மாலேகாவ் குண்டுவெடிப்பு பாணியிலேயே மர்மகோவா குண்டுவெடிப்பும் நடந்துள்ளது. மாலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்ஞா சிங் தொடர்புடைய கும் பல்தான் இந்த சதிச்செயலிலும் ஈடுபட்டுள்ளது.
2008ம்ஆண்டு மாலேகாவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பிரக்ஞா சிங் மற்றும் லெப்டினன்ட் கர்னல் ரோகித் உள்ளிட்ட இந்து மதவெறி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைதுசெய் யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடை பெற்று வருகிறது. இப்போது மர்மகோவாவில் குண்டு வைத்தவர்கள், சனாதன் சன் ஸதா என்ற ஆசிர மத்தை நடத்தி வந்துள்ளனர். பெண் சாமியார் பிரக்ஞா சிங் நடத்தி வந்த ஆசிரமத்தின் கிளை போலவே கோவா ஆசிரமம் செயல்பட்டு வந்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி கோவா மாநிலத்தில் இந்துக்கள் நரகாசுரன் உருவபொம் மையை எரிப்பது வழக்கமாம். இதில் போட்டி வைத்து பரிசுகள் வழங்கப்படுமாம். அதே போன்று இந்த தீபாவளிக்கு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் ஸ்கூட்டரில் குண்டு வைத்து வெடிக்கச்செய்து, தீபாவளி பண்டிகை யை சீர்குலைக்க முஸ்லிம் தீவிரவாத அமைப்பு கள் செய்த சதிச்செயல் என கலவரம் நடத்துவது இவர்களின் திட்டம். ஆனால் ஸ்கூட்டர் குண்டு வெடித் ததில் மெல்குண்டா பட்டீல் மற்றும் யோகேஷ் நாயக் என்ற இருவர் பலியாகி யுள்ளனர்.
இதைத்தொடர்ந்து கோவாவின் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில், சன்கோலா என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டி ருந்தது. இதிலிருந்து கோவாவின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி, பெரும் கலவரத்திற்கு ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் செயல்படும் மதவெறி அமைப்புகள் திட்டமிட்டிருந்தது தெளிவாகியுள்ளது.
மாலேகாவ் குண்டுவெடிப்பின் போது, பிரக்ஞா சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், இது இந்து துறவிகளுக்கு எதிரான அரசின் சதி என ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் கூச்சலிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் தோல் வியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள உள்கட்சி பூச லால் பாஜக திசை தெரியாத கப்பலாக திணறிக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து மீட்சிபெற தங் களது வழக்கமான பாணியிலேயே பாஜக பரி வாரம் செயல்படத் துவங்கியுள்ளது என்பதையே கோவா குண்டுவெடிப்பு உணர்த்துகிறது.
தமிழ்நாட்டில் தென்காசியில் இந்து முன்னணியினர் தங்களது அலுவலகத்திற்கு தாங் களே குண்டுவைத்துக் கொண்டு, பெரும் கல வரத்தை நடத்தியதும் இங்கே நினைவுகூரத் தக்கது. பொதுவாக குண்டுவெடிப்பு என்றாலே சிறுபான்மை மதவெறி அமைப்புகள் மீது பழிபோடுவது ஊடகங்களின் வழக்கமாக உள் ளது. வன்செயலில் யார் ஈடுபட்டாலும் அது தேசத்துரோகம், மக்கள் விரோதம்தான். நாட்டை சீர்குலைக்க நினைப்பவர்கள் அனைத்து மதவெறி அமைப்பின் பெயராலும் இயங்கிக் கொண்டிருக் கிறார்கள் என்ற கண்ணோட்டத்துடன் இந்த பிரச்சனை அணுகப்படவேண்டும். இந்து மத வெறி அமைப்புகள் குறித்தும் அரசும் புலனாய்வு அமைப்புகளும் மக்களும் விழிப்புடன் இருந்திட வேண்டும்.
செவ்வாய், 20 அக்டோபர், 2009
இந்துத்துவ கலவரக்காரர்களின் சதிச்செயல்
கோவாவில் உள்ள புகழ்மிக்க சுற்றுலாத்தல மான மர்மகோவாவில் ஸ்கூட்டர் குண்டு வெடித்து இரண்டு பேர் பலியான நிகழ்வின் பின்னணி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்து மதவெறி அமைப்பினை சேர்ந்தவர்கள் தீபாவளி கொண்டாட்டத்தின் போது குண்டுவைத்து, அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுவதற்கு சதி செய்துள்ளனர். ஆனால் குண்டு வைக்க முயன்றபோது இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
saravananவன்செயலில் யார் ஈடுபட்டாலும் அது தேசத்துரோகம், மக்கள் விரோதம்தான்.
கருத்துரையிடுக