வியாழன், 9 ஜூன், 2011

நொடிந்த விவசாயிகளின் வேதனை தீர்க்குமா ஜெ அரசு?





நெல் விலை

விவசாயம் கட்டுப்படியாகாத தொழிலாக மாறிக்கொண்டிருக்கிறது. வேளாண் இடு பொருட்களின் விலையும் தொடர்ந்து அதி கரித்து வருகிறது. இதற்கேற்ப கட்டுப்படி யான விலை கிடைக்காத காரணத்தால் விவ சாயிகள் உணவு தானிய உற்பத்தியை கை விட்டு, வேறு பயிர்களுக்கு மாறுவது அதி கரித்து வருகிறது. எனவே நெல் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நெல் விலையை உயர்த்த வேண்டி யது அவசியம் என்பதை சுட்டிக்காட்டு கிறோம்.

எனவே, இந்த ஆண்டு நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1500 விலையாக அரசு அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கரும்பு விலை

விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட் களின் விலை உயர்ந்தும், வெட்டுக்கூலி கடுமையாக அதிகரித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3000 தீர்மானித்து அறிவிக்க வேண்டும். கரும்பு விலை குறித்து தீர்மானிக்க உடனடியாக முத்தரப்புக் கூட்டத்தை நடத்திட அரசு முன் வர வேண்டும். அத்துடன் வெட்டுக்கூலியை ஆலைநிர்வாகமே ஏற்க அரசு முயற்சி எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை பாதுகாக்கும் விதத்தில் கூட்டுறவு ஆலை கள் மீதான ரூ.1,625 கோடி கடன் தொகையில் வட்டி, அபராத வட்டியை அரசு தள்ளுபடி செய் வதுடன், அசல் தொகையை அரசின் பங்கு தொகையாக மாற்றி கூட்டுறவு ஆலை களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மா விலை

தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக மா விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு 1 டன் மாம்பழம் ரூ.15000க்கு விற்றது. இந்த ஆண்டு டன் ரூ.3000 என்ற அளவுக்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சிக்கு வியாபாரிகளின் கூட்டுச் சதியே காரணம். எனவே, அரசு முத்தரப்புக் கூட்டத் தை நடத்தி மா விவசாயிகளுக்கு கட்டுப்படி யான விலை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடன்

கூட்டுறவு வங்கிகள், நிதியின்றி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால், கடன் கோரிய விவசாயிகளில் பெரும்பகுதி யானவர்களுக்கு கடன் கிடைக்காமல், தனி யாரிடம் கூடுதல் வட்டிக்கு கடன் பெற்று தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு முன்வர வேண்டும்.

மின்சாரம்

விவசாயத்துக்கு மின் இணைப்புக் கோரி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயி கள் காத்துக்கிடக்கின்றனர். மின்விநியோகம் சீராக இல்லாததால், மின் மோட்டார்கள் பழுதடைந்து பெரும் இழப்புக்கு விவசாயிகள் உள்ளாகின்றனர். பல மாவட்டங்களில் 4 மணி நேரம் மட்டுமே விவசாயத்திற்கு மும் முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாசனப் பிரச்சனைகள்

காவிரி நடுவர்மன்ற தீர்ப்புப்படி கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு பெற வேண்டிய தண்ணீரை பெறுவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் உள்ள இதுதொடர்பான வழக்கை விரைவாக முடிக்க உரிய கவனம் செலுத்த வேண்டும். அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப்பிரச் சனைகளில் தமிழகத்தின் பாசன உரிமை யை பாதுகாக்கும் விதத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

வேளாண் விளைநிலங்களை பாதுகாக்க

தமிழகத்தில் வேளாண் விளைநிலங்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவது வேகமாக நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களை வேறு பணிகளுக்கு மாற்றுவதை தடை செய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர அரசு முன்வர வேண்டும்.

நிலம் தொடர்பாக

பெரும்பாலான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் நிலமேயாகும். நிலஉச்சவரம்பு சட்டத்தை கறாராக அமல்படுத்தி நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்க வேண்டும்.

நீண்டகாலமாக அரசு புறம்போக்கு நிலங் களில் பயிர் செய்து வாழ்ந்து வரும் விவசாயி களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு இலவச மாக வழங்கிட வேண்டும்.

ஆதிவாசி மக்களுக்கு, வனஉரிமைச் சட்டம்- 2006ஐ அமல்படுத்தி, அவர்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மலைப்பகுதிகளில் பட்டா வழங்க தடைவிதிக்கும் அரசாணை எண்.1168ஐ உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும்.

பல லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு வகையான புறம்போக்குகளில் நீண்டகால மாக வசித்து வருகின்றனர். போக்குவரத் துக்கு இடையூறு, பாசனத்திற்கு பாதிப்பு போன்ற இடங்களைத் தவிர வேறு எந்த வகை யான புறம்போக்காக இருந்தாலும் அவர் களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியம்மா பட்டி, ஆண்டிப்பட்டி, பாலசமுத்திரம், ஆகிய கிராமங்களில் நிலஉச்சவரம்பு சட்டத்தின் கீழ் உபரி நிலம் 1971ம் ஆண்டு கையகப்படுத் தப்பட்டாலும் அந்த நிலங்கள் - நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்படாத நிலையில், தொடர்ந்த பல போராட்டங்களின் விளைவாக முதல்கட்டமாக 513.17 ஏக்கர் நிலம் 339 பயனாளிகளுக்கு மதுரை நிலச்சீர்த்திருத்த உதவி ஆணையாளரால் நில ஒப்படை உத்தரவு 11.05.2005 அன்று வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்நிலங்கள் உரிய பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படவில்லை.

எனவே மேற்படி கிராமத்தில் ஒப்படை உத்தரவு வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு நிலத் தினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

விழுப்புரம் மாவட்டம் - வானூர் வட்டம் பொம்மையார்பாளையம் கிராமத்தில் இருந்த 360 ஏக்கர் அனாதீன புறம்போக்கு நிலம் - மயிலம் பொம்மைபுர ஆதினம் ஸ்ரீமத் சிவஜான பால்ய சுவாமிகள் திருமடம் பெயருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதே மடத்தின் பெயருக்கு மேற்படி கிராமத்தில் 28.74 ஏக்கர் அனாதீன புறம்போக்கு நிலம் பி.மெமோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த கிராமத் தில் பல தலைமுறைகளாக வசித்து வரும் சுமார் 1000 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா கூட இதுகாறும் வழங்கப்படவில்லை.

மடத்துக்கு வழங்கப்பட்டுள்ள மோசடி பட்டாவையும், பி.மெமோவையும் ரத்து செய்து, அந்த நிலங்களை மீட்டு நிலமற்ற ஏழைகளுக் கும் தலித் மக்களுக்கும் வழங்குவதோடு, வீட் டுமனைப்பட்டா கோரியுள்ள அனைவருக் கும் வீட்டுமனைப்பட்டா வழங்கிட நட வடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் நிலாம்பூர் ஜென்மம் நிலப்பிரச்சனை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. ஜென்மம் எஸ்டேட் பிரிவு 17ன் கீழ் ஜமீன்தார்களிடம் குத்தகைக்கு பெற்றிருந்த 7 பெரிய எஸ் டேட்டுகளின் குத்தகை காலம் முடிவுற்ற நிலையில், அந்த சுமார் 35,269 ஏக்கர் நிலங் களை அரசு தேயிலை தோட்டக்கழகம் எடுத் துக் கொள்ளலாம். அந்த நிலங்களில் நீண்ட காலமாக சாகுபடி செய்து வரும் ஏழை நடுத்தர குத்தகை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் வீதம் பட்டா வழங்கிட வேண்டும்.

கடந்த ஆண்டு நவம்பர் -டிசம்பர் மாதங் களில் பெய்த கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றினால் பயிர்பாதிப்பு, கால்நடை உயிரி ழப்பு உட்பட பல பாதிப்புகளுக்கு ஆயிரக் கணக்கானோர் உள்ளாயினர். பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில் லை. எனவே, வெள்ளப்பாதிப்புகளுக்குள் ளான அனைவருக்கும் வெள்ளநிவாரணம் வழங்கிட அரசு முயற்சிக்க வேண்டும்.

எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து மனித உயிருக்கும், பல்லுயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் எண் டோசல்பான் பூச்சிமருந்தை பயன்படுத்த வும், உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதை யும் தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றி யம் சிகரலப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ அக்குவா பைன் இண்டஸ்ட்ரீஸ் எனும் குடிநீர் சுத்தி கரிப்பு ஆலைக்கு தி.மு.க ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 14 விவசாயிகள் மீது பொய்வழக்கு போடப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நிலத் தடி நீரை சுரண்டும் மேற்படி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வது டன் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய்வழக் கை திரும்பப் பெற வேண்டுகிறோம்.

விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக் களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக தமிழக வேளாண் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யனை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ் ணன் எம்எல்ஏ, பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநிலப் பொருளாளர் அ.நாகப்பன் ஆகியோர் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டவை இவை

2 கருத்துகள்:

தமிழ்த்தோட்டம் சொன்னது…

தங்களின் சமூக சிந்தனை படைப்புக்கு பாராட்டுக்கள்

விடுதலை சொன்னது…

தமிழ்த்தோட்டம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி