திங்கள், 14 பிப்ரவரி, 2011

10 லட்சம் பேர் சிவந்தது கொல்கத்தா :கதிகலங்கும் மம்தா

ஆயிரம்பேர், லட்சம் பேர் அல்ல; 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்.

தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பையும் சேர்ந்த மக்கள் செங்கொடி ஏந்தி இந்த மைதானத்தில் கூடியிருந்தார்கள்.

கடந்த 20 ஆண்டு காலத்தில் இத்தனை மிகப்பிரம்மாண்டமான மக்கள் கூட்டத்தை மேற்குவங்கத்தில் மட்டுமல்ல; நாட்டிலேயே வேறு எந்தக் கட்சியும் நடத்தியிருக்க முடியாது என்று செய்தி ஏடுகள் எழுதியிருக் கின்றன.

ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளுடன், அராஜக அரசியல் நடத்திவரும் மம்தா பானர்ஜி கூட்டுச்சேர்ந்து கொண்டு கட்டவிழ்த்துவிட்ட கொடிய வன்முறைகளில் 300க்கும் மேற்பட்ட தோழர்களை பறிகொடுத்து நிற்கிற இடதுமுன்னணி, இந்த வன்முறை அரசியலை தனிமைப்படுத்தும் வித மாக மக்களிடம் சென்றது.

கடந்த 35 ஆண்டுகளாக மேற்கு வங்க மக்களின் நலன்காக்க மகத்தான நல்லாட்சி நடத்திவரும் இடது முன்னணி, மம்தாவையும் மாவோ யிஸ்டுகளையும், அவர்களது கொடிய வன்முறைகளையும், அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் காங்கிரஸ் தலை மையிலான மத்திய அரசையும் அம்பலப்படுத்தியது. மாநிலமெங்கும் நூற்றுக்கணக்கான பேரணிகள் நடந்தன. லட்சக்கணக்கான மக்கள் இப்பேரணி களில் திரண்டனர்.

இதன் முத்தாய்ப்பாக, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் துவக்கமாக நடைபெற் றதே பிரிகேட் பரேட் மைதானத்தில் கூடிய இந்த மாபெரும் பேரணி.

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி மீண்டும் உறுதி மிக்க வெற்றியைப் பெறும்; தொடர்ந்து 8வது முறையாக ஆட்சியில் அமரும் என்பதை உறுதி செய்வதாக இந்தப் பொதுக்கூட்டம் அமைந்தது.

ஏழை, எளிய உழைப்பாளி வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள், இடதுமுன்னணி ஆட்சியில் தாங்கள் பெற்ற வளத்தை மம்தா கும்பலும் அவர்களுக்கு ஆதரவான காங்கிரஸ் உள்ளிட்ட வலதுசாரி சக்திகளும் சீர் குலைக்க முயற்சிப்பதை முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதை உரத்துச்சொன்னது இந்த மாபெரும் பொதுக்கூட்டம்.

மேற்கு வங்கத்தில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தோடு இந்திய பெருமுதலாளிகள், அமெரிக்க ஏகாதிப்பத்தியம், மவோஸ்ட், இந்திய கார்ப்பரேட் ஊடங்கள் ஆகியவற்றின் கூட்டு சதியில் எப்படியும் இந்த முறை ஆட்சியை பிடிக்க நினைக்கும் மம்தாவிற்கும் இந்த பேரணி கலக்கததை ஏற்படுத்தி உள்ளது.


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ஹிஹி , முதலமைச்சர் கூட ஜெயிக்கலையே