செவ்வாய், 25 ஜனவரி, 2011

தலித்துகளை கோவிலுக்கு அழைத்து செல்லும் கட்சிக்கு ஆதரவு :ராமகோபாலன்


இந்துக்களை மதிக்கும் கட்சிக்கு ஆதரவு: ராமகோபாலன் பேட்டி
திருச்சியில் இந்து மக்கள் கட்சி அமைப்பாளர் ராமகோபாலன் நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார். அவர் பேட்டியும் எனது பதிலும்.

ராம: தமிழ்நாட்டில் பல கோவில்களில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடக்கின்றன.

முறைகேடுகளில் ஈடுபட்ட காஞ்சிபுரம் தேவநாதனையும்,
நித்தியாந்தாவையும் கேட்க்க வேண்டிய கேள்வி

ராம: கோவில் நிலங்களை விற்க கூடாது என்று சட்டம் உள்ளது.
ஆனால் பல இடங்களில் விற்கப்படுகின்றன.

யார் விற்பது நிலங்களை கோயில் நிர்வாகிகள்தானே

ராம: கோவில்களில் கட்டண முறைகேடுகள் நடக்கின்றன.

எல்லாம் அவாதான் பன்றா அவாகிட்ட சொல்லும்

ராம:பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.

பக்தர்களுக்குகா அவளுக்கா நன்னா புரியும் படி சொல்லுங்கோ

ராம:ராமாயணத்தை மக்களிடம் பரப்ப வேண்டும்.

ராமன் சம்புகனை கொன்ற மாதிரி இப்ப யாரையாவது கொல்லணுமா,
புதுசா எதாவது மசூதி இடிக்கனுமா

ராம:ராமாயண கலாச்சாரம் பரவினால் நாட்டில் குற்றங்கள் குறையும்.

அய்யோ தாங்கமுடியல......

ராம: தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக கூறுவது மக்கள் விரோத செயல்.
நீங்க தமிழரே இல்லை எந்த மக்களுக்கு விரோதம்

தலித்துகளை கோவிலுக்கு அழைத்து செல்லும் கட்சிக்கு ஆதரவு எப்புமே சொல்லமாட்டா ஆனா இந்து மதத்தை காப்பத்த போறளாம்.