சனி, 2 ஏப்ரல், 2011

திமுக ஆட்சியில் மறக்க முடியாத சம்பவங்கள்



2006 மே மாதத்தில் நடந்த சட்டமன் றத் தேர்தல் முடிந்த கையோடு, அக்டோப ரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென் னை மாநகராட்சியில் ஆளும் திமுகவினர் நடத்திய வன்முறை வெறியாட்டமும், ரவுடி களைப் பயன்படுத்தி வாக்குச்சாவடிகளை கைப்பற்றி இஷ்டத்திற்கு வாக்களித்துக் கொண்டதும், சினிமா பாணியில் பட்டாக் கத்திகளோடு டாடா சுமோ கார்களில் எம்எல் ஏக்கள் தலைமையில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதும், வாக்காளர்களை ஓட்டுப் போட முடியாமல் தடுத்து ஜனநாயகப் படு கொலையை அரங்கேற்றியதையும் மறக்க முடியுமா?

தனித்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் மீது திமுகவினர் கடு மையான தாக்குதலை தொடுத்ததையும், 59வது வட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கவுன் சிலர் தேவியையும், அவருடன் இருந்தவர் களையும் திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு தலைமையிலான கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதையும் மறக்க முடியுமா?

திமுகவினரின் இந்த ஜனநாயகப் படு கொலையை சென்னை உயர்நீதிமன்றம் கண் டித்ததோடு, 99 வார்டுகளுக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டதையும், திமுகவினரின் மனமும்,குணமும் மாறவில்லை என்பது அப்போதே வெளிப்பட்டதை மறக்க முடியுமா?

பீகார் பாணியில் நடந்த அந்த தேர்தலின் போது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக லத்திகா சரண் இருந்ததையும் மறக்க முடியுமா?

உள்ளாட்சித் தேர்தலையடுத்து, திமுக வினரின் அதிகார வேட்கையை கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலிலும் தொடர்ந் ததையும் மறக்க முடியுமா?

மாற்று சங்கத்தினர் மனுத்தாக்கல் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டனர். மீறி வேட்புமனு தாக்கல் செய்தவர்களுடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டதையும்,

போக்குவரத்து ஊழியர் சொசைட்டி களில் வாக்குச்சாவடியை கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டதை தடுத்தவர்கள் தாக்கப் பட்டதையும் மறக்க முடியுமா?

மாநிலம் முழுவதும் திமுகவினர் நடத்திய அராஜகத்திற்கு எதிராக பெரும் போராட்டங் கள் நடத்தியதின் விளைவாக கூட்டுறவு சங்கத் தேர்தலையே ரத்து செய்யப்பட்ட தையும் மறக்க முடியுமா?

தினகரன் அலுவலகம் எரிப்பு

முரசொலி மாறன் குடும்பத்தினருக்கு சொந்தமான தினகரன் நாளேடு கருத்துக் கணிப்பு என்ற பேரில் மு.க.அழகிரியைவிட, ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் ஆதரவு அதிகம் என்று வெளியிட்டதும், இதனை தாங் கிக்கொள்ள முடியாத அழகிரி ஆட்கள் மது ரையில் தினகரன் பத்திரிகை அலுவலகத்தை அடித்து நொறுக்கி, தீவைத்து கொளுத்தியதை யும், தீயில் சிக்கி மூன்று ஊழியர்கள் பலியான தையும் மறக்க முடியுமா?

போலீசார் கண்முன்பாகவே நடந்த இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட யாரும் தண்டிக் கப்படாததும், நீதிமன்ற விசாரணையில் சாட் சிகள் பல்டி அடிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பிக்கவிடப்பட்டதும் மறக்க முடியுமா?

தினகரன் அலுவலகம் எரிப்புக்கு பின், மாறன் குடும்பத்துக்கும், திமுக தலைவர் குடும்பத்துக்கும் இடையே பெரிய விரிசல் ஏற்பட்டதையும், தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட தையும், அதன் விளைவாக மாறன் குடும்பத் தினர் நடத்தி வரும் சுமங்கலி கேபிள் விஷ னுக்கு போட்டியாக அழகிரி தரப்பில் ராயல் கேபிள் விஷன் துவக்கப்பட்டதையும், திமுக வின் தலைமை அலுவலகமான அறிவால யத்தில் இருந்த சன் டிவி இடமாற்றம் செய்யப் பட்டதையும் சன் டிவிக்கு போட்டியாக கலைஞர் டிவி துவக்கப்பட்டதையும் மறக்க முடியுமா?

மாறன் சகோதரர்களைப் பழிவாங்கும் விதமாக திமுக தலைவரும் தனது பங்கிற்கு அரசு நிறுவனமான எல்காட் மூலம் அரசு கேபிள் டிவி பலநூறு கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டதும். மாறன் குடும்பத்தினர் தயாரிப்பில் வெளிவந்த “காதலில் விழுந் தேன்” என்ற திரைப்படத்தை எந்த தியேட்டரி லும் வெளியிட முடியாமல் தடுக்கப்பட்ட தையும் மறக்க முடியுமா?

ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர்

அரசு கேபிள் டி.வி.யை நிர்வகிக்கும் எல்காட் இயக்குனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர், சுமங்கலியால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும், சம்பந்தப்பட்ட வர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்ததையும், அவருடைய பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர் மீது போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்ததாக அபாண்டமான பழியை சுமத்தி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டதையும், அரசின் நடவடிக் கையை எதிர்த்து உமாசங்கர் நீதிமன்றம் சென்றதையும், அரசியல் கட்சிகளின் கடும் கண்டனத்திற்கு பிறகு அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டதையும் மறக்க முடியுமா?

தீண்டாமையை தீண்டாத அரசு

தமிழகத்தில் காலம் காலமாக புரை யோடிக்கிடக்கும் சாதி அடக்குமுறைகள் பல வழிகளில் இன்றும் தொடருவதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் முயற்சியால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பு துவக்கப்பட்டு, அந்த அமைப்பு தமிழகத்தில் எங்கெங்கு, எந்தெந்த வடிவங்களில் தீண்டாமைகள் தலைவிரித் துள்ளன என்று அரசுக்கு ஆதாரபூர்வமான அறிக்கை அளித்தும் அந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க முன்வராத திமுக அரசு, தீண்டாமைகளை எதிர்த்து போராடு வோர் மீது காவல்துறையை வைத்து தடியடி, பொய்வழக்கு, சிறை என தீண்டாமையை தீண்டாத அரசாக நடந்து கொண்டதை மறக்க முடியுமா?

விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர் கிரா மத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவி லுக்குள் அனுமதிக்க வேண்டுமென்று போரா டியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதும், இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதாவை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதும், கீழே விழுந்த அவரை பூட்ஸ் காலால் மிதித்து வயிற்றுக்குள் ஏற்பட்ட பாதிப்பால் சிறுநீர் வெளியேறாத நிலைக்கு ஆளானதையும் மறக்க முடியுமா?

திமுக சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரை சாதி பெயரை குறிப்பிட்டு தரக்குறைவாக பேசி அடிக்க பாய்ந்ததை மறக்க முடியுமா?

நில அபகரிப்பு, ஆள் கடத்தலில் ஈடுபட் டதாக திமுக அமைச்சராக இருந்த என்.கே. கே.பி.ராஜா கைது செய்யப்பட்டது மறக்க முடியுமா?

படுகொலைகள்

கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராக போராடிய பள்ளிப்பாளையம் வேலுச்சாமி, காவல்நிலையம் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்டதையும்,

கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடிய திருவாரூர் நாவலன், திமுக ஒன்றியச் செய லாளர் பன்னீர்செல்வம் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டதையும்,

திமுக அமைச்சர்கள் கண் முன்னா லேயே காவல்துறை உதவி ஆய்வாளர் வெற்றிவேல் ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும், தமிழகம் கூலிப்படைக ளின், ரவுடிகளின் ராஜ்யமாக மாறியுள்ளதை மறக்க முடியுமா?

நீதிமன்றத்தையும் விட்டுவைக்காதவர்கள்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற் குள் காவல்துறை அத்துமீறி நுழைந்து, வழக் கறிஞர்களை தாக்கியதையும், இத்தாக்குத லில் நீதிபதிகளையும் அடித்ததையும், நீதி மன்றத்திற்கு அருகில் உள்ள வழக்கறிஞர் களின் அலுவலகங்களுக்குள் புகுந்து தாக்கி யதையும் மறக்க முடியுமா?

நீதி வழங்கும் இடமே போர்க்களம் போல் காட்சியளித்ததை மறக்க முடியுமா? இந்த அத்துமீறலுக்கு உத்தரவிட்டவர் யார் என்ப தில் காவல்துறை அதிகாரிகளிடையே பழி போடல் படலத்தை மறக்க முடியுமா?

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களி டையே நடந்த சண்டைக் காட்சியை தொலைக்காட்சியில் கண்டவர்களில் மனம் கலங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால், அங்கிருந்த காவல்துறையினர் கல்மனம் படைத்தவர்களாக சண்டையை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்ததை யும், அவர்களை அவ்வாறு இருக்க வேண்டு மென்று உத்தரவிட்டவர்களையும் மறக்க முடியுமா?

தனக்கு வேண்டப்பட்டவரின் வழக்கில் சாதகமாக தீர்ப்பு அளிக்க வேண்டுமென்று நீதிபதியையே மிரட்டிய திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவை மறக்க முடியுமா?

-க.திருச்செல்வன்

1 கருத்து:

ganesh சொன்னது…

திமுக ஆட்சியின் சாதனைகளை சரியா பட்டியலிட்டிருக்கீங்க. . . .

இவர்களின் பின்னடைவுதான் நாட்டின் முன்னேற்றம்..

திமுக இந்த தேர்தல் ல தோக்கணும்...(இதை விட முக்கியம் மக்கள் மேல் அக்கறையா ஆட்சி நடத்த ஒரு கட்சி மட்டுமே ஆட்சியில் அமரனும்..யார் அது?

போட்டி போட்டு கொள்ளை அடிக்க ஓட்டு பிச்சை கேட்டு வர ஓநாய்களை சுட்டு கொல்லலாம். .

அது முக்கியமில்லையே!

மக்களின் தேவைகளை நிறைவேற்ற ஒரு நல்ல மாணவர் சமுதாயம் ஆட்சியை நடத்த வேண்டும்....