புதன், 6 அக்டோபர், 2010

அயோத்தி தீர்ப்பு ஆபத்தான உதாரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் அக்டோபர் 4, 5 தேதிகளில் புதுதில்லியில் நடை பெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் வெளி யிடப்பட்ட அறிக்கையில் அயோத்தி தீர்ப்பு தொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:-

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் அளித்த தீர்ப்புக்கு மக்களிடையே ஏற்பட்ட பிரதிபலிப்பு, இந்தபிரச்சனையில் நீதித்துறை நடவடிக்கை மூலம் ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்ற கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என் பதையே வெளிப்படுத்துகிறது. இந்தப்பிரச்சனை மீண்டும் ஒரு முறை பிளவுவாத அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்ற விதத்திலேயே மக்களின் பொதுவான கருத்து அமைந்துள்ளது.

எனினும், சம்பந்தப்பட்ட நிலத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்ற இந்தத் தீர்ப்பு “நம்பிக்கை மற்றும் விசுவாசம்” என்பதை அடிப்படையாகக்கொண்டே அளிக்கப்பட்டுள்ளது. மத நம்பிக்கை மற்றும் மதத்தின் மீதான விசுவாசம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி ஏற்றுக்கொள்ளும் விதமாக தீர்ப்புரையின் கண்ணோட்டம் அமைந்துள்ளது; உண்மைகளுக்கும், ஆதாரங் கள் தொடர்பான ஆவணங்களுக்கும் மேலாக மேற்கண்ட நம்பிக் கையே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும். மேல் முறையீடு செய்யப்பட்டு இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு செல்லும்போது இந்த அம்சங்கள் அந்த நீதிமன்றத்தால் கவ னிக்கப்படும் என்று நம்புகிறோம்.

1992 டிசம்பரில் பாபர் மசூதி இடித்து நொறுக்கப்பட்டது என் பது ஒரு கிரிமினல் குற்றம்; மதச்சார்பின்மை கோட்பாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். ஆனால் இந்தப்பிரச்சனை, இந்த வழக் கை விசாரித்த சிறப்பு அமர்வாயத்தால் பரிசீலிக்கப்படவே இல் லை என்பதே உண்மை. எனினும், தீர்ப்புரையில் கூறப்பட்டுள்ள அம்சங்கள், மசூதியை இடித்ததை நியாயப்படுத்துவதற்கான அம்சங்களாக எடுத்துக் கொள்ளப்படக்கூடிய நிலை ஏற்பட் டுள்ளது. மசூதி இடிப்பு தொடர்பாக இதர நீதிமன்றங்களில் நடை பெற்றுவரும் வழக்குகள் மிகவும் கவனமாக நடத்தப்பட வேண் டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நமது அரசியல் அமைப்புச்சட்டத்தில் வரையறுக்கப்பட் டுள்ள மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பு முறையில், நீதித்துறை நடவடிக்கைகளின் மூலமாகவே இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதி யானதாக இருக்கும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மீண்டும் வலியுறுத்துகிறது. அனைத்து தரப்பு மக்களும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது.

கருத்துகள் இல்லை: