சனி, 9 மே, 2009

தோற்கடிக்கப்படவேண்டியவர்கள்

யாரைத் தோற்கடிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும் என்று சிவகங்கைச்சீமான் சிதம்பரம் கூறியள்ளார்.

ஆம். அவர் கூறுவது சரிதான். யாரை என்பதைவிட யார் யாரை என்று தீர்மானித்தால் பொருத்தமாக இருக்கும்.காங்கிரஸ், பாஜக, மாற்று அணி ஆகியவற்றுக்கிடையே மும்முனைப் போட்டி நடைபெற்று வரும் வேளையில் அதுதானே சரியாக இருக்கும்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துவரும் வேளையில், பணவீக்கம் ஒரு சதத்தைவிடக் குறைந்து விட்டது என்று பீற்றிக் கொள்பவர்களைத் தோற்கடிக்க வேண்டாமா?

ஏற்கெனவே கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையற்றோராய் இருக்கும் நிலையில் உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்னும் பல லட்சம் பேர் வேலையற்றோர் பட்டாளத்தில் இணையும் வேளையில், தேவையான முதலீட்டை செய்வதற்கு பதிலாக பணக்காரர்களைக் காப்பாற்றுவதற்காக நி தி ஒதுக்குவோரைத் தோற்கடிக்க வேண்டாமா?


உலகமயக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வருவதால்தான் அமெரிக்காவில் நடைபெற்ற முறைகேடுகள் இந்தியாவை பாதித்துள்ளன என்ற போதிலும் அதே கொள்கைகளைத்தான் தொடர்ந்து கடைப்பிடிப்பேன் என்று பிடிவாதம் செய்வோரை தண்டிக்கவேண்டாமா?

நாட்டின் இறையாண்மையை அடகு வைத்து இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாற்ற முயல்வோரை தண்டிக்க வேண்டாமா?

வரலாறு காணாத விவசாய நெருக்கடிக்குக் காரணமானவர்களை தண்டிக்க வேண்டாமா?

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் படுகொலைகள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறிப்பிரச்சாரம் போன்றவைகளுக்குக் காரணமானவர்களை தண்டிக்க வேண்டாமா?

போபர்ஸ் ஊழல் குற்றவாளிகளை தப்பவிடுவதற்காக திரைமறைவில் சதி செய்தவர்களை தண்டிக்க வேண்டாமா?

ஸ்பெக்ட்ரம் ஊழல், இஸ்ரேல் ராணுவ ஒப்பந்த ஊழல் குற்றவாளிகளை தண்டிக்கவேண்டாமா?

இலங்கையின் அப்பாவித்தமிழர்களைப் பாதுகாக்க உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காமல் கபடநாடகம் ஆடுவோரை தண்டிக்க வேண்டாமா
?

பணபலம்,அடியாள்பலத்தை வைத்துக் கொண்டு தேர்தல்களில் வெற்றி பெற நினைப்போரை தண்டிக்க வேண்டாமா?


சிதம்பரத்தின் ஆலோசனையை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கவேண்டும் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் யார் என்பதைத் தீர்மானித்து 15 வது மக்களவைத் தேர்தலில்அவர்களுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

மக்கள் வாழ்க்கைநிலையை மேம்படுத்த மாற்றுத் திட்டத்தை முன் வைத்துள்ள இடதுசாரிகள் முக்கிய பங்கு வகிக்கும் மாற்று அணிக்கு அமோக ஆதரவை அளிக்க வேண்டும்.

கி.இலக்குவன்

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மாற்று வேட்பாளரிடம் ஒரு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவமனையில் படுத்துக் கொண்டவருக்கு வாக்களிப்போம்.

விடுதலை சொன்னது…

அனானிக்கு பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை உண்டு தற்போது களத்தில் உள்ள மோகன் மீது யாரும் குறைகூறமுடியாது.

ராகுல் காந்தி சொன்னது…

மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் உங்களுக்கு சரியான ஆப்பு காத்திருக்குடியோ.. இந்த நிலமையில காமெடி பன்னரியவ. கேரளாவில உங்க பெரிசு அச்சுவே உங்களுக்கு கருமாதி பண்ணிருச்சு.

விடுதலை சொன்னது…

ராகுல்காந்தி நீங்க கலைப்படவேண்டாம் வருகின்ற 16ந்தேதி மக்கள் சரியான தீர்ப்பை தர காத்திருக்கிறார்கள் . 60 ஆண்டுகள் இந்திய மக்களை ஒட்ட சுரண்டி கொழுத்துபோய் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும். உழைக்காமல் கோவிலில் மணியாட்டி மக்களை ஏமாற்றி மதகலவரத்தை தூண்டி அதிகார பெற துடிக்கும் பிஜேபிக்கு தக்கபாடம் உண்டு