திங்கள், 9 ஆகஸ்ட், 2010

ஹிரோஷிமா- நாகசாகி பின்னணியில் நடந்தது என்ன?

1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில் ஜப்பானிய நகரங்கள் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் போடப்பட்டன. உட னடியாகவே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் கதிர்வீச்சி னால் பாதிக்கப்பட்டனர். அந்த இரு நகரங்க ளும் அவற்றின் சுற்றுப்புறங்களும் அடியோடு நாசமாகின. அணுகுண்டு வீச்சைப் பற்றியும் மனிதகுலம் அதுவரை சந்தித்திராத மோச மான விளைவுகள் குறித்தும் ஏராளமான கட் டுரைகள் வந்துவிட்டன. ஆனால் நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போவது முற்றிலும் வேறானது. அணுகுண்டை மக்கள் மீது வீசு வதா, வேண்டாமா என்பது பற்றி அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகளுக்கு இடையே குண்டுவீச்சுக்கு முன் நடந்த விவாதங்கள் பற்றியும் இறுதி முடிவு எடுக்கப்பட்ட விதம் குறித்தும் சில சுவாரசியமான விவரங்களைத் தற்போது பார்க்கலாம்.


அணுகுண்டை மக்கள் மீது போடக் கூடாது என்ற விஞ்ஞானிகளில் லியோ ஸிலார்ட் , ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இந்த இருவரும் அணுகுண்டின் ரகசியத்தைக் கண்டுபிடித்ததில் பிரதான பங்கினை வகித் தவர்கள். அதனால் அவர்களால் அது விளை விக்கக்கூடிய மிகப்பெரிய நாசத்தையும் முன்கூட்டியே நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.

அணுகுண்டு வீச்சின் பின்னணியைப் புரிந்துகொள்ள 1945-க்கு ஆறாண்டுகள் பின்னே போகவேண்டியுள்ளது. இங்கே சில கற்பனையான உரையாடல்கள் கொடுக்கப் படுகின்றன. உரையாடல்கள் கற்பனையாக இருந்தாலும் உண்மையில் நடந்த விஷயங் கள் அடிப்படையிலேயே அவை அமைக்கப் பட்டுள்ளன.

நமது கதை 1939 கோடையில் தொடங்கு கிறது. அணுப்பிளவு வினைகள் பற்றிய ஆய் வுகள் பிரான்சில் ஃப்ரெடெரிக் ஜோலியோட், ஐரீன் க்யூரி ஆகியோராலும் அமெரிக்காவில் ஸிலார்ட், என்ரிக்கோ ஃபெர்மி ஆகியோரா லும் செய்து முடிக்கப்பட்டு விட்டன. அணு ஆயுதங்கள் எவ்வளவு பயங்கரமானவை என் பதை ஸிலார்டினால் உடனே உணர முடிந் தது. மற்ற நாடுகளுக்கு முன் ஜெர்மனி அணு குண்டைக் கண்டுபிடித்து உலகை ஆட்டி வைக்கும் தன் நோக்கத்திற்கு அதைப் பயன் படுத்திவிடக் கூடாதே என்ற கவலை அவ ரை வாட்டியெடுத்தது. அவரும் யூஜின் விக் னர் என்ற மற்றொரு விஞ்ஞானியும் ஐன்ஸ்டீ னைச் சந்தித்தனர்.

விக்னர் : பெர்லினிலிருந்து உங்களது பழைய நண்பரை அழைத்து வந்திருக்கிறேன். அணுவிலிருந்து ஆற்றலைப் பெறுவது சம்பந் தமாக உங்களுடன் அவர் விவாதிக்க விரும்பு கிறார்.

ஐன்ஸ்டீன் : சரி.. அங்கே என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?

ஸிலார்ட் : யுரேனியம் அணுவைப் பிளந்தால் ஏராளமான சக்தி வெளிப்படும் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கேயும் பிரான்சிலும் அது பற்றி சில சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ஐன்ஸ்டீன் : நானும் அது பற்றிப் படித்தேன். பொருள் சக்தியாக மாறுவதால் அது நிகழ்கிறது.

ஸிலார்ட் : அணுப்பிளவு வினைகளை ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலித் தொடர்போல குறுகிய காலத்தில் நடத்த முடியுமானால் அது கட்டுப்படுத்த முடியாத ஏராளமான சக்தி யை வெளிப்படுத்தும். அது மனிதகுலம் இது வரை சந்தித்திராத ஒரு புதிய ஆயுதமாக ஆக முடியும் !

ஐன்ஸ்டீன் : ஆம், அது நிச்சயம் நடக்கக் கூடியதே. முனைந்து ஆய்வுகள் நடத்தி னால் அப்படி ஓர் ஆயுதத்தை சில ஆண்டு களிலேயே கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் அது மனிதகுலத்திற்கு மிக ஆபத்தானது !

ஸிலார்ட் : அதுதான் என்னுடைய கவலை. செக்கோஸ்லாவாக்கியாவிலுள்ள யுரேனியம் சுரங்கங்களை ஜெர்மனி ஏற்றுக் கொண்டிருக் கிறது. யுரேனியம் விற்பனையை அது நிறுத்தி யுள்ளது. நமது பழைய நண்பர் வெர்னர் ஹைசன்பர்க் அவர்களுக்கு உதவுகிறார் என்று நினைக்கிறேன்.

ஐன்ஸ்டீன் : உண்மை. நான் முற்றிலும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். ஆனால் என்ன செய்யலாம்? நான் எந்தவித குண்டுகளும் தேவையில்லை என்று நினைக் கிறேன். நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.

ஸிலார்ட் : கனடா, பெல்ஜியன் காங்கோ போன்று உலகத்தின் சில இடங்களில் யுரே னியம் கிடைக்கிறது. பெல்ஜியன் காங்கோவி லிருந்து யுரேனியம் ஜெர்மனிக்குக் கிடைக்கா மலிருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அது மட்டுமல்ல, சங்கிலித் தொடர்வினைகள் பற்றி நாம் இங்கே ஆய்வுகள் செய்ய வேண் டும். என்ரிகோ பெர்மி இந்த விஷயத்தில் நம் மோடு இல்லை. நாம் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்டிற்கு கடிதம் எழுத வேண்டும்.

ஐன்ஸ்டீன் : அது நல்ல யோசனை. அந்த கடிதம் எப்படி இருக்க வேண்டும் என் பதை நீங்கள் ஏன் தயாரிக்கக் கூடாது? அக் கடிதத்தை நான் அனுப்புகிறேன்.

அணுகுண்டு நோக்கி ஓட்டம் தொடங்கி விட்டது !

ஐன்ஸ்டீனும், ஸிலார்டும் முடிவு செய்த படி ஒரு கடிதம் 1939 ஆகஸ்ட் 2 அன்று அமெ ரிக்க அதிபருக்கு அனுப்பப் பட்டது. அந்த ஆண்டு செப்டம்பரில் ஜெர்மனி, போலந்தின் மீது படையெடுத்தது. இரண்டாவது உலக யுத்தம் அதிகாரபூர்வமாக அதிலிருந்து தொடங்கிவிட்டது. ஐன்ஸ்டீன்-ஸிலார்ட் கடிதத்தின் விளைவாக ஒரு `யுரேனியம் குழு’ அமைக்கப்பட்டது. ஆனால் அணு விஞ்ஞா னிகள் அடுத்த சில ஆண்டுகளில் குறிப்பி டத்தகுந்த ஆய்வு எதையும் செய்யவில்லை.

1941 டிசம்பரில்தான் இதற்கு முக்கியத் துவம் கொடுத்து ஒரு பெரிய அணு ஆய்வுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதுதான் பின்னா ளில் `மான்ஹட்டன் சோதனைத் திட்டம் (ஆயnாயவவயn ஞசடிதநஉவ)’ என்ற பெயரைப் பெற்றது. அது ஒரு ராணுவத் திட்டம் என்பதால் ஜெனரல் குரோவ்ஸ் அதற்குத் தலைமை ஏற்றார். அகில உலகப்புகழ் வாய்ந்த ஆயிரக் கணக்கான இயற்பியல், வேதியியல் விஞ் ஞானிகளும் பொறியாளர்களும் தங்களை ஈடு படுத்திக் கொண்ட மாபெரும் திட்டமாக அது உருவெடுத்தது. சில விஞ்ஞானிகளைக் குறிப்பிட வேண்டுமென்றால் என்ரிக்கோ பெர்மி, லியோ ஸிலார்ட், ஓப்பன்ஹீமர், வான் நியூமன், டோல்மன் போன்றோரைக் கூற லாம். திட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலோருக்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பது கூடப் பெரிதாக எதுவும் தெரியாது. ஜெர்மனி யில் நடைபெற்ற ஆய்வுக்கு ஆட்டோ ஹான், வைசாக்கர், வெர்னர் ஹைசன்பர்க் போன்ற விஞ்ஞானிகள் தலைமையேற்றனர். சோவி யத் யூனியனிலும் கூட குர்சடாவ் தலைமை யில் ஒரு சிறிய திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஜெர்மன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பிரான்ஸ் நடத்திய எதிர்ப்புப் போரில் முக்கிய பங்காற் றிய கம்யூனிஸ்ட் தலைவர் ஃப்ரெடரிக் ஜோலியோட் க்யூரி தன்னுடைய ஆய்வு அறிக்கைகளுடன் இங்கிலாந்திற்குக் குடி பெயர்ந்தார். அணுகுண்டை நோக்கிய ஓட்டம் தொடங்கிவிட்டது !

மேலே கூறப்பட்ட அனைத்துக் குழுக்க ளும் கட்டுப்படுத்தப்பட்ட சங்கிலித் தொடர் வினைகளை நடத்துவது குறித்த ஆய்வு களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர். இந்த பந்தயத்தில் 1943 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மான்ஹட்டன் சோதனைத் திட்டமே வெற்றியடைந்தது.

1942-க்குப் பிறகு சோவியத் யூனியன் மீது ஜெர்மனி நடத்திய தாக்குதலும், பேர்ல் ஹார்பர் மீது ஜப்பான் நடத்திய தாக்குதலும் இரண்டா வது உலகப் போரின் திசையையே மாற்றிவிட் டன. ஆனால் 1944 இறுதியில் ஜெர்மனி எல்லா இடங்களிலும் தோல்வியைத் தழுவத் தொடங்கியது. ரோமில் முசோலினி பகிரங்க மாகத் தூக்கிலிடப்பட்டார். கிழக்கே ஜப்பான் மிகப் பெரிய தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. நேச நாடுகளின் ராணுவம் பிரான்சை விடுவிப்பதில் வெற்றியடைந்தது. 1945 மே மாத மத்தியில் சோவியத் யூனியனின் செஞ்சேனை பெர்லினை நெருங்கிவிட்டது. ஹிட்லருக்கு எங்கும் தோல்வி.

மீண்டும் அமெரிக்க சோதனைச்சாலை லாஸ் அலமாசுக்கு வருவோம். குண்டுவீச்சு சோதனைக்கு மூன்று மாதங்களுக்கு முன் னால் நடந்த நிகழ்வுகள் முக்கியமானவை.

இலக்கு நிர்ணயிக்கும் குழு

(கூயசபநவ உடிஅஅவைவநந)

1945 மே மாதம் இலக்கு நிர்ணயிக்கும் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஓப்பன்ஹீமர் தான் குழுத் தலைவர். ராணுவத் தலைவர் களுடன் வான் நியூமன், டோல்மன், பெதே போன்ற விஞ்ஞானிகளும் இந்தக் கூட்டத் தில் கலந்து கொண்டு இலக்கைத் தேர்ந்தெ டுப்பது, குண்டு வீசப்படும் இடத்தின் உயரம், பருவநிலை, புதிய குண்டு விளைவிக்கப் போகும் கதிர்வீச்சு மற்றும் உளவியல் பிரச் சனைகள் ஆகியவை பற்றி விவாதித்தனர். அந்த நேரத்தில் சிறிய பையன் (டுவைவடந க்ஷடில), குண்டு மனிதன் (குயவ ஆயn) என்று பெயரிடப்பட்ட இரண்டு குண்டுகளே கைவசம் இருந்தன.

ஓப்பன்ஹீமர் : குண்டுகளை எந்த இடத் தில் வெடிக்கச் செய்யலாம்?

பெதே : `சிறிய பையன்’ குண்டிலிருந்து அதிக அளவு சக்தியான 15000 டன் டிஎன்டி யைப் பெற உயரம் 2400 அடி இருக்கலாம். `குண்டு மனிதனி’டமிருந்து 5000 டன் சக்தி யைப் பெற 1500 அடி உயரம் தேவை.

ஓப்பன்ஹீமர் : இந்த குண்டுகளை எங்கே போடலாம்?

ஸ்டேன்ஸ் (ராணுவம்) : நாம் குண்டு வீசும் இடம் 3 மைல்கள் ஆரம் உள்ள நகரமாக இருக்க வேண்டும். நிறைய மக்கள் தொகை உடைய நகரமாக அது இருக்க வேண்டும். (அடடா, எவ்வளவு நல்ல மனசு ! ) ஆகஸ்ட் வரை இதுதான் இலக்கு என நிர்ணயிக்கப் படாத இடமாக அது இருக்க வேண்டும் ! கியோட்டோ, ஹிரோஷிமா, யோக்கோஹமா, கோக்குரா ஆர்சினல், நிகாட்டா போன்ற இடங்களைப் பரிசீலிக்கலாம். கியோட்டோ, ஹிரோஷிமா இரண்டும் ஹஹ இலக்குகள். யோக்கோஹமா, கோக்குரா ஆர்சினல் ஆகிய வை ஹ இலக்குகள். கடைசியாகக் குறிப்பிட்டது க்ஷ இலக்கு. சக்கரவர்த்தியின் அரண்மனை இலக்காக இருக்கக் கூடாது ! (சாதாரண மக் கள்தான் சாகவேண்டும் என்பதில் அத்தனை குறியாக அமெரிக்க ராணுவம் இருந்திருக் கிறது!) இறுதிப் பரிந்துரை ராணுவத் தலை மையிலிருந்து வர வேண்டும்.

குண்டை எங்கே போடுவது?

இந்த விவாதத்தை அடிப்படையாக வைத்து ஹிரோஷிமா, கியோட்டோ, யோக் கோஹமா, கோக்குரா ஆர்சினல் ஆகிய நான் கும் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றன. கடைசி நேரத்தில் கியோட்டோவை எடுத்து விட்டு அந்த இடத்தில் நாகசாகி சேர்க்கப்பட்டது.

இந்த எல்லா முயற்சிகளையும் தொடங்கி வைத்த லியோ ஸிலார்ட் இந்தக் கட்டத்தில் முற்றிலும் அணுகுண்டுகள் பற்றிய பிரமை கள் நீங்கிய மனிதராக ஆகிவிட்டார். அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவை அறிந்ததும் அவர் கலங்கிப் போனார். அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண் டும் என்று நினைத்தார். ஐன்ஸ்டீன் மூலமாக அதிபர் ரூஸ்வெல்ட்டை முதலிலும் பின்னர் ட்ரூமனையும் அவர் சந்திக்க எடுத்த முயற்சி கள் பலிக்கவில்லை. அவரோடு சேர்ந்து மான் ஹட்டன் சோதனைத் திட்டத்தில் ஈடுபட்ட 69 பேர் கையெழுத்திட்ட ஒரு மனு மூலம் அணு ஆயுதத்தை தார்மீக ரீதியிலும் மனித நேய அடிப்படையிலும் பயன்படுத்த அனும திக்க வேண்டாம் என்று அதிபரை கிட்டத் தட்டக் கெஞ்சினார் என்றே சொல்ல வேண்டும்.

விஞ்ஞானிகளின் மனு

“கீழே கையெழுத்திட்டுள்ள விஞ்ஞானி கள் அணு சக்தித் துறையில் பணிபுரிந்து வரு கிறோம். அண்மைக் காலம் வரை இந்தப் போரில் அமெரிக்கா மீது அணு ஆயுதத் தாக்கு தல் நடக்கக் கூடும் என்பது எங்களது அச்ச மாக இருந்தது. அதனால் திருப்பித் தாக்கும் வகையில் அணு ஆயுதம் வைத்திருப்பது ஒன்றே நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் என நம்பினோம். இன்று, ஜெர்மனி தோற்கடிக்கப் பட்டிருக்கும் சூழலில், அந்த ஆபத்து நீங்கி விட்டது. எனவே நாம் கீழ்க்கண்டவாறு சொல் லக் கடமைப்பட்டிருக்கிறோம் :

“போரை விரைவிலேயே வெற்றிகரமான ஒரு முடிவிற்குக் கொண்டுவர வேண்டும். அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் கள் நடத்துவது மிகச் சிறந்த ஒரு போர்முறை யாக இருக்கலாம். ஆனால் ஜப்பான் மீது இத்த கைய தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்த முடியாது என நாங்கள் கருதுகிறோம்.”

-லியோ ஸிலார்ட் மற்றும் 69 பேர்

முனைவர் டியார்ஜி - பேராசிரியர் கே.ராஜூ

(இக்கட்டுரையின் அடுத்த பகுதி நாளை வெளியாகும்)

கருத்துகள் இல்லை: