ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

குமுதம் ரிப்போர்ட்டரின் குரோதம்
ஊடகவாதிகள் சிலருக்கு ஒரு வகை மனநோய் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. அதைத் தணித்துக் கொள்வதற்காக அவ்வப் போது அவர்கள் நாடுகிற ஒரு போதைதான், மார்க்சிஸ்ட்டுகள் மீது புதிய புதிய அவதூறு களைக் கட்டவிழ்த்துவிடுவது.

இப்போது இந்த நோய்க்கு ஆட்பட்டிருப்பவர் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ பத்திரிகையின் செய்தியாளர் ப்ரியா தம்பி. வேறு சில பிரச்சனைகளில் தனது கருத்தோடு மார்க்சிஸ்ட் கட்சி யின் நிலைப்பாடு ஒத்துவரவில்லை என்ப தால், அந்த இயக்கத்தின் மீது சகதி வீசுவது என்ன ஊடக நெறியோ?

மேற்குவங்கத்தில் 32 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறி, “17 ஆயிரம் பேர் கொல் லப்பட்ட பரிதாபம்” என்ற குறிப்புடன் “மார்க் சிஸ்டுகள் நடத்திய இனப்படுகொலை” என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். இந்திய விடுதலைக்கு முன்பு, ஒன்றுபட்டிருந்த வங்கத் தில் நாமசூத்திரர்கள் என்ற தலித் மக்கள் வாழ்ந்து வந்தனர். வங்கப் பிரிவினைக்குப்பின் அவர்கள் கிழக்கு பாகிஸ்தானின் (இன்றைய பங்களாதேஷ்) குடிமக்களாகினர். எண்ணற்ற படுகொலைகளும், கொடுமைகளும் அரங்கேற்றப் பட்ட இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது இருநாடுகளிலும் மதச் சிறுபான்மை மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இருநாடு களுக்கு அகதிகளாக குடிபெயர்ந்தனர். கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வந்த இந்து மக்களோடு இந்த தலித்துகளும் சேர்ந்து வந்தனர்.

பெரும்பகுதியினர் பாதுகாப்பு பகுதியாகிய சுந்தரவனத்தில் தங்கினார்கள். மேற்குவங் கத்தில் ஜோதிபாசு தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த இடது முன்னணி அரசு, அவர்களிடம் வனப்பகுதியிலிருந்து வெளி யேறுமாறு கேட்டுக்கொண்டது. கொஞ்சமும் வன்முறை பயன்படுத்தப்படாமல் கேட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்து காலப்போக்கில் கணிசமானோர் பங்களாதேஷ் நாட்டிற்கே திரும்பிச் சென்றனர். பலர், அப்போது மத்திய அரசின் திட்டத்தில் மத்தியப்பிரதேசம் உள் ளிட்ட பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட அகதி முகாம்களுக்குச் சென்றனர். மற்றவர்கள் மேற்குவங்கத்திலேயே தங்கி விட்டார்கள்.

‘குமுதம் ரிப்போர்ட்டர்’ கட்டுரை, இந்த நிகழ்வை அப்படியே உருமாற்றி, சாதி இந்துக் களின் வெறுப்புக்கு உள்ளான நாமசூத்திரர் களை ஜோதிபாசு அரசின் காவல்துறையும், மார்க்சிஸ்ட்டுகளும் சேர்ந்து படுகொலை செய்ததாகவும், எஞ்சியோரை விரட்டியடித் தாகவும் சித்தரிக்கிறது. தனிப்பட்ட வன்மமும், கற்பனைத்திறனும் கலந்த கட்டுரையாக் கத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு.

நடந்தது என்னவென்றால், ஜோதிபாசு அரசு நாட்டிற்கே முன்னுதாரணமாகத் தொடங் கிய நிலச்சீர்திருத்தத்தின் கீழ் இந்த தலித்து கள்அகதி மக்களுக்கும் நிலம் வழங்கப்பட்டது. அவர்களிடம் வாக்களித்திருந்தபடி குடி யுரிமை உள்ளிட்ட அங்கீகாரங்களை வழங்கு கிற தொடக்கமாக அது அமைந்தது.

“மேற்கு வங்கத்தில் எப்போதுமே - குறிப்பாக மார்க்சிஸ்டுகளாலும், இதர இடது சாரிகளாலும் - சாதிப் பாகுப்பாட்டின் அடிப் படையில் பிரச்சனைகளை கையாளப் பட்டதில்லை,” என்று அந்தத் தோழர்கள் பெருமையோடு குறிப்பிடுகிறார்கள்.

கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது போல் உண்மையிலேயே அப்படியொரு படு கொலை நடந்திருக்கும் என்றால், அது எவ்வ ளவு பெரிய பிரச்சனையாக கிளப்பிவிடப்பட் டிருக்கும்! இடது முன்னணி அரசுக்கு எதிராக ஈறு கிடைத்தால் கூட அதைப் பேனாக்கிப் பெருமாளாக்கத் துடிக்கிற பெரும் வர்த்தக ஊடகங்கள் இவ்வளவு பெரிய சம்பவத்தை விட்டு வைத்திருப்பார்களா?

சாதிய மோதல்களால் மற்ற பல மாநிலங் கள் திணறிக்கொண்டிருக்கும் போது மேற்கு வங்கம் அதற்கு அப்பாற்பட்டதாக, அனைத்து மக்களின் ஒற்றுமைப் பூங்காவாக திகழ்ந்து வந்திருக்கிறது என்பதையும் நாடறியும். அந்த இணக்கச்சூழலை சீர்குலைக்க மம்தா - மாவோயிஸ்ட் கூட்டணி தன்னால் முடிந் ததை எல்லாம் செய்து பார்த்து வருகிறது.

சில தனிப்பட்ட “அரசியல் சாரா” (?) அமைப் புகளும், அவர்களுக்கு சாதகமான சில பத் திரிகைகளும் அவ்வப்போது இப்படி ஒரு பிரச்சனை நடந்ததாக தூசு கிளப்ப முயன்ற துண்டு. அப்போதெல்லாம், இடது முன்னணி அரசும், மார்க்சிஸ்ட் கட்சியும் முறையாக பதிலளித்து வந்துள்ளன. இணையத்தளத்திலும் அந்த பதில்கள் கிடைக்கின்றன. நேர்மையான எழுத்தின் மீது மரியாதை உள்ளவர்கள் என்றால் குமுதம் ரிப்போர்ட்டரும் அதன் ரிப்போர்ட்டரும் இந்த பதில்களையும் எடுத் துப் போட்டிருப்பார்கள். ஏற்கெனவே வேறொரு தமிழ்ப் பத்திரிகையில் வெளிவந்த நீண்ட கட்டுக்கதையின் சுருக்கத்தை வெளியிட் டிருக்க மாட்டார்கள்.

அந்த வேறொரு பத்திரிகைக்கு மார்க் சிஸ்ட்டுகள் மீது என்ன கோபம்? அண்மைக் காலமாக மார்க்சிஸ்ட் கட்சியும், அதன் வழி காட்டலில் இயங்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தலித் மக்களின் உற்ற தோழர்களாக, அவர்களது பிரச்சனைகளில் தலையிட்டு, அவர்களையும் திரட்டிப் போராடி வெற்றிகளை சாதித்து வருகின்றன. தீண்டாமைக்கு எதிராக மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்புவதில் உத்தப்புரம் சுவர் இடிப்பு, அதன்பிறகும் அங்கு தொடரும் போராட்டம் ஆகியவை சிறந்த முன்னுதாரணங்களாகத் திகழ் கின்றன. இது, தலித் மக்களுக்கு தாங்கள்தான் ‘காவலர்கள்’ என்று இவர்கள் காட்டிக்கொள் ளும் நோக்கத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி யுடன்தான் இப்படியொரு அவதூறு.

ஒட்டுமொத்தத்தில் இன்றைய உலக மயச்சூழலில் உள்நாட்டு - வெளிநாட்டு கார்ப் பரேட்டுகள், தங்களுக்கு சவாலாக இருக்கிற மார்க்சிஸ்ட்டுகளை எப்படியாவது தனிமைப் படுத்த விரும்புகிறார்கள். மம்தா பானர்ஜி தொடர்பாக அமெரிக்க தூதரகம் அனுப்பிய பரிந்துரை குறித்து வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் ஆவணங்கள் இதற்கு ஒரு சாட்சி. குமுதம் ரிப்போர்ட்டர் கதையும் அப்படியொரு மார்க்சிஸ்ட் அவதூறு சேவையைத்தான் செய்கிறது. “படுகொலைக்குக் காரணமானவர்கள் வர லாற்றின் கறைபடிந்த பக்கங்களில்தான் இடம்பெறப் போகிறார்கள்” என்று அந்தக் கட் டுரை முடிகிறது. நடக்காத ஒரு படுகொலை பற்றிக் கற்பனையாக எழுதி ஒரு வரலாற்று இயக் கத்தின் மீது கறை படியச் செய்யப் போகிறவர் களுக்குத்தான் அந்தப் பக்கங்கள் காத்திருக் கின்றன.

-அ.குமரேசன்

கருத்துகள் இல்லை: