வெள்ளி, 28 ஜனவரி, 2011

எகிப்து பற்றி எரிகிறது மக்களை நொறுக்கும் அடக்குமுறை



அரசுக்கு எதிரான போராட்டம் அதிகரித்ததால் மக்களின் போராட்டங்களை ஒடுக்க ராணு வத்தை எகிப்து நாட்டின் ஹோஸ்னி முபாரக் தலை மையிலான அரசு இறக்கி விட்டுள்ளது.

தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பல்வேறு நகரங் களில் ராணுவத்தினர் நிறுத் தப்பட்டுள்ளனர். பிரார்த் தனை நாளான வெள்ளி யன்று எதிர்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால் ராணு வத்தை அரசு இறக்கிவிட் டது. ஆனால் மக்களின் கோபத்தால் நிலைமை வெடித்துவிடும் என்று பிரதான எதிர்க்கட்சியான இஸ்லாமிய சகோதரத்து வக் கட்சி எச்சரித்துள்ளது.

மக்களுக்கிடையிலான தொடர்பைத் துண்டிக்க இணையதளங்களை முடக் கும் வேலையையும் முபாரக் அரசு செய்துள்ளது. அர சுக்கு எதிரான மக்களின் போராட்டத்தை அடக்க பயங் கரவாத எதிர்ப்புப் பிரிவை யும் பயன்படுத்தும் அள வுக்கு எகிப்து மோசமான நிலையை எடுத்திருக்கிறது. மக்களின் கருத்தைக் கேட் காமல், அடக்குமுறை நட வடிக்கைகளை அரசு தொடர்ந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்று இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியின் செய்தித்தொடர் பாளர் எஸ்சாம் அல்-அரி யான் எச்சரித்துள்ளார்.

ஆண்டாண்டு காலமா கத் தொடர்ந்து வரும் வறுமை மற்றும் அடக்கு முறை ஆகியவைதான் மக் கள் மத்தியில் கோபத்தை உருவாக்கியுள்ளது. அவர் களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுத்தால்தான் போராட்டங்கள் நிற்கும். இவ்வளவு நாட்கள் அடங் கியிருந்த மக்கள் கிளர்ந் தெழுந்திருப்பது இயல் பான விளைவுதான் என்கி றார் அல் அரியான்.

இதுவரை நடந்துள்ள போராட்டங்களை அடக்க கலவரத்தடுப்பு காவல் துறைப்பிரிவை எகிப்து அரசு இறக்கிவிட்டிருந்தது. அரசு எதிர்ப்பாளர்களில் ஒன்பது பேர் காவல்துறை யினரால் கொல்லப்பட் டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் சுமார் 1,200 பேர் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டிருக் கிறார்கள். அரசோ, 500 பேரை மட்டுமே கைது bச்ய்துள் ளோம் என்று பொய்யான தகவலை வெளி யிட்டு வருகிறது.

நீண்டகாலமாக ஆட்சி யில் இருந்து வரும் ஹோஸ்னி முபாரக் அரசின் கொள்கை கள் மாறும்வரை மக்களின் போராட்டங்களோடு இணைந்து வலம் வரு வோம் என்கிறது இஸ்லா மிய சகோதரத்து வ கட்சி. இக்கட்சியின் தலை வரான எல் பராடேயும் எகிப்து திரும்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை: