கவிதை. வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை. வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

ஒட்டுத் துணியும் மேலாடையும் -பெட்டோல்ச் பிரக்ட்


எப்பொழுதெல்லாம் எங்கள்

மேலாடை கந்தலாகிறதோ,

அப்பொழுதெல்லாம் நீங்கள்

ஓடி வந்து முழங்குகிறீர்கள்...



“இது இனியும் நீடிக்கக் கூடாது”

முடிகின்ற எல்லா வழிகளிலும் உதவி செய்வோம்.

நீங்கள் உற்சாகமாக எஜமானரிடம் ஓடுகிறீர்கள்.

நாங்கள் காத்துக்கொண்டு இருந்தோம்.

நீங்கள் வெற்றிகரமாக

எங்களுக்குப் பெற்று வந்ததைக்

காட்டுகிறீர்கள், ஒரு துண்டுத் துணியை!



நல்லது; துண்டுத் துணி சரிதான்.

ஆனால்,

முழு ஆடை எங்கே?



எப்பொழுதெல்லாம் பசித்தீயால்

கருகிக் கரைகிறோமோ

அப்பொழுதெல்லாம் ஓடிவந்து

முழங்குகிறீர்கள்.



“இது இனியும் நீடிக்கக் கூடாது”

முடிகின்ற எல்லா வழிகளிலும் உதவி செய்வோம்.

உற்சாகம் நிரம்பியவர்களாய்

நீங்கள் எஜமானிடம் ஓடுகிறீர்கள்;

நாங்களோ,

பசித்தீயில் கருகியபடி காத்துக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள்,

திரும்பிவந்து வெற்றிகரமாக

எங்களுக்குப் பெற்று வந்ததைக் காட்டுகிறீர்கள்.

நாலு பருக்கைகள்.



நல்லது; பருக்கைகள் சரிதான்.

ஆனால் முழுச்சாப்பாடு எங்கே?



எங்கள் தேவை

துண்டுத் துணி அல்ல;

முழு ஆடை.



பருக்கைகளல்ல;

முழுச் சாப்பாடு

திங்கள், 14 செப்டம்பர், 2009

வறட்சி


இயேசுவைப் போல

இரு கைகள் விரித்து.....

காய்ந்தன வயலில்

கம்புப் பயிர்கள்.....

இந்திரலோகத்தினருக்கு

இரக்கமில்லை...

மனம் குளிரும் வண்ணம்

மழை தரவில்லை..

ஏன்!

விண்ணுலகில் தான்

விவசாயி இல்லையே!

காணக் கிடைக்காத பொருள் தானே

கடவுளின் ரூபம்!

கைப்பிடி கம்புத் தினைதானே

பிரம்ம சொரூபம்!

அதுவே, உலகின்

அனைத்து எடையையும் விட

மிக கனமானது.

அதனால் தான் தராசின் ஒரு தட்டில்

கம்புத் தினைகளும்

மறுதட்டில் ...

வறியவர்களும்

நிறுத்தப்படுகின்றனர்.

வி.பி.சிங்

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

பணம் என்ன செய்யும் என்று என்னைக் கேட்காதீர்கள்

முதலாளிகளுக்கு
முதுகு சொரியும்
உழைப்பாளியின்
முதுகை ஒடிக்கும் 

பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!

அம்மாவின் அன்புக்கு
அளவு கொடுக்கும் 
அப்பாவின் பாசத்திற்கு
எல்லை விதிக்கும்.

பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!

தினம்-வீட்டின் 
மகிழ்ச்சியை தின்பதும்
அமைதியை அனுமதிப்பதும் 
அதன் உண்மையான குணம்.

பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!

பசியால் நான் 
தெரு நாய்யைபோல்
சாவதை
சத்தம்போட்டு ரசிக்கும்.

பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!

நான் விரும்பியது
இதுதான் என்று 
என்னைக்கேட்காமலேயே 
என்மீது தினிக்கும்.

பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!

என் காதலின் உயிரை
குற்றவுணர்வு இன்றி
கொன்று குவிக்கும் 
நடுத்தெருவில் 
அம்மணமாய் 
அலையவும் விடும்.

பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!

வக்கற்று
வார்த்தை அற்று
மருத்துவம் பார்க்க
வழியின்றி என் குழந்தை
இறப்பதை பார்த்து 
நீ பிழைக்க 
தெரியாதவன் என்று
சொல்லி சிரிக்கும்.

பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!

பணத்ததைத் தவிர
ஒட்டும் இல்லை
உறவும் யில்லை 

பணம். பணம் செய்கிறது 
உலகமயமாக்கல்
ஏழையைக் கொள்கிறது.

தயவுசெய்து
பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!