
திங்கள், 23 மே, 2011
சமச்சீர்கல்வியை நிறுத்த பெற்ற கோடிகள் எவ்வளவு?

செவ்வாய், 3 மே, 2011
ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி தர மறுக்கும் தனியார் பள்ளிகளை இழுத்து மூடு.

நாடு விடுதலையடைந்து 63 ஆண்டு களுக்கு பிறகுதான் அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்பதற்கான உரி மையை நிலைநாட்டுகின்ற “அனை வருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம்” கொண்டுவரப் பட்டுள்ளது. மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகு 2010 ஏப்ரல் 1 முதல் அச்சட்டம் நடை முறைக்கு வந்துள்ளது. அதன்படி கல்வி பெறுவது அனைத்துக் குழந்தைகளின் அடிப்படை உரிமையாக்கப்பட்டுள் ளது.

செவ்வாய், 1 மார்ச், 2011
வதை முகாம்களாக தனியார் பள்ளிகள்

கந்து வட்டிக்காரர்களை விஞ்சும் வகையில் குழந்தைகளை பிணைக் கைதி களாக பிடித்து வைத்துக் கொண்டு கட்டணத்தை வசூலிப்பதும், ‘சொன்ன’ கட்டணத்தை கட்டாத பெற்றோர்களை குண்டர்களை வைத்து மிரட்டுவதும் தனியார் பள்ளிகளின் ‘சமூகத் தொண்டாக‘ உள்ளது. இதனை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இத்தகைய குற்றங்கள் வழக்காக பதிவாகி விடாமல் பள்ளிகள் பார்த்துக் கொள்கின்றன.
தமிழக அரசின் கோவிந்தராஜன் குழு பரிந்துரைத்த கட்டணத்தை மீறி, பள்ளி நிர்வாகம் சொல்லும் கட்டணத்தைக் கட்ட மறுத்து பெற்றோர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினால், அதிகாரிகள் அங்கு வருவதும், பெற்றோர்-நிர்வாகத்தோடு பேசுவதும் அவ்வப்போது நடக்கும் நாடகமாகவே உள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் ஏராள மான பள்ளிகள் முன்பு பெற்றோர்கள் போராட்டம் நடத்தியும், புகார் செய்தும் ஒரு பள்ளி மீது கூட அதிகாரிகளோ, அரசோ நடவடிக்கை எடுக்காமல் இருப் பதே இதற்கு சான்று.
பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படு வது, அதிகாரிகளின் மெத்தனம், குழந் தைகளை மன ரீதியாக வதைப்பது என நீளும் தனியார் பள்ளிகளின் அராஜ கத்தை அரசு நிர்வாகம், நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காக ஞாயிறன்று (பிப்.27) சென்னையில் பொது விசாரணை நடைபெற்றது. இந்த பொது விசாரணையில், தமிழகத்தில் உள்ள பிரபலமான 19 பள்ளிகளைச் சேர்ந்த பெற்றோர்கள் பங்கேற்றுப் பேசினர்.
“நாங்க சொல்ற கட்டணத்தைதான் கட்டணும், கண்ட நாய்கள் சொல்ற கட்டணத்தையெல்லாம் நாங்க வாங்க முடியாது. இஷ்டம் இருந்தா உங்க புள்ளைங்கள படிக்க வைங்க. இல்லாட்டி கூட்டிட்டு போங்க.” என்று சென்னை அய னாவரம் கல்கி நாராயணா பள்ளி நிர்வா கம் கூறுவதாக ஒரு பெற்றோர் கூறினர்.
சென்னை, கொளத்தூரில் உள்ள டேனியல் தாமஸ் பள்ளியில் பயிலும் எனது மகனுக்கு அரசு நிர்ணயித்த ஆயி ரத்து 450 ரூபாய் கட்டணத்திற்கும் அதிக மாக 9ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளேன். இது போதாது இன்னும் சில ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்கிறார்கள். அதனை செலுத்த மறுத்ததால், எனது மகனுக்கு கணக்கு புத் தகத்தில், ஒரு பாடத்தில் ஒரு கணக்கை மட்டுமே சொல்லிக் கொடுக்கிறார்கள். குழந்தையை அடிக்கிறார்கள். ரேங்க் அட்டை கொடுக்க மறுக்கிறார்கள். தேர்வு எழுத கூடுதல் பேப்பர் தர மறுக்கிறார்கள். ஏற்கெனவே கட்டிய பணத்திற்கு அளித்த ரசீதில் தேதியே இல்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு.
ஈரோடு இந்து பள்ளியில் எல்கே ஜிக்கு 3ஆயிரத்து 800 ரூபாயும், பன்னி ரெண்டாம் வகுப்புக்கு 9ஆயிரம் ரூபாயும் கோவிந்தராஜன் குழு நிர்ணயித்துள்ளது. ஆனால் எல்கேஜிக்கு 11ஆயிரம் ரூபாயும், பன்னிரெண்டாம் வகுப்புக்கு 40ஆயிரம் ரூபாயும் வசூலிக்கின்றனர். பெற்றோர் களை தனித்தனியாக அழைத்து மிரட்டி கட்டணத்தை பிடுங்குகின்றனர். சொன்ன கட்டணத்தை கட்டாத 3ம் வகுப்பு குழந்தையை எல்கேஜிக்கு மாற்றுகின்ற னர். 1 மற்றும் 6 வகுப்புக்கு சமச்சீர் கல்வி அமலாகியுள்ளது. அடுத்தாண்டுதான் பிற வகுப்புக்களுக்கு சமச்சீர் கல்வி அமலாக உள்ளது. ஆனால், சில பள்ளிகளில் சொன்ன கட்டணத்தை செலுத்தியுள்ள மாணவர்களுக்கு 10, 12ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத்தை போதிக்க ஆரம்பித்துவிட்டனர் என்று ஒரு மாண வரின் தந்தை குற்றம் சாட்டினார்.
ஈரோடு செங்குந்தர் பள்ளி நிர்வாகம் பற்றி கூறுகையில், ரவுடிகளை வைத்து மிரட்டுகிறது; வேறுசில வகைகளிலும் தொந்தரவு கொடுக்கிறார்கள் என்றனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள ஜெசிமோசஸ் பள்ளி கூடுதல் கட்ட ணத்தை வகுப்பாசிரியர்களின் பெயர் களில் காசோலையாக வாங்கி வரும்படி குழந்தைகளை நிர்பந்தப்படுத்துகின்ற னர். இப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவிக்கு கட்டணமாக 11ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனா லும் 25ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளேன். மேலும், 7ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். அதனை செலுத்த மறுத்துவிட்டோம். இதனை, ஈடுசெய்ய, கடந்தாண்டு நிலுவை என்று கூறி வீட்டிற்கு கடிதம் அனுப்பி யுள்ளனர் என்று ஒருவர் கூறினார்.
சென்னையில் பிரபலமாக அறியப்பட்ட சைதாப்பேட்டை ஆல்பா பள்ளி யில் 5 மடங்கு புத்தக கட்டணம் வசூலிக் கிறார்கள். தற்போது மாணவர்களே தேர்வுக்கு பேப்பர் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள். சொன்ன கட்டணத்தை கட்டாதவர்களை காலை வழிபாட்டில் தனியாக நிற்க வைக்கின்றனர் என்கிறார் ஒரு மாணவரின் தாய்.
குழந்தைகளை முட்டி போட வைப்பது, வகுப்பில் பின் வரிசையில் அமர வைப் பது, அடிப்பது போன்ற சம்பவங்களையும் பெற்றோர்கள் விசாரணையில் கூறினர்.
விசாரணையில் நீதிபதியாக பங்கேற்ற வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரதசாத், ஒவ் வொரு பள்ளி மீதும் பெற்றோர்கள் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதை விட, தமிழக அரசு அதனை செய்ய நிர் பந்தியுங்கள். அப்போதுதான் பிரச்ச னைக்கு தீர்வு வரும் என்றார்.
கல்வியாளர் வசந்திதேவி, கோவிந்த ராஜன் குழுவின் விளைவாக நடுத்தர வர்க்கம் இன்றைக்கு தெருவில் வந்து போராடுகிறது. பெற்றோர்களின் போராட் டங்கள் மூலம் அரசின் சட்டம் உயிரோடு உள்ளது. பெற்றோர்கள் போராடாமல் இருந் தால் அந்த சட்டம் வெற்று காகிதமாகவே இருந்திருக்கும். பல ஆண்டுகளாக அரா ஜகம் புரிந்து வந்த அதிகார மையம் பெற் றோர்களின் போராட்டத்தால் ஆட்டம் கண் டுள்ளது. போராட்டம் தீவிரமாகும் போது அதிகார மையம் தகர்ந்துவிடும் என்றார்.
கல்வி உரிமைச்சட்டம் அரசு தனியார் பள்ளிகளையும் கட்டுப்படுத்தும். குழந் தைகளை பாகுபடுத்துவது, சித்ரவதை செய்வது, மனரீதியாக துன்புறத்துவது, டிசி கொடுப்பேன் என மிரட்டுவது போன்றவை குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்து கிரிமினல் வழக்கு பதிவு செய் யுங்கள், தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையத்திலும் புகார் செய்யுங்கள். தற்போது விசார ணையில் வந்த அம்சங்களை தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று தமிழகத்தில் பொது விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் 2கோடி பேர் உள்ளனர். பெற்றோர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக தொகுத்து ஆளும் கட்சிக்கு கொடுத்து அதனை நிறைவேற்றினால்தான் வாக்க ளிப்போம் என்று நிர்பந்தியுங்கள். பிற கட்சிகளிடமும் கொடுத்து, வாக்குறுதி அளித்தால்தான் ஓட்டு போடுவோம் என்று நிர்பந்தியுங்கள் என்றும் வசந்தி தேவி கூறினார்.
புதன், 2 பிப்ரவரி, 2011
செருப்பில் சேகுவேரா படம் : செருப்பை எரித்து DYFI போராட்டம்

உலக உழைப்பாளி மக்களின் விடிவெள்ளியான புரட்சியாளர் சேகுவேரா வின் உருவத்தை காலணி யில் பொறித்து வெளியிட்டு இருப்பதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காலணி களை தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடைபெற் றது.
சேகுவேராவின் உரு வத்தை காலணியில் பொறித்து, இழிவுப்படுத்தும் நோக்கத் துடன் வெளியிட்டுள்ளதை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். சேகுவேராவின் உருவபடத்தை காலணியில் பொறித்து வெளியிட்டுள்ள நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற் றது.
காமாராஜர் சிலை எதிரே நடந்த, இந்த தீயிட்டு கொளுத்தும் போராட்டத்திற்கு டிஒய்எப்ஐ புதுவை பிரதேசத் தலைவர் சந்துரு தலைமை தாங்கினார். பிரதேச பொருளாளர் பிரபு ராஜ், நகரத்தலைவர் சரவ ணன், எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து, இளை ஞர் பெருமன்றத்தின் மாநி லத் தலைவர் அன்துவான், செயலாளர் செல்வம், கீர்த்தி வர்மன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
திரளான வாலிபர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு காலணிகளை எரித்தனர். மேலும் புதுச் சேரியில் சேகுவேரா உருவம் பொறித்த காலணிகளை அவர்களின் கோரிக்கையை ஏற்று புதுவை அரசு தடை விதித்து உள்ளது
திங்கள், 7 செப்டம்பர், 2009
சமச்சீர் கல்வி : போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
இந்த அறிவிப்பிற்கு பின்னால், நீண்ட வீரம் மிகுந்த மாணவர் போராட்டம் இருக் கிறது. பத்தாண்டு காலமாக தமிழக பள்ளிக் கல்வியின் அவலத்தை அம்பலப்படுத்தி, ஏழை, எளியோருக்கு ஒருவித கல்வி, பணம் படைத்தோருக்கு ஒருவித கல்வி என்ற ஏற்றத்தாழ்வான பள்ளிக்கல்வி முறையின் சீர்கேட்டை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் தொடர் இயக்கம் நடத்தியது.
1969க்கு முன் ஒரே பள்ளிக்கல்வி வாரி யம்தான் தமிழகத்தில் இருந்தது. மேட்டுக்குடி வீட்டு பிள்ளைகளும், கீழத்தெரு பிள்ளை களும் அரசுப் பள்ளிகளில்தான் படித்தார்கள். மெட்ரிக் பள்ளிகள் கொஞ்சம் கொஞ்ச மாக பெருகி, 1974ல் 34 ஆக இருந்த மெட்ரிக் பள்ளிகள், மத்திய அரசு புகுத்திய கல்விக் கொள்கை அறிமுகமான 1986க்குப் பிறகு மழைக்காளான்களாய் முளைக்கத் துவங்கி, இன்று தனி பள்ளிக்கல்வி வாரியத்துடன் சுமார் 4000 பள்ளிகளாக பெருகியுள்ளன. இவற்றிற்கென தனிபாடத்திட்டம், தனி புத்த கங்கள், தனியான தேர்வுமுறை, மதிப்பீட்டு முறை ஆகியன உள்ளன. சுமார் 25 லட்சம் மாணவர்கள் இப்பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
ஆனாலும் தமிழகத்தில் 70 சதவிகித மாணவர்கள், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி களையே நம்பியுள்ளனர். அரசு பள்ளிகள், போதிய ஆசிரியர் இன்மை, அடிப்படை வசதி கள் இன்மை என தடுமாறுகின்றன. இதனால் கல்வி பெறும் அடிப்படை உரிமையை முறை யாக பெறமுடியாமல் மாணவர்கள் பாதிக்கப் படுகின்றனர். மாநில அரசு கல்விக்கென 30 சதவிகித நிதி பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டு மென்ற கோத்தாரி கமிஷனின் வேண்டு கோள், பரண்மேலிட்ட விளக்காக பயனற்றுக் கிடக்கிறது.
இவ்வாண்டு பொறியியல் மாணவர் சேர்க் கையில் வாய்ப்பு பெற்று கல்லூரி நுழைந் திட்ட மாணவர்களில் 35 சதவிகிதம் பேரே தமிழ்வழியில் பயின்றவர்கள் என்கிறது அரசின் புள்ளிவிபரம்.
உயர்கல்வி வியாபாரம் இதற்கொரு முக்கிய காரணமென்றாலும், மாணவர் சேர்க் கைக்கான போட்டி கடுமையாக உள்ள, மிக அதிக மதிப்பெண்கள் தேவைப்படும் அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் சேருவோரில் 10 சதம் பேரே தமிழ்வழியில் பயின்றவர்கள் உள்ளனர். சமூகத்தின் உயர் வருமான பிரிவி னரே சேர இயலும் ரெசிடன்சியல் பள்ளி எனப்படும் தனியார் உண்டு, உறைவிடப் பள்ளி மாணவர்களே அதிக மதிப்பெண்கள் பெற்று, அக்கல்லூரிகளின் இடங்களை அப கரித்துக்கொள்கின்றனர். பள்ளிக்கல்வி சமச் சீரற்ற தன்மையில் உள்ளதே இதற்கு காரணம்.
அதே வேளையில் ஒருபுறம் உயர்கல்வி வாய்ப்புகளிலிருந்து ஏழை மாணவர்கள் துரத்தியடிக்கப்படுவதோடு, மறுபுறம் ஆங் கிலவழி மோகத்தைக் காட்டி தரமற்ற மெட்ரிக் பள்ளிகள் பல்கி பெருகிவருகின்றன. கல் நெஞ்சத்தாரின் கண்களையும் குளமாக்கிய கும்பகோண துயரமே அதற்கு உதாரணம். பெருகும் இப்பள்ளிகள் ஆண்டுக்கு ஐம்பது சத கட்டண உயர்வோடு, பெற்றோரை அலைக்கழிக்கின்றன.
இத்தகைய அவலத்தை போக்கிட, தமிழக பள்ளிக்கல்வி சமச்சீரான தன்மை யில் இருக்க வேண்டும். எனவே, சமச்சீர் பள்ளிக் கல்விமுறை தமிழகத்தில் நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை வைத்தது. அதோடு நில்லாமல் ஆட்சியாளர்களின் கவ னத்தை ஈர்க்கவும், மாணவர்களையும், மக் களையும் கோரிக்கையின் பின்னால் அணி திரட்டிடவும் அடுக்கடுக்கான போராட்டங் களை நடத்தியும் வந்துள்ளது.
2003 ஜனவரியில் திருச்சியில் நடை பெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் 19வது மாநில மாநாட்டின் போதே சமச்சீர் பள்ளிக் கல்வியை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. 2004 ஆகஸ்ட் 6 அன்று சமச்சீர் பள்ளிக்கல்விமுறை கேட்டு மாநிலம் தழுவிய எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அதையொட்டி சென்னை பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் அப்போதைய மாநில தலை வர் ஜி. செல்வா தலைமையில் மனு கொடுக் கச் சென்ற எஸ்எப்ஐ தோழர்கள், காவல் துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். மாணவிகள் என்று கூட பாராமல் தோழர்கள், வெண்மதி, சகிலா ஆகியோரை காவல்துறை யினர் ஷு கால்களால் வயிற்றில் மிதித்து காயப்படுத்தினர். தோழர் செல்வா உட்பட பலர் வாரக்கணக்கில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றனர்.
2006ல் முனைவர் முத்துக்குமரன் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழகம் முழு வதும் சென்று கருத்துக் கேட்ட போது, இந்திய மாணவர் சங்கம் தனது கருத்துக்களை வலுவாக எடுத்துரைத்தது. பல தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டும், தமிழக பள்ளிக் கல்வி குறித்து ஆய்வும் செய்த அக்குழு தனது அறிக்கையை 2007 ஜுன் மாதம் அரசி டம் ஒப்படைத்தது. அவ்வறிக்கை 2007 அக் டோபர் 17 அன்று சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
தமிழக அரசு, முனைவர்.முத்துக்குமரன் குழு அறிக்கையை கிடப்பில் போட்டது. ஏற்கனவே ஓராண்டு காலம் விரிவாக ஆய்வு நடத்தி, தயாரிக்கப்பட்ட அறிக்கை குறித்து ஆய்வு செய்ய இரு தனி குழுக்களை அமைத் தது. சமச்சீர் பள்ளிக்கல்வியை நடைமுறைப் படுத்திட காலவரையறையையும் அறிவித்திட மறுத்தது.
மாணவர் சங்கத்தின் தொடர்போராட்டங் களை தொடர்ந்தே, பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கைக்கு முன்தினம் ஜுலை 14ல் சட்டமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. பேரணி மீது காவல்துறை கடும் தாக்குதலை ஏவிவிட்டது. மாணவர் சங்க அகில இந்திய இணைச்செயலாளர் செல்வா, மாநிலத்தலைவர் ரெஜிஸ்குமார் உட்பட 19 மாணவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தைக் கண்டித்து சட்டமன்றத் தில் பேசிய அனைத்துக் கட்சிகளும் சமச்சீர் பள்ளிக்கல்விமுறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தின. கல்வியாளர்கள், ஆசிரியர் அமைப்புகள், ஊடகங்கள் என சமச்சீர்பள் ளிக்கல்வி கேட்டு குரல்கள் அலை அலை யாய் எழுந்தன. நாளும் எழும் நிர்பந்தத்தால் சமச்சீர் பள்ளிக்கல்விமுறையை படிப்படி யாக நடைமுறைப்படுத்தப் போவதாக அரசு அறிவித்துள்ளது.
ஆனாலும் சமச்சீர் பள்ளிக்கல்வி முறை யை முழுமையாய் நடைமுறைப்படுத்தும் வரை ஓயாத போராட்டம் தேவைப்படுகிறது. வாரியங்களை ஒன்றிணைப்பதும், பாடத்திட் டங்களை ஒன்றிணைத்து பொதுபாடத்திட் டமாக மாற்றுவதால் மட்டும் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்துவிடாது. அதற்கு தமிழக அரசு மேலும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. முனைவர் முத்துக்குமரன் குழுவின் இதர பரிந்துரைகளையும் நடை முறைப்படுத்த தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும். குழுவின் பரிந் துரைகளில் முக்கியமானவைகளான:-
* பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப் பட்ட பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கல்வி சட்டங்களை ஒன்றிணைத்து தற்கால சூழலுக்கு ஏற்றாற்போல ‘தமிழ்நாடு கல்வி சட்டம்’ கொண்டு வர வேண்டும்.
* கோத்தாரி குழுவின் பரிந்துரையான ஆசிரியர்-மாணவர் விகிதம் 1 : 30க்கு மேல் போகக்கூடாது என்பதையும் நடைமுறைப் படுத்த வேண்டும்.
* மழலையர் கல்வி பொறுப்பையும் அரசே ஏற்றுக்கொண்டு, அனைத்து பள்ளிக ளிலும் மூன்று வயது நிரம்பிய குழந்தை கள் அனைவருக்கும் மழலையர் பிரிவு தொடங்க வேண்டும்.
* ஒரு தொழில்நுட்பக் கல்வி கற்க தேவை யான அறிவை பெறும் வகையில் பாடத் திட்டம் அமைய வேண்டும். மேலும் சமு தாய எதார்த்தத்தையும், இயற்கை சூழ லையும் முழுமையாக புரிந்து கொள்ளும் வகையில், பாடங்கள் உருவாக்கப்பட்டு கற்பிக்கப்பட வேண்டும்.
* பாடநூல்கள் தவிர விரிவாக எழுதப் பட்ட வழிகாட்டி நூல்கள், துணை நூல்கள் பயிற்சி புத்தகங்கள், அகராதிகள் போன்ற வற்றை அரசு வெளியிட வேண்டும்.
* தற்போதுள்ள , மனப்பாடத் திறனை மட்டும் சோதிக்கும் தேர்வுமுறைக்கு மாற்றாக மாணவர்களின் முழுத்திறனையும் சோதிக்கும் தேர்வுமுறை உருவாக்கப்பட வேண்டும்.
சமச்சீர் பள்ளிக்கல்வி முறை நடை முறைப்படுத்தப்படும் போது, அவ்வப்போது கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், ஆசிரியர் அமைப்புகளின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.
கே.எஸ்.கனகராஜ்
கட்டுரையாளர் இந்திய மாணவர் சங்க மாநிலச்செயலாளர்.
சனி, 7 பிப்ரவரி, 2009
அரசியல் நரிகளிடம் சிக்கிய புதுச்சேரி மாநிலம்


