ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

தேர்தல் ஆணையத்துக்கு நன்றி சொல்லும் ஆடுகளும், பறவைகளும்


தமிழகத்தில் சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. அதற்குப்பின் தமிழகம் தனது மாமூலான முகத்தோற்றத்தி லிருந்து மாறிவிட்டது.

ஆள் உயர கட் அவுட்டுகள், வண்ண வண்ணச் சுவரொட்டிகள், ராட்சத பதாகை துணிகள், இவைகளை எங்கும் காணோம்.

அண்மைத் தமிழகம் சமீபகாலத்தில் தேர்தலின் போது வேறு சில காட்சிகளையும் கண்டது. அது திருமங்கலம் பார்முலா எனப் பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயத் தை மாற்றத்துடிக்கும் மு.க.அழகிரிதான் அந்த பார்முலாவிற்கு கொலம்பஸ்.

இதன்படி ஆடு, கோழி வெளியில் எங்கும் சுதந்திரமாக மேய்ந்துவிட முடியாது. பிடித்து கழுத்தை வெட்டி கல்யாண மண்டபங்களில் மதுபுட்டிகளுடன் விருந்து நடத்தப்பட்டது. விருந்தில் கலந்து கொண்டவர்கள் கறியுடன் மொய்யும் கொடுத்து கவனிக்கப்பட்டனர். வீடு களுக்கு பல பார்சல்கள் அனுப்பப்பட்டன. வாகனங்கள் பெட்ரோலால் அல்ல, கரன்சி நோட்டுக்களால் நிரப்பப்பட்டிருந்தன. வாக்கா ளர்களுக்கு கட்டாய லஞ்சம் திணிக்கப்பட் டது. லஞ்சம் வாங்காதவர்கள் மிரட்டப்பட்டனர்.


இந்த தேர்தலில் தேர்தல் கமிஷன் சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இத னால் ஆளும் கட்சி கூட்டணி கலங்கி நிற்கி றது. திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தேர்தல் கமிஷன் மீது அடுக் கடுக்காக குற்றம் சுமத்துகின்றன. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் நீதிமன் றம் தலையிட்டுள்ளது.

சட்டத்திற்கு குந்தகமாக, அநீதியாக சில நிகழ்வுகள் நடைபெறும்போது உயர்நீதிமன் றம், உச்சநீதிமன்றம் தாமே தலையிடுவது உண்டு. நியாயம் கிடைக்கச் செய்த முன்னு தாரணங்களும் உள்ளன.

உதாரணமாக, 2011 பிப்ரவரி 11 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதிகள் பி.ஜோதிமணி, டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் சென்னையில் ஓர் ஆய்வினை மேற்கொண்டனர். சென்னை யில் உள்ள ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அன்று காலை சென்றனர்.

அந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞர்க ளுக்கு கூட தேவையான அடிப்படை வசதி கள் இல்லை. இருக்கை வசதி போதுமான தாக இல்லை. வழக்குரைஞர்களுக்கே இல் லை என்றால், மற்றவர்கள் நிலை பற்றி கேட்க வேண்டியது இல்லை. குடிநீர் வசதி, கழிவறை வசதி ஆகியன நீதிமன்றத்திற்கும், கைதிகளுக்கும், பொதுமக்களுக்கும் இல் லை. சட்ட உதவி மையம் மழை நீர் ஒழுகும் வகையில் இருந்தது.

நீதிமன்றத்திற்கு திரும்பிய அவர்கள் மேலே சொன்ன நிலை குறித்து விசாரிக்க பெஞ்சில் முடிவு செய்தனர். பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் கருணாகர னை அங்கு வரவழைத்தனர். லட்சக்கணக்கில் டிவி பெட்டிக் கொடுக்கும் அரசு, குடிக்க தண் ணீர் கொடுக்க முடியாதா என்று கேட்டனர்.

தமிழகத்தில் உள்ள எல்லா நீதிமன்றங் களிலும் வசதிகள் இன்னும் கூட செய்து தரப் படவில்லை என்பது தனி விவகாரம். இதே போல் நீதிமன்ற தலையீடுகள் தேவைப்படும் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்படும் பிரச்சனைகள் ஏராளம் உள்ளன.

எனினும் பொது மக்கள் நலன் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் ஒரு பிரச்சனை யில் தலையிட்டு தீர்வு காண முயன்றது.

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இன்னொரு பிரச்சனையில் தலையிட்டது.

தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி ஆவேசத்துடன் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

யாரும் இஷ்டப்படி பண நோட்டுக்களை அள்ளிச் செல்ல முடியவில்லை. அதிகாரி கள் இஷ்டப்படி வேலை பார்க்க முடியவில் லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ற பெயரில் வர்த்தகர்கள், தனி நபர்கள் துன்புறுத் தப்படுகின்றனர் என்று தம் வேதனையை வெளியிட்டிருந்தார். சொல்லப்போனால் வெள்ளையன் தலைமையிலான வர்த்தகர் அமைப்பு கூட தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை எதிர்க்கவில்லை.

அதற்கு முன்னதாக தமிழக முதலமைச்ச ருக்கு கடலூர் அரசு விருந்தினர் மாளிகை யில் தங்குவதற்கு 3 நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் விதித்திருந்தது. மக்களின் வரிப் பணத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் தங்கக்கூடாது. தங்குவது எனில் 3 நிபந்தனைகளுக்கு அவர்கள் உட் பட வேண்டும். விருந்தினர் மாளிகையில் அர சியல் கட்சியினரை சந்திக்கக்கூடாது. தேர் தல் பிரச்சாரம் செய்யக்கூடாது. செய்தியாளர் களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது (தினமணி 24.3.2011). நியாயமாகப் பார்த்தால் தமிழக முதலமைச்சர் இதனை வரவேற்றிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குடும்ப பரிவாரத்துடன் செங்கோல் செலுத் தும் தமிழக முதல்வரை இந்நிகழ்வு காயப் படுத்திவிட்டது. எல்லா கூட்டங்களிலும் முதல்வர், தேர்தல் ஆணையம் மீது கல் எறிகிறார்.

மாமிச விருந்து நடத்துவதும், வாக்குக ளுக்கு லஞ்சத்தை பணமாகவோ, வேறு வகையிலோ வாரி வழங்குவதும் ஆகிய ‘திரு மங்கலம் பார்முலா’ தெருவில் திகைத்து நிற் கிறது. ஜனநாயக நாட்டில் பண வசதி உள்ள கட்சிகள் ஏராளமான பொருள் செலவில் மயக்கமூட்டும் வகையில் பிரச்சாரம் செய்வ தும் தடுக்கப்பட்டுள்ளது. இப்போது கூட போலீஸ் வாகனங்களில் பணம் கடத்தப்படு வதாக, தேர்தல் ஆணையம் கூறுகிறது. வெளி நாட்டு வங்கிகளில் கறுப்புப்பணத்தை பதுக் கியோர் பட்டியல் உச்சநீதிமன்றத்தில் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஜீப்புகளில் வாக்காளர்களுக்கு லஞ்சப் பணத்தை அள் ளிச்சென்றோர் பட்டியலும் தேர்தல் ஆணை யத்தால் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் மாற் றம் குறித்து தமிழக முதலமைச்சர் வெகுண் டெழுகிறார். கட்டாய விடுப்பில் அனுப்பப் படும் அந்த அதிகாரிகளின் லட்சணம் என்ன? ஒருவர் சென்னை மாநகராட்சி தேர்தல் மோச டிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் கண்ட னம் செய்யப்பட்டவர். மற்றொருவர், திமுக அர சால் முறைகேடாக நிலம் பெற்றவர். மக்கள் மிரண்டு போய் வாக்களிக்க வராமல் இருந்து விடக்கூடாது என்று தைரியம் கொடுப்பதற் காக தமிழகம் சாராத பல்வேறு அதிகாரிகள் தேர்தல் பணிக்கு இங்கு வந்துள்ளனர். தேர் தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கை கள் பின்னர் ஜனநாயகப்பூர்வமாக விவாதிக் கப்படலாம். வரும் காலத்தில் தேவைக்கேற்ப நெறிப்படுத்தப்படலாம்.

திமுக கூட்டணிக் கட்சியினர் அனை வரும் தேர்தல் ஆணையத்தை முழு மூச்சு டன் தாக்கி வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றமும் இதில் தலையிட்டது.

தமிழக முதல்வரின் அறிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலிப் தர்மராவ், எப். வேணுகோபால் ஆகியோர் 23.3.2011 அன்று வழக்காக எடுத்துக்கொண்டனர்.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் சார்ந்து முதல்வரின் அறிக்கையில் உள்ள விஷயங் கள் அமைந்துள்ளன. தேர்தல் அட்டவணை, வாக்கு எண்ணிக்கை தேதி, அதிகாரிகள் இட மாற்றம், பணம் கொண்டு செல்ல அனுமதி, பறி முதல் குறித்த பல கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது. இந்திய தேர்தல் ஆணையர், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் மத்திய அரசு செயலாளர் ஆகியோருக்கு இந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு அனுப்பியது.

23.3.2011 அன்று தலைமை நீதிபதி இல் லை. அடுத்த நிலையில் நீதிபதி எலீப் தர்ம ராவ் இருந்தார். 28.3.2011 அன்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவ ஞானம் ஆகியோர் மறு உத்தரவிட்டனர்.

தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் அடிப் படையில் முதல்வரின் அறிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட அரசியல் அமைப்புச்சட்டம் சார்ந்த கேள்விகளை இந்த நீதிமன்றம் மேற் கொண்டு விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டதால் தேர்தல் தேதி, தேர்தல் முடிவை வெளியிடுதல் என எல்லா விஷயங்களும் தேர்தல் ஆணையத்தின் கட் டுப்பாட்டுக்குள் வந்துவிடும். எனவே இந்நீதி மன்றம் தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது. அரிதிலும், அரிதான வழக்குகளில் மட்டுமே இந்த நீதிமன்றம் தலையிட முடியும் என்று கூறி, முதல்வரின் அறிக்கையை வழக்காக விசாரிக்க வேண் டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை அத்துடன் முடித்துக்கொண்டுவிட்டது.

தேர்தல் அறிவிப்பு வெளியான தினத்திற்கு தொடங்கி, வாக்கு எண்ணிக்கை முடிவடை யும் வரையில்தான் தேர்தல் கமிஷனின் அதி காரம் என்று உச்சநீதிமன்றம் முன்பே ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. தேர்தல் வழக்குகளில் அப்பாவியாக தோற்றம் தந்து பழுது இல்லாத மனுவை பதிவு செய்பவர்கள், நீதிமன்றத்தை உள்நோக்கத்துடன் தவறாக பயன்படுத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை மாநகராட்சி தேர்தல் மோசடி குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முன்பு ஒரு முறை கண்டித்தது. தமிழக முதல்வர் முன்னி லையில் நீதிபதிகள் என்ன கடவுளா என்று ஒருமுறை ஆர்க்காடு வீராசாமி கேட்டார்.

சாதகமாக ஒரு வழக்கில் ஒரு உத்தரவு வந்தால் தாண்டிக்குதிக்கும் திமுக, பாதகமாக வந்துவிட்டால் கண்டுகொள்ளாமல் பதுங்கி விடுகிறது. பத்து ரூபாய் பணம் எடுத்துச் சென்றவன் பிடிக்கப்பட்டதாக இதுவரை புகார் இல்லை. அதுபோல் கருணாநிதி 31.3.2011 அன்று ஈரோட்டில் பேசியுள்ளார்.

நடப்பு அமலில் உள்ள சட்டப்படி தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை 1.4.2011ல் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது.

தமிழ் நிலத்தையே திருமங்கலமாக மாற்ற நினைத்தவர்கள் தடுமாறுகின்றனர். ஆடுகளும், பறவைகளும் நிம்மதி பெருமூச்சுவிடு கின்றன. சாராய வெள்ளம் தேங்கி குட்டை யாக நிற்கிறது. மஞ்சள் பிசாசாக பணம் பதுங்கி, பேய்விழி விழிக்கிறது. தேர்தல் ஆணையமும், வாக்காளர்களும் மேலும் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது. தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன் றத்தில் ஓர் உண்மையை தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரியே வாக்காளர்களுக்கு லஞ்சப் பணத்தை பட்டுவாடா செய்ததையும் ரெய்டு நடத்தப்போவதை காவல்துறை அதி காரிகளே முன்கூட்டி தகவல் கொடுத்து உஷார்படுத்தியதையும் தேர்தல் ஆணையம் பகிரங்கப்படுத்தி உள்ளது (30.03.2011, தினமலர்). திமுக வெற்றி பெற எதை வேண்டு மானாலும் செய்யலாம். ஜூலியட்டை கொல்ல அது ரோமியோவையே பயன்படுத்தலாம். இந்தப் போலி கதாபாத்திரங்களை மக்கள் அம்பலப்படுத்த வேண்டும்.

வெ.ஜீவக்குமார்

கருத்துகள் இல்லை: