புதன், 15 ஜூலை, 2009

பூமி வெப்பமாவதை தடுக்க பணக்கார நாடுகளிடம் உறுதியான நடவடிக்கை இல்லை: பான் கி-மூன்

இத்தாலியில் உள்ள எல் அகுய்லா நகரில் ஜி-8 நாடு களின் மாநாடு நடைபெற் றது. இம்மாநாட்டில் 2050-ம் ஆண்டில் 80 சதவீத கரிய மில வாயு வெளியேற்றத்தை தவிர்க்க ஒப்புக் கொள்ளப் பட்டது. இதுகுறித்து பான் கி -மூன் கூறுகையில், சுற்றுச்சூழலை மாசுபடுத் தும் கரியமில வாயுவை கட்டுப்படுத்த காலம் கடந்து நடவடிக்கை எடுப் பதை விட, உடனடியாக மேற்கொள்ளப்பட வேண் டும். தட்பவெப்ப மாற்றத் தைத் தடுப்பது குறித்து ஜி-8 நாடுகள் தலைவர்களிடம் தீவிரமான ஈடுபாடு இல்லை என்றார்.

இத்தாலியில் புதன் கிழமையன்று ஜி-8 நாடுக ளின் தலைவர்கள் உலக வெப்பமயமாதலை 2 சென்டி கிரேடுக்குள் இருக்கும் வகையில் பார்த்துக் கொள் வதாக ஒப்புக் கொண்டனர்.

மாநாட்டின் 2-வது நாளன்று ஜி-5 நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை இடம் பெற்றது. பிரேசில், சீனா, இந்தியா, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்காவும் சிறப்பு அழைப்பாளராக எகிப்தும் கலந்து கொண் டன.

ஜி-8 நாடுகள் கூட்டத் தில் 2050-ம் ஆண்டில் பணக்கார நாடுகள் 80 சதவீத கரியமில வாயு வெளியேற் றத்தை கட்டுப்படுத்த வேண் டும்; உலகம் முழுவதும் 2050-ம் ஆண் டில் 50 சதவீத கரியமில வாயு வெளியேற் றத்தை கட்டுப்படுத்த வேண் டும் என்று ஒப்புக் கொள் ளப்பட்டது.

கரியமில வாயுவை கட்டுப்படுத்த 2050-ம் ஆண்டு இலக்காக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இடைக்கால இலக்காக 2020-ம் ஆண்டை நிர்ண யித்து உறுதியான மற்றும் லட்சியமான நடவடிக்கை களை தலைவர்கள் மேற் கொண்டிருக்க வேண்டும் என்று பான் கி - மூன் கூறினார்.

இதே கருத்தை இந்தியாவும் தெரிவித்திருந்தது. கரியமில வாயுவை கட்டுப் படுத்த இடைக்கால இலக் காக 2020-ம் ஆண்டையும் முழு நிர்ணய காலமாக 40 ஆண்டுகளையும் மேற் கொள்ள இந்தியா கூறியிருந்தது.

கருத்துகள் இல்லை: