புதன், 4 மார்ச், 2009

பணவீக்கம் குறைகிறதே, விலைவாசி குறைகிறதா?

.எம்.ஜோசப்

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக 12.63 சதவீதம் என்றிருந்த பணவீக்கம், இவ்வாண்டு பிப்ரவரி மாத மத்தியில் 3.36 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இது பணவீக்கம் குறித்து, மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வமான தக வல். அப்படியானால், அந்த அளவுக்கு விலைவாசி குறைந்துவிட்டதா? இது இயல்பாக எழும் கேள்வி.

குறைந்திருக்கிறது என்பது பதிலாக இருக்கும் பட்சத்தில், அதற்கு விளக்கம் தேவையில்லை. ஆனால் தகவல் வேறு விதமாக இருக்கிறது. பணவீக்கம் குறைந் திருக்கிறது. ஆனால் விலைவாசி குறைய வில்லை, இன்னும் சொல்லப்போனால், சில பொருட்களின் விலை இன்னும் கூட உயர்ந்திருக்கிறது. இது என்ன குதர்க்கம்?

மொத்தவிலைப் புள்ளியின் அடிப்படையில் பணவீக்கம் குறைந்திருக்கிறது. ஆனால் நுகர்வோர் விலைப்புள்ளி அடிப்படையில், அது உயர்ந்திருக்கிறது. இது என்ன புதிர்?

விலைவாசி என்றால் அனைவருக்கும் தெரியும். பணவீக்கம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது குறித்து சற்று தெரிந்துகொண்டால், விஷயத்தை விளங்கிக்கொள்வது ஒன்றும் கடினமான தல்ல, முதலில் பணவீக்க விகிதம் என் றால் என்னவென்று பார்ப்போம்.

பணவீக்க விகிதம்?

பணவீக்கம் இத்தனை சதவீதம் உயர்ந்திருக்கிறது அல்லது குறைந்திருக் கிறது என்று அவ்வப்போது வெளியிடப் படும் தகவல் அனைத்தும், பணவீக்க விகிதம் குறித்ததே என் பதை முதலில் புரிந்து கொள்ள வேண் டும். அதாவது நாட்டின் விலைவாசி சராசரியாக எந்த விகிதத்தில் ஏறுகிறது அல்லது இறங்கு கிறது என்பது குறித்த புள்ளி விபரமே அது. மொத்தவிலைப் புள்ளி என்றால் இதே மாதம் இதே வாரத் தில், நுகர்வோர் விலைப்புள்ளி என்றால் இதே மாதத்தில், சென்ற ஆண்டு என்ன விலை இருந் ததோ, அதைவிட இன்றைய விலை எத் தனை சதவீதம் உயர்ந்திருக்கிறது அல் லது குறைந்திருக்கிறது என்ற கணக்கீடே அது.

சென்ற ஆண்டு 100 ஆக இருந்த சரா சரி விலைகள், இந்த ஆண்டு 103 ஆக உயரும்பட்சத்தில் பணவீக்க சதவீதம் 3 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று பொருள். ஒருவேளை எதிர்பாராத விந்தை யாக, சென்ற ஆண்டு சராசரி விலை களை விட இந்த ஆண்டு சராசரி விலை கள் குறையும் பட்சத்தில் பணவீக்க சதவீதம் எதிர்மறை (மைனஸ்) எண் ணாக அமையும். உதாரணத்திற்கு, 100 ஆக இருந்த சென்ற ஆண்டு சராசரி விலைகள், இந்த ஆண்டு 97 ஆகக் குறையுமானால், பணவீக்கம் -3 (மைனஸ் மூன்று) சதவீதம் என அறி விக்கப்படும். இதுதான் உண் மையில் விலைவாசி குறைந்திருக்கிறது என்று பொருள்படும்.

பணவீக்கம் விகிதம் குறைகிறது என்று சொன்னால், விலை குறைகிறது என்று பொருளல்ல. மாறாக விலைவாசி உயரும் வேகம் குறைந்திருக்கிறது என்று தான் பொருள். உதாரணத்திற்கு ஒருவர் மதுரையிலிருந்து சென்னைக்கு நடை பயணமாக செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் முதல் நாளில் 10 கிலோமீட்டர் நடக்கிறார். இரண்டாவது நாள் நடை வேகம் 7 கிலோமீட்டராக குறைகிறது. மூன்றாவது நாளில் வேகம் 5 கிலோ மீட்டராகக் குறைகிறது. இந்த மூன்று நாட்களில் அவரது நடைவேகம் குறைந்து கொண்டே வந்தாலும், முடி வில் அவர் மதுரையிலிருந்து 22 கி.மீ தொலைவு, அப்பாலில் இருக்கிறார் என்று தான் பொருள் கொள்வோமே தவிர, மூன் றாம் நாள் முடிவில், மதுரைக்கு 5 கிலோ மீட்டர் அருகில் இருக்கிறார் என்று சொல் லமாட்டோம் அல்லவா? அது போன்றது தான் பணவீக்க விகிதமும். விலை வாசி ஏறும் வேகம் குறைகிறதே தவிர, விலை வாசி குறையவில்லை. சில பொருட்க ளின் விலைகள் குறையலாம். மொத்தத் தில், சராசரி விலைவாசி குறையவில்லை என்பதுதான் இதற்கு பொருள்.

ஒருவேளை நாம் ஏற்கெனவே குறிப் பிட்டபடி எதிர்பாராத வகையில் குறை கிறது என்று வைத்துக்கொண்டால், நமது நடைபயண உதாரணத்தை சற்று திருப் பிப்போட வேண்டும். அதாவது சென் னைக்குச் செல்லத் தொடங்கியவர், எண் ணத்தை மாற்றிக்கொண்டு மதுரை நோக் கித் திரும்பி வருகிறார் என்று பொருள்.

ஒருவேளை நாம் ஏற்கெனவே குறிப் பிட்டபடி எதிர்பாராத வகையில் குறை கிறது என்று வைத்துக்கொண்டால், நமது நடைபயண உதாரணத்தை சற்று திருப் பிப்போட வேண்டும். அதாவது, சென் னைக்குச் செல்லத் தொடங்கியவர், எண் ணத்தை மாற்றிக்கொண்டு மதுரை நோக் கித் திரும்பி வருகிறார் என்று பொருள்.

கணக்கீட்டு முறை?

நமது நாட்டில் பணவீக்கம் மொத்த விலைக்குறியீட்டு எண்ணின் அடிப் படையில் கணக் கிடப்படுகிறது. அமெ ரிக்கா, கனடா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலெல்லாம் அது நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்ணின் அடிப் படையிலேயே கணக்கிடப்படுகிறது. 1902ம் ஆண்டு அமெரிக்காவில் மொத்த விலைவாசிப் புள்ளி முதன்முதலாக வெளி யிடப்பட்டது. தொடக்க காலங்களில் பல நாடுகள் பணவீக்கத்தை மொத்த விலைப் புள்ளியின் அடிப்படையில் கணக்கிட்டு வந்தன. ஆனால் பிற்காலத்தில், நுகர்வோர் விலைப் புள்ளிகள் உருவாக்கப்பட்ட போது,அவற்றின் அடிப்படையில் பண வீக்கத்தைக் கணக்கிடும் முறைக்கு மாற் றிக்கொண்டன. 1970 களில் அநேகமாக அனைத்துப் பெரிய நாடுகளும் நுகர்வோர் விலைப்புள்ளி அடிப்படைக்கு மாறிவிட்டன. ஆனால், இந்தியா பழைய முறையிலேயே தொடர்கிறது.

மொத்த விலைப்புள்ளி அடிப்படையில் கணக்கிட்டால், அதில் என்ன தவறு? பதில் மிக எளிது. மொத்த விலை என்பது உற்பத்தியாளர்களுக்கு கிடைக் கும் விலை. நுகர்வோர் விலை என்பது மக்கள் கொடுக்கும் விலை. எனவே அதுதானே மக்களின் வாழ்நிலையை பிரதிபலிப்பதாக இருக்கும்?

இந்தியாவின் மொத்த விலைச் சந்தையில் பரிவர்த்தனையாகும் 435 பொருட்கள், மொத்த விலைப்புள்ளி பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் மக்கள் நேரடியாகப் பயன்படுத்தும் பொருட்களின் உள்ளடக்கம் இதில் மிகக்குறைவேயாகும். உணவுப்பொருட்களின் உள்ளடக்கம் 15 சதவீதம் மட் டுமே. மக்கள் பயன்படுத்தும் போக்குவரத் துக்கான கட்டணங்களுக்கு இதில் இடம் இல்லை. மொத்த விலைவாசிப் புள்ளி மாற்றியமைக்கப்படும் ஒவ்வொரு முறையும் இந்த உள்ளடக்கத்தின் அளவு குறைந்துகொண்டே செல்வதையும் பார்க்கலாம். அடிப்படை ஆண்டு 1970-71 மொத்த விலைவாசிப் புள்ளி வரிசை யில் உணவுப்பொருட்களின் உள்ளடக் கம் 29.799 சதவீதமாக இருந்தது. 1981-82 வரிசையில் அது 17.386 சதவீதமாகக் குறைந்தது. 1993-94 வரிசையில் அது 15.402 சதவீதமாக மேலும் குறைந்துள் ளது. சாமானிய மக்களின் வாழ்க்கைச் செலவுகளில் 50 முதல் 60 சதவீதம் வரை பங்கு வகிக்கும் உணவுப் பொருட்களின் விலை உரிய அளவில் இடம்பெறவில் லையெனில், பணவீக்கத்தின் உண்மை யான பரிமாணத்தை எவ்வாறு உணரமுடி யும்? மாறாக, நுகர்வோர் விலைப்புள்ளி அடிப்படையிலான கணக்கீட்டின் அடிப்படையில், பணவீக்கத்தின் அள வை ஓரளவேனும் உணர முடியும்.

நுகர்வோர் விலைப்புள்ளி!

மொத்தவிலைப்புள்ளி அடிப்படையில், பிப்ரவரி முதல் வாரத்தில் 3.92 சதவீதமாக இருந்த பணவீக்கம், அதற்கு அடுத்த வாரத்தில் 3.32 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. ஆனால்,அதையொட் டிய காலத்திற்கான நுகர்வோர் விலைப் புள்ளி அடிப்படையில் பார்த்தால், 2008 டிசம்பர் மாதத்தில் 9.7 சதவீதமாக இருந்த பணவீக்கம், 2009 ஜனவரி மாதத்தில் 10.45 சதவீதமாக உயர்ந்திருப் பதைக் காணமுடியும். (மொத்த விலைப் புள்ளி வாரம் ஒருமுறை வெளியிடப்படு கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட மாதத் திற்கான நுகர்வோர் விலைப்புள்ளி இரண்டு மாதங்கள் கழித்தே வெளியிடப் படுகிறது. எனவே சமகால ஒப்பீடு செய் வதில் சில சிரமங்கள் உள்ளன) உண்மை யில் விலைவாசி உயர்வு வேகம் தணிய வில்லை என்பதை நுகர்வோர் விலைப் புள்ளி ஓரளவு உணர்த்துகிறதல்லவா?

இந்தியாவில் நுகர்வோர் விலைப் புள்ளி நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. தொழிலாளர்கள், விவசாயத் தொழிலா ளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள், நகர்ப்புற நடுத்தர வர்க் கத் தொழிலாளர்கள் எனப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவின் பிரத்யேகமான நுகர் வுப் பொருட்களின் அடிப்படையில் புள்ளி கள் கணக்கிடப்படுகின்றன. நுகர் வோர் விலைப்புள்ளியின் அடிப்படையில் நாட் டின் ஒட்டுமொத்த பணவீக்கத்தைக் கணக்கிடுவது இயலாது என்பதற்கு, பாகுபடுத்தப்பட்ட இந்த நிலைமை யினையே மத்திய அரசு காரணமாகக் கூறிவருகிறது.

மோசடிக்கெதிரான போராட்டம்!

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசிப் புள்ளி வரிசை புதுப்பிக்க வேண்டும் எனவும், எந்தக் காரணத்தைக் கொண்டும் அது பத்து ஆண்டுகளைத் தாண்டக்கூடாது எனவும் தேசிய புள்ளி இயல் ஆணையம் (உத்தரவிட்டிருக்கிறது. புதிய வரிசை விலைவாசிப் புள்ளிக்கான அடிப் படை ஆண்டு பொருளாதார நெருக்கடி இல்லாத இயல்பான ஆண் டாக இருக்க வேண்டும் என்பதும் மரபு. ஆனால் நல்ல நோக்கத்தில் இடப்பட்ட இந்த உத்தரவு, விலைவாசிப் புள்ளி மோசடி செய்து தொழிலாளர்களை வஞ்சிக்க ஒரு வாய்ப் பாக அரசுக்கு பயன்பட்டு வருகிறது என் பதுதான் துரதிருஷ்டம்.

புதிய வரிசை விலைப் புள்ளிகளை உருவாக்கும் சமயத்தில், சாமானிய மக்கள் பயன்படுத்தும் நுகர்வுப் பொருட்களில் எவற்றின் விலை கடந்த காலத் தில் வேகமாக உயர்ந்ததோ, அவற்றை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, அவற்றிற்கு மாறாக, விலை அவ்வளவாக உயராத வேறு சில பொருட்களை இணைக்கும் மோசடியும் நடைபெறுகிறது. பணவீக்கத் தின் உக்கிரத்தைக் குறைத்துக்காட்டும் உத்தியே இது.

இதனால்தான், புதிய வரிசை விலை வாசிப் புள்ளிகள் வெளியிடப்படும் ஒவ் வொரு முறையும், தொழிற்சங்கங்கள் புள்ளி மோசடியை எதிர்த்துப் போராட வேண்டிய தேவை ஏற்படுகிறது. தொழிற்சங்கங்கள் முன்வைத்த நியாயங்களின் அடிப்படையில், புள்ளிகளை திருத்தும் அவசியம் அரசுக்கு ஏற்பட்ட வரலாறும் உண்டு.

கருத்துகள் இல்லை: