செவ்வாய், 3 மே, 2011

ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி தர மறுக்கும் தனியார் பள்ளிகளை இழுத்து மூடு.



நாடு விடுதலையடைந்து 63 ஆண்டு களுக்கு பிறகுதான் அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்பதற்கான உரி மையை நிலைநாட்டுகின்ற “அனை வருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம்” கொண்டுவரப் பட்டுள்ளது. மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகு 2010 ஏப்ரல் 1 முதல் அச்சட்டம் நடை முறைக்கு வந்துள்ளது. அதன்படி கல்வி பெறுவது அனைத்துக் குழந்தைகளின் அடிப்படை உரிமையாக்கப்பட்டுள் ளது.


சமமான மற்றும் தரமான கல் வியை அனைவருக்கும் வழங்கிட சில விதிகள் அச்சட்டத்தில் உருவாக்கப்பட்டுள் ளது. நாடு முழுமைக்கும் பரவியுள்ள தனியார் பள்ளிகள், அருகிலுள்ள நலி வடைந்த பிரிவு மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் 25 சதவீதம் இடங்களை ஒதுக்கி, இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்பதும் கல்வி உரிமைச்சட்டத்தின் முக்கிய விதிகளில் ஒன்று வரும் கல்வியாண்டிலிருந்து ஒன்றாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க் கையின் போது அவ்விதி நடை முறைப்படுத்த வேண்டியுள்ள நிலையில், தமிழகத்திலுள்ள ஒரு சில தனி யார் பள்ளிகள், அவ்விதியை நடை முறைப்படுத்த மறுத்து பெற்றோர் ளை அரசுக்கு எதிராகவும், கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கு எதிராகவும் திருப்பி விடுகின்ற வேலையை செய்து வருகின்றன.

குறிப்பாக சென்னையிலுள்ள அடையாறு சங்கரா மேல்நிலைப் பள்ளி மற்றும் லேடி ஆண்டாள் வெங் கடசுப்பாராவ் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆகியவை, பெற்றோர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் நலிந்த பிரிவினரை தங்கள் பள்ளியில் அனுமதித்தால் பள்ளியின் தரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவை கெட்டுப்போய் விடும் என்றும், எனவே பெற்றோர்கள் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல பள்ளிகள் பெற்றோர்களுக்கு இத்தகைய சுற்றறிக்கையை அனுப்ப தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தனியார் பள்ளிகளின் இத்தகைய செயல் சமூக நீதிக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது. எனவே, இந்திய மாணவர் சங்கம் இதை வன்மையாக கண்டிக்கிறது.

‘கல்வி’ என்பது பெரும்பாலான மக்களின் நலனுக்கான அறிவை உற்பத்தி செய்கின்ற கருவியாக இருக்க வேண்டுமே தவிர ஒரு சிலரின் லாபம், ஆதிக்கம் மற்றும் அதிகாரக் குவியல் என்பதற்கான கருவியாக இருக்கக் கூடாது. அத்தகைய நிலையை ஜனநாயக நாட்டில், அரசு அனுமதிக்கக் கூடாது. முன்னேறிய நாடுகளில் எல் லாம் கல்வி வழங்கும் முழுப்பொறுப் பையும் அரசே ஏற்றுக் கொண்டு செயல்படுத்தி வருகின்றது. அங்கு சம மான கல்வி எல்லோருக்கும் அளிக்கப் படுகின்றது. ஆனால், நமது நாட்டில் கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து மத் திய- மாநில அரசுகள் விலகி தனியாரை தடையின்றி அனுமதித்ததன் விளைவே கல்வி வியாபாரமானதோடு மட்டு மல்லாமல், சமூக நீதியையும், ஜனநாய கத்தையும் புறந்தள்ளி, கொள்ளை லாபத்திற்காக, அரசின் சட்டங் களையே நடைமுறைப்படுத்த மறுக் கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழு அளவில் நடைமுறைப் படுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும். மேலும் மறுக்கும் பள்ளி களின் அங்கீகாரத்தை ரத்து செய்து நட வடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ள சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.கனகராஜ், செயலாளர் ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் இதர விதிகளையும் அனைத்துப் பள்ளிகளும் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: