இந்து முன்னணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து முன்னணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 ஜனவரி, 2011

தலித்துகளை கோவிலுக்கு அழைத்து செல்லும் கட்சிக்கு ஆதரவு :ராமகோபாலன்


இந்துக்களை மதிக்கும் கட்சிக்கு ஆதரவு: ராமகோபாலன் பேட்டி
திருச்சியில் இந்து மக்கள் கட்சி அமைப்பாளர் ராமகோபாலன் நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார். அவர் பேட்டியும் எனது பதிலும்.

ராம: தமிழ்நாட்டில் பல கோவில்களில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடக்கின்றன.

முறைகேடுகளில் ஈடுபட்ட காஞ்சிபுரம் தேவநாதனையும்,
நித்தியாந்தாவையும் கேட்க்க வேண்டிய கேள்வி

ராம: கோவில் நிலங்களை விற்க கூடாது என்று சட்டம் உள்ளது.
ஆனால் பல இடங்களில் விற்கப்படுகின்றன.

யார் விற்பது நிலங்களை கோயில் நிர்வாகிகள்தானே

ராம: கோவில்களில் கட்டண முறைகேடுகள் நடக்கின்றன.

எல்லாம் அவாதான் பன்றா அவாகிட்ட சொல்லும்

ராம:பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.

பக்தர்களுக்குகா அவளுக்கா நன்னா புரியும் படி சொல்லுங்கோ

ராம:ராமாயணத்தை மக்களிடம் பரப்ப வேண்டும்.

ராமன் சம்புகனை கொன்ற மாதிரி இப்ப யாரையாவது கொல்லணுமா,
புதுசா எதாவது மசூதி இடிக்கனுமா

ராம:ராமாயண கலாச்சாரம் பரவினால் நாட்டில் குற்றங்கள் குறையும்.

அய்யோ தாங்கமுடியல......

ராம: தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக கூறுவது மக்கள் விரோத செயல்.
நீங்க தமிழரே இல்லை எந்த மக்களுக்கு விரோதம்

தலித்துகளை கோவிலுக்கு அழைத்து செல்லும் கட்சிக்கு ஆதரவு எப்புமே சொல்லமாட்டா ஆனா இந்து மதத்தை காப்பத்த போறளாம்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பாபர் மசூதி - வரலாற்றுச் சான்றுகள்

வால்மீகி இராமாயணத்தின்படி இராமபிரான் திரேத்தாயுகத்தில் பிறந்தவர். அவரு டைய ஆட்சியான இராமராஜ்யம் பாரதத்தின் பொற்காலம் எனப்படுகின்றது. (அன்று தென் னகம் பாரதத்தின் ஒரு பகுதியாக இருக்க வில்லை!) திரேத்தாயுகம் மட்டும் பன்னிரண்டு லட்சத்து தொண்ணூற்று எட்டாயிரம் ஆண்டுகளாகும் (12,98,000), இதற்குப்பின் துவாபராயுகம், எட்டுலட்சத்து அறுபத்தி நான்காயிரம் (8,64,000), இப்பொழுது நடப்பது கலியுகம், நான்கு லட்சத்து முப்பத்து இரண்டா யிரம் (4,32,000); அடுத்து வரப்போவது கிருத கயுகம். திரேத்தாயுகத்தில் பிறந்த காரணத்தினால் தான் பாஜக ஆட்சிபுரியும் மாநிலங்களில் பள்ளிப் பாடநூல்களில் “ஒன்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இராம பிரான் ராமராஜ்யத்தின் பொற்காலம் இன்றும் இந்திய மக்களின் உள்ளங்களில் பசுமையாகத் தைத்து நிற்கின்றது” என்று எழுதப் பட்டுள்ளதைக் காணலாம்.

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இராமபிரானின் பிறந்த இடத்தை அயோத்தியில் கறாராக அடையாளம் “கண்டுபிடித்துள்ளது” பாஜக - ஆர்எஸ்எஸ்!

அயோத்தியில் பாப்ரி மசூதி 1528ம் ஆண்டு பாபரின் ஆளுனர் மீர்பாக்கியால் கட்டப்பட்டது (பதிவு செய்யப்பட்ட வரலாறு). பாபர்தான் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவி னார் (1526-1855). இவருடைய மகன் ஹூமா யுன் (1530-1556), 26 ஆண்டுகளும், இவரு டைய மகன் மாபெரும் அக்பர் (1556 - 1605), 49 ஆண்டுகளும் ஆண்டனர். இந்த அக்பர் மாமன்னனைத்தான் இந்திய தேசியத்தை உருவாக்கிய தந்தை என்று ஜவஹர்லால் நேரு தனது வரலாற்றின் காட்சிகள் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.பாபர் ஒரு இலக்கிய வாதி. இவருடைய இந்திய குறிப்புகள் பாபர் நாமா எனப்படுகின்றன.

இவர் தனது மகன் ஹூமாயினுக்கு எழுதி வைத்துச் சென்ற உயிலில் (மரண சாசனம்) : “எனது மகனே! இந்தியாவில் பல மதப்பிரிவுகளைச் சார்ந்த மக்கள் வாழ்கின்ற னர். இப்படிப்பட்ட ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை மன்னாதி மன்னரான அல்லா உனது கரங்களில் ஒப்படைத்திருப்பதற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும். ஆதலால் உனது கடமைகளாவன.

உன்னைப் போன்றோரை மததுவேஷம் பாதித்துவிட அனுமதிக்கக்கூடாது. மக்களின் எல்லாப்பிரிவினரின் மத ஆசாரங்கள் மற்றும் உணர்வுகளை கணக்கிலெடுத்துக் கொள்வது அவசியம்.

குறிப்பாக பசுவதை செய்வதை தவிர்த்து விடு, எந்த மக்கள் பிரிவினரின் வழிபாட்டுத் தலங்களையும் அழிக்காதே, அடக்குமுறை வாளால் அல்லாமல் அன்பெனும் வாளாலும், கடமை உணர்வாலும்தான் இஸ்லாமை சிறப்பான முறையில் பரவச் செய்யலாம்.

இப்படி உயில் எழுதி வைத்துச் சென்ற மாமன்னன் பாபர்தான் அயோத்தியில் இராமர் பிறந்த இடத்திலிருந்த (ராமர் ஜென்மபூமி) இராமர் கோவிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டினார் என்று இந்துத்துவாவாதிகள் வாய்க் கூசாமல் அபாண்ட பழி சுமத்துகின்றனர்.

இம்மசூதி கட்டப்பட்ட காலத்தில் (16ம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர் துளசிதாசர். இவர்தான் 1575ம் ஆண்டு பேச்சுமொழியில் (அவதி - இந்தி) இராமசரித்திரமனாஸ் என்ற ராமாயணம் எழுதிய இராமபக்தர். புரியாத பழமை சமஸ்கிருதத்திலுள்ள வால்மீகி இரா மாயணம் மக்கள் படித்ததில்லை. படிக்கவும் இயலாது. இது “தெய்வமொழி!” சாதாரண இந்துமக்கள் வடநாட்டில் துளசிதாஸ் ராமா யணத்தைப் படித்துதான் பக்தி பரவசமடைந்து இல்லங்களில் ராமசரித்திரமனாஸ் வைத்துக் கொள்கிறார்கள். துளசிதாசர் வேறுபல பக்தி இலக்கிய நூல்கள் எழுதியுள்ளார். இவர் ஒரு துறவி, மதப்போதகர், மதக்கவிஞர். இவருக்குப் பிறகுதான் ராமாயணம் பிரபல்யமானது. பாப்ரி மசூதி கட்டப்பட்ட 30, 40 ஆண்டுகளுக்குள் இவை எல்லாம் எழுதப்பட்டன.

அக்பரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். துளசிதாசருக்கு நெருங்கிய முஸ்லீம் நண்பர் ரஹீம்கான் கானா என்பவர். இவர் சமஸ்கிரு தத்திலும், இந்தியிலும் (அவதி) பிரசித்திபெற்ற கவிஞர், இவர்கள் இருவரின் விருப்பப்படி அக்பர் ஆட்சியின் நிதி அமைச்சர் தோடர் மால் (இந்து) வாரணாசியில் அனுமார் கோவில் கட்டிக்கொள்ள அக்பரின் வாழ்த்துக்களுடன் நிலம் தானமாகக் கொடுத்து இன்றும் துளசி அனுமார் மந்திர் அங்கு நிமிர்ந்து நிற்கின்றது. இராமர்கோவில் இடிக்கப்பட்டிருந்தால் தனது எதிர்ப்பை, வேதனையை வெளியிட்டிருப்பார். இராமர்கோவில் அயோத்தியிலும், வாரணாசி யிலும் கட்ட அக்பரிடம் இடம் கேட்டிருந்தால் அல்லது பாபரால் இடிக்கப்பட்டிருந்தால் அக் பர் நிச்சயமாக இராமர்கோவில் கட்டிக் கொடுத்திருப்பார். அயோத்தியில் இன்றும் எழில்மிகு காட்சியளிக்கும் பிரம்மாண்டமான அனுமார் மாளிகை கூட 1754ல் நவாப் மன்சூர் அலியால் கட்டப்பட்டது. இவையாவும் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள். வரலாற்றுப் புரட்டர் கள் இவைகளையெல்லாம் இருட்டடிப்பு செய்து வருகின்றனர். பாடநூல்களில் “செக் யூலர்” கல்வியில் இடம்பெறுவதில்லையே!

சீக்கிய மதப்பிரிவு நிறுவனர் குருநானக் (1469-1538), பாப்ரி மசூதி கட்டப்பட்ட காலத் தில் வாழ்ந்த பெருமகனார். காஷ்மீர் முதல் இலங்கை வரை, சோமநாத், வாரணாசி, மதுரா, பிருந்தாவன் என விரிவான சுற்றுப்பயணம் செய்தவர். மெக்கா, மெதினாவிற்குக் கூட சென்று வந்துள்ளவர். பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு பத்து ஆண்டுகள் வாழ்ந்த பேரறிஞர், இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் அமைதி காத்திருக்கமாட்டார். பிரபல வங்காள சனாதன பிராமண முனிவர் சைத்தன்யா, 1486ல் பிறந்து பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு 35 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் இவர் வாய் மூடி மவுனியாக இருந்து இருக்கமாட்டார்.

இக்கட்டத்திற்குபின் தோன்றிய முனி வர்களோ, 19ஆம் நூற்றாண்டின் பிரபலமான இந்து முன்னோடிகள் ராஜாராம் மோகன்ராய் (பிரம்மசமாஜம்), தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜம்), தேவேந்திரநாத் தாகூர் போன்றவர் களோ காங்கிரசின் பிரபல இந்து தலைவர் களான மதன்மோகன் மாளவியா, லாலா லஜ பதிராய், சுவாமி ஷ்ரதானந்தா, பால கங்காதர் திலகர், காந்தி, மோதிலால் நேரு போன்றவர் கள் எவருமே இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாக ஏன் அறிந்திருக்கவில்லை? பாஜகவின் பதில் என்ன?

முதல் சர்ச்சை - பிரிட்டிஷ் விஷமம்!

அலகாபாத் பல்கலைக் கழகத்தின் “மத்திய நவீனகால வரலாற்றுத்துறை முதல் வர் (ழநயன டிக வாந னநயீயசவஅநவே டிக அநனநைஎயட யனே அடினநசn ாளைவடிசல) பேராசிரியர் டாக்டர் சுஷில் மஹிவத்சவா 1985ஜனவரி ப்ரோப் (யீசடிநெ) என்ற மாத இதழில் பாப்ரி மசூதி சர்ச்சை பற்றி கூறுவதாவது;-

ஃபைசாபாத்தில் (கயணையயென)சிப்பாய் கலகம் வெடித்தபொழுது அயோத்தி மகந்த்கள் (மடா திபதிகள்) பிரிட்டிஷாரை பகிரங்கமாக ஆத ரித்தனர். பிரிட்டிஷ் ராணுவத்திற்கு தங்கும் இடமும் உணவுப் பொருள்களும் கொடுத்து உதவினர்.சிப்பாய் கலகம் அடக்கப்பட்டபின் மகந்த்களுக்கு சன்மானமாக பாப்ரி சொத்துரி மையுடன் வழங்கப்பட்டது. இராமர் பிறந்ததை குறிக்கும் வகையில் மேடை அமைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது.பாப்ரி மசூதி யையும் இந்த மேடையையும் பிரித்துக்காட் டும் வேலியும்(கநnஉந)இவைகளுக்கிடையில் அமைக்கப்பட்டது என்று ஃபைசாபாத் மாவட்ட கெஜெட்டை ஆய்வுசெய்து எழுதியுள்ளார். இராமர் பிறந்த இடம் மசூதி வளாகத்தில்தான் உள்ளது என்று உரிமை கொண்டாட இந்துக் களை பிரிட்டிஷார் ஊக்குவித்தனர் என்றும் ஸ்ரீவத்சவா எழுதுகின்றார்.

இந்தப்பிரச்சனை 1853ஆம்ஆண்டு முதல் முதலில் சிலரால் எழுப்பிவிடப்பட்ட பொழுது இந்துக்களும் முஸ்லிம்களும் ஊர் பஞ்சாயத்துப்பேசி 1855ல் ஒரு உடன்பாடு கண்டனர். பிரச்சனை தலை தூக்காமல் நான்கு ஆண்டுகள் அமைதி நிலவியது. 1859ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மாவட்ட ஆட்சியர் வடக்கு நுழைவாயிலின் மூலம் மட்டும்தான் முஸ்லிம் நுழைய வேண்டும் என உத்தரவு போட்டார். ஊர்மக்கள் ஆட்சேபம் கிளப்பி பஞ் சாயத்து முடிவை மாற்றக்கூடாது எனக்குரல் எழுப்பினர். ஆனால் பிரிட்டிஷ் மாவட்ட ஆட் சியர் உடனே தலையிட்டு பஞ்சாயத்து உடன் பாட்டில் கையொப்பமிட்ட இந்து-முஸ்லிம் பெரியவர்களை ஃபைசாபாத் சாலையோர முள்ள பெரிய ஆலமரத்தில் தூக்கிலிட்டார்.

ஆனால் இந்து முஸ்லிம் மக்கள் இந்த ஆலமரத்தை புனித வழிபாட்டு நினைவுச் சின்னமாக்கிவிட்டனர். ஆதலால் பிரிட்டிஷ் கமிஷனர் தலையிட்டு 1860ஆம் ஆண்டு அந்த மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்து புனித உடன்பாட்டுத் தடயங்களை அளித்தனர்.

இதற்குப்பின் 1949 வரை (89 ஆண்டுகள்) மக்கள் அமைதிகாத்து முஸ்லிம் மக்கள் வடக்கு வாயில் வழியாகவே சென்று தொழுகை நடத்தி வந்தனர். நாடு விடுதலைபெற்றபின் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி நள்ளிர வில் 50, 60 பேர் கொண்ட ஒரு ஆர்எஸ்எஸ் அணி மசூதி வாயிலை உடைத்து நுழைந்து அதன் மத்திய மண்டபத்தில் (னுடிஅந) குழந் தை இராமர், சீதா பிராட்டியார் ஆகியோர் சிலைகளை நட்டுவைத்து இவர்களின் திரு உருவங்களை சுவர்களில் காவி மஞ்சள் நிறத் தில் வரைந்து வைத்தார்கள். இராமர் தோன்றி விட்டதாக புரளியை மறுநாள் காலை கிளப்பி விட்டனர். காவல்துறை கான்ஸ்டபிள் ஹன்ஸ் ராஜ் இதைத் தடுக்க முயன்றும் பயனில்லை.

மறுநாள் (1949 டிசம்பர் 22) காலை காவலர் மாதாபிரசாத் இதுபற்றி புகார் செய்து முதல் தகவல் அறிக்கை எழுதினார். இவ்வறிக்கை யில் ஆர்எஸ்எஸ்காரர்களான ராம்தாஸ், ராம் சுக்லாதாஸ், சுதர்சனதாஸ் ஆகியோர் 50, 60 பேர் கும்பலாக வந்து இதைச் செய்ததாக எழுதப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டை பாப்ரிமசூதிக்குள் வைக்க திட்டமிட்டதே அன்றைய மாவட்ட ஆட்சியர் கே.கே.நய்யார்தான். இவர் ஆர்எஸ் எஸ் பிரமுகர், தனது திட்டத்தை நிறைவேற்றி பிறகு சிறிது காலத்திலேயே வேலையை ராஜினாமா செய்து ஜனசங் (முன்னாள் பாஜக) கட்சியில் பகிரங்கமாக சேர்ந்து பணியாற்றி நாடாளுமன்றத்தில் ஜனசங் எம்.பி.யாக (1967-70) உயர்த்தப்பட்டார். இறுதியில் 1992ல் மசூதியே இடிக்கப்பட்டது.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

தினமணி”யில் மதவெறிப் பிரச்சாரம்!

தினமணி (26.8.10) ஏட்டில் பாஜக தலைவர் இல.கணேசன் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் தனக்குள்ள முஸ்லிம் வெறுப்பைக் கக்கியுள்ளார். காஷ்மீர் தொட்டு தென்காசி வரை வந்திருக்கிறார். அவ்வளவிலும் அதே துவேஷம்.

“இப்போது மன்மோகன் சிங் காஷ்மீருக்கு சுயாட்சி தருவோம் என்கிறார். பாகிஸ்தானுக்கு வேலையே இல்லாமல் அல்வாத் துண்டு போல வெள்ளித்தட்டில் வைத்து வழங்க இசைந்துவிட்டாரே!”- என்று பொரு மியிருக்கிறார். காஷ்மீருக்கு மாநில சுயாட்சி தருவது எப்படி அந்தப் பகுதியைப் பாகிஸ் தானுக்கு கொடுப்பதாகும்? பாஜகவுக்கு கூட்டாட்சி முறையில் நம்பிக்கை கிடையாது. அதனுடைய கனவெல்லாம் ஒற்றை யாட்சி முறைதான் என்பதை இது அம்பலப் படுத்துகிறது.

விஷயம் என்னவென்றால், நமது அரசிய லமைப்புச்சட்டத்தின் 370வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு இதர இந்திய மாநிலங்களை விடவும் கூடுதல் சுயாட்சி வழங்கியுள்ளது. காரணம், அந்த அடிப்படையில்தான் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவோடு இணைக்க 1947 அக்டோபரில் ஒப்புக்கொண்டார் முஸ்லிம்கள் அதிகமாக இருந்த அந்த ராஜியத்தின் இந்து மகாராஜா. அந்த அடிப்படையில்தான் அந்த இணைப்பை ஒப்புக்கொண்டார் அந்த ராஜியத்தின் மக்கள் தலைவராகிய ஷேக் அப்துல்லா.

இந்த 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று ஆரம்பம் முதலே வம்படி வழக்கடி செய்து வந்தது இன்றைய பாஜக வின் அன்றைய வடிவமாகிய ஜனசங்கம். இதற்கு காங்கிரசிலும் சில சக்திகள் இரை யாகின. கொஞ்சங்கொஞ்சமாக ஜம்மு-காஷ் மீரின் சுயாட்சி உரிமைகள் பறிக்கப்பட்டன அல்லது நீர்த்துப்போகச் செய்யப்பட்டன.

இதோ இல.கணேசனின் தலைவர் எல்.கே.அத்வானி “எனது நாடும் எனது வாழ்வும்” எனும் தனது சுயசரிதையில் எழுதி யிருப்பதை வாசியுங்கள்” வெறுக்கப்பட்ட ‘அனுமதி முறையை’ அரசு ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீரில் இந்தியக் குடியரசின் நிறு வனங்களுக்கு இருந்த பல கட்டுப்பாடுகளை யும் அது ரத்து செய்தது. இப்படியாக தேர்தல் கமிசன் மற்றும் தலைமைத் தணிக்கையாளர் அலுவலகத்தின்அதிகாரங்கள் அந்த மாநிலத் திற்கும் நீட்டிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரின் ‘பிரதம மந்திரி’ எனும் பெயர் ஒழிக்கப்பட்டது. ஆனாலும் ஐம்பதாண்டுகளுக்கு மேலாகியும் “தோல்விதான்” இரண்டு அரசியலமைப்புச் சட்டங்கள் - என்பது பற்றிய நமது கவலை, குறிப்பாக 370வது சரத்து பற்றிய நமது கவ லை, இன்னும் போக்கப்படவில்லை.”

விரிந்த சுயாட்சி தருவதாகச் சொல்லி அந்த ராஜியத்தை நம்மோடு இணைத்துக் கொண்ட பிறகு அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. இதற்கு மூலகாரணம் ஜனசங்கம் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத் தின் முஸ்லிம் வெறுப்பு. அந்த மாநில மக்க ளில் ஆகப்பெரும்பாலோர் முஸ்லிம்கள் என் கிற ஒரே காரணத்தால் இத்தகைய நிலையை எடுக்குமாறு காங்கிரஸ் அரசை நிர்ப்பந்தித்து வந்தார்கள். அதுவும் பல சமயங்களில் அவர்க ளது நிர்ப்பந்தத்திற்கு பணிந்தது. ஜம்மு - காஷ்மீரின் இந்த இணைப்பு வரலாறை மூடி மறைத்துவிட்டு, 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று இப்போதும் விவகாரம் செய்து வருகிறது பாஜக.

ஜம்மு-காஷ்மீரில் இப்போது எழுந்துள்ள பிரச்சனைக்கு மூலகாரணம் இதுவே. இதை இப்போதாகிலும் உணர்ந்து அந்த மக்களின் நியாயமான உரிமைகளை இந்திய அரசு மதிக்க வேண்டும். பறிக்கப்பட்ட அல்லது நீர்த்துப்போகச் செய்யப்பட்ட மாநில சுயாட்சியை அவர்களுக்கு வழங்க வேண் டும். இது எந்த வகையிலும் அங்குள்ள பிரி வினை சக்திகளை ஆதரிப்பதாகாது. உண் மையில் இதுவே அந்தப் பிரிவினை சக்தி களை தனிமைப்படுத்தும். மன்மோகன் அரசு இந்தச் சரியான பாதையில் சற்றே காலடி எடுத்து வைக்கப் பார்ப்பது போலத் தெரிகிறது. உடனே இல.கணேசன் கோஷ்டியார் அதை எதிர்த்துச் சண்டமாருதம் செய்கிறார்கள்.

காஷ்மீர் எனும் அந்த அழகான பள்ளத் தாக்கைத் தொடர்ந்து கலவர பூமியாக்குகிறார் கள் அங்குள்ள பிரிவினைவாதிகள் அல்லது பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மட்டுமல்ல. ஆர்.எஸ்.எஸ்.பரிவாரமும்தான், அவர்களது இந்த அடாவடிப்போக்கும்தான் என்பதைத் தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

காஷ்மீர் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்ல இந்தியா முழுக்கவுள்ள முஸ்லிம் களுக்கு எதிராகவும் விஷத்தைக் கக்குகிறார் இல.கணேசன். “மன்மோகன் சிங் தலைமை யிலான காங்கிரஸ் அரசு எந்தவிதச் சிரமமும் இல்லாமல் பல பாகிஸ்தான்களை உருவாக் கத் துணைபோகிறது. பாரத நாட்டில் முஸ் லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட் டங்கள் எனப் பல மாவட்டங்களை அரசே அடையாளம் கண்டு முத்திரை குத்தியுள்ளது. அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு கூடுதல் வசதிகள். ஏற்கெனவே முஸ்லிம்கள் பெரு வாரியாக உள்ள இடங்களில் இந்துக்களுக்கு உள்ள நியாயமான உரிமைகள் பறிபோய் விட்டன” என்று வெறித்தனமாக எழுதியிருக் கிறார் இந்த ஆர்.எஸ்.எஸ். கொடுக்கு.

பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், முஸ்லிம் லீக் காங் கிரஸ் ஆகியவை மட்டும் காரணமல்ல. ஆர்.எஸ்.எஸ் இந்து மகாசபை ஆகியவற்றின் முஸ்லிம் எதிர்ப்பும், அவை கிளப்பிவிட்ட மதப் பகைமையும் காரணமே. இவர்களது கொடூர வெறுப்பையும் வெறியையும் கண்டே முஸ்லிம் மக்கள் லீக்கின் பிரிவினைவாதத் திற்கு இரையானார்கள். அந்த வரலாற்று உண்மையை கவனமாக மறைத்துக் கொண்டே இவர்கள் பாகிஸ்தான் பிரிவினை பற்றிப் பேசுகிறார்கள்.

இப்போதும் கூடப் பாருங்கள், முஸ்லிம்க ளுக்கு ஏதேனும் நன்மைகள் செய்யப் புறப் பட்டால் உடனே “பல பாகிஸ்தான்களை” உருவாக்குகிறது அரசு என்று கூசாமல் வெறித்தனத்தைக் கிளப்புகிறார்கள். இந்தியா வில் பத்து சதவீதத்திற்கும் மேலே முஸ்லிம் கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆங்காங்கே பிற மதத்தவருடன் கலந்து வாழ்கிறார்கள். அதையே சிதறிக் கிடக்கிறார்கள். எனவும் கூறலாம். இதனால் இந்தியக் குடிமக்கள் என்ற முறையில் தங்களது நியாயமான உரிமைகளை உரத்துப்பேச வழியில்லாமல் வதங்கிக் கிடக்கிறார்கள் என்றும் கூறலாம்.

அதனால்தானே சச்சார் குழுவின் அறிக்கையில் அவர்களது இன்றைய பரிதாப வாழ்வு வெளிப்பட்டுள்ளது. கல்வியில், அரசுப்பணியில், பொது வாழ்வில் அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப இடம் கிடைக்க வில்லை என்கிறது அந்த அறிக்கை. அது மட் டுமல்ல, இந்து மதமாச்சரியம் உள்ள காவல் துறை அதிகாரிகளால் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்கிறது அறிக்கை. இதைச் சரிசெய்ய சில நல்ல ஆலோசனை களையும் அது வழங்கியுள்ளது. இவற்றை இன்னும் அமல்படுத்தவில்லை மத்தியி லுள்ள மன்மோகன் அரசு. ஏதோ ஒரு சில நடவடிக்கைகளை எடுக்கப் பார்க்கிறது. அதற்கும் கட்டையைக் கொடுக்கிறது இல.கணேசன் கோஷ்டி.

இவர்களது நோக்கம் எல்லாம் முஸ்லிம் கள் பற்றிய வெறுப்புணர்ச்சியை பாமர இந் துக்கள் நெஞ்சில் விதைத்து இங்கே மதக் கலவரங்களை உருவாக்குவதுதான். இதற் காக முஸ்லிம்களுக்கு அரசு ஏகப்பட்ட சலு கைகளை வழங்குவதாக ஒரு பொய்ப்பிரச்சா ரத்தை திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து கலவரத்தை உருவாக்க ஆங்காங்கே கொளுத்திப்போடுகிறார்கள். மசூதிகளுக்கு முன்னால் வேண்டுமென்றே கொட்டடிப்பது முதல் அரசமரத்துப் பிள்ளை யாரை வீதிக்கு இழுத்து வந்து விவகாரம் செய்வது வரை விதவிதமான வேலைகளில் இறங்குகிறார்கள்.

இதன் உச்சமாய் பயங்கரவாதச் செயல் களிலும் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக, மாலேகாவின் ஜனநெருக்கடியான பிக்குச வுக் எனும் இடத்தில் குண்டு வெடித்தது. இதில் ஆறு பேர் மாண்டார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது நடந்தது 2008 செப்டம்பரில். இந்தக் கொடூ

ரத்தைச் செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். பரிவாரத் தினர் என்று புலனாய்வுகள் சொல்லின. இதைப் பிரமாதமாகத் துப்புதுலக்கி வெளிக் கொணர்ந்தவர் ஹேமந்த் கார்க்கரே எனும் காவல்துறை அதிகாரி. ஆனால், அவரும் அதே ஆண்டு நவம்பரில் நடந்த மும்பைத் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த மர்மம் இன்னும் விடுபடவில்லை.

“கடந்த பத்து ஆண்டுகாலமாகத் தென் காசி நகரில் எந்த இந்து நடவடிக்கையையும் நடத்த அனுமதியில்லை” என்று அநியாய மாய் பொய் சொல்லியிருக்கிறார் இல.கணே சன். இந்து மக்கள் தங்கள் இயல்பான மத வாழ்வை அங்கு நடத்தித்தான் வருகிறார்கள் என்பது வெள்ளிடை மலை. அனேகமாக, இவருக்குள்ள வருத்தம் 2008 ஜனவரியில் அங்கு ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ஒரு குண்டு வெடித்ததே, அப்படி அதற்குப் பிறகு நடக்கவில்லையே என்பதாக இருக்கும்! தங்கள் அலுவலகத்திற்கு ஆர்.எஸ்.எஸ்காரர் களே இப்படியொரு குண்டை வைத்துக் கொண்டார்கள்! சங் பரிவாரத்தைச் சார்ந்த

8 பேர் கைதானார்கள். மதக்கலவரத்தைத் தூண்டவே இப்படிச் செய்ததாக வாக்குமூலம் தந்தார்கள்.

இவர்கள் எவ்வளவு பயங்கரமானவர்கள் என்பதை மக்கள் ஒருநாளும் மறந்துவிடக் கூடாது. நல்ல வேளையாக காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “காவி பயங்கரவாதம்” பற்றியும் எச்சரிக்கை செய்திருக்கிறார். இப்படி ஒருபுறம் இவர்களே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, மறுபுறம் நமது சகோதரர் களாகிய முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை வளர்த்து வருகிறார்கள்.

இவர்களது மதவெறிப் பிரச்சாரத்திற்கு பாமர இந்துக்கள் பலியாகிவிடக்கூடாது. முஸ்லிம்கள் மீது சங் பரிவாரத்தின் கோபம் எல்லாம் தங்களது வர்ணாசிரமக் கட்டமைப் பிலிருந்து விலகிவிட்டார்களே என்பதுதான். பஞ்சமர்கள், சூத்திரர்கள் மீது இவர்களுக்கு என்ன கோபமோ அதே கோபம்தான் முஸ் லிம்கள் மீதும். இதைப் புரிந்து கொண்டால் போதும் இவர்களது சதி வேலைகளுக்கு யாரும் இரையாகமாட்டார்கள்.

இதில் வருந்தத்தக்க இன்னொரு விஷ யம், பொதுவான பத்திரிகை எனும் தோற்றம் காட்டிக்கொண்டு ‘தினமணி’யானது பாஜக வின் மதவெறிப்பிரச்சாரத்திற்கு மேடை போட் டுத் தருவது, அந்த ஏட்டின் வாசகர்கள்தாம் இதைத் தட்டிக்கேட்க வேண்டும்.


-அருணன்

வெள்ளி, 4 டிசம்பர், 2009

மதவெறியர்களுக்கு எதிராக குரல் கொடுப்போம்!

பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறு வனம் தயாரித்து வெளியிட்ட ‘வரைவுப் பொதுப்பாடத் திட்டம்- 2009-ல் கடவுள் வாழ்த்து இடம் பெறவில்லை எனவும், இதை எதிர்த்து பள்ளிவாயில்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலனும், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தும் தெரிவித்திருப்பதாகப் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.

பாட வல்லுநர்களே பாடத் திட்டத்தைத் தயாரித்துள்ளனர். பாடத் திட்டத்தின் மீது பலரும் பல விமர் சனங்கள், கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஆக்கப்பூர்வமான முற் போக்கான ஆலோசனை களை முன்வைப் பதை விடுத்து, பள்ளியின் முன்பு ஆர்ப்பாட் டம் நடத்துவோம்’ என்பது பாடத்திட்டம் உரு வானது குறித்த எந்தவிதப் புரிதலும் இல்லாத ஜனநாயக விரோதச் செயலாகும் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கண்டித் துள்ளது. அதன் பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிக்கை வருமாறு:

இந்தியா ஒரு மதச்சார்பற்றநாடு. அரசை வழி நடத்துவது இந்திய அரசியலமைப்பே ஆகும். அர சியலமைப்பு கூறும் மதச் சார்பற்ற கோட்பாட்டிற்கு விரோதமாக மத நம்பிக்கையைக் கட்டாயப்படுத்திக் கல்வி மூலம் திணிக்க இயலாது. ஒரு மதச்சார்பற்ற அரசு தயாரிக்கும் பாடத்திட்டத்தில், இதுதான் கட வுள் வாழ்த்து என எந்தப் பாடலையும் குறிப் பிட இயலாது. அப்படி ஒரு தவறு ஏற்கெனவே நிகழ்ந்துள்ளது என்றால் அதைத் திருத்திக் கொள்வதே நியாயமான செயலாகும். திருத்திக் கொண்டதை எதிர்ப்பது அறிவுடைமையாகாது.

முத்தமிழ்க் காப்பியம், மூவேந்தர் காப்பியம் எனப் போற்றப்படும் தமிழின் பண்பாட்டு அடையாள மாய்த் திகழும் சிலப்பதிகாரத்தில் வாழ்த்துப் பகுதிதான் உண்டு. ஞாயிறும், திங்க ளும், மழையும், புகார் நகரும்தான் வாழ்த்தப் படுகிறதே தவிர கடவுள் வாழ்த்து இல்லை. வாழ்த்துவதில் கூட இளங்கோவடிகள் சோழ மன்னனை மிகைப்படுத்தி அவனுடன் ஒப் பிட்டே வாழ்த்தை இயற்றுகிறார். தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் அதன் தனிச் சிறப்பு களையும் அறியாதவர்களே ‘ஆர்ப்பாட்டம்’ எனக் கொக்கரிக்கின்றனர். இச்சலசலப்பிற்கு அரசு பணிந்துவிடக் கூடாது.

தமிழ்ப் பாடத் திட்டத்தைப் பற்றிப் பேச வந்துள்ள ராமகோபாலனும் அர்ஜூன் சம்பத் தும் “தமிழை நீசபாஷை” என ஜெயேந்திர சரஸ்வதி கூறியபோது வாய்திறக்காதது ஏன்?

இன்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சாதிய ஒடுக்குமுறையால் கோயிலில் நுழைய முடி யாமல் போராடி வருகிறார்களே. அவர்களை கோயில் உள்ளே அழைத்துச் செல்ல முன்வராதது ஏன்?

கோயிலுக்குள் செல்ல முற்பட்டபோது போலீஸ் தாக்குதலாலும், ஆதிக்கச் சாதிக ளின் தாக்குத லாலும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஆதர வாகக் குரல் கொடுக்காதது ஏன்? தாக்குதலைக் கண்டிக்காதது ஏன்?

தமிழ்நாடு அரசு ‘அனைவரும் அர்ச்சக ராகலாம்’ எனச் சட்டம் இயற்றிய பிறகும் தாழ்த்தப்பட்ட மக் கள் தகுதி பெற்றும் அர்ச்சக ராக முடியவில்லையே. இந்து முன்னணியும், இந்து மக்கள் கட்சியும் தாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சகராக்க முன்வரவில்லையே ஏன்?

கம்பராமாயணத்தில்கூட வாலி வதைப் படலத்தைப் பாடத்தில் வைக்க இவர்கள் விரும்புவார்களா?

சமூகத்தில் அடித்தட்டு மக்களைக் கோயிலுக்கு உள்ளே நுழைய மறுத்துவிட்டு, சாதியின் பெயரால் ஒரு பகுதி மக்கள் அர்ச் சகர்களாவதைத் தடுத்து விட்டு, ‘நீசபாஷை’ என தமிழ் மொழியை இழிவுபடுத்தியவரை கண்டிக்கத் தவறிவிட்டு, கடவுள் வாழ்த்தைப் பற்றிப் பேசுவதற்கு இந்து முன்னணிக் கும் இந்து மக்கள் கட்சிக்கும் என்ன தகுதி இருக் கிறது?

கடவுளை நம்புவதும், நம்பாமல் இருப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமை. இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. அவரவர் நம்பும் கடவுளை அவரவர் வழிபடுவதும் அரசியலமைப்பு தந்திருக்கும் உரிமை.

அரசிற்கு எந்த மதமும் கிடையாது. பாடத் திட்டத்தில் ‘கடவுள் வாழ்த்து’ படிக்கச் சொல்லி அரசால் கட்டாயப்படுத்த முடியாது, கூடாது.

‘மாற்றம்’ என்ற சொல்லைக் கூட விரும்பாதவர்கள், தீண்டாமையை எதிர்த்துப் போராட முன்வராதவர்கள், மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் மக்களைக் கூறு போட நினைப்பவர்களை தமிழ் நாட்டு மக்கள் நிராகரிக்க வேண்டும். தரமான கல்வி சமச்சீராக அனைத்துக் குழந்தைகளுக்கும் கட் டணமில்லாமல் கட்டாயமாகக் கிடைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் எனப் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கேட்டுக்கொள்கிறது.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

இந்துத்துவ கலவரக்காரர்களின் சதிச்செயல்

கோவாவில் உள்ள புகழ்மிக்க சுற்றுலாத்தல மான மர்மகோவாவில் ஸ்கூட்டர் குண்டு வெடித்து இரண்டு பேர் பலியான நிகழ்வின் பின்னணி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்து மதவெறி அமைப்பினை சேர்ந்தவர்கள் தீபாவளி கொண்டாட்டத்தின் போது குண்டுவைத்து, அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுவதற்கு சதி செய்துள்ளனர். ஆனால் குண்டு வைக்க முயன்றபோது இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

மாலேகாவ் குண்டுவெடிப்பு பாணியிலேயே மர்மகோவா குண்டுவெடிப்பும் நடந்துள்ளது. மாலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்ஞா சிங் தொடர்புடைய கும் பல்தான் இந்த சதிச்செயலிலும் ஈடுபட்டுள்ளது.

2008ம்ஆண்டு மாலேகாவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பிரக்ஞா சிங் மற்றும் லெப்டினன்ட் கர்னல் ரோகித் உள்ளிட்ட இந்து மதவெறி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைதுசெய் யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடை பெற்று வருகிறது. இப்போது மர்மகோவாவில் குண்டு வைத்தவர்கள், சனாதன் சன் ஸதா என்ற ஆசிர மத்தை நடத்தி வந்துள்ளனர். பெண் சாமியார் பிரக்ஞா சிங் நடத்தி வந்த ஆசிரமத்தின் கிளை போலவே கோவா ஆசிரமம் செயல்பட்டு வந்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி கோவா மாநிலத்தில் இந்துக்கள் நரகாசுரன் உருவபொம் மையை எரிப்பது வழக்கமாம். இதில் போட்டி வைத்து பரிசுகள் வழங்கப்படுமாம். அதே போன்று இந்த தீபாவளிக்கு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் ஸ்கூட்டரில் குண்டு வைத்து வெடிக்கச்செய்து, தீபாவளி பண்டிகை யை சீர்குலைக்க முஸ்லிம் தீவிரவாத அமைப்பு கள் செய்த சதிச்செயல் என கலவரம் நடத்துவது இவர்களின் திட்டம். ஆனால் ஸ்கூட்டர் குண்டு வெடித் ததில் மெல்குண்டா பட்டீல் மற்றும் யோகேஷ் நாயக் என்ற இருவர் பலியாகி யுள்ளனர்.

இதைத்தொடர்ந்து கோவாவின் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில், சன்கோலா என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டி ருந்தது. இதிலிருந்து கோவாவின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி, பெரும் கலவரத்திற்கு ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் செயல்படும் மதவெறி அமைப்புகள் திட்டமிட்டிருந்தது தெளிவாகியுள்ளது.

மாலேகாவ் குண்டுவெடிப்பின் போது, பிரக்ஞா சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், இது இந்து துறவிகளுக்கு எதிரான அரசின் சதி என ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் கூச்சலிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் தோல் வியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள உள்கட்சி பூச லால் பாஜக திசை தெரியாத கப்பலாக திணறிக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து மீட்சிபெற தங் களது வழக்கமான பாணியிலேயே பாஜக பரி வாரம் செயல்படத் துவங்கியுள்ளது என்பதையே கோவா குண்டுவெடிப்பு உணர்த்துகிறது.

தமிழ்நாட்டில் தென்காசியில் இந்து முன்னணியினர் தங்களது அலுவலகத்திற்கு தாங் களே குண்டுவைத்துக் கொண்டு, பெரும் கல வரத்தை நடத்தியதும் இங்கே நினைவுகூரத் தக்கது. பொதுவாக குண்டுவெடிப்பு என்றாலே சிறுபான்மை மதவெறி அமைப்புகள் மீது பழிபோடுவது ஊடகங்களின் வழக்கமாக உள் ளது. வன்செயலில் யார் ஈடுபட்டாலும் அது தேசத்துரோகம், மக்கள் விரோதம்தான். நாட்டை சீர்குலைக்க நினைப்பவர்கள் அனைத்து மதவெறி அமைப்பின் பெயராலும் இயங்கிக் கொண்டிருக் கிறார்கள் என்ற கண்ணோட்டத்துடன் இந்த பிரச்சனை அணுகப்படவேண்டும். இந்து மத வெறி அமைப்புகள் குறித்தும் அரசும் புலனாய்வு அமைப்புகளும் மக்களும் விழிப்புடன் இருந்திட வேண்டும்.