் பயன்படுத் தப்பட்டிருக்க வேண்டிய நிதியாகும். எனவே, ஊழலுக்கு எதிராக ஒரு போரையே நடத்த வேண்டிய அள விற்கு மக்களை அணிதிரட்ட வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு, பெரும் வர்த்தகர்கள் - அரசியல்வாதிகள் - அதிகாரிகள் இடையேயான தீய கூட்டுக்கு எதிராக வும், வரலாறு காணாத ஊழல்களுக்கு எதிராகவும் நாடு தழுவிய தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. டிசம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஒரு வாரகால பிரச்சார இயக்கத்தில் நாடு முழுவதும் உள்ள கட்சியின் அனைத்துக் கிளைகளும் பங்கேற்க வேண்டு மென்று மத்தியக்குழு அழைப்பு விடுக்கிறது. இந்தப் பிரச்சாரத்தில் கூட்டங்கள், தர்ணாக்கள், பேரணிகள் எனப் பல்வேறு வடிவங்களிலும் கட்சி அணிகள் பெருவாரியாகத் திரண்டு, அரசின் உயர் மட்டங்களில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்த வேண்டும்; குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் கொண்டுவந்து தண்டிக்குமாறு முழக்கமிட வேண்டும்.

திங்கள், 22 நவம்பர், 2010

ஐ.மு.கூ. அரசின் வரலாறு காணாத ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் ஊழல்கள்; பாஜக அரசின் கனிமக்கொள்ளையால் நாட்டின் வளங்கள் சூறை ஊழலை எதிர்த்து பிரச்சாரம் பிரகாஷ் காரத் பேட்டி



காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வரலாறு காணாத ஊழல்களை அம்பலப்படுத்தவும், கர்நாடக பாஜக அரசின் கனிமக்கொள் ளையையும், அனைத்துவிதமான ஊழல் களின் மையமாக எடியூரப்பா அரசே செயல்பட்டிருப்பதை அம்பலப்படுத்தவும் நாடு முழுவதும் டிசம்பர் 5 முதல் 11ம் தேதி வரை மாபெரும் பிரச்சார இயக்கத்தில் ஈடுபடுமாறு கட்சியின் அனைத்துக் கிளைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் நவம்பர் 19 - 21 தேதிகளில் புதுதில்லியில் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவுகளை விளக்கி ஞாயிறு மாலை கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பிரகாஷ் காரத் கூறிய தாவது:-

மத்திய குழு கூட்டத்தில் விவாதிக்கப் பட்ட பிரச்சனைகளில் மிகவும் முக்கிய மானது நாட்டையே உலுக்கியுள்ள வரலாறு காணாத ஊழல்களாகும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொறுத்த வரை, மார்க்சிஸ்ட் கட்சி 2008 பிப்ரவரியி லேயே பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. சீத்தாராம் யெச்சூரி, 2008 பிப்ரவரியிலேயே ஒரு கடிதம் பிரதமருக்கு இது தொடர்பாக எழுதியிருக்கிறார். அப்போ திருந்து இப்பிரச்சனையைத் தொடர்ந்து நாங்கள் எழுப்பி வந்திருக்கிறோம். இப்போது மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை வெளிவந்த பிறகு, மார்க்சிஸ்ட் கட்சி கூறிய அனைத்தும் அதில் உறுதி செய்யப்பட்டபிறகு, அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

ஆனால் பிரச்சனை இத்துடன் நின்று விடவில்லை. 2ஜி ஊழலில் ஓர் அமைச் சரோ அல்லது ஓர் அமைச்சகம் மட்டுமோ சம்பந்தப்படவில்லை. நடைபெற்றிருக்கிற நிகழ்வுகளிலிருந்து, பிரதமர், நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம் அனைத்திற்கும் இது தொடர்பாக தெரிந்திருக்கிறது என்பது தெளிவாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, நாட்டின் பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் - கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு இடையே மிகப்பெரும் கூட்டு இருந்திருப்பதையே இது தெளி வாகக்காட்டுகிறது. உச்சநீதிமன்றம் பல் வேறு கோணங்களில் இதனை ஆராய்ந்து வருகிறது. எனவேதான், 2ஜி ஊழல் தொடர்பாக கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியு றுத்துகிறோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண் டும். அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது எப்படி என்பதை அவர் விளக்க வேண்டும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசாங்கம், கூட்டு நாடாளுமன்றக் குழு அமைத் திட தயாராயில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குக் காரணமான அமைச்சர் மட்டு மல்ல, அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தின் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும்.

ஐமுகூ அரசாங்கமானது இதில் சம்பந்தப்பட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை மன்னித்து விட தயாராயிருக்கிறது என்பது அமைச்சர் கபில் சிபல் கூற்றுக்களி லிருந்து தெரிய வருகிறது. டிராய் நிறுவன மானது, இழப்பு ஏற்பட காரணமாக இருந்த கம்பெனிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிற அதே சம யத்தில் அமைச்சர் அது தேவையில்லை என்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அடுத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி களில் நடைபெற்றுள்ள ஊழல். இதனை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனவே இது தொடர்பாக மத்தியக் குற்றப் புலனாய்வுக் குழுவும் மற்றும் இருக்கின்ற புலனாய்வு அமைப்புகளும் நேரடியாக விசாரணை செய்திட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு மட் டத்திலும் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

பாஜக விதிவிலக்கு அல்ல

ஊழல் தொடர்பாக நாம் பேசும்போது, கர்நாடகாவில் நடைபெற்றுள்ள ஊழல் களை நாம் விட்டுவிட முடியாது. ஊழலில் கர்நாடக மாநில அரசும், பாஜகவும் ஒரு ‘ரிக்கார்ட்’ ஏற்படுத்திவிட்டன. அரசாங் கமே கனிமக்கொள்ளை மாஃபியாவாக மாறியிருக்கிறது. மாநில அரசாங்கமே சட்டவிரோதமான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறது. பாஜக தலைமை ஏன் இதுகுறித்து ஒன்றுமே சொல்ல வில்லை என்பது புரியவில்லை.

ஊழல் புரிவதில் காங்கிரசுக்கும் பாஜக விற்கும் வித்தியாசம் இல்லை என்பதையே கர்நாடக ஊழல்கள் காட்டுகின்றன.

எனவேதான் நாட்டில் நடைபெற்றுள்ள ஊழல்கள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களைத் திரட்டி விரிவான வகையில் பிரச்சாரங் களை மேற்கொள்வது என்று தீர்மானித் திருக்கிறோம். டிசம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை நாடு முழுவதும் கட்சிக் கிளைகள் ஊழலுக்கு எதிராக, ஐ.மு.கூட்டணி அர சின் மிகப்பெரும் ஊழல்களை அம்பலப் படுத்தி, கர்நாடக பாஜக அரசின் கனிம ஊழல்களை அம்பலப்படுத்தி கூட்டங் கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், தர் ணாக்கள் என்ற வகையில் பிரச் சாரங்களை மேற்கொள்ளும்.

இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பாபர் மசூதி - வரலாற்றுச் சான்றுகள்

வால்மீகி இராமாயணத்தின்படி இராமபிரான் திரேத்தாயுகத்தில் பிறந்தவர். அவரு டைய ஆட்சியான இராமராஜ்யம் பாரதத்தின் பொற்காலம் எனப்படுகின்றது. (அன்று தென் னகம் பாரதத்தின் ஒரு பகுதியாக இருக்க வில்லை!) திரேத்தாயுகம் மட்டும் பன்னிரண்டு லட்சத்து தொண்ணூற்று எட்டாயிரம் ஆண்டுகளாகும் (12,98,000), இதற்குப்பின் துவாபராயுகம், எட்டுலட்சத்து அறுபத்தி நான்காயிரம் (8,64,000), இப்பொழுது நடப்பது கலியுகம், நான்கு லட்சத்து முப்பத்து இரண்டா யிரம் (4,32,000); அடுத்து வரப்போவது கிருத கயுகம். திரேத்தாயுகத்தில் பிறந்த காரணத்தினால் தான் பாஜக ஆட்சிபுரியும் மாநிலங்களில் பள்ளிப் பாடநூல்களில் “ஒன்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இராம பிரான் ராமராஜ்யத்தின் பொற்காலம் இன்றும் இந்திய மக்களின் உள்ளங்களில் பசுமையாகத் தைத்து நிற்கின்றது” என்று எழுதப் பட்டுள்ளதைக் காணலாம்.

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இராமபிரானின் பிறந்த இடத்தை அயோத்தியில் கறாராக அடையாளம் “கண்டுபிடித்துள்ளது” பாஜக - ஆர்எஸ்எஸ்!

அயோத்தியில் பாப்ரி மசூதி 1528ம் ஆண்டு பாபரின் ஆளுனர் மீர்பாக்கியால் கட்டப்பட்டது (பதிவு செய்யப்பட்ட வரலாறு). பாபர்தான் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவி னார் (1526-1855). இவருடைய மகன் ஹூமா யுன் (1530-1556), 26 ஆண்டுகளும், இவரு டைய மகன் மாபெரும் அக்பர் (1556 - 1605), 49 ஆண்டுகளும் ஆண்டனர். இந்த அக்பர் மாமன்னனைத்தான் இந்திய தேசியத்தை உருவாக்கிய தந்தை என்று ஜவஹர்லால் நேரு தனது வரலாற்றின் காட்சிகள் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.பாபர் ஒரு இலக்கிய வாதி. இவருடைய இந்திய குறிப்புகள் பாபர் நாமா எனப்படுகின்றன.

இவர் தனது மகன் ஹூமாயினுக்கு எழுதி வைத்துச் சென்ற உயிலில் (மரண சாசனம்) : “எனது மகனே! இந்தியாவில் பல மதப்பிரிவுகளைச் சார்ந்த மக்கள் வாழ்கின்ற னர். இப்படிப்பட்ட ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை மன்னாதி மன்னரான அல்லா உனது கரங்களில் ஒப்படைத்திருப்பதற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும். ஆதலால் உனது கடமைகளாவன.

உன்னைப் போன்றோரை மததுவேஷம் பாதித்துவிட அனுமதிக்கக்கூடாது. மக்களின் எல்லாப்பிரிவினரின் மத ஆசாரங்கள் மற்றும் உணர்வுகளை கணக்கிலெடுத்துக் கொள்வது அவசியம்.

