செவ்வாய், 8 ஜூன், 2010

25 ஆயிரம் பேரின் உயிரைக்குடித்த போபால் விஷவாயுக் கசிவுப் படுகொலை வழக்கில் 8 பேர் குற்றவாளிகள் வெறும் 2 ஆண்டு சிறை

கடந்த 25 வருட காலமாக நடந்து கொண்டிருந்த போபால் விஷவாயுக் வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத் தின் முன்னாள் தலைவர் கேசப் மகிந் திரா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என போபால் முதன்மை நீதித்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இவர்கள் அனைவருக்கும் வெறும் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

1984ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளி யேறிய மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயு தாக்கி மொத்தம் சுமார் 25,000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 1995 அக்டோபர் கணக்குப்படி அதிகாரப் பூர்வமாக 10 ஆயிரம் பேர் இதில் பலியானதாக கூறப்பட்டது. ஆனால் மொத்தம் 25 ஆயிரம் பேர் பலியாகி யுள்ளனர் என்பதே உண்மை.

உலகின் மிகப்பயங்கரமான தொழிற்சாலை விஷவாயுக்கசிவுப் பேரழிவான போபால் விஷவாயுக் கசிவு வழக்கு போபால் நீதிமன்றத்தில் கடந்த 26 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்தது. பாதிக்கப்பட்டோ ருக்கு நிவாரணமும் கிடைக்காமல் பெரும் அவலம் நீடித்து வந்தது.

இந்த நிலையில் இந்தவழக்கில் திங்களன்று நீதிபதி மோகன் திவாரி தீர்ப்பளித்தார். 85 வயதாகும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போ தைய தலைவரான மகிந்திரா மற்றும் 7 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

அலட்சியப் போக்கால் மரணம் விளைவித்தல், கொலை அல்லாத மர ணத்திற்குக் காரணமாக அமைந்தது, ஒட்டுமொத்த கவனக்குறைவு ஆகிய பிரிவுகளின் கீழ் 8 பேரும் குற்றவாளி கள் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரி வித்தார்.

குற்றவாளிகள்

குற்றவாளி என அறிவிக்கப்பட் டுள்ள கேசப் மகிந்திரா, தற்போது மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத் தின் தலைவராக இருக்கிறார்.

இவருடன் விஜய் கோகலே (யூனி யன் கார்பைடு நிறுவன நிர்வாக இயக் குநர்), கிஷோர் காம்தார் (யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் துணைத் தலைவர்), ஜே.முகுந்த் (முன் னாள் ஒர்க்ஸ் மேனேஜர், யூனியன் கார்பைடு), ராய் சௌத்ரி (உதவி ஒர்க்ஸ் மேனேஜர், யூனியன் கார்பைடு (ஏற்கனவே இறந்து விட்டார்), எஸ்.பி.சௌத்ரி (முன்னாள் உற்பத்தி மேனேஜர், யூனியன் கார்பைடு), கே.வி.ஷெட்டி (முன்னாள் உற்பத்திக் கலன் கண்காணிப்பாளர், யூனியன் கார்பைடு), ஷகீல் குரேஷி (முன்னாள் உற்பத்தி உதவியாளர், யூனியன் கார் பைடு) ஆகியோரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டர்சன்

8 பேர் குற்றவாளிகள் என நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான அமெரிக் காவின் வாரன் ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை.

போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பாக ஆண்டர்சன் கைது செய் யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் இந்திய முதலாளிகளின் உதவியுடன் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் தப்பி தலைமறைவாகி விட்டார். தலைமறைவுக் குற்றவாளி யாக அவர் அறிவிக்கப்பட்டார்.

23 ஆண்டுகளுக்கு முன்பு தொடங் கிய வழக்கில் இதுவரை ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு வரவில்லை.

பாதிக்கப்பட்டோர் கொதிப்பு

இவ்வழக்கில் யூனியன் கார்பைடு தலைவரான ஆண்டர்சன் குறித்து எதுவும் இடம் பெறாதது பாதிக்கப்பட் டோருக்கு கடும் கொதிப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர்கள் முடி வெடுத்துள்ளனர்.

போபால் விஷவாயு சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் அப்பகுதி மக்கள் மீளவில்லை. பல் வேறு நிரந்தர ஊனங்களுடன் நடை பிணமாக பலரும் வாழ்ந்து கொண்டி ருக்கின்றனர். அவர்களுக்கு போபால் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிருப்தி யையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் திரண்டிருந்த மக் கள், தீர்ப்பைக்கேட்டு ஆவேசமடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், தற்போதைய தீர்ப்பின்படி பார்த் தால் வெறும் 2 ஆண்டுகள்தான் தண்டனை கிடைக்கும். இது போதாது. அதிகபட்ச தண்டனையை அவர்க ளுக்கு அளிக்க வேண்டும். ஆண்டர் சனையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த வழக்கில் 178 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 3008 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அரசுத் தரப்பில் இருந்து 8 சாட்சிகள் விலக்கிக் கொள் ளப்பட்டனர்.

கடந்த 25 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு விசாரணை கடந்த 6-ந் தேதி அன்று முடிவடைந்தது.

கருத்துகள் இல்லை: