வியாழன், 10 செப்டம்பர், 2009

திரிபுரா... வெற்றியின் ரகசியம்

கடந்த 15வது மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தளங் களான மேற்குவங்கம் மற்றும் கேரளா மாநிலங் களில் இடதுசாரிகள் கடும் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்த போதிலும் திரிபுரா மாநிலத் திலுள்ள இரண்டு தொகுதிகளிலும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. மேற்கு திரிபுராவில் ககன்தாஸ் 2,48,549 வாக்குகள் வித்தியாசத்திலும், கிழக்கு திரிபுராவில் பாஜூபன் ரியாங் 2,95,581 வாக்குகள் வித்தியாசத்திலும் காங்கிரஸ் வேட் பாளர்களை தோற்கடித்தனர்.


மக்களவைத் தேர்தலையடுத்து நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும், அங்குள்ள 4 ஜில்லா பரிஷத்துகளிலும், 23 பஞ்சாயத்து சமிதிகளிலும், 511 கிராம பஞ்சாயத்துகளில் 415லும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னரே வெற்றி வாகை சூடியுள்ளனர். திரிபுரா வில் கிடைத்துள்ள இந்த வெற்றி, ஏதோ சந்தர்ப்பவசத்தால் கிடைத்த எதிர்பாராத வெற்றியல்ல. மாறாக, திரிபுரா மாநில இடது சாரி அரசின் சாதனைகளுக்கு மக்கள் அளித்த பரிசாகும்.

திரிபுரா மாநிலம், வடகிழக்கிலுள்ள 8 மாநி லங்களில் ஒன்று என்பதுடன் தொலைவில் உள்ள மாநிலமும் ஆகும். பங்களாதேஷ், அஸ் ஸாம் மற்றும் மிசோரம் ஆகியவற்றை தன் னுடைய எல்லைகளாகக் கொண்ட திரிபுரா வில், 10 ஆயிரத்து 492 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நிலத்தில் 60 சதம் மேடு பள்ளங்கள் நிறைந்த மலைப்பாங்கான பூமியாகும். 1947 செப்டம்பர் 9 வரை ஆங்கி லேய விசுவாசமிக்க ராஜபரம்பரையினரால் ஆளப்பட்ட அந்த மாநிலத்தில் வங்கம், மணி புரி மற்றும் 19 வகையான ஆதிவாசி சமூகங் கள் உள்ளன. 32 லட்சம் மக்கள் தொகை கொண்ட அங்கு கிராமப்புறத்தில் மட்டும் 27 லட்சம் (85 சதவீதம்) மக்கள் உள்ளனர்.

அங்குள்ள 4.46 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்தை நம்பித்தான் 70 சதவீத மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் 90 சதவீத மக்கள், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள். நெல், கோதுமை, கரும்பு, உரு ளைக்கிழங்கு, தேங்காய், சணல், எண்ணெய் வித்துக்கள்தான் அங்கு பிரதானமான வேளாண் விளைபொருட்கள். திரிபுரா மாநிலம் இன்ன மும் உணவுப்பற்றாக்குறையுள்ள மாநிலமாக இருந்து வருகின்றபோதிலும், கடந்த சில வருடங்களாக உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரித்தே வந்துள்ளது. 2011க்குள் திரிபுராவை உணவுதானிய உற்பத்தியில் சுயசார்பான மாநிலமாக மாற்ற வேண்டுமென அந்த அரசு 2000ல் அறிவித்த தொலைநோக் குத்திட்டம் வெகுவாகப் பயனளித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில், ஏற்கெனவே விவ சாயம் செய்யப்பட்டுவந்த வேளாண் நிலத் தின் அளவு குறைந்த சூழ்நிலையிலும் கூட உணவு தானிய உற்பத்தி 5.13 லட்சம் டன்னி லிருந்து 6.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அதற்கான அடிப்படை காரணம், அங்குள்ள பாசனத்திற்கு தகுதியான 1.17 லட்சம் ஹெக் டேர் நிலத்தில் சுமார் 0.94 லட்சம் (81 சத வீதம்) ஹெக்டேர் நிலத்திற்கு பாசன வசதி செய்து தரப்பட்டுள்ளதே.

அந்த மாநிலத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள, மலைப்பாங்கான-மழை பெய் யும் சூழலின் காரணமாக அங்கு, பைனாபிள், பலா, ஆரஞ்சு, முந்திரி, எலுமிச்சை போன்ற பல பழவகைகள், பெருமளவு விளைகின்றன. கடந்த ஆறு ஆண்டு காலமாகவே விளைச் சல் நிலமும், விளைச்சலும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. மேலும் புதிய உயர் ரக முந்திரி ஒட்டுச்செடிகளை வளர்ப்பதற் காக சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதுடன், உருளைக்கிழங்கு விதை (கூஞளு) அங்கு மிகவும் பிரபலமடைந்திருப்ப துடன் வியட்நாம், இந்தோனேசியா, ஸ்ரீலங்கா, தென்கொரியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அத்துடன், வாசனை மலர் மற்றும் காளான்களை உற்பத்தி செய்வதிலும் புதிதாக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் வடகிழக்கு பிராந்திய வேளாண் மார்க்கெட் டிங் கார்ப்பரேஷன் ஆண்டுதோறும் 5600 டன் பழ மற்றும் மூங்கில் குருத்து சாரையும் உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றல்மிக்கதாக வுள்ளது. அதேபோல அந்த கார்ப்பரேஷன் அனுதினமும் 500 கிலோ முந்திரியையும் பதப் படுத்தி வருகின்றது.

அந்த மாநிலத்திலுள்ள 19 ஆதிவாசி சமூ கத்தினரும் தங்களுடைய சொந்த பாரம்பரிய கலாச்சாரத்தை கடைப்பிடித்து வருவதுடன் அங்குள்ள ஆதிவாசிகள் நலத்துறை, அவர்க ளுடைய சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக வும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆதிவாசி மாண வர்களுக்காக விடுதிகளும், தங்குமிடங்களும் உருவாக்கி நடத்தி வருவதுடன், அவர்க ளுக்கு ஊக்கத்தொகையும் சிறந்த மாணவர் களுக்கான விருதுகளும், ஒன்பதாம் வகுப்பு மற்றும் அதற்கு மேலுள்ள வகுப்புகளில் பயி லும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங் களும் வழங்கிவருகின்றது. அத்துடன் அந்தத் துறை, 3 ஏகலைவா மாடல் பள்ளிகளையும், 3 ஆஸ்ரம பள்ளிகளையும் நடத்தி வருகின்றது.

அத்துடன், தீவிரவாதத்தை கைவிட்டு விட்டு மைய நீரோட்டத்திற்கு திரும்பி வந் துள்ள மாணவர்களுக்கு பண உதவியும், தொழிற்பயிற்சியும் வழங்கப்படுகின்றது. மேலும், ஆதிவாசிகள் சம்பந்தமான ஆய்வு களை மேற்கொள்ள ஒரு ஆதிவாசி ஆய்வு நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலம் கல்வித்துறையிலும், சீரிய முறையில் எட்ட நடைபோட்டு வரு கின்றது. 2008-2009ல் சர்வசிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் 376 ஆரம்பப்பாடசாலை களும், 118 உயர்நிலைப்பள்ளிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

கல்வித்துறையின் நடவடிக்கையின்கீழ் 4004 ஆரம்பப்பாடசாலைகளில் 3.48 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவும் வழங்கப் பட்டு வருகின்றது. 2008ல் உயர்நிலைப்பள் ளிகளுக்கும் மதிய உணவுத்திட்டம் விரிவு படுத்தப்பட்டு 1002 பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

உயர்கல்வியைப் பொறுத்தவரை, தமிழகத்தின் ஒரு பெரிய மாவட்டத்தின் அளவில் மட்டுமே உள்ள அந்த சின்னஞ்சிறிய மாநிலத்தில், ஏராளமான உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி நிறுவனங்களும் அரசால் நடத்தப் பட்டு வருகின்றன. அதேபோல மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, மீன்வளக் கல் லூரி, வேளாண் கல்லூரிகளும் அங்கு செயல் பட்டு வருகின்றன. சமீபத்தில் அந்த அரசு, மேலும் 6 கல்லூரிகளையும் 3 பாலி டெக் னிக்குகளையும் ஒரு ஆசிரியர் பயிற்சிப் பள் ளியையும் உருவாக்கிட முடிவு செய்துள்ளது.

சுகாதார வசதிகளைப் பொறுத்தவரையில் திரிபுரா அரசு, ஒவ்வொரு குடிமக்களின் வீட் டிற்கும் வருமுன் காக்கும் வகையிலான சுகா தார வசதிகளை உருவாக்கிட திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அத்துடன், மக்களிடை யில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையிலான இயக்கங்களையும் முனைப்புடன் நடத்தி வருகின்றது. மேலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களு டைய சிகிச்சை வசதிக்காகவென்றே மாநில நோயாளிகள் உதவி நிதியை ஏற்படுத்தி, அதன்மூலம் மருத்துவ சிகிச்சை முகாம் களை நடத்தி, அவர்களுக்கு உதவி வருகின்றது.

திரிபுரா அரசு, ஏராளமான சமூக நலத் திட் டங்களையும் அந்த மாநிலத்தில் நடை முறைப்படுத்தி வருகின்றது. 2008-09ல் மட் டும் அங்கு 1.37லட்சம் பேர் முதியோர் ஓய்வூதி யம் பெற்றுள்ளார்கள். அந்த மாநிலத்தில் 3.61 லட்சம் குழந்தைகளையும், 93 ஆயிரம் கர்ப் பிணிப் பெண்களையும் பராமரிக்கக்கூடிய வகையில் 7379 அங்கன்வாடி மையங்களும் செயல்பட்டுவருகின்றன.

சாலை வசதிகளைப் பொறுத்தவரை, அந்த மாநிலத்திலுள்ள 448 கி.மீ தேசிய நெடுஞ்சாலை, 689 கி.மீ. மாநில நெடுஞ் சாலை, 90 கி.மீ பிரதான மாவட்ட சாலை மற் றும் 582 கி.மீ. எல்லைப்புற சாலைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பி னும், ஏற்கெனவே உள்ள சாலைகளை மேலும் மேம்படுத்தவும், மேலும் புதிய சாலைகளைப் போடவும் அந்த அரசு திட்டங்களை வகுத்துள்ளது.

மேலும் ரப்பர், தேயிலை உற்பத்தியையும் விற்பனையையும் அதிகப்படுத்திடவும் அந்த அரசு திட்டமிட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தின் கைவினைப் பொருட்கள், சீன யாத்திரிகர் யுவான் சுவாங் காலத்திலிருந்தே உலகப் புகழ்பெற்றவை. அத்துடன் அவை, இந்துமத, புத்தமத, இஸ்லாமிய கலாச்சாரங்களின் கூட்டு வடிவங்களாக இருப்பவை. அவை களின் வளர்ச்சி மற்றும் விற்பனையை அதி கப்படுத்திடவும் அரசு முயன்று வருகின்றது.

மேலும், இன்றைய நவீன காலத்திற்கு தேவையான தகவல் தொழில்நுட்பத்தை கிராமப்புற அளவில் கொண்டு சென்று அதை வளர்த்திடவும் அந்த அரசு பல்வேறு அமைப் புகளை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு எல்லா பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை அடைந்திருப்பதும், மக்களுடைய வாழ்வில் இடதுமுன்னணி அரசு மகத்தான முன்னேற்றங்களை உரு வாக்கி வருவதும்தான் மக்கள் ஆதரவுத் தளத் தின் அடிப்படை. அதுதான் வெற்றியின் ரகசியம்.

ஆர்.மைதிலி, திருப்பூர்
ஆதாரம் : ‘ஃபிரண்ட்லைன்’ கட்டுரைகள்

கருத்துகள் இல்லை: