செவ்வாய், 15 மார்ச், 2011

அமெரிக்காவின் மாநிலமா இந்தியா :விக்கி லீக்ஸ்


வெளியுறவுத்துறையின் அனைத்து அம்சங்களிலும் காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முற்றிலும் அமெரிக்க ஆதரவு நிலைபாட்டை பின் பற்றி வருவது வெட்ககரமானது என்று நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் ஆவேசத்துடன் குற்றம் சாட்டின.

இந்திய அரசின் நடவடிக்கை கள் அமெரிக்காவுக்கு ஆதரவாக மாறிவிட்டது என்பதை விக்கி லீக்ஸ் இணையதளம் அம்பலப் படுத்தியுள்ளது. இது செவ்வா யன்று நாடாளுமன்றத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

உலக அளவில் அனைத்து நாடு களிலும் அமெரிக்கா மேற்கொண் டுள்ள அராஜகத் தலையீடுகள் குறித்து விக்கிலீக்ஸ் இணையதளம் ஆதாரப்பூர்வமான தகவல்களை சிலமாதங்களுக்கு முன்பு லட்சக் கணக்கில் வெளியிட்டது. பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதர் கள், அந்தந்த நாடுகளில் அமெரிக் காவுக்கு ஆதரவான நடவடிக்கை களை மேற்கொள்ளவும், அதை நோக்கி சம்பந்தப்பட்ட அரசுகளை உந்தித்தள்ளவும் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பாக தங்களது அரசின் தலைமையிடத்திற்கு அன் றாடம் அனுப்பிய செய்திகளை ரக சியமாகக் கைப்பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்டது. இது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, விக்கிலீக்ஸ் இணைய ஏட்டின் முதன்மை ஆசிரியர் ஜூலியன் அசாஞ்சே மீது வன்முறையை ஏவியுள்ளது. அவர் தனது சொந்த நாடான ஸ்வீடனிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்தியாவில் அமெரிக்கத்தூதர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான அத்துமீறல்கள் மற்றும் தலையீடு கள் குறித்தும் விக்கிலீக்ஸ் ஆயிரக் கணக்கான தகவல்களை வெளியிட் டிருந்தது. இந்த விவரங்கள் இந்திய ஊடகங்களுக்கு முழுமையாக கிடைக்கப்பெறாத நிலைமை இருந் தது. இந்நிலையில் இந்தியா தொடர் பாக விக்கிலீக்ஸ் இணையதளத் திற்கு கிடைத்த அனைத்து தகவல் களையும் அந்நிறுவனத்துடன் உரிய முறையில் பேச்சு நடத்தி ‘தி இந்து’ நாளேடு பெற்று, ஏராள மான விவரங்களை செவ்வாயன்று வெளியிட்டது.

அதில், இந்தியா-பாகிஸ்தான் இடை யிலான உறவுகள் குறித்தும், மன்மோகன் சிங் அரசின் அமைச் சரவை மாற்றங்கள் குறித்தும், மும் பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் இந்தியா வில் அமெரிக்கத் தூதராகப் பணி யாற்றிய டேவிட் முல்போர்டு, தற் போதைய தூதர் திமோத்தி ரோமர் உள்பட அமெரிக்க தூதரக அதி காரிகள் எப்படியெல்லாம் தலை யிட்டார்கள் என்பது அம்பலப் படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வுகாண பிரத மர் மன்மோகன் சிங் தயாராக இருந் தார் என்றும், ஆனால், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன் உள்ளிட்ட மிகப்பெரும் அதிகாரிகள் குழுமம் இந்த விஷயத்தில் பிரதமருக்கு எதி ராக செயல்பட்டார்கள் என்றும் அமெரிக்கத் தூதர் தனது நாட்டின் தலைமையகத்திற்கு எழுதிய கடிதத் தில் தெரிவித்திருப்பது விக்கிலீக்ஸ் கேபிள்களில் அம்பலமாகியுள்ளது. அமெரிக்கத் தூதரும், எம்.கே.நாரா யணனும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் அணுகுமுறை குறித்து பலமுறை விவாதித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் உறவு தொடர்பான விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான எம்.கே.நாரா யணன் உள்ளிட்டோர் அடங்கிய அதிகார வர்க்கம், பிரதமர் மன்மோ கன் சிங்கை முற்றிலும் தனிமைப் படுத்தியது என்பதும் அம்பலமாகி யுள்ளது.

இதே போல மத்திய அமைச்சர வையில் யார் இடம்பெறவேண்டும் என்பது குறித்தும் அமெரிக்கத் தூதர்கள் தலையீட்டுடன் தீர்மா னிக்கப்பட்டுள்ள தகவலும் விக்கி லீக்ஸ் கேபிள்களில் வெளியாகியுள் ளது. குறிப்பாக ஈரானுடனான கேஸ் பைப்லைன் திட்டத்திற்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்த காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர், திடீரென்று பெட்ரோலியத் துறை அமைச்சர் பதவியிலிருந்து வெளி யேற்றப்பட்டார். அவரது இடத் தில் தீவிர அமெரிக்க ஆதரவாள ரான முரளி தியோரா பெட்ரோலி யத்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டார். அதற்குப்பிறகு ஈரானுட னான கேஸ் பைப்லைன் திட்டத் திற்கு சவக்குழி வெட்டப்பட்டது.

இதுபோன்ற ஏராளமான விவ ரங்கள் விக்கிலீக்ஸ் இணையதளத் தின் கேபிள்கள் மூலமும் தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அமளி

இந்த விவரங்கள் செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தின. மாநிலங்களவையில் இப்பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கள் பிருந்தா காரத் மற்றும் பி.ராஜீவன் ஆகியோர் எழுப்பினர். அமைச்சரவையில் மாற்றம் உட்பட இந்தியாவின் உள் விவகா ரங்களில், அமெரிக்கத் தூதராக இருந்த டேவிட் முல்போர்டு மிகப் பெரிய அளவில் தலையீடு செய்து, அரசின் கொள்கைகளை அமெரிக் காவுக்கு ஆதரவானதாக மாற்றியி ருப்பதை மிகக்கடுமையாக கண் டித்தனர்.

பெட்ரோலியத்துறையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் தலை யிட்ட முல்போர்டு, இது இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவை மேலும் தீவிரமாக்க உதவும் என்று தனது அரசுக்கு எழுதியிருப்பதை சுட்டிக்காட்டிய பிருந்தா காரத், ஈரான் கேஸ் பைப்லைனுக்கு ஆதர வாக பேசி வந்த மணிசங்கர் அய் யரை திட்டமிட்டு மாற்றுவதற்கு முல்போர்டின் தலையீடே முக்கி யக்காரணம் என்று சாடினார். இந்தி யாவில் அமெரிக்கா தனது நோக் கங்களை நிறைவேற்றிக்கொள்வதற் காக காங்கிரஸ் தலைமையிலான அரசு முற்றிலும் வளைந்து கொடுத் திருக்கிறது என்று ராஜீவன் கூறினார்.

அப்போது, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக ‘வெட்கம், வெட்கம்’ என்று கோஷ மிட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும் ஆதரிப்பதாகக் கூறினர்.

விக்கிலீக்ஸ் கேபிள்களில் ஐ.மு. கூட்டணி அரசின் அமைச்சர்கள் சைபுதீன் ஜோஷ், ஆனந்த் சர்மா, அஸ்வனி குமார், கபில்சிபல் ஆகி யோரைப் பற்றியும் கூட குறிப்புகள் இடம்பெற்றிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இப்பிரச்சனை தொடர்பாக அவையில் தொடர்ந்து அமளி நீடித்தது.

கருத்துகள் இல்லை: