ஞாயிறு, 1 மே, 2011

பாட்டாளி வர்க்கமே புரட்சிகரமான வர்க்கம்


நம் அன்றாட வாழ்வில் மார்க்சியம் நமக்கு வழிகாட் டுகிறது. தினமும் ஏராளமான சம்பவங்களைக் காண்கிறோம். நாளேடுகளில் படிக்கிறோம். அவை அனைத் தையும் நாம் உணர்ந்துகொள்ள முடியுமா? நிச்சயம் முடியும்.

1. போராடும் மாணவர்கள் மீது தடியடி

2. 2லட்சம் விவ சாயிகள் தற்கொலை

3. விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியான

விலை கிடைக்காததால் விவசாயிகள் கடனாளியாவது.

4. வாழ வழி தெரியாது நகரங்களுக்குக் குடி பெயர்வது

5. விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை

என்று எண்ணற்ற நிகழ்வுகளை நாம் அன்றாடம் காண்கிறோம். இவை ஒவ்வொன்றையும் எவ்வாறு நாம் புரிந்துகொள்வது? அதற்கு மார்க்சியம் ஒரு வழிமுறையைக் காண்பிக்கிறது. அந்த வழிமுறைதான் “வர்க்கப் பார்வை” என்பது. வர்க்கப் பார்வை என்பது தொழிலாளி வர்க்கத்தின் நிலைபாட்டி லிருந்து, நோக்கு நிலையிலிருந்து ஒவ்வொன்றையும் ஆராய்வது. மக்களில் தொழிலாளி வர்க்கம். விவசாய வர்க்கம். நடுத்தர வர்க்கம். கைவினைஞர்கள் என்று பல பகுதியினர் உள்ளனர்.

ஆனால், இந்த வர்க்கங்களில் தொழிலாளி வர்க்கம் மட்டுமே ஒரு புரட்சிகரமான வர்க்கம். அதற்கு எவ்வித சொத்துரிமையும் கிடையாது. தம் உழைப்பு சக்தியை விற்றே வாழவேண்டிய வர்க்கம். இயந்திர உற்பத்தி தொழி லுடன் இணைந்த வர்க்கம். எனவே, அதை மார்க்ஸும், ஏங்கெல்ஸும் தேர்ந்தெடுத்தனர். அதற்கு மற்றொரு நிபந்தனையையும் மார்க்ஸும், ஏங்கெல்சும் விதித்தனர். சுரண்டப்படும் பிற சமூக வர்க்கங்களை அந்தச் சுரண்ட லிலிருந்து விடுவிக்காமல், தொழிலாளி வர்க்கம் தன்னை மட்டும் விடுவித்துக்கொள்ள முடியாது என்று அவர்கள் கூறினர். அந்த வர்க்கத்தையே புரட்சிக்குத் தலைமை தாங் கும் வர்க்கம் என்று அறிவித்தனர். தொழிலாளி வர்க்கத் திற்கு புரட்சிகர முன்னணிப் படை என்றழைக்கப்படும் “கம்யூனிஸ்ட் கட்சி” தலைமை தாங்கி வழிகாட்டுகிறது.

தொழிலாளி வர்க்கம் ஒவ்வொரு சம்பவத்தையும் நிகழ்வுப் போக்கையும் ஆராய்கிறது. அந்த ஒவ்வொன்றும் சுரண்டும் முதலாளி வர்க்கத்தின் நலனுக்காக நிற்கிறதா? சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக நிற்கிறதா? என்று பகுத்தாராய்ந்து, தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கேற்ற நிலைபாட்டை எடுக்கிறது. அனைத்து சுரண்டப்படும் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் இந்த நிலைபாடுதான் தொழிலாளி வர்க்கப் பார்வை என்று அழைக்கப்படுகிறது. இதுதான் கம்யூனிஸ்டுகளின் நிலை பாடாகும்.

தாங்கள் உருவாக்கிய “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை யில்” மார்க்ஸும், ஏங்கெல்ஸும் தொழிலாளி வர்க்கத்திற்கு ஏன் இந்தத் தலைமைப் பொறுப்பு என்பதை பின்வரும் வார்த்தைகளில் கூறியுள்ளனர்.

“இன்று முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் எல்லா வர்க்கங்களிலும் பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் உண்மையாகவே புரட்சிகரமான வர்க்கமாகும். ஏனைய வர்க்கங்கள், நவீன தொழிலின் வளர்ச்சியின் முன்னால் நலிவுற்று, சிதைந்து முடிவில் மறைந்துபோகின்றன. பாட் டாளி வர்க்கம் மட்டும்தான் நவீன தொழிலுக்கே உரித்தான அதன் நேரடி விளைவாய் அமைகிறது...”

என்.ராமகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை: