இயேசுவைப் போல
இரு கைகள் விரித்து.....
காய்ந்தன வயலில்
கம்புப் பயிர்கள்.....
இந்திரலோகத்தினருக்கு
இரக்கமில்லை...
மனம் குளிரும் வண்ணம்
மழை தரவில்லை..
ஏன்!
விண்ணுலகில் தான்
விவசாயி இல்லையே!
காணக் கிடைக்காத பொருள் தானே
கடவுளின் ரூபம்!
கைப்பிடி கம்புத் தினைதானே
பிரம்ம சொரூபம்!
அதுவே, உலகின்
அனைத்து எடையையும் விட
மிக கனமானது.
அதனால் தான் தராசின் ஒரு தட்டில்
கம்புத் தினைகளும்
மறுதட்டில் ...
வறியவர்களும்
நிறுத்தப்படுகின்றனர்.
வி.பி.சிங்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக