“நான் பொய்யே பேசுவதில்லை”- இது மம்தா பானர்ஜி சமீபத்தில் அளித்த பேட்டி யில் கூறியது! ஆனால் நடைமுறையில் பொய் பேசாமல் அவரால் இருக்க முடியாது என்பதே உண்மை. அவர் இடது முன்ன ணிக்கு எதிராகக் கூறிவரும் சில பொய்கள்:
பொய் 1 :
ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் கிலோ அரிசி இரண்டு ரூபாய் எனும் திட்டம் மத்திய அரசுடையது! இடதுமுன்னணி அரசி னுடையது அல்ல!
உண்மை :
இத்திட்டத்திற்கு மத்திய அரசு கிலோ அரிசி ரூ.5.65க்கு விற்கிறது. இடது முன் னணி அரசு ஒரு கிலோவிற்கு ரூ.3.65 மானி யம் தந்து இரண்டு ரூபாய்க்கு தருகிறது. தற் சமயம் 2.64 கோடி மக்கள் இத்திட்டத்தால் பயன்பெறுகின்றனர். அடுத்து ஆட்சிக்கு வரும் 8வது இடது முன்னணி அரசு இத் திட்டத்தை மேலும் இரண்டு கோடி மக் களுக்கு விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.
பொய் 2 :
மேற்கு வங்கத்தில் 50சதவீதம் கிராமங் களுக்கு மின்சாரமே இல்லை!
உண்மை :
இது வடிகட்டின பொய். மேற்குவங்கத் தில் 37910 கிராமங்கள் உள்ளன. 37765 கிரா மங்களுக்கு அதாவது 99.61சதவீத கிராமங் களுக்கு மின்வசதி செய்து தரப்பட்டுவிட்டது. மீதமுள்ள கிராமங்களுக்கும் அடுத்து ஆட் சிக்கு வரும் 8வது இடது முன்னணி அரசு மின்சாரத்தை அளிக்கும்.
பொய் 3 :
மேற்குவங்கத்திற்கு மட்டும் நான் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இரயில்வே திட்டங்களை அறிவித்துள்ளேன்.
உண்மை :
2010-11ம் ஆண்டில் இரயில்வே பட்ஜெட் நாடு முழுமைக்குமே ரூ.41626 கோடிதான்! 2011-12ல் ரூ.57630 கோடிதான். நாடு முழு மைக்கும் சேர்த்து இரண்டு ஆண்டுகளுக் கான பட்ஜெட் ரூ 1இலட்சம் கோடிக்கும் குறைவாகவே உள்ளது. அப்படியிருக்க, மேற்குத் வங்கத்தில் மட்டுமே எப்படி ஒரு இலட்சம் கோடி ரூபாய் சாத்தியம்? மம்தா வின் மகத்தான பொய்களின் ஒன்று இது!
பொய் 4:
முறைசாரா தொழிலாளர்களுக்கு மத்திய திட்டங்கள்தான் உள்ளன. இடது முன்னணி அரசு அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை!
உண்மை:
மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்குத் தான்! ஆனால் மிகக்குறைவான வருமானம் பெற்றாலும் மத்திய அரசாங்கம் நிர்ணயித் துள்ள மிகக்குறைவான வறுமைக்கோடு தொகை காரணமாக முறைசாரா தொழி லாளர்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள வர்களாக கருதப்பட்டு , மத்திய திட்டங்கள் தரப்படுவது இல்லை.
ஆனால் இடதுமுன்னணி அரசு, முறை சாரா தொழிலாளர்களுக்கு கீழ்க்கண்ட நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
* 25 லட்சம் முறைசாரா தொழிலாளர் களுக்கு வருங்கால வைப்பு நிதி.
* விவசாயத் தொழிலாளர்களுக்கு வருங் கால வைப்பு நிதி மற்றும் மருத்துவ நலத் திட்டங்கள்.
* கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் (பென்சன்)
* போக்குவரத்து தொழிலாளர்களின் குழந் தைகளுக்கு கல்வி உதவி நிதி.
* பீடித் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி
இப்படி பட்டியல் நீளும்.
பொய் 4 :
இரயில்வேத்துறையில் நான் பயணிகள் கட்டணத்தையோ அல்லது சரக்கு கட்டணத் தையோ உயர்த்தவில்லை. வரியும் போட மாட் டேன்.
உண்மை:
இரயில்வே பட்ஜெட்டிற்காக மம்தா மத்திய அரசிடமிருந்து கடந்த இரு ஆண்டு களில் ரூ.35875 கோடி கடன் பெற்றுள்ளார். வெளிச்சந்தைகளிலிருந்து ரூ.29714 கோடி கடன் பெற்றுள்ளார். இப்படி இரயில்வே ஒரு போதும் கடனாளியாக இருந்தது இல்லை. இதன் காரணமாக இரயில்வேத்துறை நிதி பற்றாக்குறையால் திணருகிறது.
மேலும் கடந்த இரு ஆண்டுகளிலும் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என் பதை நாடே அறியும்.
பொய் 5:
கடந்த ஒரு ஆண்டில் 710 கி.மீ. புதிய இருப்புப்பாதை போட்டுள்ளேன்.
உண்மை: தான் 710 கி.மீ. புதிய இருப்புப் பாதை போட்டுள்ளேன் என்கிறார் மம்தா. ஆனால் நிதி அமைச்சகத்தின் புள்ளி விவரங் கள் 59 கி.மீ. மட்டுமே புதிய இருப்புப்பாதை போடப்பட்டதாக தெரிவிக்கிறது.
இரட்டை இருப்புப்பாதைகள் 700 கி.மீ. போட்டதாக மம்தா கூறுகிறார். ஆனால் நிதி அமைச்சகத்தின் ஆவணங்கள் 55 கி.மீ. மட்டுமே போடப்பட்டதாக கூறுகின்றன. அதே போல 1000 கி.மீ. இருப்புப்பாதை மின்மயமாக்கப்பட்டதாக மம்தா கூறுகிறார். ஆனால் 243 கி.மீ. தான் மின்மயமாக்கப் பட்டதாக அரசின் ஆவணங்கள் கூறுகின் றன. இப்படி மம்தாவின் பொய்கள் அமைந் துள்ளன.
பொய் 6:
நான் 1.80 இலட்சம் பேருக்கு இரயில்வே யில் வேலை வாய்ப்பு அளித்துள்ளேன்.
உண்மை:
இரு ஒரு இமாலயப் பொய் எனில் மிகை அல்ல. இரயில்வேயில் பல்லாயிரக்கணக் கான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பக்கோரி தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளில் இந்த இடங்களை நிரப்பிட இரயில்வே போர்டு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டதாகவோ அல்லது இர யில்வே பட்ஜெட்டில் 1.8 இலட்சம் பேருக்கு புதியதாக ஊதியம் தந்திடவோ எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. எனவே இது மம்தாவின் இமலாயப் பொய் என்பதே உண்மை.
பொய் 7:
மாவோயிஸ்டுகள் மார்க்சிஸ்ட் கட்சியின ரால் உருவாக்கப்பட்டவர்கள்.
உண்மை:
மாவோயிஸ்டுகள் மார்க்சிஸ்ட் கட்சியினரால் உருவாக்கப்பட்டவர்கள் எனில் அவர்கள் ஏன் மம்தா முதல்வர் ஆவதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்? மார்க்சிஸ்ட் கட்சி யின் ஊழியர்களை ஏன் அவர்கள் கொன்று குவிக்க வேண்டும்?
பொய் 8 :
சிறுபான்மை மக்களுக்கு செய்யப்பட் டுள்ள இட ஒதுக்கீட்டிலிருந்து இந்துக்களின் கோட்டாவிலிருந்து செய்யப்பட்டுள்ளது.
உண்மை:
இந்து சமூகத்தில் உள்ள அனைத்து பிற் படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய் யப்பட்டதற்கும் மேலாக தனியாக முஸ்லிம் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் 10 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மேற்குவங்கத்தில் மட்டும் தான் 10 சதவீதம் அளவுக்கு செய்யப்பட்டுள் ளது.
சிறுபான்மை மக்களுக்கு தரப்பட்டுள்ள ஒதுக்கீடு இந்துக்களின் ஒதுக்கீட்டிலிருந்து செய்யப்பட்டுள்ளது என மம்தா கூறுவது மத மோதல்களை உருவாக்கிடும் ஆபத்தான அணுகுமுறை, பாரதிய ஜனதா கட்சியைவிட மோசமாக மம்தா பேசுகிறார்.
பொய் 9:
மார்க்சிஸ்ட் கட்சி கோமாவில் உள்ளது.
உண்மை:
சமீபத்தில் பிரிகேடியர் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பேரணியில் 10 லட்சம் பேருக்கும் அதிகமாக மக்கள் பங்கேற்றனர். கடந்த 50 ஆண்டுகளில் இதுபோல ஒரு பேரணியை பார்த்தது இல்லை என எதிர்க் கருத்துகள் கொண்ட ஊடகங்களே எழுத வேண்டி வந்தது.
இரு மாதங்களுக்கு முன்பு நடந்த கல்லூரி தேர்தல்களில் இந்திய மாணவர் சங்கம் மகத்தான வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆசிரியர் தேர்தல் களிலும் இடதுசாரி வேட்பாளர்கள் வென் றனர். இந்த உண்மைகளை எல்லாம் மம்தா மறக்க முயல்கிறார் அல்லது ஊடகங்களின் துணையோடு மறைக்கப்பார்க்கிறார்.
இவ்வாறாக பொய்களையே சுவாசிக்கும் மம்தாவிற்கு பல ஊடகங்களும் ஆதரவு தெரி வித்து வருகின்றன. எனினும் இடதுமுன்ன ணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதன் மூலம் மேற்குவங்க மக்கள் இந்த பொய்யர் களின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுவர் என்பது உறுதி.
ஞாயிறு, 1 மே, 2011
மம்தா வேசம் கலஞ்சிப்போச்சி டும் டும் டும்....
அ.அன்வர்உசேன்
லேபிள்கள்:
அதிசயம்,
அரசியல்,
சிபிஎம்,
நிகழ்வுகள்,
நையாண்டி,
மம்தாபானர்ஜி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக