சனி, 8 நவம்பர், 2008

300 சதவீதம் கிடைக்கும் என்றால் உரிமையாளரையே தூக்கில் தொங்கவிடத்தயங்காது முதலாளித்துவம்

முதலாளித்துவத் தின் கீழான சுரண்டலை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
குறைந்த ஊதியத்தைக் கொடுத்து தொழிலாளியை ஏமாற்றும் நேர்மையற்ற முதலாளித்துவவாதியால் மட்டும் சுரண்டல் ஏற்படுவதில்லை.

முதலாளித்துவவாதி
மிகப்பெரிய நேர்மையாளராக இருந்தாலும்கூட சுரண்டல் செய்யப்படுகிறது. தொழிலாளி செய்யும் உற்பத்தியின் மதிப்பு, அவருக்குக் கிடைக்கும் கூலியை விட எப்போதுமே அதிகமாகவே இருந்து வருகிறது.

தொழிலாளர்கள் உருவாக்கும் இத்தகைய உபரி மதிப்பே லாபத்தை ஈட்டும் வழியாகும். இதை அதிகரிப்பதே முதலாளித் துவத்தின் வேலையாகும்.

சுரண்டல் மூலமே லாபம் உருவாக்கப் படுகிறது. எனவே, முதலாளித்துவத்தை தூக்கி எறிவது என்பது வெறும் ஒழுக்க ரீதியான தேவை மட்டுமல்ல. மனிதனை மனிதனே சுரண்டும் நிலைக்கு முடிவு கட்ட வேண்டிய அறிவியல் ரீதியான தேவையாகும்.

மூலதனம் பற்றிய தனது கருத்தை வலுப்படுத்த தொழிற்சங்கத் தலைவர் டி.ஜே.டன்னிங்கின் கருத்து ஒன்றை மார்க்ஸ் மேற்கோள் காட்டினார்.

போதிய
லாபம் கொண்ட மூலதனம் உறு தியாக இருக்கும்.
10 சதவீத அதிகரிப்பு வேலை வாய்ப்பை உருவாக்கும்.
20 சதவீத அதிகரிப்பு ஆர்வத்தைத் தூண் டும்.
50 சதவீத அதிகரிப்பு வரம்பு மீற வைக்கும்.
நூறு சதவீதம் அதிகமானால் அனைத்து மனித சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கும்.
300 சதவீதம் கிடைக்கும் என்றால் உரிமையாளரையே தூக்கில் தொங்கவிடத்தயங்காது என்று அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: