செவ்வாய், 17 மார்ச், 2009

மக்களை ஏமாற்றிய காங்கிரஸ்; சிறுபான்மையினரை வேட்டையாடிய பாஜக பிரகாஷ்காரத் சாடல்

காங்கிரஸ் தலைமையிலிருந்த கடந்த ஐந்தாண்டு கால ஐமுகூ அரசானது, மக்களுக்குப் பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்து விட்டது.

கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் சமூக ஏற்றத்தாழ்வுகள் மேலும் ஆழமாகிவிட்டன. பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகவும், ஏழை கள் மிக மோசமான நிலைக்கும் மாறி யுள்ளனர். 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற் பத்தியில் 9 சதவீத வளர்ச்சியைக் கண்டிருப்பதாக அரசு தொடர்ந்து பீற்றிக் கொண்டு வருகிறது. ஆனால், சாமானிய மக்க ளுக்கு மேலும் மேலும் துன்ப துயரங்கள் மிஞ்சியிருக்கின்றன.

ஐமுகூ ஆட்சியை, குறைந்த பட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில்தான் இடதுசாரிக் கட்சிகள் ஆதரித்தன. ஆனால், குறைந்த பட்ச செயல் திட்டத்தில் அளிக்கப் பட்ட உறுதிமொழிகளில் பெரும் பாலானவற்றிற்கு எதிராகத்தான் அரசு செயல்பட்டது. இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட விவசாய நெருக்கடியைத் தீர்க்க முடிய வில்லை. நெருக்கடிக்கு ஆளான விவ சாயிகள் தற்கொலை செய்வது இன்றும் தொடர்கிறது. வேலையில்லாத் திண் டாட்டம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் ஆட்சியா ளர்கள் பணவீக்கம் 4 சதவீதமாகக் குறைந்துவிட்டதாக கதையளந்து கொண்டிருக்கிறார்கள். 

ஆட்சியாளர்கள் பொது விநியோக முறையை சீர்குலைப்பதில்தான் குறி யாக இருந்தார்களேயொழிய, அதனை வலுப்படுத்த முன்வரவில்லை.

நாட்டில் பெரும் பணக்காரர்களுக் கும் சாமானிய மக்களுக்கும் இடை யில் ஏற்றுக் கொள்ள முடியாத அள விற்கு மிகப்பெரும் இடைவெளி ஏற்பட்டிருப்பதற்கு, ஐமுகூ அரசு கடைப்பிடித்த நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளே கார ணமாகும். 

மதவெறியர்களை தடுக்கவில்லை

கடந்த 2004ஆம் ஆண்டு, மத வெறி பாஜக தலைமையிலான கூட் டணியைத் தனிமைப்படுத்த வேண் டும் என்ற நோக்கத்தோடுதான் ஐ.மு.கூ. அரசை ஆதரித்தோம். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்தோமானால், அது மதவெறி சக்திகளுக்கு எதிராக, நடவடிக்கை கள் எடுக்கத் தயங்கியதையும், ஊச லாடியதையும், அவற்றுடன் சமரசம் செய்து கொண்டதையும் பார்த்தோம். ஒரிசாவில் கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்டனர். கர்நாடகா வில் இந்து - முஸ்லிம் மாணவர்கள் நட்புடன் இருப்பதையே சகித்துக் கொள்ள முடியாமல், தாக்குதல் தொடுத்தனர். நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் அடிப்படையில் மத வெறியர்களுக்கு எதிரான பரிந்துரை கள் எதையும் அமல்படுத்த அரசு முன்வரவில்லை. 

ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்த அரசு

அயல்துறைக் கொள்கையைப் பொறுத்தவரை, நாட்டு மக்களுக்கு ஐ.மு.கூ. அரசு மிகப்பெரும் துரோகம் இழைத்துவிட்டது. குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை வரை யறுக்கும்போதே, இந்தியா சுயேட்சை யான அயல்துறைக் கொள்கையைப் பின்பற்றும் என்ற உறுதிமொழியை அரசு அளித்தது. அதில், அமெரிக்கா வுடனான போர்த்தந்திர உடன்பாடு (ளவசயவநபiஉ யடடயைnஉந) குறித்து எதுவும் குறிப்பிடப்பட வில்லை. அமெரிக்கா வுடன் ராணுவக் கூட்டணி வேண் டாம் என்று இந்த அரசிடம் திரும்பத் திரும்ப வலியுறுத்தினோம். ஆனால் அதை, அவர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதற்கு அவர்கள் கூறிய காரணம், நாட்டிற்கு யுரேனியம் தேவைப்படுகிறது என்றும், அது இல்லாமல் நம் நாட்டில் உள்ள அணு உலைகளை இயக்க முடியாது என்றும் கூறினார்கள். ஆனால் நம் நாட்டிலேயே யுரேனியத்தைத் தோண்டி எடுக்க முடியும் என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி, தன்னுடைய அறிக்கை யில் சாடியிருக்கிறார். ஆயினும் ஆட் சியாளர்கள் எதைப்பற்றியும் கவலைப் படாமல் அமெரிக்காவிடமிருந்து அணு உலைகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். இதன் காரணமாக 38 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அணுஉலைகளை இந்தியா இறக்குமதி செய்ய இருக்கி றது. இதன்மூலம் உற்பத்தி செய்யப் படும் மின்சாரத்தின் கட்டணமும் கடுமையாக இருக்கும். இதனால் மக் கள் கடுமையாகப் பாதிக்கப்படு வார்கள்.

நாட்டின் அயல்துறைக் கொள் கையைப் பொறுத்தவரை, காங்கிரஸ் தலைமையிலான அரசு, துரதிர்ஷ்ட வசமாக, அணிசேராக் கொள்கை யைக் கைவிட்டுவிட்டது. அதனால் தான் அரசுக்கு அளித்துவந்த ஆத ரவை, இடதுசாரிக் கட்சிகள் விலக் கிக் கொண்டன. 

ஐமுகூ அரசுக்கு அதன் முதல் நான்கு ஆண்டுகாலம் ஆதரவு அளித்து வந்த சமயத்தில், குறைந்த பட்ச பொது செயல் திட்டத்தில் கூறப்பட்ட உறுதிமொழிகளை நிறை வேற்றுமாறு அரசை பல வழியிலும் நிர்ப்பந்தித்தோம். 

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் கொண்டுவரப்பட்ட சமயத்தில் அதில் பல திருத்தங் களைக் கொண்டுவந்தோம். அவ் வாறு கொண்டுவந்திராவிடில் அந்தச் சட்டமே பயனற்றுப் போயிருக் கும். அதேபோல் பழங்குடியினர் வன உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் ‘கட்-ஆப்’ ஆண்டுகள் தொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் திருத்தம் கொண்டுவந்திராவிட்டால், இந்நேரம் பழங்குடியின மக்கள் வனங்களிலி ருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப் பார்கள். 

ஐமுகூ அரசாங்கம், நாட்டில் தனியார் வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க முயற்சித் தது. அதேபோல் காப்பீட்டுத்துறை யிலும் அந்நிய நேரடி முதலீட்டின் வரம்பை அதிகரிக்க முயன்றது. இவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் உறுதியுடன் தடுத்திருக்காவிட் டால், உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் நம் நாட்டில் உள்ள தனியார் வங்கிகள் அனைத்தும் காணாமல் போயிருந்திருக்கும். இன்சூரன்ஸ் துறையும் கடுமையான சிதைவை சந்தித்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

7 கருத்துகள்:

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ சொன்னது…

//மக்களை ஏமாற்றிய காங்கிரஸ்; //

நான்கரை ஆண்டுகள் உறுதுணையாக இருந்த பிரகாஷ்காரத் என்று தலைப்பு இருக்க வேண்டும். :)

காங்கிரசின் நல்லவை கெட்டவை அனைத்து செயல்களுக்கும் (அணு ஒப்பந்தம் தவிர) கம்யூனிஸ்டுகளுக்கு பங்குண்டு. இப்போ வெளிய வந்துட்டு நல்ல பிள்ளை நாங்க மட்டும் தான் என்று சொல்ல்க் கூடாது. :)

விடுதலை சொன்னது…

முதலில் ஒரு விசயத்தில் தெளிவாகவேண்டியது இருக்கிறது பட்டாம்பூச்சிக்கு 2004 தேர்தலின் முழுநோக்கமும் வகுப்புவாத கட்சியான பாசகவை எப்படியாவது தூக்கி எரிவது, அவர்களை மீண்டும் ஆட்சிக்குவராமல் தடுப்பது அவர்களின் பலத்தை குறைப்பது என்ற ரீதியில்தான் இடதுசாரிகள் கடந்த ஆட்சியை ஆதரித்தார்களே தவிர. பதவி சுகத்திற்காகவோ, பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதற்காகவோ அல்ல என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் நன்பரே.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ சொன்னது…

பணம் சம்பாதிபப்தை பற்றி நான் பேசவே இல்லை விடுதலை. கம்யூனிஸ்டுகள் பேருந்துகளில் தான் இன்னும் பயணம் செய்கிறார்கள் போலும்.

4.5ஆண்டுகள் ஆட்சியில் உடன் இருந்துவிட்டு இப்போது குறை சொல்வது ஏன்? நான்கரை ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியது இவர்களுக்குத் தெரியாதா? அப்போதே வெளியே வந்து மூன்றாவதோ எதோ ஒரு அணியை உருவாக்கி நல்லாட்டி புரிந்திருக்கலாமே.

//2004 தேர்தலின் முழுநோக்கமும் வகுப்புவாத கட்சியான பாசகவை எப்படியாவது தூக்கி எரிவது, அவர்களை மீண்டும் ஆட்சிக்குவராமல் தடுப்பது அவர்களின் பலத்தை குறைப்பது என்ற ரீதியில்தான் இடதுசாரிகள் கடந்த ஆட்சியை ஆதரித்தார்களே தவிர//

இப்போது பாஜக ஆட்சிக்கு வ்ந்தால் என்ன செய்வார்கள்? மீண்டும் மக்களை ஏமாற்றிய காங்கிரசை ஆதரிப்பார்களா?

சும்மா வாதம் செய்வதற்காக தயவு செய்து 3வது அணி ஆட்சியை பிடிக்கும் என்று சொல்ல வேண்டாம். அது முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.

-/சஞ்சய்

விடுதலை சொன்னது…

//கம்யூனிஸ்டுகள் பேருந்துகளில் தான் இன்னும் பயணம் செய்கிறார்கள் போலும்.//

நன்றி சஞ்சய் நன்பரே அதுமட்டுமல்ல தற்போது உள்ள எம்பிகளில் மிகவும் எழ்மையாவனர்கள் இடதுசாரி எம்பிகள் மட்டுமே. யாருக்கும் சொந்த கார் இல்லை டெல்லில் தனிவீடு இல்லை. யார் மீதும் எந்த வழக்கும் இல்லை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

//மீண்டும் மக்களை ஏமாற்றிய காங்கிரசை ஆதரிப்பார்களா?//

நிச்சயம் அப்படி ஒருதவரை இடதுசாரிகள் மீண்டும் செய்யமாட்டார்கள் என்பதை உறுதிநீங்கள் நம்பலாம்.

//சும்மா வாதம் செய்வதற்காக தயவு செய்து 3வது அணி ஆட்சியை பிடிக்கும் என்று சொல்ல வேண்டாம்.//

நம்பிக்கையின் அடிப்படையில் நாம் எடுக்கு முயற்சியை உறுதியோடு தொடர்ந்து செயல்படுத்தும்போது வெற்றி நிச்சயம் நன்பரே. இதுவெறும் கற்பனை அடிப்படையிலோ வெற்று நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல நாம் முடிவு எடுப்பது. இந்திய அரசியலின் தற்போதை தன்மை மூன்றாவது மாற்று என்ற கோசத்திற்கு சாதகமாக இருப்பதை தேர்தல் முடிவு நிச்சயம் தெளிவு படுத்தும்.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ சொன்னது…

//இந்திய அரசியலின் தற்போதை தன்மை மூன்றாவது மாற்று என்ற கோசத்திற்கு சாதகமாக இருப்பதை தேர்தல் முடிவு நிச்சயம் தெளிவு படுத்தும்.//

மாயாவதி உத்திரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கும் வேபாளர்களை அறிவித்துவிட்டார் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன் விடுதலை. மேலும் நாடு முழுதுமே அவர் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். அவர் மூன்றாவது அணியில் இல்லையா?

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ சொன்னது…

//தற்போது உள்ள எம்பிகளில் மிகவும் எழ்மையாவனர்கள் இடதுசாரி எம்பிகள் மட்டுமே. யாருக்கும் சொந்த கார் இல்லை டெல்லில் தனிவீடு இல்லை. யார் மீதும் எந்த வழக்கும் இல்லை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.//

ஆர் எஸ் எஸ் அமைப்பினர் டில்லியில் கம்யூனிஸ்டு அலுவலகத்தை தாக்கிய போது எத்தனை கார்கள் அடித்து நொறுக்கப் பட்டது, சமீபத்தில் தா.பாண்டியன் வீட்டில் எரிக்கப் பட்ட கார் என்ன மாடல் என்ற தகவல்களை விரைவில் தருகிறேன். :))

இந்த Word Verification ஐ எடுத்து விடுங்களேன்.

விடுதலை சொன்னது…

சஞ்சய் அவர்களே
மாயாவதி மூன்றாவது மாற்று அணியில்தான் இருக்கிறார் . இந்த கூட்டணி முடிவு ஆவதற்கு முன்பே அவர் தன் கட்சி நாடு முழுவதும் தனித்து போட்டிடும் என்று கூறியவர்தான் அந்த அடிப்படையில் அவர் அறிவித்திருக்கிறார்.

இடதுசாரிகளில் ஒரு சிலரை தவிர அவர்களை நீங்கள் விரல் விட்டு என்னிவிடலாம்
கட்சிக்கு ஆலுவலக கார்கள் சில உண்டு முக்கிய தலைவர்களுக்கு கட்சி வழங்கிய கார்கள் உண்டு மற்றப்படி 95 சதமானவர்கள் கார்கள் ஏதும் அற்றவர்கள்