செவ்வாய், 14 ஜூலை, 2009

கம்யூனிச எதிர்ப்பு’ நடுநிலையாளர்கள்...!

தொடர்ந்து தங்கள் பணியினை செய்து கொண்டிருக்கும் இத்தகைய நடுநிலையாளர் கள்(?) தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தங் கள் பணியினை ஓவர் டைம் போட்டு செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு அதிக ஊக்கத்தை அளித் திருக்கலாம்... அச்சு ஊடகங்களில் பயன் படுத்தப்படும் ‘மை’களிலும், காட்சி ஊடகங் களின் காற்று அலைவரிசைகளின் பின்னா லும் மறைவாக ஊடாடிக் கொண்டிருக்கும் கம்யூனிச எதிர்ப்பு மனோநிலையை ஒளித்து வைக்க ‘நடுநிலை’ என்ற பிராண்ட் லேபிள் அவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறது.


முப்பதாண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்க மாநிலத்தில் மக்களின் நம்பிக்கையை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த தேர்தலில் சந்தித்திருக்கும் பின்னடைவை ஒரு சித்தாந்தத்தின் தோல்வியாகவும் அத்த கைய நிகழ்வுகள் மற்ற மாநிலங்களில் வேறு கட்சிகளுக்கு ஏற்பட்டிருந்தால் அதை ஒரு சாதாரண தேர்தல் தோல்வியாகவும் மட்டுமே மக்களை அவர்களால் நம்பவைக்க முடியும். தொடர்ந்து ஏழு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி, முப்பத்து மூன்று ஆண்டுகள் ஊழ லற்ற ஆட்சி, இந்தியாவிலேயே அதிகமான நிலவிநியோகம், பல்வேறு மக்கள் நல சட்டங் கள், இவற்றையெல்லாம் கூட ஒரு சாதாரண பஞ்சாயத்து தேர்தல் தோல்வியில் மறைத்து விடக்கூடிய வல்லமை கொண்டவர்கள் அவர்கள், மேற்குவங்காளத்தில் தொடர்ந்து பலமுறை கம்யூனிஸ்ட்டுகள் வெற்றிபெற் றால், அங்கே தேர்தல் என்பது முறையாக நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பவும், குஜராத்தில் இரண்டாவது முறையாக ‘மோடிக்கள்’ வெற்றிபெற்றால் அதை ஒரு ஸ்திரமான ஆட்சி என கொண்டாடவும் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அவர்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் போடப் பட்ட ‘லாவாலின்’ ஒப்பந்தத்தில் ஊழல் நடந் திருக்கிறது என மக்களை நம்பவைக்க தலைப்பு செய்திகளை பயன்படுத்துவதும் ‘அது என்ன சினிமா டிக்கெட்டா...? கூவி கூவி விற்பதற்கு’ என உயர்நீதிமன்ற நீதிப தியே ‘ஸ்பெக்ட்ரம்’ ஊழல் குறித்து கவலை தெரிவித்தாலும் எங்கோ ஒரு மூலையில் இரண்டு வரி செய்திகளாக போடுவதும்தான் அவர்கள் ஏற்றுக்கொண்ட ஊடக தர்மம்...

மக்கள் பிரச்சனைகள், தேசத்தின் வளர்ச் சியில் அக்கறை கொண்ட பொருளாதார கொள்கைகள், இறையாண்மை பாதிக்கப்படு கிற விஷயங்கள் உள்ளிட்டவைகளை முன் னிறுத்தி ஆட்சியாளர்களோடு விவாதித்தால் அதுகுறித்து செய்தி போடுகிற போது அவர் களது மொழி ‘கம்யூனிஸ்ட்டுகளின் தொல் லை’ ஆனால் ‘நீங்கள் என்ன வேண்டுமா னாலும் செய்து கொள்ளலாம். நாங்கள் குறுக் கிடவே மாட்டோம்.. எங்களுக்கு தேவையெல் லாம் நாங்கள் கேட்கும் அந்த குறிப்பிட்ட மந் திரி பதவிதான்’ என மற்ற முதலாளித்துவ கட் சிகள் பேரம் பேசினால் அவர்கள் காட்டுவது கள்ள மவுனம்...

மக்களையும் அரசையும் பிரிக்க வன் முறைகளையும், ஆயுதங்களையும் பயன்படுத் தும் மாவோயிஸ்ட்டுகளை கதாநாயகனாகவும், அவர்களுக்கு ஊக்கம் தரும் மம்தாவை கதாநாயகியாகவும் சித்தரித்து நம்மிடம் கதை சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். ஏனெனில் செய்திகளை திரித்து கதைகளாக சொல்லும் ரசவாதம் பழகியவர்கள் அவர்கள். வெறும் நூறுபேர் மட்டுமே அமர்ந்திருக்கும் காட்சியை குளோசப்பில் காட்டி ‘சிங்கூரில் பதற்றம்’ என காண்பவர்களிடையே அச்சத் தை தூண்டவும், குஜராத்தோ அல்லது ஒரிசா வின் காந்தமால் மாவட்டமோ பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது மிக மிக சாதாரண மாக காட்டவுமான தொழில்நுட்பம் அவர்க ளுக்கு சொல்லித்தரப்பட்டிருக்கிறது.

எல்லாமே ஒருவிதப் பரபரப்போடும் பதற்றத்தோடும் இருக்க வேண்டும் அவர் களுக்கு.. உடனுக்குடன் செய்திகள் வேண் டும் அவர்களுக்கு,.. நாம் தரவில்லை என்றால் அவர்களாகவே ஒன்றை உருவாக்கிக்கொள் கிறார்கள்.. அதன் சமீபத்திய உதாரணம்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் கருத்து வேறுபாடு என்று வெளியான செய்தி.. அரசியல் தலைமைக்குழுவின் ஆலோசனையை மத்தியக்குழுதான் இறுதி செய்யும் என்கிற உண்மை தெரிந்திருந்தாலும் அதுவரைக்கும் பொறுமை காக்க அவர்களின் நியூஸ் டெஸ்க் அனுமதிக்காதே.

அவர்கள் ஏற்றுக்கொண்ட பணியினை சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறார் கள்... முதலாளித்துவ சமூகத்தில் ஊடகங் களுக்கென்று ஒரு வர்க்க சார்பு இருக்கிறது என்ற எளிய உண்மையை புரிந்து கொள் வதும், நமக்கானதும், நம்மைப்பற்றியதுமான ஊடகங்களை வலுப்படுத்துவதுமே நமது பணி. அதைத்தான் காலம் மிக வலுவாக நம் முன் தற்போது சொல்லிக் கொண்டிருக்கிறது...

கருத்துகள் இல்லை: