சனி, 5 மார்ச், 2011

ஏன் கம்யூனிஸ்ட்கள் வெற்றிபெற வேண்டும்


மேற்கு வங்கத்தில், தொடர்ந்து ஏழு முறை ஆட்சியில் அமர்ந்துள்ள இடது முன்ன ணியைத் தோற்கடிப்பதற்காகக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் பிரதான எதிர்ப்பாளர்கள் திரிணாமுல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியாகும். திரிணாமுல் காங்கிரசானது, இடது முன்னணியைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, பயங்கரவாத நடவடிக்கைகளையும் வன்முறை யையும் கட்டவிழ்த்துவிட்டு வரும் ‘மாவோ யிஸ்ட்டுகளுடன்’ வெளிப்படையாகவே செயல்பட்டு வருகிறது. 2009 மே மாதம் நடை பெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்குப் பின் இதுநாள்வரை திரிணாமுல் - ‘மாவோயிஸ்ட்’ கும்பல் சுமார் 400 இடது முன்னணி ஊழியர்களைக் கொன்று குவித்துள்ளது.


மேலும், இதே திரிணாமுல் காங்கிரஸ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் அங்கம் வகித்தது. இக் கட்சியின் தலைவர் இப்போது ஐ.மு.கூட் டணி அரசாங்கத்தில் இருப்பதுபோலவே அப்போதும் ரயில்வே அமைச்சராக இருந்தார். 2001இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்த லின்போது காங்கிரசுடன் சேர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே தேசிய ஜனநாய கக் கூட்டணியிலிருந்து திரிணாமுல் காங்கி ரஸ் விலகியது. பின்னர் 2002இல் குஜராத் தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடை பெற்ற மதப் படுகொலைகளுக்குப் பின் மீண் டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கக் கூட்டணியில் சேர்ந்து கொண்டது. இவ்வாறு, இக்கட்சியானது குஜராத்தில் பாஜக மேற்கொண்ட மதவெறிப் படுகொலைகளைச் சரியென ஏற்றுக்கொண்டதொரு கட்சியாகும்.

மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியும், இவ்வாறு கொடூரமான மதப் படுகொலைகளைச் செய்திட்டவர் களோடு கூட்டணி வைத்துக் கொண்டு, கறைபடிந்த கரங்களோடு திரும்பி வந்தவர்க ளோடு மீண்டும் கைகோர்க்கிறோமே என்பது குறித்துக் கொஞ்சம் கூட மனவுறுத்தல் கொள்ளவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓர் அங்கமாக இருந்த சமயத்தில், திரிணாமுல் காங்கிரசானது வங்கத்திற்குள் மதவெறி சக்திகள் நுழைய அனுமதித்தது, நாடாளுமன் றத்திற்கும் ஒருசில பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்று நுழைவதற்கு வழிவகுத்துத் தந்தது.

இன்று, ஐ.மு.கூட்டணி அரசாங்கத் தின் ஓர் அங்கம் என்ற விதத்தில், வங்கத்திற் குள் ‘மாவோயிஸ்ட்டுகள்’ நுழைவதற்கும் அவர்கள் தங்கள் தளங்களை அமைத்துக் கொள்வதற்கும் வழிவகுத்துத் தந்திருக்கிறது. அவர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட அனைத்து விதங்களிலும் ஒத்துழைத்துக் கொண்டிருக்கிறது.


மேற்கு வங்கத்தில் இடது முன்னணியும், கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியும் வெற்றி பெறுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று நாம் ஏன் கோருகிறோம்?

சிறந்ததோர் சுதந்திர இந்தியாவை உருவாக்க வேண்டும் என்கிற தொலைநோக்கோடுதான் நாம் மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் இடதுசாரிகள் தலைமையிலான அமைப்புக ளைப் பாதுகாக்க வேண்டும்.

நாட்டு விடுதலைக்கான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மூன்று விதமான தொலைநோக்குப் பார்வைகள் முன்னுக்கு வந்திருந்தன. முதலாவது தொலைநோக்குப் பார்வை என்பது, நாம் அடையவிருக்கும் சுதந்திர இந்தியா, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக அமைய வேண்டும் என்பதாகும்.

இரண்டாவது தொலைநோக்குப் பார்வை என்பது, அமைய விருக்கும் இந்தியா, பிரிட்டிஷ் காலனியாதிக் கத்திடமிருந்து அரசியல் விடுதலை அடைவ தோடுமட்டும் இருந்துவிடாது, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை ஒருமுகப்படுத்துவ தோடு, பெற்ற அரசியல் சுதந்திரத்தை அனைத்து மக்களுக்குமான உண்மையான பொருளாதார சுதந்திரத்தையும் அடையக் கூடிய விதத்தில், அதாவது, சோசலிச அமைப்பை நிறுவக்கூடிய விதத்தில் மாற் றியமைத்திட வேண்டும்.

மூன்றாவதான தொலைநோக்குப் பார்வை மேற்படி இரு தொலைநோக்குப் பார்வைக ளுக்கும் முற்றிலும் எதிரான ஒன்றாகும். அது, மக்களின் மதச்சார்பான எண்ணிக்கையின் அடிப்படையில் அடைய விருக்கும் சுதந்திர இந்தியாவின் குணம் அமைந்திட வேண்டும் என்பதாகும்.

இதன்கீழ் இரு வெளிப்பாடுகள் முன்னுக்கு வந்தன. ஆர்எஸ்எஸ் இயக்கமானது தன்னுடைய வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற ‘‘இந்து ராஷ்ட்ரத்தை’’ நியாயப்படுத்தியது. முஸ்லிம் லீக் இஸ்லாமியக் குடியரசை நிறுவ வேண்டும் என்பதற்காக நாட்டைத் துண்டாட வேண்டும் என்றது. இவ்வாறு மூன்றுவிதமான தொலைநோக்குப் பார்வைக ளுக்கும் இடையே நடைபெற்ற தத்துவார்த்தப் போராட்டம் இன்றளவும் தொடர்கிறது.

மேற்கு வங்கமும், கேரளாவும் இடதுசாரிகள் முன்வைத்த தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தும் சின்னங்களாக தற்போது விளங்குகின்றன. எனவேதான் இம்மாநில அரசுகளைப் பாதுகாப்பது என்பது நாட்டின் இடதுசாரிகளின் தொலைநோக்குப் பார்வையையும், முக்கியமாக இந்தியாவையும் பாதுகாப்பது என்று கூறுகிறோம். சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு நம்முன் உள்ள முன்நிபந்தனையாக இது அமைந்துள்ளது.

சுதந்திர இந்தியாவில் மாநிலங்களை மொழிவாரி மாநிலங்களாகப் பிரிப்பதற்கான போராட்டம் கம்யூனிஸ்ட்டுகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. விசாலாந்திரா, ஐக்கிய கேரளா மற்றும் சம்யுக்த மகாராஷ்டிரா ஆகியவை இந்தியாவின் அரசியல் அமைப்புகளுக்கு அடித்தளமிட்டவைகளாகும்.

கம்யூனிஸ்ட்டுகளால் தலைமை தாங்கப்பட்ட விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டங்கள் நிலச்சீர்திருத்தங்களையும், நிலப்பிரபுத் துவத்தை ஒழிப்பதற்கான போராட்டங்களை யும் அவர்களின் போராட்ட நிகழ்ச்சிநிரலில் இணைத்தன. இவ்வாறு கம்யூனிஸ்ட்டு களின் தலைமையில் நடைபெற்ற விவசாயிக ளின் போராட்டங்கள் கிராமப்புற இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு சுதந்திர இந்தியாவில் பொருளாதாரத்திலும் மேம்படுத் தப்பட்ட நிலையினை அளித்தது. இடதுசாரி அரசாங்கங்கள் அதிகாரப் பரவலைக் கொண்டு வந்ததும், ஜனநாயகத்தை ஆழமாகக் கொண்டு சென்றதும் நாட்டில் உள்ள ஜனநாயக அரசி யல் அமைப்புகளை வலுப்படுத்தி இன்றைய இந்தியாவை உருவாக்கி இருக்கிறது.

மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் உள்ள இடதுசாரி அரசாங்கங்கள் தங்களுக்குள்ள அதிகார வரம்புக்குள்ளேயே எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தி இருக்கின்றன.

நாட்டின் பிற பகுதிகளில் உள்ள முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ முறைக்கு மாற்றாக இடதுசாரிப் பாதையை முன்னிறுத்தி செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன.

மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதிலும், மத நல்லிணக்கத்தைப் பேணுவதிலும் இடதுசாரிகள் மிகவும் உறுதியுடன் இருந்து வருகிறார்கள். சிறுபான்மையினரின் உரிமை களைப்பாது காப்பதுடன் நின்றுவிடாமல், ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரை களை அமல்படுத்துவதில் நாட்டிலேயே மேற்கு வங்கத்தில் உள்ள இடது முன்னணி அரசாங்கம் தான் முதலாவதாக முன்வந்துள் ளது. மாநிலத்தில் உள்ள இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினரில் உள்ள முஸ்லிம்களுக்கு பத்து விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி இருக்கிறது.

மத்திய அரசு, கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக மிகவும் கடுமையாக அரிக்கப்பட் டுள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்திலிருந்து அவர்களை மேம்படுத்துவதற்காகவும், மக்க ளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் இடதுசாரிகள் தான் முன்னணியில் நின்று போராடி வருகிறார்கள். ஏகாதிபத்தியத்துடன் ராணுவக் கூட்டணியை ஏற்படுத்திக் கொள் வதன் மூலம் நாட்டையும் நாட்டு மக்களின் நலன்களையும் ஏகாதிபத்தியத்தின் காலடி களில் சமர்ப்பித்திட முயலும் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக இடதுசாரிகள்தான் உறுதியுடன் போராடி வருகிறார்கள்.

மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் நமக்குள்ள குறைந்தபட்ச அதிகார வரம்புக்குள்ளேயே பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அமல் படுத்தி இருக்கிறோம், மக்களுக்குப் பெரிய அளவில் நிவாரணங்களை வழங்கி இருக்கி றோம், அதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கங் களின் சுரண்டல் குணத்தையும் தோலுரித் துக் காட்டியிருக்கிறோம். இவை அனைத்தின் காரணங்களாலும்தான், இந்திய ஆளும் வர்க்கங்கள் ஒன்றுசேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டைகளாக விளங்கும் மேற்கு வங்கத்தின் மீதும் கேரளா மீதும் தாக்குதலைத் தொடுத்து வருகின்றன.

இடதுசாரிகள் மேற்கு வங்கத்தில் அமைதியான சூழ்நிலையில் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் வலுவான ஜனநாயகப் பாதையில் முன்னேறவும் உறுதி பூண்டிருக்கிறார்கள்.

மேற்கு வங்க மக்களால் உருவாக்கப்பட்டுள்ள முன் னேற்றங்களைப் பாதுகாத்திடவும், தங்களுக்கு எதிராகத் திரண்டுள்ள பிற்போக்கு மற்றும் அராஜகவாதிகளின் கூட்டணியைத் தோற்கடிக்கவும், அரசியல்ரீதியாகத் தனி மைப்படுத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன்னணி உறுதியுடன் இருக்கிறது.

1970களில் இதே சக்திகளுக்கு எதிராக நடைபெற்ற நீண்ட நெடிய போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தோழர்கள் 1400க்கும் மேற்பட் டவர்கள் தியாகிகளானார்கள், 22 ஆயிரத்திற் கும் மேற்பட்ட கட்சிக் குடும்பங்கள் இடம் பெயர்ந்து சென்றன. அதன்பின்னர் 1977இல் நடைபெற்ற தேர்தலில்தான் இடது முன் னணி மகத்தான வெற்றி பெற்றது. அதிலிருந்து இன்றுவரை தொடர்ந்து மக்களுக்குத் தொண்டாற்றி வருகிறது. மாநிலத்தில் அமை தியை நிலைநிறுத்தி, வளர்ச்சித் திட்டங் களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக் கக்கூடிய அதே சமயத்தில் ஜனநாயகத்தை யும் ஆழமாக வேரூன்றச் செய்திருக்கிறது.

எனவேதான், மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசாங்கத்தைப் பாதுகாப்பது என்பது சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்கான நம்முடைய போராட்டத்தின் முக்கியமானதொரு முன்நிபந்தனையாகும்.

தமிழில்: ச.வீரமணி

1 கருத்து:

Unknown சொன்னது…

மாவோக்களை, மேற்கு வங்கத்தில் வளர்த்தது கம்யூனிஸ்டுகள் தானே! சங்பரிவாரங்களைப் போல, மாவோக்கள் ,கம்யூனிஸ்டுகளின் வன்முறைப் பிரிவினர் தானே?