ஞாயிறு, 6 மார்ச், 2011

அரபு மக்களின் எழுச்சியும், அமெரிக்காவின் எரிச்சலும்


லிபிய ராணுவத்தில் ஒரு தளபதியாக இருந்த கலோனல் மும்மர் கடாபி, தனது 28வது வயதில், எகிப்து தேசத்தில் தனது நண் பர் அப்துல் நாசர் நடத்திய கிளர்ச் சிகரமான நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1969ம் ஆண்டு லிபியாவின் மன்னர் முதலாம் இட்ரிஸின் ஆட்சி யை வீழ்த்தினார். அதிகாரத் திற்கு வந்தபின்னர் நிலச்சீர் திருத்தம் மற்றும் எண் ணெய் வளம் தேசிய மயம் போன்ற முக்கிய மான, புரட்சிகரமான நடவடிக்கைகளை அமல் படுத்தினார். லிபியாவின் வரு மானம் அதிகரித்தது. இந்த வருமானத்தை பொரு ளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணித் தார். குறிப்பாக, மிகப் பெரும் பகுதி பாலைவன மாகவும், மிகமிகக் குறைவான அளவே பயன் படுத்தக்கூடிய நிலம் கொண்டதாகவும் இருக்கிற இந்த நாட்டில் வாழும் மிகச் சிறிய எண்ணிக்கையிலான மக்களின் கல்வி மற் றும் சுகாதார வசதிகள் மேம்பாட்டிற்கு, நாட் டின் வருமானம் பெருமளவு பயன்படுத்தப்பட்டது.

பாலைவனத்தின் அடி ஆழத்தில் மிகப் பரந்து விரிந்த, கடல்போன்று நீரூற்று வளம் நிறைந்து கிடக்கிறது. இங்கு நடக்கும் விவ சாய முறைகள் குறித்து ஒரு முறை நான் கேட் டறிந்தேன். அது என்னை மிகவும் ஈர்த்தது. எதிர்காலத்தில் எண்ணெயை விட விவசாய மும், நீரூற்று வளமும் இங்கு மதிப்புமிக்கதாக மாறும்.

முஸ்லிம் நாடுகளுக்கே உரிய மத நம் பிக்கையின் குணாம்சங்கள் இருந்தாலும், இந்த அரபு தேசத்தில் வலுவான பழங்குடி யின மரபுகள் இன்னும் உறுதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

லிபியாவில் இருக்கும் புரட்சியாளர்கள் பிரிந்து கிடக்கிறார்கள்; அந்நாட்டின் சட்டம் மற்றும் அரசியல் நிறுவனங்கள் தொடர்பாக தங்களது சொந்த கருத்துக்களை பின்பற்றி வருகிறார்கள். கொள்கை அடிப்படையில், இவர்கள் அனைவரது கருத்துக்களையும் கியூபா மதிக்கிறது.

லிபிய அரசின் தலைமை பின்பற்றி வரும் நடைமுறைகளும் அவர்களது சொந்த கருத் தோட்டத்தில் அமைந்தவை.

இங்கு நாம் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவென்றால், அமெரிக்காவும் நேட்டோ ராணுவ கூட்டணியும் லிபியாவைப் பற்றி கவலைப்படவில்லை என்பது தான்; அவர் களது அடிப்படையான கவலை, அரபு உலகம் முழுவதிலும் பெரும் அலையாக எழுந்துள்ள புரட்சிகர போராட்டங்கள் பற்றியதே. இந்தப் போராட்டங்களை என்ன விலைகொடுத் தேனும் தடுத்து நிறுத்துவது தான் அமெரிக்கா மற்றும் நேட்டோ அணியின் நோக்கம்.

எகிப்திலும், துனீஷியாவிலும் மிகப்பெரும் மக்கள் எழுச்சி உருவாகும் வரையிலும், அந்த நாடுகளது தலைவர்களுடன் அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டணியும் மிகமிக நெருக் கமான உறவு கொண்டிருந்தன என்பது மறுக்கமுடியாத உண்மை.

அதேபோலவே, லிபியாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே நடந்த உயர்மட்ட சந்திப்புகளில், கடாபியுடன் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. உலகி லேயே உயர்தரமான எண்ணெயும், இயற்கை எரிவாயுவும் கிடைக்கிற மிக முக்கியமான நாடு லிபியா. பொட்டாசியம் சப்ளையில் கூட லிபியாவுக்கு முக்கிய இடம் உண்டு. இவர்க ளுக்கு இடையே ஏற்கெனவே எழுந்த பிரச்ச னைகள் கூட பின்நாட்களில் சமரசம் செய்து கொள்ளப்பட்டன.

இதைத் தொடர்ந்து எண்ணெய் வளத்தை தோண்டி எடுத்தல் மற்றும் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்தல் போன்ற கேந்தி ரமான துறைகள் அந்நிய முதலீட்டிற்கு திறந்து விடப்பட்டன.

பல பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டன. தீவிர தாராளமயம் மற்றும் தனியார்மய நடவடிக்கைகளை லிபியாவில் நடைமுறைப்படுத்துவதில் பன்னாட்டு நிதி நிறுவனம் (ஐஎம்எப்) முன்னின்று கடமையாற் றியது.

கடாபியை அஸ்னர் வெகுவாக பாராட்டி னார். அவரைத் தொடர்ந்து டோனிபிளேர், சில்வியோ பெர்லுஸ்கோனி, நிகோலஸ் சர்கோஸி, ஜெபாட்டரோ மற்றும் எனது நண் பரும் ஸ்பெயின் மன்னரும் கூட கடாபியை பாராட்டினார்கள்; புகழ்ந்தார்கள். கடந்த கால நிகழ்வுகளை மறந்து எல்லோரும் மகிழ்ச்சி யாகத் தான் இருந்தார்கள்.

ஆனால் இப்போது என்ன ஆகிவிட்டது? நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன்; இப்போது கடாபியை அவர்கள் ஏன் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன் றத்தில் நிறுத்தவிரும்புகிறார்கள்?

தன்னை எதிர்த்துப் போராடுகிற நிராயுத பாணிகளான குடிமக்களை துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளுவதாக இவர்கள், கடாபி மீது 24 மணி நேரமும் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு கேள்வி எழுகிறது; தனது மக்களை ஒடுக்குவதற்காக லிபியாவால் வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கிற ஆயுதங்கள் மற்றும் மிக நவீனமான ராணுவ தளவாடங்கள் எல்லாம் அமெரிக்காவாலும், பிரிட்டனாலும் மற்றும் இதர நாடுகளாலும் சப்ளை செய்யப்பட்டவை தான் என்பதை இவர்கள் ஏன் இந்த உலகத்திற்குத் தெரிவிக்க மறுக்கிறார்கள்?

இன்றைக்கு லிபியாவில் படைகளைக் குவித்து, அந்நாட்டின் மீது போர் தொடுத்து, அந்நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக் கில் பொய்களைக் கட்டவிழ்த்து கொண்டிருப் பதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

கடைசியாக கடந்த 2001 ம் ஆண்டு மே மாதம் நான் கடாபியை சந்தித்தேன். அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகனால் தாக்கப்பட்டு 15 ஆண்டுகள் கழிந்து விட்ட தனது மிக நவீ னமான அந்த வீட்டிற்கு என்னை கடாபி அழைத்துச் சென்றார். அமெ ரிக்க ராணுவ விமானங்க ளால் நேரடியாக குண்டுவீச்சு நடத்தப்பட்ட மாளிகை அது. பெருமளவிற்கு சிதைந்து போயிருந்தது; அந்த தாக்குத லில் கடாபியின் 3 வயது செல்ல மகள் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டாள்; ரொனால்டு ரீகனால் அந்தக் குழந்தை கொல்லப்பட்டாள். இது குறித்தெல்லாம் நேட்டோவும் சரி, மனித உரிமைகள் கமிட் டியும் சரி, அல்லது ஐ.நா. சபை பாதுகாப்புக் கவுன்சிலும் சரி எப்போதும் கவலை தெரிவித்தது இல்லை.

இதற்கு முன்பு 1977ல் நான் லிபியாவுக்கு சென்றிருந்தேன். லிபியாவில் புரட்சிகர நட வடிக்கைகள் துவங்கி 8 ஆண்டுகளுக்கு பின் னர் இந்தப் பயணம். நான் திரிபோலி நகருக் குச் சென்றேன்; செபா என்னுமிடத்தில் நடந்த பொதுமக்கள் மாநாட்டில் பங்கேற்றேன்; நீரூற் றுக்களில் இருந்து தண்ணீரை கொண்டுவந்து, விவசாய உற்பத்தி செய்யப்படும் இடங்களை முதலில் பார்வையிட்டேன்; பெங்காளி நகருக் குச் சென்றேன், அங்கு மக்கள் மிக எழுச்சி கரமான வரவேற்பை அளித்தார்கள். இரண் டாம் உலகப்போர் காலகட்டத்தில், வரலாற் றில் முக்கியத்துவம் பெற்ற மகத்தான ஒரு நாடு லிபியா. இப்போது இருப்பதை போல 60 லட்சம் குடும்பங்களை அப்போது அது பெற் றிருக்க வில்லை; இப்போது இருப்பதை போல மிகப் பெருவாரியான எண்ணெய் மற்றும் நீரூற்று வளத்தை அது கண்டறிந்திருக்க வில்லை. போர்ச்சுகீசியர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்த ஆப்பிரிக்க தேசம் இரண்டாம் உலகப்போர் காலகட்டத் தில் தான் விடுதலை அடைந்தது.

அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்டு ரீகன் ஆட்சியில் இருந்த காலத்தில், அங் கோலாவில் எழுந்த புரட்சிகர சக்திகளை ஒழித்துக் கட்டுவதற்காக 1962-ல் துவங்கி மிகக் கொடிய ஆயுதங்களுடன் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது; நமீபியாவிலும் தாக்கு தலை கட்டவிழ்த்துவிட்டது. இந்தக் கொடிய போரில், பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஆப்பி ரிக்க- அரபு மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன.

இன்றைக்கு லிபியாவைச் சுற்றி உருவாக் கப்படும் போர் மேகம், லட்சக்கணக்கான அரபு மக்களின் உயிருக்கு உலை வைக்கும் பேரா பத்தாக எழுந்துள்ளது.

அரபு உலகில் எழுந்துள்ள புரட்சி, அமெ ரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது. அரபு உலகில் இன்றைக்கு போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர்கள்; ஒடுக்கப்பட்டவர்கள்.

லிபியாவில் நெருக்கடி துவங்கியவுடன், சவூதி அரேபியாவில் தோண்டி எடுக்கப் படும் எண்ணெய்யின் அளவு நாளொன்றுக்கு 10 லட்சம் பேரல்களாக அதிகரித்துவிட்டது. மிகக் குறைந்த செலவில் எடுக்கப்படும் இந்த எண்ணெய் மூலம் அந்த நாட்டின் வருமான மும், அதைக் கட்டுப்படுத்தும் நாட்டின் வருமானமும் நாளொன்றுக்கு 100 கோடி டாலர் அளவிற்கு அதிகரித்துள்ளது.

இப்படிச் சொல்லும் போது சவூதி மக்கள் பணத்தில் நீந்திக் கொண்டிருக்கிறார்கள் என்று யாரும் கற்பனை செய்ய வேண்டாம். அங்கு வேலைக்காக அலைந்து கொண்டிருக் கும் ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழி லாளர்களும், இதர பல துறைகளில் பணி யாற்றும் தொழிலாளர்களும் நாளொன்றுக்கு 13 மணி நேரம், 14 மணி நேரம் வேலை வாங்கப் படுகிறார்கள்; மிகமிகக் குறைவான கூலிக்கு!

ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற கேடுகெட்ட ஆட்சியமைப்பு முறையை அதி ரச் செய்துள்ளது அரபு உலகின் புரட்சிகர அலை; எகிப்திலும் துனீஷியாவிலும் தொழி லாளர்கள் வீதிகளுக்கு வந்து கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்; ஜோர்டானில் தொழிலாளர் களோடு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட இளைஞர்கள் கைகோர்த்துக் கொண்டார்கள்; பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் உறுதியோடு அணி திரண்டிருக்கி றார்கள். ஏமனில் பெரும் கிளர்ச்சி நீடிக்கிறது; தனி நபர் வருமானம் அதிகமாக உள்ள நாடு என்று சொல்லப்படுகிற ஐக்கிய அரபு எமி ரேட்டிலும், பஹ்ரைனிலும் கூட கிளர்ச்சி வெடித்துள்ளது. நீடிக்கும் இந்தப் போராட்டங் கள் சவூதியிலும் எதிரொலித்துக் கொண்டி ருக்கின்றன.

இத்தகைய பின்னணியில் தான், அண்டை நாடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அரபு உலகின் அனைத்து மக்களும் தெரிந்துகொள்ள முடியாத விதத்தில் அனைத் துச் செய்திகளும் திட்டமிட்டு திரிக்கப்படு கின்றன.

அரபு மக்களின் இந்த மகத்தான போராட் டம் எத்தகைய சூழலில் நடக்கிறது? உலகம் முழுவதிலும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது; பருவநிலை மாற்றம் மிகக் கொடிய விளைவுகளை உரு வாக்கிக் கொண்டிருக்கிறது; அதே தருணத் தில் உலகிலேயே அதிகமாக சோளத்தை விளைவிக்கும் நாடான அமெரிக்கா, தனது உற்பத்தியில் 40 சதவீதத்தையும், சோயா பீன்ஸ் உற்பத்தியில் பெருவாரியான பங்கி னையும் தனது நாட்டின் வாகனங்களுக்கு உயிரி எரிபொருள் தயாரிக்க வீணாக்கிக் கொண்டிருக்கிறது.

லிபியாவில் நேட்டோ ராணுவப் படை களின் தலையீடு இல்லாமல் ஒரு அமைதி யான தீர்வை ஏற்படுத்த வெனிசுலா ஜனா திபதி ஹியூகோ சாவேஸ் முயற்சி மேற் கொண்டுள்ளார். அவரது கருத்துக்கு உலக அளவில் பரந்துவிரிந்த ஆதரவு எட்டப்படு மானால், இராக் தேசத்தின் மக்கள் அனு பவித்த அந்தக் கொடிய போரை லிபிய மக்கள் எதிர்கொள்ளாமல் தப்பிக்கலாம்.


கிரான்மா, மார்ச் 3

தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை: