திங்கள், 2 ஆகஸ்ட், 2010

புரட்சியின் அடையாளம் தோழர் “சே”

புரட்சிக்கு மிகப்பெரிய அடையாளங்களில் சேகுவேரா ஒருவர் என்று சொன்னால் யாரும் மறுக்க முடியாது. தனது வாழ்நாள் முழுவ தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற மாவீரன். இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட குடும் பத்தில் பிறந்த சேகுவேரா சிறுவய திலிருந்தே அநீதியைக் கண்டு ஆத்திரம் கொள்பவராக இருந்தார். பணக்கார குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் நண்பனாக வளர்ந் தவர். தன்னுடைய இளம் வயதில் தென் அமெரிக்கா முழுவதும் அவர் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணம் ‘சே’வின் வாழ்க் கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத் தியது.

முதலாளித்துவம் மக்களை எவ்வளவு கொடூரமாக பிழிந்தெடுக் கிறது என்பதை கண்கூடாக பார்த் தார். தென் அமெரிக்காவின் பல் வேறு பகுதிகளில் மக்கள் படும் துன்ப துயரங்களை நேரில் சந்தித்த பின்பு இனி புரட்சி மட்டும்தான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தார்.

இந்த சூழ்நிலையில் பிடல் காஸ்ட்ரோ உடனான அறிமுகம் இதை சாத்தியப்படுத்தியது. காஸ்ட் ரோவுடனான முதல் சந்திப்பில் சர்வதேச அரசியலும், கியூபாவுக் கான திட்டங்கள், அரசியல் நடவ டிக்கைகள் பற்றி பேசினார்கள். பிடல் இந்த சந்திப்பைப்பற்றி குறிப் பிடும்போது புரட்சி பற்றி என்னை விட முதிர்ந்த அறிவு ‘சே’வுக்கு இருந்தது. கொள்கை கோட்பாடு ஆகியவற்றில் அவருடைய அறிவு அதிகம். என்னைவிட முதிர்ந்த புரட்சியாளராக அவர் இருந்தார் என்கிறார்.

அமெரிக்காவின் தொடர் தாக்கு தலில் சிக்கியிருந்த கியூபாவின் விடுதலைக்காக போராட களமிறங் கினார். தன்னுடைய பன்முகப்பட்ட திறனை வெளிப்படுத்தியபோது அமெரிக்கா அலறியது. பிடல் காஸ்ட்ரோவின் மூளை பலமும் ‘சே’வின் போர்த் தந்திரமும் கியூபா வின் வெற்றிக்கு துணை நின்றது. கியூபா புரட்சி வெற்றிபெற்றதும் கொஞ்ச காலம் காஸ்ட்ரோ அமைச் சரவையில் பங்கேற்ற ‘சே’ தன்னு டைய அமைச்சர் பதவியை உதறி விட்டு காங்கோவின் விடுதலைக் காக போராட ஆப்பிரிக்காவுக்கு புறப் பட்டார். பிறகு பொலிவியா மக்களின் விடுதலைக்காக போராட அங்கி ருந்து அப்படியே கிளம்பினார். உல கத்தில் எந்த மூலையில் சுரண்டல் இருந்தாலும் அதற்கு எதிரான போராட்டத்தை சமரசம் இல்லாமல் நடத்துவேன் என்ற உரத்த குர லோடு புறப்பட்ட சேகுவேராவை விடாமல் துரத்திய அமெரிக்காவின் சிஐஏ-50க்கும் மேற்பட்ட கொரில்லா வீரர்களை பயன்படுத்தி பொலிவியா காட்டுக்குள் போராடிக் கொண்டி ருந்த சேகுவேராவை சுட்டுக்கொன்றது.

எந்த அமெரிக்க மேலாதிக்கத் தை எதிர்த்து தன் வாழ்நாள் முழு வதும் போராடினாரோ அதே அமெ ரிக்காவில் இப்போது அதிகம் விற் பனையாவது சேகுவேராவின் உருவம் பதித்த டி-சர்ட்டுகள்தான். ‘சே’வின் புரட்சி பயணம் நீண்ட நெடிய பயணம் என்றாலும் அவரின் வாழ்க்கை வரலாற்றை முழுமை யாக படிக்கும் போது புரட்சியின் கனல் அவர் என்று படுகிறது.

நான் இறந்த பிறகு என் துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக் கொள் வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப்பாயும். இதுதான் ‘சே’ சொன்னது. மறக்க முடியுமா இந்த புரட் சிக்காரனை?

ஐ.வி.நாகராஜன்

கருத்துகள் இல்லை: