ஞாயிறு, 17 அக்டோபர், 2010

காங்கிரஸ் கட்சியின் அதிரடி பரிசு பெட்ரோல் விலை 72 காசு அதிகரிப்பு


இந்தியாவை கொஞ்ச கொஞ்சமாக விற்க முடிசெய்துள்ள காங்கிரஸ் கட்சி தற்போது பெட்ரோல் விலையை உயர்த்தியதன் மூலம் இந்திய மக்களை கொஞ்ச கொஞ்சமாக கொல்லும் தனது பொருளாதார சீர்திருத்த நடடிக்கையை தீவிர படித்தி வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை பெட்ரோல் விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 72 பைசா உயர்த்தியது.

இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. விலை உயர்வுக்கு பின்னர் டில்லியில் பெட்ரோல் விலை ரூபாய் 52.55 ஆக உயர்ந்தது. சென்னையிலும் லிட்டருக்கு 72 காசுகள் உயர்த்தப்பட்டது.

முன்னதாக நேற்று பாரத் பெட்ரோலியம் பெட்லோல் விலையை லிட்டருக்கு 70 பைசா உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் விலை நிர்ணயத்தை மத்திய அரசு பொறுப்பில் வைத்திருந்த வரை, இந்த விலை உயர்வுகள் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சந்தை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது முதல் மூன்று முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்ட பிறகே இதுகுறித்த செய்தியை அறிவிக்கின்றன பெட்ரோல் நிறுவனங்கள்.

உலகில் பெட்ரோல் மற்றும் டீஸல் அதிக விலைக்கு விற்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கன்டணத்தை தெரிவித்து உள்ளது

கருத்துகள் இல்லை: