“மம்தாவுக்கு வால் பிடிக்கும் ஊடகங்கள்” என்ற தலைப்பில் தீக்கதிர் நாளேட்டில் (6.5.2011) தலையங்கம் வெளியாகி இருந்தது. இதைப் படித்துப்பார்த்த முதல்வர் கலைஞர் இந்த தலையங்கத்தின் மீது அவரது கருத்தோட்டத்தை தெரிவித்திருக்கிறார்.
முரசொலி ஏட்டில் கலைஞர் பதில்கள் பகுதியில் “இந்த தலையங்கத்தைப் பார்த்த உடன் தலைவலியும், காய்ச்சலும்” என்ற பழமொழி தமது நினைவிற்கு வந்த தாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் கட்சி ஆளும் மாநி லங்களுக்கு ஒரு அளவுகோலையும், மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வேறொரு அளவுகோலையும் கடைப்பிடிப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுகவைப் பொறுத்தவரை ஊடகங்கள் பல்வேறு அளவுகோல்களை கடைப் பிடிக்கலாம். ஆனால் கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை முதலாளித்துவ ஊடகங்கள் எப்போதும் ஒரே மாதிரியான அளவு கோலைத்தான் பின்பற்றுகின்றன. தங்களது முதலாளித்துவ வர்க்க நலன்களுக்கு எதிராக பாட்டாளி வர்க்க நலன்களை கம்யூனிஸ்ட்டுகள் உயர்த்திப்பிடிப்பதால், அவர்களை எப்படியாவது கருவறுத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு புழுதிப்புயல்களை உருவாக்கு கின்றன அந்த ஊடகங்கள்.
அதிலும் குறிப்பாக கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்துவிட்டால் உடல் முழுவதும் மிளகாயை அரைத்து அப்பியது போல எரிச்சல்படுவதும், அந்த எரிச்சலைச் சமாளிக்க செய்திகள் என்ற பெயரில் கதை கட்டுவதும் முதலாளித்துவ ஊடகங்களின் புத்தி.
திமுகவைப் பொறுத்தவரை முதலாளித்துவ ஊடகங்களுக்கு அத்தகைய எதிர்ப் புணர்வு இருப்பதில்லை. திமுக, முதலாளி கள் நலன்களுக்கு மட்டுமின்றி சமீபகால மாக பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பாடு பட்டு வருகிறது என்பதை அவர்கள் அறி வார்கள்.
மேற்குவங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல் இன்னமும் முடிவடையவில்லை. ஆனால் மம்தா பானர்ஜி முதல்வராகிவிட்டது போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த ஊடகங்கள் முயன்று தோற்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் தினமும் காங்கிரஸ் தலைவர் முதல்வரை சந்திப்பதும் திமுக கூட்டணி வெற்றி உறுதி என்று பேட்டி யளிப்பதும், அது பத்திரிகைகளில் படத்து டன் கூடிய செய்தியாக வெளியாவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
சில திமுக ஆதரவுப்பத்திரிகைகள் பதவியேற்பு விழாக்களுக்கு இடங்களை முடிவு செய்வதிலும், அமைச்சர் பட்டியலை இறுதிப்படுத்துவதிலும் கூட அதீத ஆர்வம் காட்டுகின்றன.
மேற்குவங்கத்தில் இடதுமுன்னணி அரசை ஊடகங்கள் விமர்சித்தாலும், அதன் உள்நோக்கத்தை கம்யூனிஸ்ட்டுகள் புரிந்துகொண்டிருப்பதால் மக்களிடம் சென்று உண்மையை விளக்குகிறார்கள். முரசொலி போல, எழுதுகிற பத்திரிகை களுக்கெல்லாம் பார்ப்பன முத்திரை குத்துவதில்லை.
முதல்வர் தனது பதிலில் பத்திரிகைச் சுதந்திரம் குறித்து வெகுவாக கவலைப்பட் டிருக்கிறார். தினகரன் ஏடு ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்த அலுவலகம் தீ வைத்து கொளுத்தப் பட்டு, மூன்று பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இதில் தொடர்புடையவர்கள் யார் என்பதை ஊரறியும், உலகறி யும். சம்பந்தப்பட்டவர்களின் உள்ளம் தானறியும். ஆனால் அந்த வழக்கில் கூட யாரும் தண்டிக்கப்படவில்லை.
இத்தகைய “பத்திரிகைச் சுதந்திர பாதுகாப்புப் பணி” மேற்குவங்கத்தில் ஒரு போதும் நடந்ததில்லை.
மேற்குவங்கத்தில் மாவோயிஸ்ட்டுகள் என்று தங்களை கூறிக்கொள்ளும் பயங்கரவாதிகளுக்கு மம்தா பானர்ஜி வெளிப்படையாகவே ஆதரவு தெரிவிக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி துவங்கி மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வரை மம்தாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கின்றனர். குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக செய்யப்படும் இந்தக் காரியம் எதிர்காலத்தில் எத்தகைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என் பதை சுட்டிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் கையது கொண்டு வாயது பொத்தி மம் தாவுக்கு வால்பிடிக்கின்றன. இதைத்தான் தீக்கதிர் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஊடகங்களின் மீது முதல்வரின் கோபத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை குறித்த செய்தியை முரசொலி மற்றும் கலை ஞர் டிவி போன்று முற்றாக இருட்டடிப்புச் செய்ய வேண்டும் என்று திமுக எதிர்பார்க்கிறது. ஆனால் இந்த செய்திகள் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதால், அந்தச் செய்திகளை பன்னாட்டு ஊடகங்கள் துவங்கி தமிழ்நாட்டு பத்திரிகைகள் வரை விரிவாக வெளியிடு கின்றன.
முதல்வர் கூறுவது போல, பத்திரிகைகள் நீதிபதி வேடம்போட்டு வெளியிடும் செய்திகளை திமுக புறக்கணித்துவிடலாம். ஆனால் உண்மையான நீதிபதிகள் வழங் கும் தீர்ப்பை அவ்வாறு செய்துவிட முடி யாது அல்லவா?
முதல்வர் கூறுவது போல காய்ச்சலும், தலைவலியும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு வர வில்லை. உழைக்கும் மக்களின் தலையாய் மார்க்சிஸ்ட் கட்சி இருப்பதால் ஊடகங் களுக்குத்தான் வலியும், காய்ச்சலும் வந் திருக்கிறது.
ஆனால் திமுகவிற்கு வந்திருப்பது ஊழலால் வந்த அஜீரணக்கோளாறு. அத னால் வந்திருக்கிற வயிற்றெரிச்சல். அதை இடதுசாரிக் கட்சிகளின் மீது காட்டுவ தால் வலி தீராது.
திங்கள், 9 மே, 2011
அதுவும்-இதுவும் ஒன்றல்ல:முரசொலிக்கு பதில்
-மதுரை சொக்கன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய சாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்காவுடன் தொடர்பு வைத்துள்ள மத்திய அமைச்சர் சரத்பவாரை, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் பால்தாக்கரே எழுதியுள்ள தலையங்கத்தில், சரத்பவாரின் நல விரும்பிகளாகவே உள்ளோம். அவர் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும் அரசியலில் அவருக்கு உள்ள சிறிய நம்பகத் தன்மையை இழக்கக்கூடாது. எங்களது ஆலோசனையில் கவனம் செலுத்தி இருந்தால் அவரது நிலை தாழ்ந்து இருக் காது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய பால்வா, வினோத் கோயங்காவுடன் தொடர்பு வைத்துள்ளதால் பவாரின் தரம் குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகள் தம்மை பாதிக்காது என, மக்களை ஏமாற்ற பவார் முயற்சிக்கிறார். பால்வாவும், வினோத் கோயங்காவும் மற்றத் தலைவர்களை தொடர்பு கொள் ளாமல், பவாரிடம் தொடர்பு வைத்து இருப்பது குறித்து அவர் விளக்க வேண்டும் என்றும் பால்தாக்கரே தலையங் கத்தில் எழுதியுள்ளார்.
கருத்துரையிடுக