குறிப்பாக பசுவதை செய்வதை தவிர்த்து விடு, எந்த மக்கள் பிரிவினரின் வழிபாட்டுத் தலங்களையும் அழிக்காதே, அடக்குமுறை வாளால் அல்லாமல் அன்பெனும் வாளாலும், கடமை உணர்வாலும்தான் இஸ்லாமை சிறப்பான முறையில் பரவச் செய்யலாம்.

இப்படி உயில் எழுதி வைத்துச் சென்ற மாமன்னன் பாபர்தான் அயோத்தியில் இராமர் பிறந்த இடத்திலிருந்த (ராமர் ஜென்மபூமி) இராமர் கோவிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டினார் என்று இந்துத்துவாவாதிகள் வாய்க் கூசாமல் அபாண்ட பழி சுமத்துகின்றனர்.

இம்மசூதி கட்டப்பட்ட காலத்தில் (16ம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர் துளசிதாசர். இவர்தான் 1575ம் ஆண்டு பேச்சுமொழியில் (அவதி - இந்தி) இராமசரித்திரமனாஸ் என்ற ராமாயணம் எழுதிய இராமபக்தர். புரியாத பழமை சமஸ்கிருதத்திலுள்ள வால்மீகி இரா மாயணம் மக்கள் படித்ததில்லை. படிக்கவும் இயலாது. இது “தெய்வமொழி!” சாதாரண இந்துமக்கள் வடநாட்டில் துளசிதாஸ் ராமா யணத்தைப் படித்துதான் பக்தி பரவசமடைந்து இல்லங்களில் ராமசரித்திரமனாஸ் வைத்துக் கொள்கிறார்கள். துளசிதாசர் வேறுபல பக்தி இலக்கிய நூல்கள் எழுதியுள்ளார். இவர் ஒரு துறவி, மதப்போதகர், மதக்கவிஞர். இவருக்குப் பிறகுதான் ராமாயணம் பிரபல்யமானது. பாப்ரி மசூதி கட்டப்பட்ட 30, 40 ஆண்டுகளுக்குள் இவை எல்லாம் எழுதப்பட்டன.

அக்பரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். துளசிதாசருக்கு நெருங்கிய முஸ்லீம் நண்பர் ரஹீம்கான் கானா என்பவர். இவர் சமஸ்கிரு தத்திலும், இந்தியிலும் (அவதி) பிரசித்திபெற்ற கவிஞர், இவர்கள் இருவரின் விருப்பப்படி அக்பர் ஆட்சியின் நிதி அமைச்சர் தோடர் மால் (இந்து) வாரணாசியில் அனுமார் கோவில் கட்டிக்கொள்ள அக்பரின் வாழ்த்துக்களுடன் நிலம் தானமாகக் கொடுத்து இன்றும் துளசி அனுமார் மந்திர் அங்கு நிமிர்ந்து நிற்கின்றது. இராமர்கோவில் இடிக்கப்பட்டிருந்தால் தனது எதிர்ப்பை, வேதனையை வெளியிட்டிருப்பார். இராமர்கோவில் அயோத்தியிலும், வாரணாசி யிலும் கட்ட அக்பரிடம் இடம் கேட்டிருந்தால் அல்லது பாபரால் இடிக்கப்பட்டிருந்தால் அக் பர் நிச்சயமாக இராமர்கோவில் கட்டிக் கொடுத்திருப்பார். அயோத்தியில் இன்றும் எழில்மிகு காட்சியளிக்கும் பிரம்மாண்டமான அனுமார் மாளிகை கூட 1754ல் நவாப் மன்சூர் அலியால் கட்டப்பட்டது. இவையாவும் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள். வரலாற்றுப் புரட்டர் கள் இவைகளையெல்லாம் இருட்டடிப்பு செய்து வருகின்றனர். பாடநூல்களில் “செக் யூலர்” கல்வியில் இடம்பெறுவதில்லையே!

சீக்கிய மதப்பிரிவு நிறுவனர் குருநானக் (1469-1538), பாப்ரி மசூதி கட்டப்பட்ட காலத் தில் வாழ்ந்த பெருமகனார். காஷ்மீர் முதல் இலங்கை வரை, சோமநாத், வாரணாசி, மதுரா, பிருந்தாவன் என விரிவான சுற்றுப்பயணம் செய்தவர். மெக்கா, மெதினாவிற்குக் கூட சென்று வந்துள்ளவர். பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு பத்து ஆண்டுகள் வாழ்ந்த பேரறிஞர், இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் அமைதி காத்திருக்கமாட்டார். பிரபல வங்காள சனாதன பிராமண முனிவர் சைத்தன்யா, 1486ல் பிறந்து பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு 35 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் இவர் வாய் மூடி மவுனியாக இருந்து இருக்கமாட்டார்.

இக்கட்டத்திற்குபின் தோன்றிய முனி வர்களோ, 19ஆம் நூற்றாண்டின் பிரபலமான இந்து முன்னோடிகள் ராஜாராம் மோகன்ராய் (பிரம்மசமாஜம்), தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜம்), தேவேந்திரநாத் தாகூர் போன்றவர் களோ காங்கிரசின் பிரபல இந்து தலைவர் களான மதன்மோகன் மாளவியா, லாலா லஜ பதிராய், சுவாமி ஷ்ரதானந்தா, பால கங்காதர் திலகர், காந்தி, மோதிலால் நேரு போன்றவர் கள் எவருமே இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாக ஏன் அறிந்திருக்கவில்லை? பாஜகவின் பதில் என்ன?

முதல் சர்ச்சை - பிரிட்டிஷ் விஷமம்!

அலகாபாத் பல்கலைக் கழகத்தின் “மத்திய நவீனகால வரலாற்றுத்துறை முதல் வர் (ழநயன டிக வாந னநயீயசவஅநவே டிக அநனநைஎயட யனே அடினநசn ாளைவடிசல) பேராசிரியர் டாக்டர் சுஷில் மஹிவத்சவா 1985ஜனவரி ப்ரோப் (யீசடிநெ) என்ற மாத இதழில் பாப்ரி மசூதி சர்ச்சை பற்றி கூறுவதாவது;-

ஃபைசாபாத்தில் (கயணையயென)சிப்பாய் கலகம் வெடித்தபொழுது அயோத்தி மகந்த்கள் (மடா திபதிகள்) பிரிட்டிஷாரை பகிரங்கமாக ஆத ரித்தனர். பிரிட்டிஷ் ராணுவத்திற்கு தங்கும் இடமும் உணவுப் பொருள்களும் கொடுத்து உதவினர்.சிப்பாய் கலகம் அடக்கப்பட்டபின் மகந்த்களுக்கு சன்மானமாக பாப்ரி சொத்துரி மையுடன் வழங்கப்பட்டது. இராமர் பிறந்ததை குறிக்கும் வகையில் மேடை அமைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது.பாப்ரி மசூதி யையும் இந்த மேடையையும் பிரித்துக்காட் டும் வேலியும்(கநnஉந)இவைகளுக்கிடையில் அமைக்கப்பட்டது என்று ஃபைசாபாத் மாவட்ட கெஜெட்டை ஆய்வுசெய்து எழுதியுள்ளார். இராமர் பிறந்த இடம் மசூதி வளாகத்தில்தான் உள்ளது என்று உரிமை கொண்டாட இந்துக் களை பிரிட்டிஷார் ஊக்குவித்தனர் என்றும் ஸ்ரீவத்சவா எழுதுகின்றார்.

இந்தப்பிரச்சனை 1853ஆம்ஆண்டு முதல் முதலில் சிலரால் எழுப்பிவிடப்பட்ட பொழுது இந்துக்களும் முஸ்லிம்களும் ஊர் பஞ்சாயத்துப்பேசி 1855ல் ஒரு உடன்பாடு கண்டனர். பிரச்சனை தலை தூக்காமல் நான்கு ஆண்டுகள் அமைதி நிலவியது. 1859ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மாவட்ட ஆட்சியர் வடக்கு நுழைவாயிலின் மூலம் மட்டும்தான் முஸ்லிம் நுழைய வேண்டும் என உத்தரவு போட்டார். ஊர்மக்கள் ஆட்சேபம் கிளப்பி பஞ் சாயத்து முடிவை மாற்றக்கூடாது எனக்குரல் எழுப்பினர். ஆனால் பிரிட்டிஷ் மாவட்ட ஆட் சியர் உடனே தலையிட்டு பஞ்சாயத்து உடன் பாட்டில் கையொப்பமிட்ட இந்து-முஸ்லிம் பெரியவர்களை ஃபைசாபாத் சாலையோர முள்ள பெரிய ஆலமரத்தில் தூக்கிலிட்டார்.

ஆனால் இந்து முஸ்லிம் மக்கள் இந்த ஆலமரத்தை புனித வழிபாட்டு நினைவுச் சின்னமாக்கிவிட்டனர். ஆதலால் பிரிட்டிஷ் கமிஷனர் தலையிட்டு 1860ஆம் ஆண்டு அந்த மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்து புனித உடன்பாட்டுத் தடயங்களை அளித்தனர்.

இதற்குப்பின் 1949 வரை (89 ஆண்டுகள்) மக்கள் அமைதிகாத்து முஸ்லிம் மக்கள் வடக்கு வாயில் வழியாகவே சென்று தொழுகை நடத்தி வந்தனர். நாடு விடுதலைபெற்றபின் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி நள்ளிர வில் 50, 60 பேர் கொண்ட ஒரு ஆர்எஸ்எஸ் அணி மசூதி வாயிலை உடைத்து நுழைந்து அதன் மத்திய மண்டபத்தில் (னுடிஅந) குழந் தை இராமர், சீதா பிராட்டியார் ஆகியோர் சிலைகளை நட்டுவைத்து இவர்களின் திரு உருவங்களை சுவர்களில் காவி மஞ்சள் நிறத் தில் வரைந்து வைத்தார்கள். இராமர் தோன்றி விட்டதாக புரளியை மறுநாள் காலை கிளப்பி விட்டனர். காவல்துறை கான்ஸ்டபிள் ஹன்ஸ் ராஜ் இதைத் தடுக்க முயன்றும் பயனில்லை.

மறுநாள் (1949 டிசம்பர் 22) காலை காவலர் மாதாபிரசாத் இதுபற்றி புகார் செய்து முதல் தகவல் அறிக்கை எழுதினார். இவ்வறிக்கை யில் ஆர்எஸ்எஸ்காரர்களான ராம்தாஸ், ராம் சுக்லாதாஸ், சுதர்சனதாஸ் ஆகியோர் 50, 60 பேர் கும்பலாக வந்து இதைச் செய்ததாக எழுதப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டை பாப்ரிமசூதிக்குள் வைக்க திட்டமிட்டதே அன்றைய மாவட்ட ஆட்சியர் கே.கே.நய்யார்தான். இவர் ஆர்எஸ் எஸ் பிரமுகர், தனது திட்டத்தை நிறைவேற்றி பிறகு சிறிது காலத்திலேயே வேலையை ராஜினாமா செய்து ஜனசங் (முன்னாள் பாஜக) கட்சியில் பகிரங்கமாக சேர்ந்து பணியாற்றி நாடாளுமன்றத்தில் ஜனசங் எம்.பி.யாக (1967-70) உயர்த்தப்பட்டார். இறுதியில் 1992ல் மசூதியே இடிக்கப்பட்டது.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

தினமணி”யில் மதவெறிப் பிரச்சாரம்!

தினமணி (26.8.10) ஏட்டில் பாஜக தலைவர் இல.கணேசன் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் தனக்குள்ள முஸ்லிம் வெறுப்பைக் கக்கியுள்ளார். காஷ்மீர் தொட்டு தென்காசி வரை வந்திருக்கிறார். அவ்வளவிலும் அதே துவேஷம்.

“இப்போது மன்மோகன் சிங் காஷ்மீருக்கு சுயாட்சி தருவோம் என்கிறார். பாகிஸ்தானுக்கு வேலையே இல்லாமல் அல்வாத் துண்டு போல வெள்ளித்தட்டில் வைத்து வழங்க இசைந்துவிட்டாரே!”- என்று பொரு மியிருக்கிறார். காஷ்மீருக்கு மாநில சுயாட்சி தருவது எப்படி அந்தப் பகுதியைப் பாகிஸ் தானுக்கு கொடுப்பதாகும்? பாஜகவுக்கு கூட்டாட்சி முறையில் நம்பிக்கை கிடையாது. அதனுடைய கனவெல்லாம் ஒற்றை யாட்சி முறைதான் என்பதை இது அம்பலப் படுத்துகிறது.

விஷயம் என்னவென்றால், நமது அரசிய லமைப்புச்சட்டத்தின் 370வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு இதர இந்திய மாநிலங்களை விடவும் கூடுதல் சுயாட்சி வழங்கியுள்ளது. காரணம், அந்த அடிப்படையில்தான் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவோடு இணைக்க 1947 அக்டோபரில் ஒப்புக்கொண்டார் முஸ்லிம்கள் அதிகமாக இருந்த அந்த ராஜியத்தின் இந்து மகாராஜா. அந்த அடிப்படையில்தான் அந்த இணைப்பை ஒப்புக்கொண்டார் அந்த ராஜியத்தின் மக்கள் தலைவராகிய ஷேக் அப்துல்லா.

இந்த 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று ஆரம்பம் முதலே வம்படி வழக்கடி செய்து வந்தது இன்றைய பாஜக வின் அன்றைய வடிவமாகிய ஜனசங்கம். இதற்கு காங்கிரசிலும் சில சக்திகள் இரை யாகின. கொஞ்சங்கொஞ்சமாக ஜம்மு-காஷ் மீரின் சுயாட்சி உரிமைகள் பறிக்கப்பட்டன அல்லது நீர்த்துப்போகச் செய்யப்பட்டன.

இதோ இல.கணேசனின் தலைவர் எல்.கே.அத்வானி “எனது நாடும் எனது வாழ்வும்” எனும் தனது சுயசரிதையில் எழுதி யிருப்பதை வாசியுங்கள்” வெறுக்கப்பட்ட ‘அனுமதி முறையை’ அரசு ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீரில் இந்தியக் குடியரசின் நிறு வனங்களுக்கு இருந்த பல கட்டுப்பாடுகளை யும் அது ரத்து செய்தது. இப்படியாக தேர்தல் கமிசன் மற்றும் தலைமைத் தணிக்கையாளர் அலுவலகத்தின்அதிகாரங்கள் அந்த மாநிலத் திற்கும் நீட்டிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரின் ‘பிரதம மந்திரி’ எனும் பெயர் ஒழிக்கப்பட்டது. ஆனாலும் ஐம்பதாண்டுகளுக்கு மேலாகியும் “தோல்விதான்” இரண்டு அரசியலமைப்புச் சட்டங்கள் - என்பது பற்றிய நமது கவலை, குறிப்பாக 370வது சரத்து பற்றிய நமது கவ லை, இன்னும் போக்கப்படவில்லை.”

விரிந்த சுயாட்சி தருவதாகச் சொல்லி அந்த ராஜியத்தை நம்மோடு இணைத்துக் கொண்ட பிறகு அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. இதற்கு மூலகாரணம் ஜனசங்கம் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத் தின் முஸ்லிம் வெறுப்பு. அந்த மாநில மக்க ளில் ஆகப்பெரும்பாலோர் முஸ்லிம்கள் என் கிற ஒரே காரணத்தால் இத்தகைய நிலையை எடுக்குமாறு காங்கிரஸ் அரசை நிர்ப்பந்தித்து வந்தார்கள். அதுவும் பல சமயங்களில் அவர்க ளது நிர்ப்பந்தத்திற்கு பணிந்தது. ஜம்மு - காஷ்மீரின் இந்த இணைப்பு வரலாறை மூடி மறைத்துவிட்டு, 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று இப்போதும் விவகாரம் செய்து வருகிறது பாஜக.

ஜம்மு-காஷ்மீரில் இப்போது எழுந்துள்ள பிரச்சனைக்கு மூலகாரணம் இதுவே. இதை இப்போதாகிலும் உணர்ந்து அந்த மக்களின் நியாயமான உரிமைகளை இந்திய அரசு மதிக்க வேண்டும். பறிக்கப்பட்ட அல்லது நீர்த்துப்போகச் செய்யப்பட்ட மாநில சுயாட்சியை அவர்களுக்கு வழங்க வேண் டும். இது எந்த வகையிலும் அங்குள்ள பிரி வினை சக்திகளை ஆதரிப்பதாகாது. உண் மையில் இதுவே அந்தப் பிரிவினை சக்தி களை தனிமைப்படுத்தும். மன்மோகன் அரசு இந்தச் சரியான பாதையில் சற்றே காலடி எடுத்து வைக்கப் பார்ப்பது போலத் தெரிகிறது. உடனே இல.கணேசன் கோஷ்டியார் அதை எதிர்த்துச் சண்டமாருதம் செய்கிறார்கள்.

காஷ்மீர் எனும் அந்த அழகான பள்ளத் தாக்கைத் தொடர்ந்து கலவர பூமியாக்குகிறார் கள் அங்குள்ள பிரிவினைவாதிகள் அல்லது பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மட்டுமல்ல. ஆர்.எஸ்.எஸ்.பரிவாரமும்தான், அவர்களது இந்த அடாவடிப்போக்கும்தான் என்பதைத் தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

காஷ்மீர் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்ல இந்தியா முழுக்கவுள்ள முஸ்லிம் களுக்கு எதிராகவும் விஷத்தைக் கக்குகிறார் இல.கணேசன். “மன்மோகன் சிங் தலைமை யிலான காங்கிரஸ் அரசு எந்தவிதச் சிரமமும் இல்லாமல் பல பாகிஸ்தான்களை உருவாக் கத் துணைபோகிறது. பாரத நாட்டில் முஸ் லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட் டங்கள் எனப் பல மாவட்டங்களை அரசே அடையாளம் கண்டு முத்திரை குத்தியுள்ளது. அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு கூடுதல் வசதிகள். ஏற்கெனவே முஸ்லிம்கள் பெரு வாரியாக உள்ள இடங்களில் இந்துக்களுக்கு உள்ள நியாயமான உரிமைகள் பறிபோய் விட்டன” என்று வெறித்தனமாக எழுதியிருக் கிறார் இந்த ஆர்.எஸ்.எஸ். கொடுக்கு.

பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், முஸ்லிம் லீக் காங் கிரஸ் ஆகியவை மட்டும் காரணமல்ல. ஆர்.எஸ்.எஸ் இந்து மகாசபை ஆகியவற்றின் முஸ்லிம் எதிர்ப்பும், அவை கிளப்பிவிட்ட மதப் பகைமையும் காரணமே. இவர்களது கொடூர வெறுப்பையும் வெறியையும் கண்டே முஸ்லிம் மக்கள் லீக்கின் பிரிவினைவாதத் திற்கு இரையானார்கள். அந்த வரலாற்று உண்மையை கவனமாக மறைத்துக் கொண்டே இவர்கள் பாகிஸ்தான் பிரிவினை பற்றிப் பேசுகிறார்கள்.

இப்போதும் கூடப் பாருங்கள், முஸ்லிம்க ளுக்கு ஏதேனும் நன்மைகள் செய்யப் புறப் பட்டால் உடனே “பல பாகிஸ்தான்களை” உருவாக்குகிறது அரசு என்று கூசாமல் வெறித்தனத்தைக் கிளப்புகிறார்கள். இந்தியா வில் பத்து சதவீதத்திற்கும் மேலே முஸ்லிம் கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆங்காங்கே பிற மதத்தவருடன் கலந்து வாழ்கிறார்கள். அதையே சிதறிக் கிடக்கிறார்கள். எனவும் கூறலாம். இதனால் இந்தியக் குடிமக்கள் என்ற முறையில் தங்களது நியாயமான உரிமைகளை உரத்துப்பேச வழியில்லாமல் வதங்கிக் கிடக்கிறார்கள் என்றும் கூறலாம்.

அதனால்தானே சச்சார் குழுவின் அறிக்கையில் அவர்களது இன்றைய பரிதாப வாழ்வு வெளிப்பட்டுள்ளது. கல்வியில், அரசுப்பணியில், பொது வாழ்வில் அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப இடம் கிடைக்க வில்லை என்கிறது அந்த அறிக்கை. அது மட் டுமல்ல, இந்து மதமாச்சரியம் உள்ள காவல் துறை அதிகாரிகளால் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்கிறது அறிக்கை. இதைச் சரிசெய்ய சில நல்ல ஆலோசனை களையும் அது வழங்கியுள்ளது. இவற்றை இன்னும் அமல்படுத்தவில்லை மத்தியி லுள்ள மன்மோகன் அரசு. ஏதோ ஒரு சில நடவடிக்கைகளை எடுக்கப் பார்க்கிறது. அதற்கும் கட்டையைக் கொடுக்கிறது இல.கணேசன் கோஷ்டி.

இவர்களது நோக்கம் எல்லாம் முஸ்லிம் கள் பற்றிய வெறுப்புணர்ச்சியை பாமர இந் துக்கள் நெஞ்சில் விதைத்து இங்கே மதக் கலவரங்களை உருவாக்குவதுதான். இதற் காக முஸ்லிம்களுக்கு அரசு ஏகப்பட்ட சலு கைகளை வழங்குவதாக ஒரு பொய்ப்பிரச்சா ரத்தை திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து கலவரத்தை உருவாக்க ஆங்காங்கே கொளுத்திப்போடுகிறார்கள். மசூதிகளுக்கு முன்னால் வேண்டுமென்றே கொட்டடிப்பது முதல் அரசமரத்துப் பிள்ளை யாரை வீதிக்கு இழுத்து வந்து விவகாரம் செய்வது வரை விதவிதமான வேலைகளில் இறங்குகிறார்கள்.

இதன் உச்சமாய் பயங்கரவாதச் செயல் களிலும் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக, மாலேகாவின் ஜனநெருக்கடியான பிக்குச வுக் எனும் இடத்தில் குண்டு வெடித்தது. இதில் ஆறு பேர் மாண்டார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது நடந்தது 2008 செப்டம்பரில். இந்தக் கொடூ

ரத்தைச் செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். பரிவாரத் தினர் என்று புலனாய்வுகள் சொல்லின. இதைப் பிரமாதமாகத் துப்புதுலக்கி வெளிக் கொணர்ந்தவர் ஹேமந்த் கார்க்கரே எனும் காவல்துறை அதிகாரி. ஆனால், அவரும் அதே ஆண்டு நவம்பரில் நடந்த மும்பைத் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த மர்மம் இன்னும் விடுபடவில்லை.

“கடந்த பத்து ஆண்டுகாலமாகத் தென் காசி நகரில் எந்த இந்து நடவடிக்கையையும் நடத்த அனுமதியில்லை” என்று அநியாய மாய் பொய் சொல்லியிருக்கிறார் இல.கணே சன். இந்து மக்கள் தங்கள் இயல்பான மத வாழ்வை அங்கு நடத்தித்தான் வருகிறார்கள் என்பது வெள்ளிடை மலை. அனேகமாக, இவருக்குள்ள வருத்தம் 2008 ஜனவரியில் அங்கு ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ஒரு குண்டு வெடித்ததே, அப்படி அதற்குப் பிறகு நடக்கவில்லையே என்பதாக இருக்கும்! தங்கள் அலுவலகத்திற்கு ஆர்.எஸ்.எஸ்காரர் களே இப்படியொரு குண்டை வைத்துக் கொண்டார்கள்! சங் பரிவாரத்தைச் சார்ந்த

8 பேர் கைதானார்கள். மதக்கலவரத்தைத் தூண்டவே இப்படிச் செய்ததாக வாக்குமூலம் தந்தார்கள்.

இவர்கள் எவ்வளவு பயங்கரமானவர்கள் என்பதை மக்கள் ஒருநாளும் மறந்துவிடக் கூடாது. நல்ல வேளையாக காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “காவி பயங்கரவாதம்” பற்றியும் எச்சரிக்கை செய்திருக்கிறார். இப்படி ஒருபுறம் இவர்களே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, மறுபுறம் நமது சகோதரர் களாகிய முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை வளர்த்து வருகிறார்கள்.

இவர்களது மதவெறிப் பிரச்சாரத்திற்கு பாமர இந்துக்கள் பலியாகிவிடக்கூடாது. முஸ்லிம்கள் மீது சங் பரிவாரத்தின் கோபம் எல்லாம் தங்களது வர்ணாசிரமக் கட்டமைப் பிலிருந்து விலகிவிட்டார்களே என்பதுதான். பஞ்சமர்கள், சூத்திரர்கள் மீது இவர்களுக்கு என்ன கோபமோ அதே கோபம்தான் முஸ் லிம்கள் மீதும். இதைப் புரிந்து கொண்டால் போதும் இவர்களது சதி வேலைகளுக்கு யாரும் இரையாகமாட்டார்கள்.

இதில் வருந்தத்தக்க இன்னொரு விஷ யம், பொதுவான பத்திரிகை எனும் தோற்றம் காட்டிக்கொண்டு ‘தினமணி’யானது பாஜக வின் மதவெறிப்பிரச்சாரத்திற்கு மேடை போட் டுத் தருவது, அந்த ஏட்டின் வாசகர்கள்தாம் இதைத் தட்டிக்கேட்க வேண்டும்.


-அருணன்

செவ்வாய், 20 அக்டோபர், 2009

இந்துத்துவ கலவரக்காரர்களின் சதிச்செயல்

கோவாவில் உள்ள புகழ்மிக்க சுற்றுலாத்தல மான மர்மகோவாவில் ஸ்கூட்டர் குண்டு வெடித்து இரண்டு பேர் பலியான நிகழ்வின் பின்னணி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்து மதவெறி அமைப்பினை சேர்ந்தவர்கள் தீபாவளி கொண்டாட்டத்தின் போது குண்டுவைத்து, அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுவதற்கு சதி செய்துள்ளனர். ஆனால் குண்டு வைக்க முயன்றபோது இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

மாலேகாவ் குண்டுவெடிப்பு பாணியிலேயே மர்மகோவா குண்டுவெடிப்பும் நடந்துள்ளது. மாலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்ஞா சிங் தொடர்புடைய கும் பல்தான் இந்த சதிச்செயலிலும் ஈடுபட்டுள்ளது.

2008ம்ஆண்டு மாலேகாவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பிரக்ஞா சிங் மற்றும் லெப்டினன்ட் கர்னல் ரோகித் உள்ளிட்ட இந்து மதவெறி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைதுசெய் யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடை பெற்று வருகிறது. இப்போது மர்மகோவாவில் குண்டு வைத்தவர்கள், சனாதன் சன் ஸதா என்ற ஆசிர மத்தை நடத்தி வந்துள்ளனர். பெண் சாமியார் பிரக்ஞா சிங் நடத்தி வந்த ஆசிரமத்தின் கிளை போலவே கோவா ஆசிரமம் செயல்பட்டு வந்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி கோவா மாநிலத்தில் இந்துக்கள் நரகாசுரன் உருவபொம் மையை எரிப்பது வழக்கமாம். இதில் போட்டி வைத்து பரிசுகள் வழங்கப்படுமாம். அதே போன்று இந்த தீபாவளிக்கு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் ஸ்கூட்டரில் குண்டு வைத்து வெடிக்கச்செய்து, தீபாவளி பண்டிகை யை சீர்குலைக்க முஸ்லிம் தீவிரவாத அமைப்பு கள் செய்த சதிச்செயல் என கலவரம் நடத்துவது இவர்களின் திட்டம். ஆனால் ஸ்கூட்டர் குண்டு வெடித் ததில் மெல்குண்டா பட்டீல் மற்றும் யோகேஷ் நாயக் என்ற இருவர் பலியாகி யுள்ளனர்.

இதைத்தொடர்ந்து கோவாவின் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில், சன்கோலா என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டி ருந்தது. இதிலிருந்து கோவாவின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி, பெரும் கலவரத்திற்கு ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் செயல்படும் மதவெறி அமைப்புகள் திட்டமிட்டிருந்தது தெளிவாகியுள்ளது.

மாலேகாவ் குண்டுவெடிப்பின் போது, பிரக்ஞா சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், இது இந்து துறவிகளுக்கு எதிரான அரசின் சதி என ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் கூச்சலிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் தோல் வியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள உள்கட்சி பூச லால் பாஜக திசை தெரியாத கப்பலாக திணறிக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து மீட்சிபெற தங் களது வழக்கமான பாணியிலேயே பாஜக பரி வாரம் செயல்படத் துவங்கியுள்ளது என்பதையே கோவா குண்டுவெடிப்பு உணர்த்துகிறது.

தமிழ்நாட்டில் தென்காசியில் இந்து முன்னணியினர் தங்களது அலுவலகத்திற்கு தாங் களே குண்டுவைத்துக் கொண்டு, பெரும் கல வரத்தை நடத்தியதும் இங்கே நினைவுகூரத் தக்கது. பொதுவாக குண்டுவெடிப்பு என்றாலே சிறுபான்மை மதவெறி அமைப்புகள் மீது பழிபோடுவது ஊடகங்களின் வழக்கமாக உள் ளது. வன்செயலில் யார் ஈடுபட்டாலும் அது தேசத்துரோகம், மக்கள் விரோதம்தான். நாட்டை சீர்குலைக்க நினைப்பவர்கள் அனைத்து மதவெறி அமைப்பின் பெயராலும் இயங்கிக் கொண்டிருக் கிறார்கள் என்ற கண்ணோட்டத்துடன் இந்த பிரச்சனை அணுகப்படவேண்டும். இந்து மத வெறி அமைப்புகள் குறித்தும் அரசும் புலனாய்வு அமைப்புகளும் மக்களும் விழிப்புடன் இருந்திட வேண்டும்.

செவ்வாய், 2 ஜூன், 2009

காங்கிரஸ்-பாஜக- உலகமயம்

“தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற கம்யூனிஸ்ட்டுகள்தான் காரணம். மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கம் யூனிஸ்ட்டுகள் குடைச்சல் கொடுத்தனர். கம்யூனிஸ்ட்டு களைத் தண்டிப்பதற்காக மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்து விட்டார் கள்’’ என்று அத்வானி கூறினார்.

(தினகரன், 27.5.09)

தங்கள் தோல்விக்கு தங்களிடம் இருக்கும் குறைகள், குற்றங்கள் ஏதாவது காரணமா என்று யோசிக் கவே பாஜகவினர் தயாரில்லை போல் தெரிகிறது. காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டது, அதனால் நாங்கள் தோற்றுவிட்டோம் . சரி, காங்கிரஸ் ஏன் வெற்றி பெற்றது? கம்யூனிஸ்ட் டுகளைத் தண்டிக்க மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்துவிட் டார்கள், எப்படி இருக்கிறது பாருங் கள், இவரது வாதம். இவர்களிடம் பிரச்சனை எதுவும் இல்லையாம். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டு கள் மட்டும்தான் பிரச்சனையாம்.

ஒரு வாதத்திற்காக, அவர் சொல்வது சரி என்றே வைத்துக் கொள்வோம். பல கேள்விகள் எழுகின்றன. 

கம்யூனிஸ்ட்டுகளைத் தண்டிக்க நினைத்த மக்கள் ஏன் பாஜக விற்கு வாக்களிக்கவில்லை? பாஜக என ஒரு கட்சி இருப்பதையே மறந்து விட்டார்களா? அல்லது பாஜகவை ஒரு கட்சியாகவே மக்கள் கருத வில்லையா? அல்லது கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் செய்த தெல்லாம் சரி என்று மக்கள் நினைப்பதாக அத்வானி கூறு கிறாரா? 

பொதுத்துறை வங்கிகள், இன் சூரன்ஸ் உள்ளிட்ட நிதி நிறுவனங் களை தனியார்மயமாக்க ஐமுகூ அரசாங்கம் முயற்சித்த போது அதை கம்யூனிஸ்ட்டுகள் தடுத்ததைக் குடைச்சல் என்கிறாரா? மக்களின் வாழ்நாள் சேமிப்புகளை தனியாருக்குத் தூக்கிக் கொடுக்கும் மன்மோகன்சிங்கின் முயற்சியை கம்யூனிஸ்டுகள் தடுத்ததை குடைச் சல் என்கிறாரா? தேசத்தை அமெ ரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடி மைப்படுத்தும் அணுசக்தி ஒப்பந் தத்தை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்த்த தைக் குடைச்சல் என்கிறாரா? 

இவற்றையெல்லாம் அத்வானி குடைச்சல் என்று சொல்வாரெனில், இந்த மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கைகளை அத்வானியும் அவரது கட்சியும் ஆத ரிக்கின்றனர் என்பதுதானே பொருள்? அது சந்தேகத்திற்கு அப் பாற்பட்ட உண்மை. ஏனெனில், கடந்த ஐந்தாண்டுகளில் அவர்கள் அந்தப் பொருளாதாரக் கொள்கை களை எதிர்க்கவில்லை என்பது மட்டுமின்றி, தாங்கள் அதிகாரத்தில் இருந்த காலத்தில் இதே கொள் கைகளை அமல்படுத்தியவர்கள், அமல்படுத்த முயற்சித்தவர்கள். அணுசக்தி ஒப்பந்த எதிர்ப்பு வெறும் நாடகம் என்பது தேர்தலின் போது அவர்கள் அடித்த பல்டியிலேயே தெரிந்துவிட்டது. 

ஆனால், ஒரு நாடகமாகக் கூட மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளை மதவெறியர்கள் எதிர்க்கவில்லை என்பதை கவ னிக்க வேண்டும். 

அது இருக்க, காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு உண்மையில் என்ன தான் காரணம்? ஏதேனும் ஒரு கட்சி காரணமென்றால் அந்தக் கட்சி பாஜகதான். இதை பலமுறை, பலர் வலியுறுத்திச் சொல்லி விட் டார்கள்.

அதைவிட முக்கியம் காங்கிரஸ் பெற்ற வெற்றி ஏதோ அமோக வெற்றி போல், அதற்கு ஆதரவாக தேசமெங்கும் அலை வீசியது போல் சில ஊடகங்கள் சித்தரிப்பது உண்மையல்ல.

கடந்த முறையைவிட வெறும் 2.1 சதவீதம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. அதா வது இம்முறை அது பெற்ற வாக் குகள் 28.6 சதவீதம். 2004ல் 26.5 சதவீதம் வாக்குகளைப் பெற்று 145 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் இம்முறை 206 தொகுதிகளில் வென்றுள்ளது. அதாவது 28.6 சத வீத வாக்குகளைப் பெற்று 36 சத வீத தொகுதிகளைக் கைப்பற்றியுள் ளது. 

“தன்னுடைய பலத்தை 61 எம். பி.க்கள் அதிகப்படுத்திக் கொண்ட போதும், காங்கிரஸ் இதை 2004 ஐ விட வெறும் 2 சதவீத வாக்குகளை மட்டுமே அதிகமாகப் பெற்று சாதித்துள்ளது. 

அது இம்முறை 28.6 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. கிட்டத் தட்ட இதே அளவுதான் அது 1999 தேர்தலிலும் பெற்றது. ஆனால், அத் தேர்தலில் பாஜக கூட்டணி வென் றது. 

1999ல் காங்கிரஸ் பெற்ற ஒவ் வொரு சதவீத ஓட்டுக்கும் 4 தொகு திகள் வென்றது. 2004ல் அது 5.5 ஆகவும், 2009ல் அது 7.2 தொகுதி களாகவும் இருக்கிறது. 

(தி ஹிந்து, 26.5.09) 

காங்கிரஸ் பெறும் ஒவ்வொரு சதவீத வாக்கும் பெற்றுத் தரும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போயிருக் கிறது. இதற்கு முக்கிய காரணம், காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் சிதறியதுதான். ஆந்திராவில், மராட் டியத்தில், தமிழகத்தில் இதுதான் நடந்தது. மேலும், அது தன்னுடைய ஆற்றலை உத்தரப்பிரதேசம், ராஜஸ் தான், கேரளம் ஆகிய முக்கியமான மாநிலங்களில் குவி மையப்படுத் தியதும் ஒரு காரணம். 

“இப்படி வாக்குகளின் சத வீதத்தை விட அதிக சதவீத தொகு திகளை வெல்வதை ஏதோ அலை அடிப்பதாகவோ அல்லது மக்க ளின் மனதில் பெரும் மாற்றம் ஏற் பட்டு விட்டதாகவோ அல்லது தேசிய அளவில் மக்கள் ஒரு பக்கமி ருந்து இன்னொரு பக்கத்திற்குச் சாதக மாக மாறிவிட்டார்கள் என்றோ குழப்பிக் கொள்ளக் கூடாது.

(தி ஹிந்து) 

மொத்தமுள்ள 20 பெரிய மாநிலங்களில் காங்கிரஸ் 10 மாநிலங்களில் (ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், குஜராத், அரி யானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க் கண்ட், ஜம்மு - காஷ்மீர், மராட்டியம், ஒரிசா,) சென்ற முறையைவிட குறைவான வாக்குகளையே பெற் றுள்ளது. 

காங்கிரஸ் பெற்றிருக்கும் வெற்றிக்கு இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. முன்னரே பலரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள படி, அது தன் ஆட்சி காலத்தில் இடதுசாரி களின் நிர்ப்பந்தத்தால் நிறைவேற் றிய மக்கள் நலத்திட்டங்களும் ஒரு முக்கியமான காரணம். மதவாதிகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதும் ஒரு முக்கியக் காரணம். 

சில ஊடகங்களைப் போலவே அத்வானி கம்யூனிஸ்ட்டுகளைக் காரணம் கற்பிப்பது உலகமயக் கொள்கைகளை கண்மூடித்தன மாக காங்கிரஸ் அமல்படுத்து வதற்கு உதவுகிற வேலைதான். வரம் கொடுத்த மக்களின் தலை யிலேயே கைவைக்கும் வேலையை காங்கிரஸ் செய்யுமா னால் அதை யாராலும் காப்பாற்ற முடியாது. 

அசோகன் முத்துசாமி

திங்கள், 27 ஏப்ரல், 2009

பாஜகவின் நயவஞ்சக நாடகம்!

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

பாஜக தன்னுடைய ‘‘தொலை நோக்குக் கொள்கைகளை’’ தவணை முறையில் வெளியிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. உலகப் பொருளாதார மந்தத்தை அடுத்து, கட னைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்துதல்போல் தங்கள் கொள்கை களையும் மாற்றி அமைத்துக் கொண்டி ருக்கிறது. உலகப் பொருளாதார மந்தத் தை அடுத்து அதனை எதிர்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்துச் சரி யான பார்வை தங்களுக்கு இல்லாதது இதற்குக் காரணங்களாக இருக்கலாம். அல்லது, மக்களுக்கு தாங்கள் முன்பு அளித்த உறுதிமொழிகளிலிருந்து முரண் படுவதற்கும் மாற்றிச் சொல்வதற்கும் இது வசதியாக இருக்கும் என்று கருது வதும் கூட இதற்குக் காரணங்களாக இருக்கலாம்.

இப்போது வெளிவந்துள்ள பாஜக-வின் தேர்தல் அறிக்கையானது ஏராள மான வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந் தாலும், இதற்குமுன் அவர்கள் அளித் திட்ட தேர்தல் வாக்குறுதிகளில் உள்ள அம்சங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும், இரு அம் சங்கள் குறித்து நாம் எதுவும் சொல்லா மல் இருக்கமுடியாது. முதலாவதாக, 1998க்கும் 2004க்கும் இடையில் அவர் கள் அரசாங்கத்தை நடத்திய காலத்தில் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து அவர்களுக்கிருந்த அணுகு முறை இதில் மறுதலிக்கப்பட்டிருக்கிறது. அப்போது அவர்கள் பொதுத்துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான நடவடிக்கைகளைப் படிப்படியாகச் செய் வதற்கென்று ஓர் அமைச்சகத்தையே (ஆinளைவசல கடிச னளைinஎநளவஅநவே) உருவாக்கி இருந்தார்கள். அப்போது நடைபெற்ற ஊழல்கள் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அடித்த கொள்ளைகளை எல்லாம் நினைவுகூருங்கள். 2004இல் ஐமுகூ ஆட்சிக்கு வந்த சமயத்தில் இடதுசாரிகளிடமிருந்து வந்த நிர்ப்பந் தத்தின் காரணமாக, ஐமுகூ அரசாங்கம் மேற்கொண்ட முதல் நடவடிக்கையே, அந்தத் துறையை ஒழித்துக் கட்டியது தான்.

இப்போது பாஜக வெளியிட்டிருக்கும் தொலைநோக்கு ஆவணத்தில், அவர்கள் கூறுவது என்ன? ‘‘ கடந்த பல ஆண்டு களாக நன்கு கட்டி வளர்க்கப்பட்டுள்ள இந்தியப் பொதுத்துறையானது நம் நாட் டின் பெருமைமிகு சிறப்பம்சமாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங் கம் பொதுத்துறையை வலுப்படுத்தும், இந்தியாவின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதனைப் பயன் படுத்திக் கொள்ளும். அதே சமயத்தில், இதில் தனியார் துறையும் பங்கெ டுத்துக் கொள்வதற்கான வகையில் தனியார் துறைக்கு ஆக்கமும் ஊக்கமும் முழு மையாக அளிக்கப்படும். அரசாங்கம் - தனியார் ஒத்துழைப்பு (ஞரடெiஉ-ஞசiஎயவந ஞயசவநேசளாiயீ) அடிப்படையில், அரசாங்கத்தின் துறைகளை வளர்த்திட, அரசாங்கம் முழு மையாகப் பயன்படுத்திக் கொள்ளும்.” இது எப்படி இருக்கிறது? நாம் முன்பே சொன்னதுமாதிரி, பாஜக தங்களுடைய முந்தைய நிலைபாட்டிலிருந்து தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டிருக்கிறது. பொதுத்துறையைச் சார்ந்திருக்கும் வாக்காளர்களை முழுமையாக ஏமாற்றி அவர்களது வாக்குகளை அபகரிக்கும் முயற்சி என்பதைத் தவிர இது வேறொன்றுமில்லை.

இவர்கள் கூறுவதில் உள்ள இன் னொரு முக்கிய அம்சம், அரசாங்கம் - தனியார் ஒத்துழைப்பு என்பதாகும். காங் கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சி களுமே இதனைத் தூக்கிப் பிடிக்கின்றன. ஆயினும், கடந்த காலங்களில் நமக்கு ஏற் பட்டுள்ள அனுபவம் என்ன? விமான நிலையங்களை நவீனப்படுத்துவதற்கு, அரசாங்கம் - தனியார் ஒத்துழைப்பு முறையில்தான், ஆட்சியாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண் டார்கள். ஆனால் இதில் சம்பந்தப்பட்ட தனியார் துறையினர், தாங்கள் போட்ட கணக்கு அனைத்தும் தப்புக்கணக்காய் மாறிப்போனதாலும், உலகப் பொருளாதார மந்தத்தை அடுத்து, விமானப் போக்கு வரத்தில் பயணிகள் வரவு மிகவும் குறைந்துபோனதாலும், அவர்கள் கடும் நஷ்டத்தை அடைந்தனர். விளைவு, அத னை விமானப் பயணிகள் தலையில் கட்ட அரசால் அனுமதிக்கப்பட்டிருக்கி றது. பெங்களூர் மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் வளர்ச்சிக் கட்டணம் என்ற பெயரில் அநியாயமான அளவிற்கு லெவி ஒவ்வொரு பயணியிடமிருந்தும் வசூலிக்கப்படுகிறது. இதுதான் அர சாங்கம் - தனியார் ஒத்துழைப்பில் உள்ள சூட்சுமம். அதே சமயத்தில் அரசாங்கம் நடத்திடும் விமான நிலையங்கள் நிலை மை என்ன? அவை நட்டத்தில் இயங்கி னாலும் கூட அதன் சுமையை பயணிகள் தலையில் கட்ட அனுமதிக்கப்படுவதில் லை. இவ்வாறு, பாஜக-வின் தொலை நோக்குப் பார்வையானது, மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதற்கான ஒன்று என்பது தெளிவு.

இவ்வாறு நேரத்திற்கு ஏற்றாற்போல, பேசுவதென்பது பாஜகவின் நடைமுறை என்பது, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தங்கள் நிலைபாட்டை அவர்கள் முற்றிலுமாக மாற்றிக் கொண்டி ருப்பதிலிருந்து தெளிவாகிறது. 2007 நவம்பர் 28 அன்று, மக்களவையில் இந் திய - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று அத்வானி கூறியதாவது:

“123 ஒப்பந்தமானது, தற்போதுள்ள நிலையில், நாட்டிற்கு உகந்ததல்ல, ஏற்றுக்கொள்ளத் தக்கதுமல்ல. ஏனெ னில் இது இந்தியாவின் கேந்திரமான மற் றும் நீண்டகால நலன்களுக்கு விரோத மானது. மீண்டும் தேஜகூ ஆட்சிக்கு வந் தால், இந்த ஒப்பந்தத்தை நாங்கள் மறு பரிசீலனைக்கு உட்படுத்துவோம். இதில் உள்ள நாட்டின் நலன்களுக்கு விரோத மான அம்சங்கள் அனைத்தும் நீக்கப் படும், அல்லது இந்த ஒப்பந்தமே முழு மையாக ரத்து செய்யப்படும்.’’

ஆனால், இப்போது அவர் என்ன கூறுகிறார்? “அரசாங்கம் என்பது தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நடைமுறையைக் கொண்டதாகும். அயல்நாடுகளுடன் முந்தைய அரசாங் கங்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங் களை அவ்வளவு எளிதாகத் தூக்கி எறிந் துவிட முடியாது.” ஒப்பந்தத்தை “முழு மையாக” ரத்து செய்வதிருக்கட்டும், இதனை “மறுபரிசீலனைக்கு” உட்படுத் தக்கூட இவர்கள் தயாராயில்லை. அதே போன்று, “மறுபரிசீலனை” என்கிற வார்த் தை, பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் எந்தப் பக்கத்திலும் காணப்படவில்லை.

இவ்வாறாக, இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, தங் களுடைய அமெரிக்க ஆதரவு நிலைப் பாட்டை மூடிமறைத்திடும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாஜக நாட்டை தவறான பாதையில் இட்டுச் செல்கிறது என்பது தெளிவு. இன்னும் சரியாகச் சொல்வ தென்றால், பாஜக தலைமையிலிருந்த தேஜகூட்டணி அரசாங்கம்தான், அமெ ரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்தியா ராணுவரீதியான கூட்டணியை ஏற்படுத் திக் கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிய ஒன்றாகும். இவர்கள் ஆட்சி யிலிருந்த காலத்தில்தான் இஸ்ரேலுட னான உறவுகள் மேலும் வலுப்பட்டன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவரு டியாக, தேஜகூட்டணி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை, மன் மோகன் சிங் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமும் மிகவும் நன்றாகவே தொடர்ந்து செயல்படுத்தியது.

பாஜகவின் நயவஞ்சக விளையாட் டுக்கள் இவ்வாறு தொடர்கின்றன. மக் களிடம் வெளியே சொல்வதற்கு முற்றி லும் விரோதமான வகையிலேயே அவர் களின் உண்மையான நிகழ்ச்சிநிரலும் உள்ளார்ந்த எண்ணங்களும் இருந்திடும். இதற்கு சரியான உதாரணம், அரசியல மைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள, நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை ஏற்றுக் கொள்வதாகக் இவர்கள் கூறுவதை குறிப்பிடலாம். ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஓர் அரசியல் அங்கமாகச் செயல்படும் இவர்களுக்கு, இக்குடியரசை, வெறி பிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிச “இந்து ராஷ்ட்ர”மாக மாற்ற வேண்டு மென்பதே குறிக்கோளாகும். தெளிவான இந்தக் காரணத்திற்காகத்தான் இவர்கள் எவ்விதத்திலும் ஆட்சியதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்கிறோம். எனவே தான், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்ததோர் எதிர்காலத்தை அமைத்திட, இந்திய மக்கள் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மதச்சார்பற்ற மாற்று அரசாங்கத்தை அமைத் திட வேண்டும் என்று கோருகிறோம்.

தமிழில்: ச.வீரமணி

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

அத்வானியின் 100 நாள் மாடல் தர்பார்

+ பொடா சட்டம் மீண்டும் கொண்டுவரப் படும்..

+ பயங்கரவாதத்தை ஒடுக்க பொருத்த மான சட்டம். 

+ சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது.

+ மாநில காவல்துறைக்கு நவீன ஆயு தங்கள் வழங்கப்படும். 

+ சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க தண்டனை வழங்கும் சட்டம். 

+ பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள். விரைந்து விசா ரித்து நீதி வழங்குவது. 

+ சத்தீஸ்கர் மாடலை பயன்படுத்தி மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவது.

சர்க்கஸ் ரிங் மாஸ்டர் தொனியில் ஒலிக் கும் இந்த வார்த்தைகள் பாஜக வெளியிட் டுள்ள தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட் டுள்ளவை. கனவு பிரதமர் அத்வானி பதவி யேற்ற 100 நாளில் முதல்வேலையாக மேற் குறிப்பிட்டவைகளுடன் 12 உடனடி நடவடிக் கைகளாக நிறைவேற்றுவோம் என்று சபத மேற்றுள்ளனர். 

பயங்கரவாதத்திற்கு எதிராக என அறி முகப்படுத்தப்பட்ட பொடா சட்டம் நாளடை வில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. 2002ல் கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து பொடாவில் கைது செய்யப்பட்ட 103 இஸ்லாமியர்கள், 7 வருடங்கள் வரை விசாரணையின்றி சிறையில் அடைக் கப்பட்டனர். குஜராத் உயர்நீதிமன்றம், பொடா சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட் டதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பளித்து விடுவித்தது. இருப்பினும் கொலை, வன்முறை குற்ற பிரிவுகளின் கீழ் தொடர்ந்து சிறையில் இருந்து வருகின்றனர். குஜராத் மோடி அரசு சிறுபான்மை மக்களை அச்சுறுத்தவே பொடா சட்டத்தை பயன் படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. 

பயங்கரவாதத்தை ஒடுக்க தற்போதுள்ள விசேஷ குற்ற சட்டங்களே போதுமானது என பொடா ரெவியு கமிட்டியும் தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் ஒரு அசாதாரண நிகழ்வாகும். பெரும்பகுதி மக்கள் அல்லது ஏதாவது ஒரு பகுதி மக்கள் மனதில் அச்சுறுத்தல் மூலமா கவோ ஆதரவற்ற நிலைமையை உருவாக்கு வதன் மூலமாகவோ, அப்பகுதியினரை தங் கள் கட்டுப்பாட்டிற்குள் அல்லது அதிகாரத் திற்குள் கொண்டுவருவதுதான் பயங்கரவாதம் என்று பொடா ரெவியு கமிட்டி விளக்கம் அளித் துள்ளது. மேலும் ஒவ்வொரு பயங்கரவாதியும் குற்றவாளியாக இருக்கலாம். ஆனால் ஒவ் வொரு குற்றவாளியும் பயங்கரவாதி என முத் திரையிடப்படக்கூடாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறது. அத்வானியின் கூட்டம் இதை மனதில் நிறுத்தி சட்டத்தை கையாளுமா என்பது சந்தேகத்திற்கு அப்பாற் பட்டது. 

மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவது என்ற பெயரால் நிலப்பிரபுக்களின் அடியாட்களும், உள்ளூர் காவல்துறையும் சேர்ந்து அப்பாவி விவசாயிகள், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் மீது தொடுக்கப்படும் கடும் தாக்குதல்கள்தான் சத்தீஸ்கர் மாடல். இதே பாஜகவினர் நந்தி கிராம மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து இடது முன்னணிக்கு எதிராக வன்முறைக்கு துணை போவது எந்த ஊர் மாடல்? 

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கு என்ன அவசரம்? ஆம் அந்த வழியாக சிறு பான்மை இஸ்லாமிய மக்களை வங்க தேசத் தவர், பாகிஸ்தான் தேசத்தவர் என்று முத்தி ரையிட்டு வெளியேற்றும் பாசிச நடவடிக் கையை தொடங்குவதுதான். 

பயங்கரவாத குற்றவாளிகளின் வழக்கு களை விரைந்து விசாரித்து நீதி வழங்குவது என்பது இவர்கள் வாதப்படி இப்போது அப் ஷல் வழக்கு நீடிப்பது போல் இல்லாமல் உட னடியாக மரண தண்டனை அளித்து தங்க ளது மதவெறி பசியை தீர்த்துக்கொள்வதுதான்.

சுருக்கமாக குஜராத் பாணியில் அத்வானி யின் மத்திய அரசும் நடைபோடும் என்பது தான் அத்வானியின் 100 நாள் கனவு ஆட்சி இருக்கும் என்பதை தேர்தல் அறிக்கை சொல் லாமல் சொல்லுகிறது. 

பயங்கரவாதம், சட்டவிரோத குடியேற்றம், மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவது இவைகள் தான் இந்திய மக்களின் உடனடி விசயங் களா? பொருளாதார நெருக்கடியால் பறிக்கப் படும் வேலைகள், திசையறியாது விழிபிதுங்கி நிற்கும் இளைஞர்கள், விளைபொருளுக்கு விலையின்றி தற்கொலைச் சாவுகளுக்கு இழுத்துச் செல்லும் விவசாயிகள், விலைவாசி உயர்வு, என எண்ணிலடங்கா பிரச்சனை களில் மூழ்கிக் கிடக்கும் இந்திய மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என பாஜகவிடம் எதிர்பார்ப்பது ஏமாளித்தனம் என்கிறார்கள். 

இந்தியாவிற்கு தேவை குஜராத் மாடல் அல்ல, நாட்டு மக்களின் வாழ்வை பாதுகாக்க மாற்று அரசுதான். அது இடதுசாரி சக்திகளின் துணையோடு மதச்சார்ப்பற்ற, ஜனநாயக இயக்கங்களின் மூன்றாவது அணியே. இந்திய மக்களின் எதிர்பார்ப்பும். நம்பிக்கையம் இதுவே.

-எஸ்.ஏ.மாணிக்கம்

திங்கள், 20 ஏப்ரல், 2009

சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்

குண்டு வெடிப்பு சம்பவம் என்றாலே முஸ்லிம் சமுதாயத்தவ ரோடு தொடர்புபடுத்திவிடுவது புல னாய்வு அமைப்புகளுக்கும் காவல் துறையினருக்கும் எளிதான வழி யாகிவிட்டது.

பல்வேறு மாநிலங்களிலும் காவல் துறை இது போன்ற வேலை யைத் தான் பெரும்பாலும் செய்து வருகிறது. இதனால் முஸ்லிம் இளை ஞர்கள் தனிமைப்படும் அபாயம் தொடர்கிறது. இது ஒரு மனோதத் துவப் போர் முறை. தொடர்ச்சியாக ஒரு நபர் மீதோ ஒரு சமூகத்தின் மீதோ குற்றச் சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போனால் எல்லாக் குற்ற நிகழ்வுக்கும் ஒரு நபரையோ அல் லது ஒரு சமூகத்தையோ சந்தேகப் பட வைத்து விடலாம்.

இந்த துணிவில் தான் மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த கோட்சேயின் கும்பல் கூட முஸ்லிம் பெயரைக் கையில் பச்சை குத்திக் கொண்டிருந்தது. காந்தியின் மரணத்தை மதக் கலவரத்துக்கு காரணியாக்கப் பார்த்தது., ஆனால் மதச்சார்பற்ற வராக அன்றைய பிரதமர் ஜவஹர் லால் நேரு இருந்ததால் எதிர் வினை கள் தடுக்கப்பட்டன. முஸ்லிம்கள் பலியாகாமல் தப்பித்தனர்.

1948 ல் சதி செய்த சங்பரிவாரக் கும்பலின் வாரிசுகள் அழிந்துவிட வில்லை என்பதை மாலேகாவ் குண்டு வெடிப்பு சம்பவம் நிரூபித் தது. மசூதி அருகே ஏற்பட்ட இந்த சம்பவத்தில் பலர் கொல்லப்பட் டனர். ஆனால் பழிவிழுந்ததென் னவோ முஸ்லிம் சிறுபான்மை சமூ கத்தினர் மீது. ஆனால் கார்கரே என்ற காவல் துறைஅதிகாரியின் நேர்மையான புலனாய்வின் மூலம் இந்த சம்பவத்திற்கு பின்னால் பெண் சாமியார் பிரக்ஞாசிங்தாகூரின் திட் டம் இருந்தது அம்பலமானது. இந் தத் திட்டத்திற்கு முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த்புரோஹித் உடந் தையாக இருந்ததும் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்களை கள்ளத் தனமாக இந்து மதவெறி கும்பலுக்கு இவர் தானம் செய்திருப்பதும் வெளிச் சத்திற்கு வந்தது.

மாலேகாவ் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குக் காரணமானவர்களி டம் தொடர்ந்து விசாரணை நடத் தினால் மேலும் பல உண்மைகள் வெளியாகும் என்ற நம்பிக்கை இருந் தது. இந்த நம்பிக்கையை நாசப்படுத் தும் விதமாகக் காவல்துறை அதி காரி கார்கரே கடந்த நவம்பர்26ல் மும்பை தொடர் தாக்குதல் சம்பவங் களில் பயங்கரவாதிகளால் வஞ்சக மாகக் கொல்லப்பட்டார். அவ ரோடு மேலும் இரண்டு அதிகாரி களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று எழுப்பப்பட்ட சந்தேகக் குரல் அமுக்கப்பட்டுவிட் டது. கார்கரேயின் மரணத்தோடு மாலேகாவ் சம்பவமும் பெண்சாமி யார் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி ஆகியோர் மீதான விசாரணை யும் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு

விடுமோ என்கிற ஐயம் எழுந்துள்ளது.

சுதந்திர இந்தியாவின் வரலாற் றில் கரும்புள்ளியாக விழுந்தது பாபர் மசூதி இடிப்பு சம்பவம். இந்தசம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இவரது ர(த்)த யாத்திரை கிளப்பிய மதவெறி இன் னும் அடங்கவில்லை. வருண்காந்தி வடிவத்தில் நீடிக்கிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு 17 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நாடாளு மன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கு முடிவடைந்து தண்டனை யும் விதிக்கப்பட்டுவிட்டது. இந்த போக்கு நீதி முறையில் கூட மதவாதம் மறைந்து கிடக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

ஹவாலாமோசடி குற்றச் சாட்டு கூறப்பட்ட போது மக்களவை உறுப் பினர் பதவியை ராஜினாமா செய்த வர் அத்வானி. குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால் தான் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வருவேன் என்று மார்தட்டியவர் அவர். ஹவாலா மோசடி வழக்கை மூச்சு விடாமல் விசாரித்த நீதிமன்றம் அத்வானிக்குப் புனிதர் பட்டம் கொடுத்துவிட்டது. ஆனால் அந்த வழக்கில் எடுத்துக் கொண்ட சப தத்தை அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி எடுத்துக் கொள்ள வில்லை என்பதையும் குற்றம் சாட் டப்பட்டவரே உள்துறை அமைச்ச ராக ஆறு ஆண்டு காலம் பதவி வகித் தார் என்பதையும் பார்க்கும் போது ‘சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்’ என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்பரிவார கும்பல் நிர்வாகத்துறை யிலும் விஷம் பரப்புவதைக் கண் கூடாகக் காட்டியவை குஜராத் வன் முறை சம்பவங்கள். மும்பை கலவர சம்பவங்கள். ஆயிரம் தலைகளோடு விஷம் கக்கும் ஆதிசேஷன் போன்ற ஆர்எஸ்எஸ்-ன் புதிய வாலாகத் தோன்றியிருப்பது ராம்சேனா.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவ சேனா செய்யும் செயல்களை கர்நா டக மாநிலத்தில் ராம்சேனா செய் கிறது. கலாச்சார காவலர்கள் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டு காவல்துறை மீது தாக்குதல்; கலைஞர்கள் மீது தாக்கு தல்; காதலர்தின விழா மீது தாக்கு தல் என்று தொடர்ச்சியாக நடத்தி வருவது சிவசேனா என்ற மதவெறி, இனவெறி கூட்டம். இதற்கு இணை யாக இப்போது ராம்சேனா புறப் பட்டிருக்கிறது.

கர்நாடக மாநிலம் மங்களூரில் பெண்கள் மது அருந்தி விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டு அவர் களை வீதியில் ஓட ஓட விரட்டி அடித் தது இந்தக் கும்பல். அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் நட்புறவு முயற்சியாக இருநாடுகளின் பத்திரி கையாளர்கள் சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புகுந்த ராம்சேனா குண்டர் பாகிஸ் தான் செய்தியாளர்களைத் தாக்க முயற் சித்தார் என்ற செய்தி வெளியாகி யிருக்கிறது.

மதச்சாயம் பூசுவதிலிருந்து விளை யாட்டையும் விட்டு வைக்காத இந்த மதவெறிக் கூட்டத்தை கட்டுப்படுத்தி வைக்காவிட்டால் எதிர்கால இந் தியா இருள்மயமாகத்தான் இருக்கும்.

எனவே இதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இதன் விவரங்களை நாளை பார்ப்போம்.

புதன், 15 ஏப்ரல், 2009

பாஜக தேர்தல் அறிக்கை பழைய மொந்தையில் பழையகள்

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

பதினோரு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, பாஜக பதினைந்தாவது மக் களவைத் தேர்தலுக்காகத் தன்னுடைய சொந்தத் தேர்தல் அறிக்கையை வெளி யிட்டிருக்கிறது. இத்தனை ஆண்டு கால மும், பாஜக, தன்னுடைய சொந்த ஆசை அபிலாசைகளை மறைத்து வைத்துக் கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி யின் திட்டத்தைத்தான் வெளியில் கூறிக் கொண்டிருந்தது. தே.ஜ.கூட்டணிக்கும் பாஜக விற்கும் இடையில் உள்ள அடிப்படை முரண்பாடுகளை மூடி மறைப்பதற்கா கவே இவ்வாறு இதுநாள்வரை பாஜக நடந்து கொண்டிருந்தது. ஒருபக்கத்தில், ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் அரசியல் அங்கமாகச் செயல்பட்ட பாஜக, அதனு டைய கடும் மதவெறி நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அதனைச் சார்ந்தவர் களின் ஆதரவைக் கோருகிறது. மறுபக் கத்தில், அவ்வாறு மதவெறி நிகழ்ச்சிநிரலை முன்வைப்பதன் மூலமாக, தன்னுடைய தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடமிருந்து தனிமைப்பட்டு, கூட் டணியைப் பலவீனப்படுத்தியது. இதன் மூலமாக, மத்தியில் அது ஆட்சிக்கு வரு வதற்கான வாய்ப்புகள் வெகுதூரம் வில கிச் சென்றுள்ளது.

பாஜக மீண்டும் தன்னுடைய குரூரமான மதவெறி நிகழ்ச்சிநிரலைப் பின்பற் றப்போவதாக அறிவித்துள்ளது. ஆர்எஸ் எஸ் இயக்கமானது, அயோத்தியில் தாவா வுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டு வதற்கு எந்தக் கட்சி ஆதரவு அளிக்கிறதோ அந்தக் கட்சிக்குத்தான் தங்கள் ஆதரவு என்று வெளிப்படையாகவே அறி வித்துள்ளது. கூடுதலாக, பாஜகவும், மக்கள் மத்தியில் இந்து மதவெறித் தீயைக் கூர்மைப்படுத்தி “இந்து வாக்கு வங்கி” யை ஒருமுகப்படுத்தாவிடில், மத்தியில் ஆட்சியில் அமர முடியாது என்ற முடி விற்கு வந்துள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில், எந்த அளவிற்குக் குரூரமாக மதவெறித் தீயை அது மூட்டி யது என்பதை அறிவோம். கர்நாடகாவில் ஸ்ரீ ராம் சேனையின் காட்டுமிராண்டித்த னம், இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். சமீ பத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் தொகுதியில் அதன் வேட்பாளர் கக்கிய மதவெறி நச்சுக் கருத்துக்களுக்கு பாஜக வெளிப்படையாகவே ஆதரவு அளித்து அவற்றைச் சரியென்று ஏற்றுக் கொண்டிருப்பதிலிருந்தே, மதவெறிப் பிரச்சாரத்தில் அதற்கு இருக்கும் உள் ளார்ந்த அபிலாசைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

2009ஆம் ஆண்டுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையானது, ‘ராம நவமி’ யன்று வெளியிடப்பட்டிருப்பது, அதன் சித்தாந்தத் தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது. அதன் தேர்தல் அறிக்கையானது, “இந்தியாவின் கடந்தகாலத்தை மீண்டும் நிறுவுவோம்” என்னும் தலைப்புடன் தொடங்கி, “நம்முடைய கலாச்சாரப் பாரம் பரியத்தைக் கட்டிக்காப்போம்” என்னும் தலைப்புடன் முடிவடைகிறது. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட அன்று, அதன் முக்கியப் பகுதிகள் என்று ஒரு சிறுபிரசுரம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. அதில் “நாட்டின் நாகரிகத்தைப் பாதுகாத்திடு வோம்” என்ற தலைப்பில் ஒரு பிரிவு காணப்படுகிறது. இதில் அயோத்தியில் தாவாவுக்குரிய இடத்தில் “பிரம்மாண்ட மான ராமர் கோவில்” கட்டுவது என்கிற தன்னுடைய கடுமையான மதவெறி நிகழ்ச்சிநிரலை மையக்கருவாக அறிவித் திருக்கிறது. அதேபோல் “புனிதமாகக் கருதப்படும் ராமர்பாலத்தின் மீது கை வைப்பதற்கும் எவரையும் அனுமதி யோம்” என்றும் அது எச்சரிக்கிறது. பசுப் பாதுகாப்பு, அரசியலமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து ஆகிய வை ஒழிப்பு மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவற்றையும் அது மீண்டும் கிளப்பி யிருக்கிறது. 

‘இந்தியா எப்போதும் ஓர் இந்து நாடாகவே இருந்திருக்கிறது, இருக்கும்’ என் கிற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கருத்தாக்கத்தின் விரிவாக்கமாகவே பாஜகவின் தேர்தல் அறிக்கையின் ஆரம்பமும் முடி வும் அமைந்திருக்கிறதேயன்றி வேறெது வும் இல்லை. இவ்வாறு இவர்கள் கூறுவ தானது, நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தினை வெளிப் படையாகவே மறுதலிக்கிறது என்பதைத் தவிர வேறல்ல. ஆரம்பம் மற்றும் இறுதி அத்தியாயங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டுள்ள மற்ற அனைத்து அத்தியா யங்களுமே மற்ற பல்வேறு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் காணப்படும் கோரிக்கைகள் சிலவற்றை மீண்டும் வலியுறுத்துவதைத் தவிர வேறெதுவும் இல்லை. 

இவை இப்போதும் கோரும் கோரிக் கைகளில் பலவற்றை, பாஜகவின் தலை மையில் தே.ஜ.கூட்டணி ஆட்சியிலிருந்த ஆறு ஆண்டு காலத்தில் நிறைவேற்றி இருக்க முடியும். ஆனால் அவ்வாறு எதையும் செய்யாமல் இப்போது மீண்டும் கோரி யிருக்கிறார்கள். தாங்கள் ஆட்சியிலிருந்த போது விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து பரிசீலிக்கவே மறுத்தவர்கள், இப் போது அதனைக் கூறியிருக்கிறார்கள். பயிர் இன்சூரன்ஸ் குறித்த அனைத்துக் கோரிக்கைகளையும் அப்போது கண் மூடித்தனமாக எதிர்த்தவர்கள் இப்போது பயிர் வருவாய் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகப் பேசுகிறார்கள். 

இன்றையதினம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்கும் இவர்கள்தான் அன்றைய தினம் முதலாளிகளின், வேலைமுடிந்த பின் வீட்டிற்கு அனுப்பும் கொள்கைக்கு வக்காலத்து வாங்கியவர்கள். முன்னாள் ராணுவத்தினருக்கு ‘ஒருவருக்கு ஒரு பென்ஷன்’ என்னும் திட்டம் உட்பட இவர்கள் இப்போது கோரும் பல திட்டங்களை இவர்கள் ஆட்சியிலிருந்த போதே நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால் எதையும் செய்யவில்லை. தாங்கள் ஆட்சியிலிருந்த காலத்தில் மகளிர்க்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற விடாமல் முடக்கியவர்கள், இப்போது அதற்கு வக்காலத்து வாங்குவதாகப் பாசாங்கு காட்டுகிறார்கள்.

பயங்கரவாதத்திற்கு மதமோ, சாதியோ, பிராந்தியமோ கிடையாது என்று பாஜக வின் ஒருசில தலைவர்கள் உதட்டள வில் பேசியபோதிலும், பாஜகவின் தேர் தல் அறிக்கையானது, பயங்கரவாதத்தை ஒரு குறிப்பிட்ட மதத்துடனேயே பிணைக்கிறது. இந்துத்துவா பரிவாரங்களால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து அது ஒரு துளி யும் கூறிடவில்லை என்பதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை.

நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் மீது ஆழமான பிடிப்பு உள்ளதால், தற்போது ஏற்பட்டுள்ள உல கப் பொருளாதார மந்தத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியி லிருந்து இந்தியாவைக் காப்பாற்ற பாஜக வினால் அநேகமாக ஒன்றுமே கூற முடிய வில்லை. 

இவ்வாறு, பாஜகவின் தேர்தல் அறிக் கையானது, புதிய மொந்தையில் பழையகள் என்று கூறமுடியாமல், பழைய மொந்தையில் பழைய கள்ளையே கொடுத்திருக்கிறது. பாஜகவானது ஆர் எஸ்எஸ் பரிவாரத்தின் அரசியல் அங்கம் என்று கூறுவதற்கு இதைவிட உத்தர வாதம் வேறெதுவும் தேவையா, என்ன?

இவ்வாறு ‘‘இந்து வாக்கு வங்கியை’’ ஒருமுகப்படுத்துவதற்காக தேர்தல் அறிக்கையில் ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்தத்தின் அடிப்படையில் உறுதிமொழி களைக் கூறியுள்ள அதே சமயத்தில், இதற்கு முற்றிலும் முரண்பட்ட நிலையில் தன் கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப் படுத்தும் நோக்கத்தோடு தே.ஜ.கூட் டணியின் நிகழ்ச்சிநிரலையும் அமல் படுத்துவோம் என்று கூறியிருக்கிறது. முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் இத்தகைய அரசியல்வாதிகளை இந்திய மக்கள் ஏற்கனவே நன்கு உணர்ந்துவிட்டார்கள். இனியும் அவர்கள் ஏமாறமாட்டார்கள்.

தமிழில்: ச.வீரமணி