வெள்ளி, 28 ஜனவரி, 2011

விலைவாசியாவது ... வெங்காயமாவது ...


“தாலிக்கு தங்கம் எங்கே? .... தாளிக்க வெங்காயம் எங்கே? ” இது சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசும், திமுகவும் வைத்த கோஷம். இன்றைய நிலையும் அதுவாகத்தானே இருக்கிறது. சரி இப்படி கோஷம் வைத்தவர்கள் தானே இன்று ஆட்சியில் இருக்கின்றனர். அப்படியானால் தங்கமும், வெங்காயமும் கிலோ 2 ரூபாய்க்கா விற்கிறது ?. இல் லையே.. விலையோ கிட்ட நெருங்க முடி யாத அளவிற்கு பற்றி எரிகிறதே!. விலை யை கட்டுப்படுத்த இவர்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? அல் லது மக்களை நட்டாற்றில் விட்டு விட் டார்களா? என்பதை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். காங்கிரசுக்கோ காமன்வெல்த் கேம்-ல் டைவ் அடிக்கவே நேரம் போதவில்லை. கூட்டாளி திமுகவோ 2ஜி அலைக் கற் றையில் அலைபாயுவதில் இருந்து நிலைத்து நிற்க நேரமில்லாமல் தவிக் கிறது. இதில் விலைவாசியாவது... வெங் காயமாவது.. என பற்றி எரியும் மக்களின் பிரச்சனையை ஒதுக்கித் தள்ளியிருக் கிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் அனைத்துப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது. பல பொருட்களின் விலையை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. வெங்காயத்தை உரித் தால் கண்ணீர் வரும் என்ற காலம் போய் விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் என்கிற கலிகாலாமாக மாற்றப்பட்டிருக் கிறது. சர்க்கரை கூட வேப்பங்காயாய் கசக்கிறது. சாதாரண, நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களை விலைவாசி உயர்வு ஏறி மிதிக்கிறது. இதனால் வாழ வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

நம் தலையில் மட்டும் ஏன் விலை வாசி உயர்வு இடியாய் இறங்குகிறது. இதில் நடப்பது என்ன? நமது பிரதமர் மன்மோகன் சொல்வது போல், பொருளா தார வளர்ச்சி இருக்கும் போது விலை வாசி உயர்வு இருக்கத்தான் செய்யும் என்பது உண்மையா? அதுதான் தற் போது நடக்கிறதா? அல்லது மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாயிருப்பதால்தான் பொருட்களை வாங்கும் அளவு அதிகரித் துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி உயர்கிறது என்று நமது மத்திய விவசாய அமைச்சர் சரத்பவார் கூறுவது உண்மையா? அல்லது தற் போது பெரும்பகுதி பத்திரிகைகள் எழுதுவது போல் உற்பத்தி இல்லையா?.

விலை உயர்வது எப்படி?

ஒரு பொருளின் தேவை அதிகமாக இருந்து, அதன் விநியோகம் குறைவாக இருந்தால் அப்போது அந்த பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அதைத்தொடர்ந்து இயற்கையாகவே அதன் விலையும் உயரும். அதே போல் ஒரு பொருளின் தேவை குறைவாக இருந்து அதன் விநி யோகம் தேவைக்கு அதிகமாக இருந் தால், அப்போது அந்த பொருளின் விலை இயற்கையாகவே குறையும். வினியோகம் மற்றும் கிராக்கியைப் பொறுத்து அதன் விலைகள் மாறுபடும். இப்படித்தான் ஒரு பொருளின் விலை உயர்வதும், குறைவதும் காலம் காலமாக இருந்து வந்தது.

ஆனால் இந்தியாவில் வெங்காயத் தின் உற்பத்தி கணிசமாக இருந்தும் ஏன் இவ்வளவு விலை உயர்ந்திருக்கிறது. கார ணம் பதுக்கல், கொள்ளை லாபத்திற்காக ஏற்றுமதி, இறக்குமதி, ஒட்டுமொத்தத் தில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அனைத்தும் இன்று கொள்ளை லாபத் திற்கு மட்டுமே என்று ஆகியிருப்பதுதான் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

2008-09 ம் நிதி ஆண்டு( 2008 மார்ச் முதல் 2009 மார்ச் வரை ) வெங்காய உற்பத்தி 1.35 கோடி டன். அப்போது நமது நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் அளவு 17 லட்சத்து 83 ஆயிரம் டன்.

இதில் ஏற்றுமதி எப்படி நடக்கிறது என்பதை பார்க்கலாம். அதாவது நம் நாட் டில் வெங்காயத்தின் கொள்முதல் விலை கிலோவிற்கு ரூ.13 என்று வைத்துக் கொண்டால். இதனை மிகப்பெரிய வியாபாரிகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்து மற்ற நாடுகளில் கிலோ ரூ.25, 30 , 60 என்ற அளவில் விற்பனை செய்வார் கள். இதில் வெங்காயம் பயிரிடும் விவ சாயிகளுக்கு கிலோவிற்கு கிடைக்கும் தொகை வெறும் ரூ.13 மட்டுமே. ஆனால் ஏற்றுமதியின் மூலம் வியாபாரிகளுக்கு அனைத்து செலவுகளும் போக கிடைக்கும் லாபம் மட்டும் கிலோவிற்கு ரூ.10 முதல் 45 வரை இருக்கும். இதில் விவ சாயிகள் பயிரிட்ட செலவுத் தொகை போக மீதத்தை கழித்துப் பார்த்தால் கிலோவிற்கு இரண்டு ரூபாய் கூடுதலாக கிடைத்தாலே பெரிய விஷயம்.

இதே போல் 2009 -10 ம் நிதி ஆண் டில் ஏற்றுமதி செய்த வெங்காயத்தின் அளவு நவம்பர் வரை 10.10 லட்சம் டன். இதனை சென்ற நிதியாண்டுடன் ஒப்பிடு கையில் ஏறக்குறைய 2008-09ம் நிதி ஆண்டு ஏற்றுமதி செய்த அதே அளவை எட்டும் என்பதே மதிப்பீடு.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 2010ம் ஆண்டு ஜனவரி மாதமே வெங்காயத்தின் விலை உயர்வு ஏற்பட்டுவிட்டது. அதாவது ஒரு கிலோ வெங்காயம் ரூ.22 என்ற அளவில் இருந்தது. இதையடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்படும் வெங் காயத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை யாக கிலோவிற்கு ரூ.23.75 என நிர்ணயம் செய்யப்பட்டது. (அதாவது ஒரு டன் ரூ.23735 என அரசு நிர்ணயம் செய்தது). அப்போதும் ஏற்றுமதி நடைபெற்றது. காரணம், இந்தியாவில் ஒரு கிலோ 23.75க்கு வாங்கி வெளிநாட்டில் விற்று அதிக லாபமே அடைந்து வந்தனர். குறைந்தபட்ச ஆதார விலை உயர்வால் மொத்த வியாபாரிகளுக்கு லாபத்தின் அளவு சிறிது குறைந்ததே தவிர பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. இதே போன்று அடுத்த 9 மாதங்களில் மேலும் வெங் காயத்தின் விலை பன்மடங்கு அதிகரித் தது. உடனே மேலும் ஏற்றுமதி செய்யப் படும் வெங்காயத்தின் மீது குறைந்த பட்ச ஆதார விலை 50 டாலர் (ரூ.2500- டால ருக்கு ரூ 50 என்ற அடிப்படையில் ) இருந்து 75 டாலராக (ரூ.3750) உயர்த்தப் பட்டது. இதுதான் வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு எடுத்த அதிக பட்ச நடவடிக்கை.

இதற்கு அடுத்ததாக 2010 டிசம்பர் மாதம் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.90, 100 என்ற அளவிற்கு சென்றது. மக்கள் கோபம் எல்லாம் அரசின் மீது திரும்புவது போல் தெரிந்தது. உடனே மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. அதுவும் ஜனவரி 15 வரை என அறிவித்தது. அதன் பின்னர் ஏற்றுமதி செய்து கொள்ளலாமாம் என அறிவித்தது.

அரசு செய்திருக்க வேண்டியது என்ன ?

1. 2010 ஜனவரியில் வெங்காய விலை உயர்வு ஏற்பட்டவுடன் உடனே வெங்காய ஏற்றுமதியை தடை செய்திருக்க வேண் டும். அப்படி செய்திருந்தால் இந்தாண்டு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கும் சுமார் 12 லட்சம் டன் வெங்காயம் உள்நாட்டு சந்தையில் புழங்கியிருக்கும். அப்படி புழங்கப்பட்டிருக்கும் போது விலை உயர்வு இந்த அளவு ஏற்பட்டிருக்காது.

2. வெங்காய விலை அதிகரிக்கும் போதும் ஏற்றுமதிக்கு அனுமதி கொடுப்ப தால், உள்நாட்டில் வெங்காயத்தின் தேவைக்கேற்ற இருப்பில் மேலும் குறையும். அப்படி குறையும் போது தேவை அதிகமாக இருந்து வினியோகம் குறை வாக இருக்கும். இந்நிலையில் மேலும் அதிக விலை உயர்வே ஏற்படும். இதனை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு தொடர்ந்து ஏற்றுமதிக்கு அனுமதி கொடுத்தது வெங்காய விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

3.நேரடியாக விவசாயிகள் வெங்கா யத்தை சேமித்து வைக்கும் வகையில் அரசே சேமிப்புக் கிடங்குகளை போதிய அளவில் ஏற்படுத்தி இருப்பு வைத்தி ருக்க வேண்டும். தேவையை கணக்கில் கொண்டு சரக்கை சந்தைப்படுத்தி யிருக்க வேண்டும். இப்படி ஏராளமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தி ருக்க வேண்டும்.

வெங்காயத்தை உரிக்க உரிக்க இறுதியில் ஒன்றும் இல்லாமல் போகும். அதுதான் இன்று வெங்காய விவசாயிகள் நிலை மட்டுமல்ல. ஒட்டுமொத்த விவ சாயிகளின் நிலையும் கூட. இன்று நடுத் தர மற்றும் சாதாரண உழைப்பாளி மக்கள் வெங்காய விலையை கேட்டாலே கண் ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக் கின்றனர். விவசாயிகளின் செந்நீரும், மக் களின் கண்ணீரும் பெரும் வியாபாரி களின் கல்லாப் பெட்டிகளில் ரூபாய் கட் டுக்களாக நிறைகிறது. ஆளுபவர்களின் கூட்டிற்கும் இதில் ஒரு பகுதி பங்கு போய் சேருகிறது என்பதுதானே உண்மை நிலவரமாக உள்ளது.

(பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள விலைவாசி உயர்வும் வெங்காயக்கனவும் என்ற புத்தகத்திலிருந்து )

2 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

இன்றைய இந்திய அரசியலையும், அரசியல்வாதிகளையும் இந்தியனையும் பார்த்த பிறகு எவனுக்கும் ஜன நாயகத்திலும் தேர்தலிலும் நம்பிக்கை இழந்துவிடுவான். எல்லாமே கேலிகூத்தாகி விட்டது. மெதுவாக வெள்ளையன் ஆட்சியே மேல் என்ற் எண்ணம் தோன்ற ஆரம்பித்து விட்டது. அவனுங்களை விட அதிகமாக இவனுங்கள் நமது நாட்டு சொத்தை வெளி நாட்டு வங்கிகளுக்கு கொண்டு போய்விட்டான்.