புதன், 19 ஜனவரி, 2011

அமெரிக்க உளவாளிகளை வெளியேற்றுங்கள் ஸ்விட்சர்லாந்து எம்.பி.க்கள் ஆவேசம்

சட்டவிரோதமாக உளவுவேலை பார்த்தனர் என்ற குற்றச்சாட்டில் சிக் கியிருக்கும் அமெரிக்க தூத ரக அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என்று ஸ்விட்சர்லாந்து நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆவே சக் குரல் எழுப்பினர்.

ஜெனிவாவில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் உளவுவேலை பார்த்து வந்த விபரம் அம்பலமானது. இதுகுறித்து விசாரணை செய்து வருவதாக ஸ்விட்சர் லாந்தின் நீதித்துறை அறி வித்ததை அடுத்தே நாடா ளுமன்ற உறுப்பினர்களி டமிருந்து ஆவேசக் கோரிக் கைகள் எழுந்துள்ளன.

இது குறித்து பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் லாங், உளவுவேலையில் அமெ ரிக்க அதிகாரிகள் ஈடுபட் டார்கள் என்ற சந்தேகம் உண்மையானதாக இருந் தால், ஒரு உறுதியான செய் தியை நாடு அனுப்ப வேண் டும் என்று குறிப்பிட்டார். அமெரிக்க ஏஜண்டுகளை உடனடியாக நாட்டிலி ருந்து வெளியேற்ற வேண் டும். அமெரிக்கத் தூதரை உடனடியாக வரவழைத்து விசாரிக்க வேண்டும். இதுவே தூதரக அதிகாரிகளின் உளவுவேலையைச் சகிக்க முடியாது என்ற செய்தி யைக் கொண்டு செல்லும் என்கிறார் ஜோசப் லாங்.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், அந்நாட்டின் தெருக்களில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து படம் எடுத்திருக்கிறார்கள். அதோடு, பாதுகாப்புக்கு இவர்களால் ஆபத்து என்று ஒரு பட்டியலை இவர்களாகவே தயாரித்து அந்த நபர்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்திருக்கி றார்கள். இத்தகைய வேலை கள் ஏற்கெனவே அம்பலப்பட்டு மக்கள் மத்தியில் அதி ருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இத்தனைக்கும், உளவு வேலைகளைச் செய்ய பல கட்டிடங்களைப் பயன்படுத்த அனுமதி தருமாறு அமெரிக்க அரசு 2007 ஆம் ஆண்டில் ஸ்விட்சர்லாந்து அரசை அணுகியிருக்கிறது. இருதரப்பு உறவுகளைப் பாதித்து விடும் என்று கூறி அதற்கு ஸ்விட்சர்லாந்து அரசு அனுமதிக்கவில்லை. ஸ்விட்சர்லாந்தில் மட்டு மல்ல, நார்வே மற்றும் டென் மார்க் ஆகிய நாடுகளிலும் இதுபோன்ற உளவுவேலை களில் அமெரிக்கா ஈடுபட்டு வருவது கடந்த ஆண்டில் அம்பலமானது

கருத்துகள் இல்லை: