வெள்ளி, 4 டிசம்பர், 2009

மதவெறியர்களுக்கு எதிராக குரல் கொடுப்போம்!

பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறு வனம் தயாரித்து வெளியிட்ட ‘வரைவுப் பொதுப்பாடத் திட்டம்- 2009-ல் கடவுள் வாழ்த்து இடம் பெறவில்லை எனவும், இதை எதிர்த்து பள்ளிவாயில்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலனும், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தும் தெரிவித்திருப்பதாகப் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.

பாட வல்லுநர்களே பாடத் திட்டத்தைத் தயாரித்துள்ளனர். பாடத் திட்டத்தின் மீது பலரும் பல விமர் சனங்கள், கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஆக்கப்பூர்வமான முற் போக்கான ஆலோசனை களை முன்வைப் பதை விடுத்து, பள்ளியின் முன்பு ஆர்ப்பாட் டம் நடத்துவோம்’ என்பது பாடத்திட்டம் உரு வானது குறித்த எந்தவிதப் புரிதலும் இல்லாத ஜனநாயக விரோதச் செயலாகும் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கண்டித் துள்ளது. அதன் பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிக்கை வருமாறு:

இந்தியா ஒரு மதச்சார்பற்றநாடு. அரசை வழி நடத்துவது இந்திய அரசியலமைப்பே ஆகும். அர சியலமைப்பு கூறும் மதச் சார்பற்ற கோட்பாட்டிற்கு விரோதமாக மத நம்பிக்கையைக் கட்டாயப்படுத்திக் கல்வி மூலம் திணிக்க இயலாது. ஒரு மதச்சார்பற்ற அரசு தயாரிக்கும் பாடத்திட்டத்தில், இதுதான் கட வுள் வாழ்த்து என எந்தப் பாடலையும் குறிப் பிட இயலாது. அப்படி ஒரு தவறு ஏற்கெனவே நிகழ்ந்துள்ளது என்றால் அதைத் திருத்திக் கொள்வதே நியாயமான செயலாகும். திருத்திக் கொண்டதை எதிர்ப்பது அறிவுடைமையாகாது.

முத்தமிழ்க் காப்பியம், மூவேந்தர் காப்பியம் எனப் போற்றப்படும் தமிழின் பண்பாட்டு அடையாள மாய்த் திகழும் சிலப்பதிகாரத்தில் வாழ்த்துப் பகுதிதான் உண்டு. ஞாயிறும், திங்க ளும், மழையும், புகார் நகரும்தான் வாழ்த்தப் படுகிறதே தவிர கடவுள் வாழ்த்து இல்லை. வாழ்த்துவதில் கூட இளங்கோவடிகள் சோழ மன்னனை மிகைப்படுத்தி அவனுடன் ஒப் பிட்டே வாழ்த்தை இயற்றுகிறார். தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் அதன் தனிச் சிறப்பு களையும் அறியாதவர்களே ‘ஆர்ப்பாட்டம்’ எனக் கொக்கரிக்கின்றனர். இச்சலசலப்பிற்கு அரசு பணிந்துவிடக் கூடாது.

தமிழ்ப் பாடத் திட்டத்தைப் பற்றிப் பேச வந்துள்ள ராமகோபாலனும் அர்ஜூன் சம்பத் தும் “தமிழை நீசபாஷை” என ஜெயேந்திர சரஸ்வதி கூறியபோது வாய்திறக்காதது ஏன்?

இன்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சாதிய ஒடுக்குமுறையால் கோயிலில் நுழைய முடி யாமல் போராடி வருகிறார்களே. அவர்களை கோயில் உள்ளே அழைத்துச் செல்ல முன்வராதது ஏன்?

கோயிலுக்குள் செல்ல முற்பட்டபோது போலீஸ் தாக்குதலாலும், ஆதிக்கச் சாதிக ளின் தாக்குத லாலும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஆதர வாகக் குரல் கொடுக்காதது ஏன்? தாக்குதலைக் கண்டிக்காதது ஏன்?

தமிழ்நாடு அரசு ‘அனைவரும் அர்ச்சக ராகலாம்’ எனச் சட்டம் இயற்றிய பிறகும் தாழ்த்தப்பட்ட மக் கள் தகுதி பெற்றும் அர்ச்சக ராக முடியவில்லையே. இந்து முன்னணியும், இந்து மக்கள் கட்சியும் தாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சகராக்க முன்வரவில்லையே ஏன்?

கம்பராமாயணத்தில்கூட வாலி வதைப் படலத்தைப் பாடத்தில் வைக்க இவர்கள் விரும்புவார்களா?

சமூகத்தில் அடித்தட்டு மக்களைக் கோயிலுக்கு உள்ளே நுழைய மறுத்துவிட்டு, சாதியின் பெயரால் ஒரு பகுதி மக்கள் அர்ச் சகர்களாவதைத் தடுத்து விட்டு, ‘நீசபாஷை’ என தமிழ் மொழியை இழிவுபடுத்தியவரை கண்டிக்கத் தவறிவிட்டு, கடவுள் வாழ்த்தைப் பற்றிப் பேசுவதற்கு இந்து முன்னணிக் கும் இந்து மக்கள் கட்சிக்கும் என்ன தகுதி இருக் கிறது?

கடவுளை நம்புவதும், நம்பாமல் இருப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமை. இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. அவரவர் நம்பும் கடவுளை அவரவர் வழிபடுவதும் அரசியலமைப்பு தந்திருக்கும் உரிமை.

அரசிற்கு எந்த மதமும் கிடையாது. பாடத் திட்டத்தில் ‘கடவுள் வாழ்த்து’ படிக்கச் சொல்லி அரசால் கட்டாயப்படுத்த முடியாது, கூடாது.

‘மாற்றம்’ என்ற சொல்லைக் கூட விரும்பாதவர்கள், தீண்டாமையை எதிர்த்துப் போராட முன்வராதவர்கள், மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் மக்களைக் கூறு போட நினைப்பவர்களை தமிழ் நாட்டு மக்கள் நிராகரிக்க வேண்டும். தரமான கல்வி சமச்சீராக அனைத்துக் குழந்தைகளுக்கும் கட் டணமில்லாமல் கட்டாயமாகக் கிடைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் எனப் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கேட்டுக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை: