ஆப்கானிஸ்தானத்தில் பெண்களுக்கு கல்வி கற்பித்ததால் பெண் தலைமை ஆசிரியரை தாலிபான் பிற்போக்குவாதிகள் சுட்டு கொலை செய்தனர். எங்களின் எச்சரிக்கையை மீறி பெண்கள் கல்வி கற்றால் இதே போல் சுட்டு கொலை செய்வோம் என எச்சரித்தும் உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூல் அருகில் உள்ள லோகர் என்ற பகுதியில் பெண்கள் பள்ளி உள்ளது. இதில் தலைமையாசிரிய ராக கான்முகமது பணி யாற்றி வந்தார். தாலிபான் கள் இஸ்லாமிய சட்டப் படி பெண்களுக்கு கல்வி கற் பிக்கக் கூடாது என்று கான் முகமதுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். ஆனாலும் கான்முகமது இதனை பொருட்படுத்தா மல் பெண்களுக்கு கல்வி கற்பித்து, முன்னேற்றமடைய செய்ய வேண்டும் என்பதி லேயே குறியாக இருந்து வந் தார். அதன் படி கல்வி கற் பிக்கும் பணியை தொடர் ந்து செய்து வந்தார்.
இந்நிலையில் செவ்வா யன்று தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு கிளம்பி வெளியே வந்தபோது தாலிபான் பயங்கரவாதிகள் அவரைச் சுற்றி வளைத்து சுட்டனர். அதில் அவர் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத்தாக்குதலின் போது கான்முகமதுவின் மகனும் காயமடைந்தார்.
ஆப்கானிஸ்தானில் 1996 - 2001 காலகட்ட தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள் கல்விக்கு தடை விதிக்கப்பட்டது. 2001ல் தாலிபான் ஆட்சி வீழ்த்தப் பட்டதையடுத்து, அங்கு பெண்களுக்கு சில உரிமைகள் கிடைத்துள்ளன. ஆனாலும் பழமைவாதிகள் பெண்கள் பள்ளிகள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். பள்ளிக்குச் செல்லும் பெண்கள் மீது ஆசிட் வீசுதல், பள்ளிகளை தீக்கிரையாக்குதல், பெண்கள் பயிலும் பள்ளிக்கட்டடங்களுக்குள் விஷ வாயுவைச் செலுத்துதல் உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஆப்கனில் கல்வி பயிலும் பெண்களின் எண் ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக