சனி, 13 செப்டம்பர், 2008

இடதுசாரிகளின் எச்சரிக்கை உண்மையாகிறது!


அணுசக்தி உடன்பாடு விஷயத்தில் மன்மோகன்சிங் அரசு நாட்டு மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறது என்பதை, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு புஷ் அனுப்பிய ரகசிய கடிதக் குறிப்புகள் மீண்டும் ஒரு முறை அம்பலப் படுத்தியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது. 

இந்தியாவுக்கு நிரந்தரமாக அணு எரிபொருள் சப்ளை மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக அமெரிக்காவிடம் பெற்று விட்டதாக இந்திய அரசு கூறிய உத்தரவாதங்களுக்கு, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதியால் அனுப்பப்பட்ட குறிப்புகள் முற்றிலும் முரணாக உள்ளன. புஷ் அனுப்பியுள்ள கடிதத்தில் வைக்கப்பட்டுள்ள தனிக்குறிப்பு, அணு எரிபொருள் சப்ளை செய்வது தொடர்பாக அமெரிக்கா அளித்த உறுதிமொழிகளுக்கு சட்டப் பூர்வ கட்டாயம் ஏதும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் இரண்டாவது பாராவில் குறிப்பிடப்பட் டுள்ள வார்த்தைகள், சர்வதேச அணுசக்தி கழகத்தின் பாது காப்பு விதிமுறைகள் நிரந்தரமானவை என்றும், அது தொடர் பாக இந்திய அதிகாரிகள் கூறுவதில் உண்மையில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இவ்வாறாக, இந்தியா வுக்கு அணு எரிபொருள் சப்ளை செய்வதாக அமெரிக்கா உத் தரவாதம் அளிக்காத நிலையிலேயே, இந்தியா, அது வகுத் தளித்த பாதுகாப்பு விதிமுறைகளை நிரந்தரமாக ஏற்றுக் கொண்டது. மேலும், ஈரான் தொடர்பாக அமெரிக்கா மேற் கொண்டு வரும் கொள்கைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண் டும் என்ற குறிப்பிட்ட நிபந்தனையையும் இந்த உடன்பாட்டை ஒட்டுமொத்தமாக செயல்படுத்தும் ஹைடு சட்டம் விதித் துள்ளது என்பதையும் நினைவு கூர வேண்டும். 

இந்திய அரசு, ஹைடு சட்டம் தன்னைக் கட்டுப்படுத்தாது என்று கூறுகிறது. ஆனால், அணு வர்த்தக குழுமத்தில் இந்தி யாவுக்கு அளிக்கப்பட்ட தடை விலக்கு தீர்மானத்தில், செப்டம் பர் 5-ம்தேதி அயல்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டுகிறது. அந்த அறிக்கையின்படி, இந்தியா, அணு எரிபொருளை செறிவூட்டுதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றுக்கான தொழில்நுட்பங்கள் பரவுவதை தடுப்பதற்கு சர்வதேச அளவில் மேற்கொள்ளப் படும் முயற்சிகளுடன் இந்தியா இணைந்து கொள்ளும் என்று, ஈரானின் பெயரைக் குறிப்பிடாமல் கூறப்பட்டுள்ளது. 

தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி எழுதியுள்ள கடிதமும் இதை தெளிவுபடுத்துகிறது. அந்த கடிதத்தில், “அணு எரிபொருளை செறிவூட்டுதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றுக்கான தொழில்நுட்பங்கள் பரவுவதை தடுப்பதற்கு அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்தியா தனது ஆதரவை தெரிவித்துள்ளது; அதே நேரத்தில் இது ஏற்கெனவே முழு அள வில் அணு ஆயுதங்களைப் பெற்றுள்ள, எரிபொருள் செறிவூட் டுதல் மற்றும் மறு சுழற்சி உலைகளை செயல்படுத்திக் கொண்டுள்ள நாடுகளுக்கு பொருந்தாது” என்று கூறப்பட் டுள்ளது. 

அணு ஆயுதப் பரவல் தடை உடன்பாட்டில் கையெழுத் திட்ட ஒரு நாடாகவே மாறியுள்ள இந்தியா, ஈரானின் இந்த உரிமைகளை மறுக்க வேண்டுமென்ற அமெரிக்க நிர்ப்பந்தத் திற்கு முழுமையாக இரையாகியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த அனைத்து அம்சங்களிலும், அமெரிக்காவின் ஹைடு சட்டம் செயல்படுகிறது. இதைத்தான் இடதுசாரிக் கட்சிகள் ஏற்கெனவே எச்சரித்தன. அமெரிக்க நாடாளுமன் றத்திற்கு புஷ் எழுதியுள்ள கடிதம், இந்திய அரசு தனது நாட்டு மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்பதையே மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. 

கருத்துகள் இல்லை: