புதன், 8 செப்டம்பர், 2010

கம்யூனிஸ்டுகளை துடைத்தெறிவேன் என்றவர்களை எல்லாம் வரலாறு துடைத்தெறிந்தது விட்டது. ராகுல்காந்தி


அரைவேக்காட்டுத்தனமான ராகுல்காந்தியின் உளறல்!

கொல்கத்தாவில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, கம்யூனிஸ்டுகள் மீது குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது கடும் தாக்குதல் தொடுத்துள்ளார். கம்யூ னிஸ்ட் கட்சி ஆட்சிக்கு விரைவில் முடிவு ஏற் படும் என்றும், கம்யூனிஸ்டுகளின் நாட்கள் எண்ணப்படுகிறது என்றும் வீரவசனம் பேசி யிருக்கிறார் அரசியலில் அரிச்சுவடி படித்து வரும் ராகுல் காந்தி.

இவர் பேசிவிட்டு திரும்பிய அடுத்த நாளே மேற்குவங்கத்தின் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் இவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர். செப்டம்பர் 7ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தம் மேற்குவங்க மாநிலத்தில் முழுமையாகவும், எழுச்சியோ டும் நடைபெற்றிருப்பதுதான் இவருக்கு வார்த்தையால் அல்ல; செயலால் அளிக் கப்பட்ட பதிலாகும்.

அரசியலில் பாலபாடம் கூட படிக்காமல் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக பரிவட்டம் கட்டப்பட்டு களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளவர்தான் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் பிரிக்க முடியாத கலாச்சாரமாக மாறிப்போய்விட்ட ஜால்ராக் களின் கூட்டம் இவரைச் சுற்றி நின்று வேப் பிலை அடிப்பதால் ஆட்டம் அதிகமாகியுள் ளது போலும்.

தனது 10 நிமிட உரையில் மார்க்சிஸ்டு களை பற்றி பேசுவதற்கு 9 நிமிடங்களை இவர் ஒதுக்கியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளைப் பற்றியோ, அந்தக்கட்சியின் தலைமையிலான அரசியல் செயல்பாடு குறித்தோ விமர்சிப்பதில் தவ றில்லை. அவ்வாறு முன்வைக்கப்படும் விமர் சனங்களுக்கு பொறுப்போடு பதில் சொல்லி பழக்கப்பட்ட இயக்கம்தான் செங்கொடி இயக்கம். ஆனால் நாட்கள் எண்ணப்படு கின்றன, தூக்கி வீசுவேன் என்றெல்லாம் மூன்றாம் தர திரைப்படத்தின் நாலாந்தர கதா நாயகன் போல இவர் பஞ்ச் டயலாக் பேசு வதைப் பார்க்கும் போது பரிதாபப்படத்தான் முடிகிறது.

இவருக்கு உலக வரலாறும் புரியவில்லை, இந்திய வரலாறும் தெரியவில்லை என்பதை தனது பேச்சின் மூலம் இவர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். கம்யூனிஸ்டுகளை அழிக்கப்போவதாக, ஒழிக்கப்போவதாக இவருக்கு பாட்டனுக்கு பாட்டனும், பூட்டனுக்கு பூட்டனும் எத்தனையோ பேர் சவால் விட்டி ருக்கிறார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்த சர்சிவி ராமசாமி அய்யர், கம்யூனிஸ்டுகளை துடைத்தெறிவேன் என்றார். வரலாறு அவரை துடைத்தெறிந்தது. ஐதராபாத் நிஜாம் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடி னார். வரலாறு அவரை வேட்டையாடியது.

ராகுல் காந்தியின் தந்தையான ராஜீவ் காந்தியின் தாத்தா ஜவஹர்லால் நேரு கேர ளத்தில் இ.எம்.எஸ். தலைமையில் தேர்வு செய்யப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தை அரசியல் சாசனத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி ஜனநாயக விரோத முறையில் கலைத்தார். ஆனால் அடுத்த தேர்தலிலேயே கம்யூனிஸ்ட் கட்சி மகத்தான வெற்றிபெற்றது. தொடர்ந்து கேரளம் செங்கொடி இயக்கத்தின் கோட்டை யாக விளங்கி வருகிறது.

இவர் வீரவசனம் பேசிய கொல்கத்தாவும் மேற்குவங்கமும் அறியும் கம்யூனிஸ்டுகளின் தியாகத்தையும், வீரத்தையும்.

1960களிலேயே காங்கிரஸ் கட்சியின் ஏகபோகத்திற்கு முடிவு கட்டி வங்க மண்ணில் செங்கொடி இயக்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மத்திய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி காங்கிரசுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட மாநில அரசுகளை கலைத் தாலும் மீண்டும் மீண்டும் மக்களின் பேரா தரவுடன் கம்யூனிஸ்ட் இயக்கம் எழுந்தது.

அவசர நிலைக் காலத்திற்கு முன்பாகவும், அவசரநிலைக் காலத்தின் போதும் காங்கிரசாரின் அரைப்பாசிச அடக்குமுறையை நெஞ்சுரத்தோடு சந்தித்தனர் மார்க்சிஸ்டுகள். பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். வீடுகளிலிருந்து விரட்டப்பட்ட தோழர்கள் நூற்றுக் கணக்கானோர்.

கொல்கத்தா மைதானத்தில் நின்று கொண்டு அன்றைய இளைஞர் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி, கம்யூனிஸ்டுகளை கடலில் தூக்கி எறிவேன் என்றார். சித் தார்த்த சங்கர்ரே, கனிகான் சவுத்ரி போன் றவர்கள் இந்த வசனத்தை எதிரொலித் தார்கள். ஆனால் கடலில் தூக்கி எறியப் பட்டது யார் என்பதை வரலாறு அறியும்.

காங்கிரஸ் கட்சியின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து நடத்தப்பட்ட ஜனநாயக மீட்புப் போராட்டத்தின் விளைவாக 1977ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி மேற்குவங்கத்தில் ஆட்சி அமைத்தது. அன்று முதல் இன்றுவரை தொடர்ச்சியாக 33 ஆண்டுகள் இடது முன்னணி ஆட்சி நடத்துகிறது. இடையில் காங்கிரஸ் கட்சி எத்தனை எத்தனையோ சதிவலைகளை பின்னியது. மத்திய அதி காரத்தைக் கொண்டு மிரட்டியது. உரிய நிதி ஒதுக்காமல் வஞ்சித்தது. ஆனால் இதை யெல்லாம் முறியடித்துத்தான் மேற்குவங்கத் தில் இடதுமுன்னணி அரசு பீடுநடை போடுகிறது என்பதை புரிந்து கொள்ள ராகுல் காந்திக்கு குறைந்தபட்ச வரலாற்று அறி வாவது தேவை.

மேற்குவங்கத்தில் இடதுமுன்னணி அரச மைத்த பிறகு குறிப்பிட்ட கால இடை வெளியில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப் பட்டபோது அந்த அமைப்புகளுக்கு உரிய அதிகாரமும் வழங்கப்பட்டது. இதைப்பார்த்து தான் ராகுல்காந்தியின் தந்தையார் ராஜீவ் காந்தி நாடு முழுமைக்கும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கொண்டு வந்தார். இந்தியா விலேயே அதிகமாக ஏழை, எளிய மக்க ளுக்கு நிலம் விநியோகித்த மாநிலம் மேற்கு வங்கம்தான் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால் ராகுல் காந்தியின் காங்கிரஸ் லட்சணம் என்ன? இவரே அடுத்த நாள் மகாராஷ்டிரா மாநிலத்தில் அகோலாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, “நான் கிராமத்தில் ஒரு தம்பதியர் தங்கள் குழந்தைகளுக்கு துணி வாங்கக்கூட பணம் இல்லாமல் இருப் பதை கண்டேன். அவர்களின் நிலைமை என் நெஞ்சைத் தொட்டது” என்று பேசியுள்ளார். இவரது கொள்ளுத்தாத்தா நேரு, ஆவடி சோசலிசம் என்றார். இவரது பாட்டி இந்திரா காந்தி “வறுமையே வெளியேறு” என் றார்.இவரது அப்பா ராஜீவ் காந்தி “வேலை யின்மையே வெளியே போ” என்றார். ஆனால் எதுவும் வெளியே போகவில்லை.

காங்கிரஸ் பல மாநிலங்களில்ஆட்சி செய்தது. செய்கிறது. மத்தியில் பெரும்பகுதி காலம் காங்கிரஸ் தனியாகவும் கூட்டணி அமைத்தும் ஆட்சி நடத்தியுள்ளது. ஆனால் இன்னமும் பெரும் பகுதி இந்திய மக்கள் வறுமையில் வாடுகின்றனர். வேலையின்மை நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக தொடர்கிறது. குடிநீர் வசதி இல்லாத கிரா மங்கள், மின்சாரம் எட்டிப்பார்க்காத கிராமங் கள், ரத்தசோகையால் வாடும் பெண்கள், ஊட்டச்சத்தின்றி மெலியும் குழந்தைகள் இதுதான் இவர்கள் உருவாக்கியுள்ள இந் தியா. 11வது ஐந்தாண்டு திட்டத்தின் முன்னுரையில் வறுமையும், கல்வியறிவின்மையும் எந்தளவுக்கு நாட்டை பீடித்துள்ளது என்பதை தெளிவாகப் படம்பிடித்துள்ளது. சுற்றுப்பய ணத்திற்கு இடையில் நேரமிருந்தால் ராகுல் காந்தி அதை படித்துப்பார்க்கட்டும்.

அர்ஜூன் சென் குப்தா தனது அறிக்கை யில், 64 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவ சாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவதாக வும் 36 சதவீத மக்கள் முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறுகிறது. சில்லரை வணி கத்தில் அந்நிய முதலீட்டுக்கு கதவு திறந்து விடுவதன் மூலம் பெரும்பகுதி மக்களின் வாழ்க்கையை சூறையாட காங்கிரஸ் தலை மையிலான மத்திய அரசாங்கம் முயற்சிக் கிறது. இதற்கு ராகுல்காந்தியின் பதில் என்ன?

1942ல் கம்யூனிஸ்டுகள் விடுதலைப் போராட்டத்திற்கு துரோகம் செய்துவிட்டதாக கொல்கத்தாவிற்கு சென்று ராகுல் காந்தி யின் சித்தப்பா சஞ்சய் காந்தி கூறினார். அப்போது முதுபெரும் தலைவர் ஜோதிபாசு, “சஞ்சய் காந்தி வரலாறு தெரிந்தால் பேசட் டும், இல்லையென்றால் வாயை மூடட்டும்” என்றார்.

இப்போது கம்யூனிஸ்டுகளின் வரலாறு தெரியாமல் ராகுல்காந்தி உளறுகிறார். ஹிட் லரின் பாசிசப்படையை ஓட ஓட விரட்டிச் சென்று பெர்லின் மாளிகையிலேயே கொடி யேற்றிய வரலாறு கம்யூனிஸ்டுகளின் வர லாறு. சோசலிசம் என்பது ஒரு வளரும் விஞ் ஞானம். உலகத்தில் முதலாளித்துவச் சுரண் டல் இருக்கும் வரை சோசலிச சக்திகளின் போராட்டமும் நீடித்துக் கொண்டே இருக் கும். எந்த கொம்பனாலும் அதை முறியடிக்க முடியாது என்பதுதான் வரலாறு.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி, தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் கம்யூனிஸ்ட் எதிர்ப்புப்பிரச்சாரத்தில் தீவிரம் காட்டுகின்றனர். இந்தப்பட்டியலில் ராகுல்காந்தி சேர்ந்துள்ளதும் ஆச்சரியப் படத்தக்க ஒன்றல்ல.

கூட்டிவரப்பட்ட கூட்டத்தின் கைதட்டல் களுக்காக ராகுல் காந்தி என்னவேண்டு மானாலும் பேசலாம். ஆனால் இந்திய நாட்டின், உலகப்பெரும்பரப்பின் வரலாற்றை ஒரு முறை படித்துவிட்டு பிறகு பேசட்டும். இல்லை யென்றால் அவர் உச்சரிக்கும் வார்த்தை களே அவரை கேலி செய்யும்.

3 கருத்துகள்:

தமிழ் உதயன் சொன்னது…

உங்கள் வலைப்பூக்கள் அனைத்தையும் பார்த்தேன்... உணர்வு ரீதியாக அனைத்தையும் நன்கு புரியும்படி எழுதியுள்ளீர்கள்... இன்றைய நிலையில் பொதுவாக சமூக சீர்கேடுகளை கூட்டாக சேர்ந்து எதிர்ப்பதைவிட்டுவிட்டு மகஇகவினர் ஜல்லியடிப்பதை நன்கு உணர்த்தியுள்ளிர்கள் நன்றி.... உங்கள் தொடர்பு அலைபேசி எண் தரவும்

தமிழ் உதயன் சொன்னது…

சின்ன பையன் பேசிட்டு போறான் விடுங்க.....

விடுதலை சொன்னது…

திரு உதயன் அவர்களுக்கு தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி