புதன், 25 மே, 2011

பெண்கள் கார் ஓட்ட தடை. மீறிய பெண் சவூதியில் கைது
சவூதி அரேபியாவில் வாகனங்களைப் பெண்கள் ஒட்டக்கூடாது என்று பெண் களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி வாகனம் ஓட்ட முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தான் வாகனத்தை ஓட்டும் முயற்சியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் மற்ற பெண்களையும் ஓட்டச் செய்வதற் கான முயற்சியில் ஈடுபடுகிறார் என்றும் மனால் அல் ஷெரீப் என்ற அந்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஃபேஸ் புக் மற்றும் யு டியூப் இணைய தளங்களில், காரின் சக்கரத்திற்குப் பின்னால் இருந்து கொண்டு, “எனக்கு வண்டி ஓட்டச் சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் என் னைப் பாதுகாக்க முடியும்” என்று அவர் சொல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதோடு நிற்காமல், ஆட்சியாளர்க ளின் தடை குறித்த கருத்தை மாற்றும் முயற் சியாக மேலும் பல பெண்களை இணைத் துக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகி றார். கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் என்ன நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலையானார் என்று தெரிய வில்லை. உலகிலேயே சவூதி அரேபியாவில் மட்டும்தான் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் வெளிநாட்டுப் பெண்களும் வாக னங்கள் ஓட்டக்கூடாது.

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாக்குரிமையும் இல்லை. அண்மையில் வர்த்தக அமைப்பு ஒன்றிற்கு நடைபெற்ற தேர்தலில் இரண்டு நகரங்களில் மட்டும் பெண்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப் பட்டது. மனால் மற்றும் அவரது குழுவினர் அவசர காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டுவதன் மூலம் பல ஆபத்துகளிலி ருந்து தப்பிக்க முடியும் என்றும் பிரச் சாரம் செய்து வருகிறார்கள்.

ஃபேஸ்புக் மூலமாகத் தங்கள் பிரச்சா ரத்தை இவர்கள் நடத்துகிறார்கள். ஜூன் 17 அன்று இந்த இயக்கத்தில் சேர விரும்பு பவர்கள் சேரலாம் என்று அறிவித்துள் ளனர். இதுவரை 12 ஆயிரம் பேர் இந்தப் பக்கத்தை பார்வையிட்டிருக்கிறார்கள். அதில் உள்ள செய்தியில் “நாங்கள் முழு மையான குடிமக்களாக வாழ விரும்புகி றோம். ஒவ்வொரு நாளும் படும் அவமா னங்களிலிருந்து விடுபடுவதே எங்கள் விருப்பம் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் சட்டத்தை உடைக்கவோ அல்லது ஆட்சியாளர்களுக்கு சவால் விடவோ நாங்கள் வரவில்லை. எங்களுக்கான ஒரு எளிமையான உரிமையைக் கேட்டுப் பெறவே வந்துள்ளோம்” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

1 கருத்து:

விடுதலை சொன்னது…

Every women in possession of an international driver's license or one from another country will begin driving her car herself whether to reach her place of work, drop her children off at school, or attend to her daily needs.
We will take photographs and videotapes of ourselves driving our cars and post them to our Facebook page in order to support our cause: I will drive starting June 17
We will adhere to the dress code (hijab) while driving.
We will obey the traffic laws and will not challenge the authorities if we are stopped for questioning.
If we are pulled over we will firmly demand to be informed of which laws have been violated. Until now there is not one traffic law that prohibits a woman from driving her own vehicle herself.
We do not have destructive goals and will not congregate or protest, nor will we raise slogans. We have no leaders or foreign conspirators. We are patriots and we love this country and will not accept that which encroaches on its security and safety. All that is involved [in this matter] is that we will begin to exercise our legitimate right.
We will not stop exercising this right until you find us a solution. We have spoken out on too many occasions and no one has listened to us. The time for solutions has come. We want women's driving schools. We want Saudi drivers’ licenses [for women] like all other countries in the world. We want to live a complete form of citizenship without the humiliation and degradation that we are [currently] subjected to everyday because of our dependence on a driver.
We will launch volunteer campaigns to offer free driving lessons for women beginning on the date that this announcement is issued and we wish for everyone to support us.