சனி, 21 மே, 2011

இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.பீம்ராவ் (உள்படம்)வசிக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட வீடு.
சென்னை பழவந்தாங்கல் என்ஜிஒ காலனியில் உள்ள அந்த வீட்டைப் பார்ப்பவர்கள் யாரும் அது ஒரு எம்.எல்.ஏ.வின் வீடு என்றால் நம்பமாட்டார்கள். ஒரு மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட வீடு அது. அந்த வீட்டில்தான் மதுரவாயல் தொகுதியில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.பீம்ராவ் வசிக்கிறார். வீட்டிலும் அத்தியாவசியப் பொருள்களைத் தவிர ஆடம்பரப் பொருள்கள் எதுவும் இல்லை. விலை உயர்ந்த பொருள்களாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று ஒரு பித்தளை தவலை. இரண்டாவது திமுக அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இலவசக் கலர் டிவி. (அந்த டிவியும் பீம்ராவ் மனைவி பிடிவாதமாக வாங்கி வைத்ததாம்.) இந்த எளிமையான வீட்டில் இருந்துதான் க.பீம்ராவ் கட்சி ரீதியாக சிறப்பாகப் பணியாற்றி வந்துள்ளதுடன், இப்போது தேர்தலிலும் சாதனை படைத்துள்ளார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதே தமிழகத்தில் பெரும் போராட்டம். பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்து வார்டுகள் இதற்குச் சரியான உதாரணம்.

குடியாத்தம் பொதுத் தொகுதியில் கடந்த சட்டமன்றதேர்தலில் சென்ற முறை இதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி லதா என்ற தலித் வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெற செய்த கட்சி இப்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான க.பீம்ராவ் பொது தொகுதியான மதுரவாயலில் நின்று வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கே.செல்வத்தைவிட பீம்ராவ் கூடுதலாக 24,011 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் இரண்டு சந்தோஷங்கள் கிடைத்திருப்பதாக க.பீம்ராம் கூறுகிறார்.

ஒன்று: "இன்னும் கூடுதலாக மக்கள் பணியாற்ற ஒரு பதவி கிடைத்திருக்கிறது. ஆனால் இதைப் பதவி என்று நாங்கள் சொல்ல மாட்டோம். பொறுப்பு என்றுதான் சொல்வோம். இதன் மூலம் மக்களோடு இன்னும் நெருங்கிப் போகக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

' இரண்டு: "புது பேன்ட் சட்டைகள் கிடைக்கின்றன. எம்.எல்.ஏ. ஆகிவிட்டதால் அழுக்கு சட்டையோடு எங்கும் போகக்கூடாது என்று தோழர்கள் நினைக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு பத்து பேன்ட் சட்டைகள் எடுத்துக் கொடுத்தார்கள். இதைப்போல பல தோழர்கள் புது பேன்ட் சட்டைகள் எடுத்து வருகிறார்கள். இது ஒரு பெரிய சந்தோஷம்' என்கிறார். புது பேன்ட் சட்டை கொடுக்கும்போது க.பீம்ராவ் கண்டிப்பாகத் தையல் கூலியையும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்.

இந்த முறையைச் சிலர் தவறாக நினைக்கக்கூடும். ஆனால் கட்சி ரீதியான அவர் நடைமுறை வாழ்க்கையைப் புரிந்தவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.

1983-ம் ஆண்டு வாலிபர் சங்கம் மூலம் பீம்ராவ் அரசியல் பணிக்கு வந்து, பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்திச் சிறை சென்றவர். இப்போது தென்சென்னை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். முழு நேர கட்சி ஊழியர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியால் அளிக்கப்படும் மாதாந்திரப் படியான 3 ஆயிரம் ரூபாயே அவரின் வருமானம். முழு நேர கட்சி நிர்வாகிகளாக இருப்பவர்கள் வேறு பணிகளிலும் இருக்கக்கூடாது. இந்தப் பணத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல். 2 மகன்கள்; ஒரு மகள் என இவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மற்றவர்கள் பள்ளி வகுப்புகளில் படித்து வருகிறார்கள். இவர்களின் கல்விச் செலவுகளை எல்லாம் உறவினர்களே கவனித்துக் கொள்கிறார்கள்.

எம்.எல்.ஏ.சம்பளம்: எம்.எல்.ஏ.க்களுக்குப் படிகளுடன் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம். இந்தச் சம்பளத்தால் பீம்ராவ் குடும்பம் வசதி பெறும் என்று நினைத்தால் அதுவும் தவறானதாகும். இந்தச் சம்பளம் அனைத்தும் கட்சிக்குச் சென்று அவருக்குக் கிடைக்கப்போவது வெறும் 5 ஆயிரத்து 600 ரூபாயே. "சம்பளம் முழுவதும் கட்சிக்கே போய்விடுவதால் வருத்தமா?' என்றால் "சம்பளம் என்பது பொருட்டல்ல. எனக்கு மக்களுக்குப் பணியாற்றுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்பதுதான் கவலையாக இருக்கிறது.

விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரைக் காப்பாற்றுவதற்குப் போராடும் ஒரு மருத்துவரைப் போல நான் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்' என்று நினைக்கிறேன் என்றார்.

"பொது தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் வெற்றிபெற்று இருப்பதன் மூலம் தமிழகத்தில் ஜாதி கண்ணோட்டம் குறைந்து போய்விட்டது என எடுத்துக் கொள்ளலாமா?' என்று கேட்டால்,

"தமிழகம் முழுவதும் குறைந்து போய்விட்டது என்று எடுத்துக் கொள்ள முடியாது. நான் வெற்றிபெற்றது நகர்ப்புறத்தைச் சார்ந்த பகுதி. இங்கு ஜாதி எண்ணம் குறைந்திருக்கலாம். ஆனால் ஜாதி உணர்வாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. எந்தச் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறப்பான மக்கள் தொண்டு செய்பவர்களாக இருந்தால் அவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது. ஜாதியற்ற சமுதாயத்தைக் காணவேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கொள்கை. அதில் வெற்றிபெறலாம் என்கிற நம்பிக்கையை என் வெற்றி ஏற்படுத்தி இருக்கிறது' என்கிறார் க.பீம்ராவ் எம்.எல்.ஏ.

நன்றி தினமணி

5 கருத்துகள்:

விடுதலை சொன்னது…

இவர் போன்ற அரசியல்வாதிகள் மட்டுமல்ல, இவர்களது கொள்கைகளும் இன்று நாட்டுக்குத் தேவை. By அசோகன் முத்துசாமி

5/21/2011 1:13:00 PM தலை வநங்குகிறோம் ...... By ரஞ்சித்

5/21/2011 10:56:00 AM Great Man!!..Sir who ever gets him dress, also think of their family members, they too need the same as Mr Bheema Rao. Once again hats off to you sir. By jay

5/20/2011 8:33:00 PM பெருமைபடுகின்றேன் தி மு க ,அதி மு க சட்ட மன்ற உறுபினர்களே பாடம் கற்பீர் இவரிடம் இருந்ந்து . திரு. பீம்ராவ் அவர்களுக்கு பீமனைப்போல் பலம் கொடுக்கணும் அந்த கடவுள்.... மக்கள் பனி ஆற்ற. வாழ்க ஜனநாயகம் By chandru

5/20/2011 8:32:00 PM இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைத்திருக்க பீமாராவ் போன்றவர்களும் காரணம். வணங்குகிறேன். By chellamuthu
5/20/2011 8:29:00 PM ALL THE BEST SIR By ARUNKUIMAR

5/20/2011 7:48:00 PM தலை வணங்குகிறேன். உங்களைப் போன்ற நல்ல தொண்டுள்ளம்படைத்தவர்கள் இருப்பதாலே இந்த உலகம் நிலைபெற்றிருக்கிறது முருகையன் சிங்கப்பூர் By Murugaiyan

5/20/2011 6:46:00 PM 90 % மர்க்சிஎஸ்ட் கம்யூனிஸ்ட்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் . ஆனால் அவர்களின் பொருளாதார கொள்கைகள்தான் நடைமுறைக்கு ஒத்துவரவில்லை ஆனால் தேசபக்தியில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை By raajan

5/20/2011 5:41:00 PM உள்ளம் மகிழ்கிறது!! உங்களை போல ஒரு நல்ல மனிதர் அரசியலில் உள்ளது. நிச்சயம் நீங்கள் நினைத்தது நடக்கும். என்னுடைய மனம் நிறைந்த பாராட்டுகள்... நிச்சயமாக இந்தியா முன்னேறும் என்று உங்களை பார்த்து தெரிகிறது. நீங்கள் அனைத்து அரசியல் புள்ளிகளுக்கு ஒரு உதராணம். (முக்கியமாக கலைஞர் குடும்பத்திற்கு By jaffar
5/20/2011 5:20:00 P

விடுதலை சொன்னது…

d about him. Other politicians should follow this gentleman. May God bless him with all fortunes. By S.Nedunchezhian

5/20/2011 12:31:00 PM எல்லா அரசியல்வாதிகளும் இவரை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டால் தமிழகம் நிச்சயம் தலைநிமிரும் வாழ்க பீம்ராவ் By தமிழ் briyan

5/20/2011 12:29:00 PM எனக்கு தெரிந்தவரையில் பெரும்பாலான கம்யுனிஸ்டுகள் அப்படித்தான் வாழ்கிறார்கள். thiru
நல்லக்கண்ணுவின் வாழ்க்கை கூட அப்படித்தான். இந்த காலத்திலும் லட்சியத்தோடு வாழும் இம்மாதிரி மனிதர்களை சிரம் தாழ்த்தி வணங்குவதில் தப்பே இல்லை. By அபிஷ்டு

5/20/2011 12:12:00 PM கார் வைப்பதற்காகத் தனி பங்களாவே வைத்திருக்கும் முதல்வரின் பேரன்கள் (உதயநிதி ஸ்டாலின்) இருக்கும் நாட்டில், இவருக்குக் கோயில் தான் கட்ட வேண்டும்... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... By ரத்தன்

5/20/2011 12:11:00 PM இந்த மாதிரி விஷயத்தை கேட்பதே சந்தோஷமாக இருக்கிறது. அபிஷ்டு By அபிஷு
5/20/2011 12:03:00 PM

விடுதலை சொன்னது…

இவர் இப்படியே தொடர்வாரானால் இவரையே தெய்வமாக வணங்கலாம்-வணங்குவேன். By இராம.பில்லப்பன்,சிவகங்கை

5/20/2011 11:28:00 AM தோழர் பீமாராவுக்கு வாழ்த்துக்கள். அவரைப் போன்ற பல பீமாராவ்கள் தோன்ற வேண்டும். By சீனிவாசன்

5/20/2011 11:22:00 AM உள்ளம் மகிழ்கிறது!! உங்களை போல ஒரு நல்ல மனிதர் அரசியலில் உள்ளது. நிச்சயம் நீங்கள் நினைத்தது நடக்கும். என்னுடைய மனம் நிறைந்த பாராட்டுகள்... நிச்சயமாக இந்தியா முன்னேறும் என்று உங்களை பார்த்து தெரிகிறது. நீங்கள் அனைத்து அரசியல் புள்ளிகளுக்கு ஒரு உதராணம். (முக்கியமாக கலைஞர் குடும்பத்திற்கு). By கதிர்

5/20/2011 11:04:00 AM ஜாதி பார்த்து எவரும் வாக்களிப்பதில்லை என்பதை பா ம க ,வி சி படுதோல்விக்கு பிறகு கூடவா யாரும் புரிந்து கொள்ளவில்லை? By ராஜு

5/20/2011 11:00:00 AM திரு. பீம்ராவ் அவர்களுக்கு பீமனைப்போல் பலம் கொடுக்கணும் அந்த கடவுள்.... மக்கள் பனி ஆற்ற. வாழ்க ஜனநாயகம். By Krishnan

5/20/2011 10:58:00 AM இவரை பார்த்தல் எனக்கு பொறாமையாக இருக்கு. By sivaraj
5/20/2011 10:46:00 AM சூப்பர் ஒ சூப்பர் இவரே இந்தியாவின் பிரதமர் வாழ்க உங்கள் பணி, நன்றி அய்யா. By namasivayam

5/20/2011 10:28:00 AM சூப்பர் ஒ சூப்பர் இவரே இந்தியாவின் பிரதமர் வாழ்க உங்கள் பணி, நன்றி அய்யா. By namasivayam

5/20/2011 10:28:00 AM எப்படியும் வாழலாம் நினைகரங்க மத்தியில் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதரற்கு ஒரு உதாரணம் ஐயா,,,,,,,நீங்கள் கல்லூரிக்கும்,சிறைக்கும் சென்று வரும்காலதிருக்கும்,தவறு செய்தவருக்கும் உங்களை உதாரண படுத்த வேண்டும் ............. By தமிழன்,மென்பொறியாளர், இந்தியா

5/20/2011 10:27:00 AM வேறு கட்சி எம்.எல்.ஏ. என்றால் ஆச்சரிய படலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. எம்பி இப்படிதான் இருப்பார்கள். இவரை பார்த்தாவது திமுக எம்.எல்.ஏ திருந்த வேண்டும் By mirudan

5/20/2011 10:22:00 AM கம்யூனிஷ்ட்கட்சிகளின் சார்பாக வெற்றி பெற்றுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் வேண்டுமானால் சிறிது ஏற்ற் இறக்கம் இருக்கலாம்.மீதியெல்லாம் ஒன்றுதான்..இப்பேர்ப்பட்டவர்கள் உருவாக அடிப்படை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான்..என்ன சோகம் என்றால் இந்தக்கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறமுடிவதில்லை. தேர்தலின் போது அம்மாவையோ, அய்யாவையோ சார்ந்து (காங்கிரஸ் அல்லது பி.ஜே.பி.இருக்கும் அணிக்கு எதிராக)ஒரு பத்து சீட்டுக்காக போராட வேண்டியுள்ளது. நல்லவர்களுக்கு காலமில்லை. ஆ.ஈசுவரன்/திருப்பூர். By எ.eswararan

அமைதி அப்பா சொன்னது…

வாழ்த்துக்கள். மக்களுக்கு போன்றவர்கள் நம்பிக்கையூட்டுகிரார்கள். அதற்காக, இவர் இப்படி கஷ்டப்பட்டுதான் மக்கள் சேவை புரிய வேண்டும் என்பதில்லை. நியாயமான முறையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு கட்சிதான் உதவேண்டும்.
நல்ல பகிர்வு.

விடுதலை சொன்னது…

அமைதி அப்பா அவர்களுக்கு தங்கள் வருகைக்கு முதலில் நன்றி சிபிஎம் கட்சியின் சார்பாக வெற்றி பெற்றுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் வேண்டுமானால் சிறிது ஏற்ற் இறக்கம் இருக்கலாம்.மீதியெல்லாம் ஒன்றுதான்..இப்பேர்ப்பட்டவர்கள் உருவாக அடிப்படை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான். மேலும் இந்தியாவில் 80 சதவித மக்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள் அவர்களை போல வாழ்ழும்போதுதான் அவர்களுக்காக தொடர்ந்து போராடமுடியும்