புதன், 16 செப்டம்பர், 2009

காங்கிரஸ் கட்சியின் பாலைவனக் கனவு!

காங்கிரசை பலப்படுத்தும் நோக்கத்துடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, தமிழகத்தில் மின்னல் வேக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மீனவர்கள், விவசாயிகள், மாண வர்கள், இளைஞர்கள், தலித்துகள், பழங்குடி யினர் என ஊருக்கு ஒரு பிரிவினரை சந்தித்து விட்டு, 2011ல் தமிழகத்தில் தனித்து ஆட்சி அமைப்பதுதான் காங்கிரசின் நோக்கம் என்று அறிவித்துவிட்டு டில்லிக்கு பறந்துவிட்டார்.


தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை தனித்து அமைக்கப்போவதாக அறிவித்து, ராகுல் காந்தி யின் தந்தையார் ராஜீவ் காந்தியும் இத்தகைய காட்சிகளை நடத்தியது உண்டு. ஆனால் அவ ருக்கு அதில் தோல்வியே கிடைத்தது.

இனிமேல் இளைஞர் காங்கிரசில் நியமனமே இருக்காது என்று ராகுல்காந்தி அறிவித்திருக் கிறார். இவரே காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர்தான். நியமனம் என்பது காங் கிரசுடன் ஒட்டிப்பிறந்த ஒன்று. மாநில முதல்வர் பதவியிலிருந்து, மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவி வரை நியமனம் மூலம் நிரப்புவதுதான் காங்கிரசின் கலாச்சாரம். எவ்வளவு வேகமாக நியமிக்கப்படுகிறார்களோ, அதே வேகத்தில் மேலிடத்தால் பதவி பறிக்கப்படுவதும் நடக்கும். மாநில அளவில் சொந்த செல்வாக்கு உள்ள தலைவர்கள் வளர்ந்துவிடாமல் பார்த்துக் கொள் வதில் காங்கிரஸ் மேலிடம் எப்போதுமே தனிக் கவனம் செலுத்தும்.

ராகுல் காந்தி வருகையின்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவ-மாணவிகளை சந்தித்து உரையாட ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில், அதுவும் இளைஞர் காங் கிரசை வளர்ப்பதற்காக என்ற பெயரில்தான் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்தார். அவருக்கு எந்த அடிப்படையில் காமராசர் பல்கலைக்கழகமும், அண்ணா பல்கலைக்கழகமும் மேடை அமைத்துக் கொடுத்தது என்று தெரியவில்லை. இத்தகைய உயர்கல்வி நிறுவனங்கள், காங்கிரசின் கிளை அமைப்புகளாக மாற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதே போன்று வேறு கட்சி தலைவர்களுக்கும் இத்தகைய வாய்ப்பு உருவாக்கித் தரப்படுமா என்பது குறித்து அந்தப் பல் கலைக்கழக நிர்வாகங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

தனது வருகையின்போது திரைப்பட கலை ஞர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் காங்கிர சில் சேர்ந்தால் வரவேற்பதாக ராகுல்காந்தி வலை விரித்தார். ஆனால் ரஜினிகாந்தும், விஜய்யும் காங்கிரசில் சேரப்போவதில்லை என்று அறிவித் துள்ளனர். இவர்களைப் போன்ற கலைஞர்கள் அந்தக் கட்சிக்கு செல்வதன் மூலம் புதிதாக ஒரு கோஷ்டி உருவாகும் என்பதைத் தவிர அவர்களுக்கும் பிரயோஜனம் இல்லை. தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் அந்தக் கட்சியும் தமிழகத்தில் நிமிர்ந்து நின்றுவிடப் போவதில்லை.

காங்கிரசில் இனிமேல் கோஷ்டி பூசல் இருக்காது என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார். சமுத் திரத்தில் நீர் வற்றினாலும் வற்றும். ஆனால் காங் கிரசில் கோஷ்டி பூசல் ஒழியவே ஒழியாது. இதற்கு காரணம், காங்கிரஸ் மேலிடம் பின்பற்றும் அணுகுமுறைதான். அந்தக் கட்சி பின்பற்றிய, பின்பற்றுகிற கொள்கைகளால்தான் அந்தக் கட்சி தமிழக மக்களிடமிருந்து அன்னியப்படு கிறது என்பதை புரிந்து கொள்ளாமல், ஆங் காங்கே எழுந்தருளி கையை ஆட்டிவிட்டுச் செல்வதால் எந்தப் பலனும் ஏற்படாது.

கருத்துகள் இல்லை: