புதன், 11 மே, 2011

2ஜீ ஊழல் கலைஞர் டி.வி. தயாளு அம்மாள் உடந்தை அம்பலம் : தி பயனீர்


கலைஞர் டி.வி. தொடங் குகையில் அதன் நிறுவன இயக்குநராக தமிழக முதல் வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இருந்தார் என்பதும், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் நடப்பு கணக்கு துவங்கு கையில் கையெழுத்திட்டிருக்கிறார் என்பதற்கும் ஆவணச் சான்றுகளை சிபிஐ பெற்றிருக்கிறது. அவருடன் கனிமொழியும், நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கையெழுத்திட்டு, 733560561 என்ற எண்ணிடப்பட்டு கணக்கு துவங்கப்பட்டதாக, ‘தி பயனீர்’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ‘தி பயனீர்’ நாளேட்டில் வந்துள்ள செய்தி வருமாறு:

சரத்குமார் மற்றும் கனிமொழியுடன் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, ஸ்வான் டெலிகாம் ஊக்கு விப்பாளர் (பிரமோட்டர்) சாகித் பால்வா, மற்றும் டெலிகாம் அதிகாரிகள் சிலருடன் பால்வாவுக்குச் சொந்தமான கம்பெனியின் இயக்குநர்களும் 2ஜி ஸ்பெக் ட்ரம் ஊழல் தொடர்பாக கையூட்டு கொடுத்த குற்றத் திற்காகவும், பெற்ற குற்றத் திற்காகவும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்ற அறிக்கையில் குற்றஞ்சாட் டப்பட்டவர்களாகச் சேர்க் கப்பட்டிருக்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, ஸ்வான் டெலி காம்கம்பெனிக்கு சலுகைகள் வழங்கியதற்காக அன்பளிப்பு என்ற பெயரில் லஞ்சமாக 2008 டிசம்பர் 23க்கும் 2009 ஆகஸ்ட் 7க்கும் இடையே, டிபி குரூப் கம் பெனியான சினியுக் பிலிம்ஸ் சார்பாக 200 கோடி ரூபாய் கலைஞர் டி.வி.யின் மேற்படி இந்தியன் வங்கியின் நடப்பு கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

காவல்துறையினரிடம் குற்றவிசாரணை முறைச் சட்டம் 161ஆவது பிரிவின் கீழ் வாக்குமூலம் அளித்துள்ள கலைஞர் டி.வி. பொது மேலாளர் (நிதி) ஜி. ராஜேந்திரன் என்பவர், ‘‘2009 பிப்ரவரி 13 அன்று நடைபெற்ற கலைஞர் டிவி பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர்கள் கூட்ட நிகழ்ச்சிப்பதிவேட்டின் (மினிட்) படி, சினியுக் பிலிம்ஸ் பிரை வேட் லிமிடெட்டிடமி ருந்து 200 கோடி ரூபாய் வரை நிதி பெற்றிட சரத்குமாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது’’ என்றும், ‘‘இந்தக் கூட்டத்தில் சரத் குமார், தயாளு அம்மாள் கலந்து கொண்டனர்’’ என்றும் தெரிவித்திருக் கிறார்.

மேலும் அவர் கலைஞர் டிவி தொடர்பாக இந்தியன் வங்கியின் உள்ள கணக்கு எண் 733560561இல் எம்.கே. தயாளு, கனிமொழி கருணா நிதி மற்றும் சரத் குமார் ஆகியோர் கையெழுத்திட் டுள்ளனர் என்றும் கூறி யிருக்கிறார்.

இந்தக் கணக்கில் சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் 200 கோடி ரூபாய் மாற்றியிருக்கிறது என்றும் ராஜேந்திரன் வாக் குமூலம் அளித்திருக்கிறார்.

கலைஞர் டிவி சார்பாக மேற்படி 200 கோடி ரூபாயும் கடனாகத்தான் பெறப் பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், சிபிஐ இதனை ஏற்கவில்லை.

இது தொடர்பாக சினியுக் நிறுவனத்திற்கும் கலைஞர் டிவி நிறுவனத்திற்கும் இடையே எந்தவிதமான முறையான ஒப்பந்தமும் இல்லாததாலும், இந்தக் கடனைப் பெறுவதற்கு எவ் விதமான அடமானப் பத்தி ரங்களும் இல்லாததாலும் இக்கூற்று பொய்யான ஒன்று என்றுதான் என சிபிஐ முடிவுக்கு வந்துள் ளது. (ந.நி.)

கருத்துகள் இல்லை: