வெள்ளி, 31 அக்டோபர், 2008

வீர இளைஞர்களை வேண்டி நின்றோம்.l

ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்”-1915 நவம்பர் 17ம் நாள் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட கத்தர் இயக்க வீர இளைஞன் கர்த்தார்சிங் தூக்கு மேடை முன் நின்று முழங்கிய வார்த்தைகள் இவை.

“நாளைக்காலையில் மெழுகுவர்த்தி ஒளி மங்குவதுபோல நானும் காலை ஒளியில் கரைந்து மறைந்து விடுவேன்,ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் குறிக்கோள்கள், உலகத்தைப் பிரகாசிக்க செய்யும்.இன்றுபோய் நாளை மீண்டும் பிறப்போம்.எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்”-தூக்கிலேறு முன் கடைசியாக தன் தம்பிக்கு எழுதிய கடிதத்தில் பகத்சிங் இப்படி கூறினார்.

‘அவனுக்கு அது தகும்.அவந்தான் உண்மையில் குற்றவாளி.என் நாட்டு மக்களின் உணர்ச்சியை நசுக்க பார்த்தான்.என் தாய் நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது என்பதை விடப் பெருமை வேறென்ன இருக்க முடியும்?இருபத்தோரு வருடங்கள் இதற்காக நான் காத்திருந்தேன்.-ஜாலியின்வாலாபாக் படுகொலைக்கு காரணமாக இருந்த பஞ்சாப் கவர்னர் மைக்கேல் டயரை லண்டனில் சுட்டுக் கொன்ற உத்தம்சிங் தூக்கிலேறுமுன் சொன்ன வார்த்தைகள் இவை.

கருத்துகள் இல்லை: