முதலாளிகளுக்கு
முதுகு சொரியும்
உழைப்பாளியின்
முதுகை ஒடிக்கும்
பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!
அம்மாவின் அன்புக்கு
அளவு கொடுக்கும்
அப்பாவின் பாசத்திற்கு
எல்லை விதிக்கும்.
பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!
தினம்-வீட்டின்
மகிழ்ச்சியை தின்பதும்
அமைதியை அனுமதிப்பதும்
அதன் உண்மையான குணம்.
பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!
பசியால் நான்
தெரு நாய்யைபோல்
சாவதை
சத்தம்போட்டு ரசிக்கும்.
பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!
நான் விரும்பியது
இதுதான் என்று
என்னைக்கேட்காமலேயே
என்மீது தினிக்கும்.
பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!
என் காதலின் உயிரை
குற்றவுணர்வு இன்றி
கொன்று குவிக்கும்
நடுத்தெருவில்
அம்மணமாய்
அலையவும் விடும்.
பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!
வக்கற்று
வார்த்தை அற்று
மருத்துவம் பார்க்க
வழியின்றி என் குழந்தை
இறப்பதை பார்த்து
நீ பிழைக்க
தெரியாதவன் என்று
சொல்லி சிரிக்கும்.
பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!
பணத்ததைத் தவிர
ஒட்டும் இல்லை
உறவும் யில்லை
பணம். பணம் செய்கிறது
உலகமயமாக்கல்
ஏழையைக் கொள்கிறது.
தயவுசெய்து
பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக