வியாழன், 5 மே, 2011

சிதம்பரத்தின் சிதம்பர ரகசியங்கள்



கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் 3500 வாக்குகளில் வெற்றிபெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்பு சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைமைதான் காரணம் என்பதும் ஊரறிந்த செய்தியாகும்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிதம்பரத்திற்கும் தொடர்பு உண்டு என்றும், ஸ்விஸ் வங்கியில் அவர் பெரும் தொகை இருப்பு வைத்திருப்பதாகவும் சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. சோனியா தலைமையில் நடைபெறும் ஊழலாட்சியில் முக்கியப் பங்கு வகிப்பவர் சிதம்பரம் என்பதும், உள்துறையைத் தவிர வேறு துறைகளையும் கவனிப்பவர் என்பதும் உலகறிந்த செய்தியாகும்.

சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர்கள் ஆ.ராசாவும், சுரேஷ் கல்மாடியும் திகார் சிறையில் கம்பி எண்ணுகிறார்கள். ஆ.ராசா கைதுக்குப்பிறகு அடங்கிக்கிடந்தவர் இப்போது மேற்குவங்க அரசு பற்றி அவதூறுகளைப் பொழிந்துள்ளார்.

மேற்குவங்கம், ஒரிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளன. வேதாந்தா, டாடா, ஜிண்டால், மித்தல் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து வருகின்றன.

முறைகேடுகளில் ஈடுபடும் கார்ப்பரேட் கம்பெனிகளோடு நெருக்கமானவர் சிதம்பரம். சில ஆண்டுகளுக்கு முன்பு வருமானவரி மோசடி செய்ததாய் வேதாந்தா கம்பெனி மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் வேதாந்தாவுக்காக ஆஜராகி 37 லட்சம் ரூபாய் ஊதியமாய் பெற்றவர் இந்தச் சிதம்பரம்தான். மாவோயிஸ்டு களை அடியோடு ஒடுக்கப் போவதாக அறிவித்தவரும் இவர்தான்.

இந்நிறுவனங்கள், மாவோயிஸ்டுகளுக்கு மாதந்தோறும் ஒரு தொகை மாமூல் கொடுத்துவிட்டு இரும்பு, கிராபைட், மரங்களைக் கொள்ளையடித்து வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையை மாவோயிஸ்டுகள் மாமூலாக அனுமதிப்பதால் அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்றும் மத்திய படைகளுக்கு கண்ஜாடை காட்டப்படுவதுண்டு.

மம்தா பானர்ஜியும் மாவோயிஸ்டுகளும் கூட்டாக அணிசேர்ந்து இயங்கிவருவதால் சிதம்பரமும் மம்தாவுடன் நெருக்கமாக உள்ளார். இப்போது மம்தாவை வெற்றிபெறச் செய்யும் முயற்சியில் சிதம்பரம் இறங்கி, மேற்குவங்கத்தில் பிரச்சாரம் செய்கிறார். இடதுமுன்னணி மீது அவதூறுகளை அள்ளிவீசுகிறார்.

லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை ஏப்பமிடும் ஊழல்கள் மத்திய அரசில் நடந்துவருவதில், பிரதமர் முதல் சிதம்பரம் வரை, சோனியா முதல் ராகுல் வரை பங்கில்லாமல் இருக்க முடியுமா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பங்கு உள்ளது என்பது அண்மை மாதங்களில் வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

கனிமொழியை ஆ.ராசாவுடன் கூட்டுச்சதியாளர் என்று சிபிஐ வழக்குத் தொடுத்த பின்பு நிருபர்கள் கூட்டத்தில் கருணாநிதி ஒரு பெண் நிருபரிடம் கோபத்தைக் காட்டியுள்ளார். “சில பெண்கள் இதயமில்லாமல் இருக்கிறார்கள், நீயுமாம்மா” என்று கூறியுள்ளார். சில பெண்கள் என்று அவர் குறிப்பிட்டது உயர்மட்டப் பொறுப்பில் உள்ள பெண்மணியா என்றும் பத்திரிகையாளர்கள் ஐயப்பாடு எழுப்புகின்றனர். இவ்வளவு பெரிய ஊழலை ஒருவராகச் செய்ய முடியுமா என்றும் ஏற்கெனவே கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படி ஊழலில் உலக சாதனை நிகழ்த்திவரும் ஒரு தலைமையின் கீழ் இயங்கிவரும் சிதம்பரத்திற்கு ஊழலற்ற ஆட்சி நடத்தும் மேற்குவங்க அரசைக் குறைகூற அருகதை உண்டா? சிதம்பரம் உள்ளிட்ட மத்திய ஆட்சியாளர் களுக்கும் மம்தாவுக்கும் மேற்குவங்க மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

எஸ்.ஏ.பி.

3 கருத்துகள்:

விடுதலை சொன்னது…

1.He represented the bankrupt American energy giant Enron, as a senior lawyer in India, and is again set to revive its Dhabol power project.

2.He resigned on 10 July 1992 from the Minister position owning moral responsibility for investing in Fairgrowth, a company allegedly involved in securities scam.

3.In 1997, he announced a controversial Voluntary Disclosure of Income Scheme (VDIS) which granted income-tax defaulters indefinite immunity from prosecution under the Foreign Exchange Regulation Act, 1973, the Income Tax Act, 1961, the Wealth Tax Act, 1957, and the Companies Act, 1956 in exchange for self-valuation and disclosure of income and assets. The Comptroller and Auditor General of India condemned the scheme in his report as abusive and a fraud on the genuine taxpayers of the country.

4.It should be noted that Chidambaram also represented the controversial British mining conglomerate Vedanta Resources in the Mumbai High Court until 2003 when he became the finance minister of India. He was also a member of the board of directors of that company.

5.In August 2006, President A.P.J. Abdul Kalam gave permission to enquire into the allegations that Prime Minister Manmohan Singh and his Finance Minister P. Chidambaram had been holding office of profit at the time of elections. It has been alleged that they both had been the board members of Rajiv Gandhi Trust Foundation. The Election Commission has been authorised to enquire into the allegations.

6.On 7 April 2009, P. Chidambaram was shoed by Jarnail Singh, a Sikh journalist during a press conference in Delhi. Singh, who works at the Hindi daily Dainik Jagaran was dissatisfied with Chidamabaram's answer to a question on the Central Bureau of Investigation's (CBI) clean chit to Congress leader Jagdish Tytler on the 1984 anti-Sikh riots case.
Later, Jarnail Singh appeared on a few media channels and thanked Chidambaram for taking no action against him and said that he would apologize to Chidambaram if he got a chance to meet him personally. He also said that his method of protest was wrong, but the issue was right. He also declined to take money offered to him by the Shiromani Akali Dal, a Sikh political party.

7.Mr. Chidambaram has been in public conflict with other members of the UPA government on policy issues.[20] There have been several instances where his public positions have exposed confusion in the policy agenda of the UPA government. In the past he has regularly announced plans to end Naxalism in the impending future. The most recent announcement was on Jul 30 2010.

8.Another previous such declaration was on November 10, 2009.
In 2009 Parliamentary elections, it was reported[by whom?] that Chidambaram has pressurised the Returning Officer of Sivaganga and doctored the poll results in his favour. AIADMK candidate Kannappan who lost in the poll demanded recounting of votes, which was declined.

9.In December 2010, it was reported that he blamed migrants for the rising rate of crime in New Delhi. He is alleged to have said that Delhi attracts a lot of migrants who live in unauthorized colonies and indulge in behavior that is unacceptable in any modern city. His quote was apparently a reaction to the Sultanpuri gang-rape incident
where an 18 year old girl was the victim. This quote attracted a lot of criticism from opposition parties, with UP chief minister Mayawati alleging that, being the Home Minister, Chidambaram was biased against North Indians

விடுதலை சொன்னது…

1990-ல் கேரள மாநில உணவுத் துறை செயலராக தாமஸ் இருந்தபோது பாமாயில் இறக்குமதியில் ஊழல் நடைபெற்றதாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. அதற்கான குற்றப்பத்திரிகையில் தாமஸ் பெயரும் உள்ளது.
இவர் மத்திய தொலைத் தொடர்புத் துறை செயலராக இருந்தபோதுதான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.
தாமஸ் மீதான வழக்கு விவரத்தை மூடி மறைத்து அவரை ஆணையராக நியமனம் செய்ததன் மூலம் ப. சிதம்பரம் கூட்டு சதியாளர் என்பது நிறுபிக்கப்பட்டுள்ளது.

விடுதலை சொன்னது…

விக்கிலீக்ஸ்:என்.ஐ.ஏ..
பயங்கரவாத குற்றங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருப்பது வாஷிங்கடனுக்கு அனுப்பிய அமெரிக்க தூதரக கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது, 'தி' ஹிந்து' வாயிலாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் அம்பல ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2008-ல் மும்பை தாக்குதலுக்குப் பிறகு கடத்தல், குண்டுவெடிப்பு, அணுசக்தி நிலைகள் மீதான தாக்குதல், இந்திய இறையாண்மைக்கு எதிரான தாக்குதல் முதலிய பயங்கரவாதம் தொடர்பானவற்றை விசாரிப்பதற்காக, 2009-ல் அவசர அவசரமாக ஃபெடரல் ஏஜென்சியாக உருவாக்கப்பட்ட அமைப்புதான் என்.ஐ.ஏ. உருவாக்கப்பட்டது.

இதுதொடர்பான சட்ட திருத்தமும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருசில நாட்களிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

என்.ஐ.ஏ. உருவாக்கப்பட்டது தொடர்பாக மார்ச் 4,2009-ல் அமெரிக்க தூதரகத்தில் இருந்து வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட கேபிளில், எஃப்.பி.ஐ இயக்குனர் ராபர்ட் முல்லரை மார்ச் 3-ம் தேதி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசியது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய ஆயுதம் என என்.ஐ.ஏ. குறித்து முல்லரிடம் வருணித்த ப.சிதம்பரம், இதன் பாதக நிலைப் பற்றியும் கூறியுள்ளார்.

என்.ஐ.ஏ.வின் அதிகாரம், அரசியலமைப்புப் பிரிவுகளின் எல்லையைக் கடந்து இருப்பதாகவும், 'ஃபெடரல்' குற்றம் என்பது இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சட்டம் - ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகளே பொறுப்பு என்ற நிலையில், என்.ஐ.ஏ.வின் அதிகாரம் என்பது நடைமுறையில் சிக்கலைத் தோற்றுவிக்கக் கூடியது என்கிற ரீதியில் அவர் பாதகச் சூழலை ஒப்புக்கொண்டிருக்கிறார் என அந்த கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்படும் பயங்கவாதம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்துக்கு வரும்போது, மத்திய - மாநில அரசு உறவின் அரசியலைமைப்பு அம்சங்களை மீறுவதாக அமையும் சாத்தியம் உண்டென முல்லரிடம் ப.சிதம்பரம் விவரித்திருக்கிறார்.

என்.ஐ.ஏ. உருவாக்கப்பட்ட இரண்டு மாத காலத்திலேயே இப்படி ஒரு கருத்தை அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இயக்குனரிடம் ப.சிதம்பரம் பகிர்ந்துகொண்டதை அந்த கேபிள் கோடிட்டு காட்டுகிறது.