அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட மன்மோகன் சிங் அரசு முடிவு செய்த தைத் தொடர்ந்து, ஐ.மு.கூட் டணி-1 அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து 2008ம் ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசுக்கு ஆதரவாக வாக் களிக்க எம்பிக்களுக்கு காங் கிரஸ் கட்சி லஞ்சம் கொடுத்த விவகாரம் அப்பொழுதே அம்பலமானது.
விக்கிலீக்ஸ் இணைய தளம் மற்றும் இந்து பத்தி ரிகை இதுகுறித்து அமெ ரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட் டுள்ளது. இதுகுறித்து அவைக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்க மளிக்க வேண்டும், குற்றச் சாட்டை மறுக்காவிட் டால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மக்களவை துவங்கிய தும் சிபிஐ தலைவர் குரு தாஸ் தாஸ் குப்தா இந்தப் பிரச்சனையை எழுப்பி னார். இந்திய ஜனநாயக வர லாற்றில் இதுவரை செய்தித் தாள்களில் இத்தகைய தொரு செய்தி வெளிவந்த தில்லை; எம்.பிக்களுக்கு லஞ்சம் தரப்பட்டுள்ளது. இது ஒரு ஜனநாயகப் படு கொலையாகும்; இந்தக்குற் றச்சாட்டை பிரதமர் மன் மோகன் சிங் மறுக்க வேண் டும் அல்லது தனது பதவி யை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத் தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசும் போது, இந்திய ஜனநாயகத் தில் அவமானகரமான பக் கங்களை பத்திரிகை அம் பலப்படுத்தியுள்ளது; பாஜக எம்பிக்களுக்கு தரப்பட்ட லஞ்சப்பணத்தை அவைக்கு அவர்கள் கொண்டு வந்த னர்; ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு எதி ராக நடவடிக்கை எடுக்க சபாநாயகர் உத்தரவிட் டதை அவர் சுட்டிக்காட்டி னார்.
ஐ.மு.கூட்டணி-1 அரசை பாதுகாப்பதில் தமது அரசும் முக்கியப்பங்கு வகித் தது. இப்போது எழுந்துள்ள விவகாரம் குறித்து விவாதம் நடத்த சபாநாயகர் உத்தர விட வேண்டும் என்று சமாஜ்வாதிக்கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் வலி யுறுத்தினார்.
இதுதொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சி தரப்புக்கிடையே கடு மையான வாக்குவாதமும் அமளியும் ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
சீத்தாராம் யெச்சூரி
மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீத்தாராம் யெச்சூரி பேசும்போது, 2008ம் ஆண்டு அரசைக் காப்பாற்ற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக விசாரிக்க நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதன் முடிவு வெளியிடப் படவில்லை. இதில் சம்பந் தப்பட்டவர்கள் மீது கிரி மினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளு மன்ற குழு சிபாரிசு செய் திருந்ததாக தெரிகிறது என்று குறிப்பிட்டார்.
சோனியா காந்தி குடும் பத்திற்கும் சில தனி நபர் களுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் அபாயகரமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிபிஐ தலைவர் து.ராஜா பேசுகையில், ஐ.மு.கூட் டணி-1 அரசை பாதுகாப்பதில் பணபலம், அதிகார பலம் மற்றும் அந்நிய சக்திகளின் கைவரிசையும் இருப்பது தெளிவாகியுள்ளது. பதவியில் தொடர இந்த அரசுக்கு அருகதையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அதிமுக உறுப்பினர் ஏ. இளவரசன் பேசும்போது, திருமங்கலம் தொகுதியில் மு.க.அழகிரி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது அம்பலமாகியுள்ளதை சுட்டிக்காட்டினார்.
பிரணாப் மழுப்பல்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அரசு இந்த தகவல்களை உறுதி செய்வதோ அல்லது மறுப்பதோ சாத்தியமல்ல என்று மழுப்பலாக குறிப்பிட்டார்.
மாநிலங்களவையிலும் இந்த விவகாரம் பெரும் அமளியை ஏற்படுத்தியதால் அவை ஒத்திவைக்கப் பட்டது.
வீக்கிலீக்ஸ் கண்டறிந்த ஆவணங்களை இந்து ஏடு வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மாவின் உதவியாளர் அமெரிக்கத் தூதரக ஊழி யர் ஒருவரிடம், இரண்டு கைகளிலும் கட்டுக்கட்டாக பணத்தை காண்பித்து அரசைக்காப்பாற்ற ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை தயாராக இருப்பதாக கூறியதாக அமெரிக்கத் தூதரகம் செய்தி அனுப்பியுள்ளது. ஆர்எல்டி கட்சி யைச் சேர்ந்த 4 எம்பிக்களுக்கு தலா ரூ.10 கோடி வழங்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை சதீஷ் சர்மா மறுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக