ஞாயிறு, 18 ஜனவரி, 2009

கேம்ப்ரிட்ஜ் டாக்டருக்கு கேள்விகள் ஏழு...

* 52 ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில்தான் (1956) 245 தனியார் இன்சூ ரன்ஸ் கம்பெனிகள் தேசியமயமாக்கப்படுவ தாக அறிவிக்கப்பட்டது. காரணம் லஞ்சமும், ஊழலும் தனியார்களின் நிர்வாகத்தில் புரையோடிக் கிடந்ததுதான்.


* 53வது தேசியமய நாளைக் கொண் டாடுகிற இவ்வேளையில் (2009) நாடாளு மன்றத்தின் முன்பு இரண்டு மசோதாக்கள். ஒன்று- அந்நிய முதலீட்டை உயர்த்துவது, இரண்டாவது- எல்ஐசியை எதிர்கால பங்கு விற்பனைக்கு தயார் செய்வது.

* ஒருபுறம் சோனியாகாந்தி இன்சூ ரன்ஸ், வங்கி தேசியமய முடிவுகளுக்காக தாத்தாவையும், மாமியாரையும் புளகாங்கி தத்தோடு நினைவு கூர்கிறார். மறுபுறம் மன் மோகன் சிங் மசோதாக்களை அறிமுகப் படுத்தும்போது மறைமுகமாக பச்சைக்கொடி காண்பிக்கிறார். மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கி கவர்னராக, மூன்றாம் உலக நாடு களின் பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்த சௌத் கமிஷனின் உறுப்பினர் செயலராக, நிதியமைச்சராக இருந்து இன்று பிரதமராகவும் தொடர்பவர். எனவே அவருக்கு சில கேள்விகளைப் போடுவோம்.

1. இன்சூரன்ஸ் பரவலாக்கல்தான் சீர் திருத்தங்களின் இலக்கு என அறிவிக்கப்படு கிறது. 1956ல் 40 கோடி மக்கள் தொகை இருந்த போது 245 தனியார் கம்பெனிகளின் மொத்த பாலிசிகள் 50 லட்சம் மட்டுமே. அதாவது ஒன்றே கால் சதவீதம்தான். 2008ல் மக்கள் தொகை 110 கோடிகள். ஆயுள் காப்பீட்டுக் கழகம் மட்டுமே தந்துள்ள பாலிசிகள் 24 கோடிகள். அதாவது 22 சதவீதம். பிரதமரே! இன்சூரன்ஸ் பரவலாக் கலுக்கு உதவியுள்ளது யார்? பொதுத் துறையா! தனியாரா!

2. சேவை மேம்படுமென்பது மற்றொரு வாதம். 1956ல் எல்ஐசி துவங்குவதற்கு முன் பாக பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படாத உரிமங்கள் (டீருகூளுகூஹசூனுஐசூழு ஊடுஹஐஆளு) 60 சத வீதம் ஆகும். நூறுபேரில் 60 பேருக்கு கிடைக் கவில்லை என்று அர்த்தம். டாடா கம்பெனி யில் 59 சதவீதம், பிர்லா கம்பெனியில் 50 சத வீதம். இது தனியார்களின் சேவை. இன்று எல்ஐசியில் பாலிசிதாரர்களுக்கு வழங்கப் படாத உரிமங்கள் அரை சதவீதத்திற்கும் குறைவு. அதாவது அநேகமாக அனைவருக் கும் கிடைத்துவிடுகிறது. கேம்பிரிட்ஜ் பல் கலையில் டாக்டர் பட்டம் பெற்ற மன்மோ கன் அவர்களே! உலகிலேயே இத்தகைய சாதனையை நிகழ்த்திய இன்சூரன்ஸ் நிறு வனம் ஏதாவது உண்டா?

3. திறம்பட்ட செயல்பாடு என்பது முக் கியமான அளவுகோல். மகாபாரதத்தில் கண் ணனின் சின்னவாய்க்குள் அண்டசராசரங் களும் தெரிவதாக அழகான கற்பனை உண்டு. ஆனால் ரூ.5 கோடி முதலீடு மட் டுமே இடப்பட்ட ஆயுள் காப்பீட்டுக் கழகம் இன்று ரூ.8,03,820 கோடிகள் சொத்தோடும், ஒவ்வோராண்டும் ஒன்றரை லட்சம்கோடிகள் பிரிமிய வருவாயோடும் வளர்ந்திருக்கிற நிஜம் எவ்வளவு பெரியஅதிசயம்! சந்தையின் மீது தீராக்காதல் கொண்ட இந்தியப் பிரத மரே, சந்தையே வியக்கிற வளர்ச்சியல்லவா இது?

4. நம்பகத்தன்மைதானே இன்சூரன்ஸ் துறையின் பிரதான மூலதனம். உலக நிதி நெருக்கடி என்ற குலுக்கலில் ஏஐஜி. யமோட்டோ போன்ற நிறுவனங்கள் உதிர்ந்து போய் அரசின் மீட்பு நிதிக்காக கையேந்தி நிற்கின்றனவே! அரசு உத்தரவாதமென்கிற செயற்கை சுவாசத்தால் பிழைத்துக் கொண் டிருக்கிற பன்னாட்டு நிதிநிறுவனங்கள்தான் எத்தனை? ஆனால் 1956லிருந்து ஒரு பைசா வுக்குக் கூட அரசின் கதவுகளைத் தட்டாத எல்ஐசியிடமிருந்து அரசு உத்தரவாதத்தைப் பறிப்பதற்கு முயற்சிப்பது ஏன்? நிதித் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட மன் மோகன் அவர்களே! உங்கள் நோக்கம்தான் என்ன?

5. பாலிசிதாரர் வருவாய் பெருகுவது தானே சீர்திருத்தங்களின் விளை பொரு ளாய் இருக்க வேண்டும். ஆனால் 95 சதவீத உபரியை பாலிசிதாரர்களுக்கு வழங்கி வரு கிற நிலையை மாற்றி 90 சதவீதத்தை எல்ஐசி வழங்கினால் போதுமென்று சட்டத்தைத் திருத்துவது எதற்காக?

6. புதிய, புதிய காப்பீட்டுத்திட்டங்கள் அறிமுகமாகுமென்று சொல்லப்பட்டது. சீர்திருத்தங்களின் பிதாமகரே! ஆயுள் காப் பீட்டில் உள்ளே நுழைந்த 21 தனியார் நிறு வனங்கள் புகுத்திய புதிய திட்டங்கள் தான் என்ன? எல்லாவற்றையும் பங்குச்சந்தையை நோக்கித் திருப்பி இன்று பாலிசிதாரர் களுக்கு 50, 60 சதவீதம் வரை இழப்பு ஏற் பட்டுள்ளதே! இதற்கு யார் பொறுப்பு? இதி லும் எல்ஐசி பங்குச்சந்தை திட்டங்களில் 20 சதவீதம் என்கிற குறைவான இழப்பு தானே! பங்குச்சந்தை வீழ்ச்சியில் குறைவான காய மும், பங்குச்சந்தை வீழ்ச்சியை தனது முதலீட் டால் தடுத்து நிறுத்துகிற மாயமும் எல்ஐசி யால் நிகழ்த்தப்படுவதுதானே?

7. தேச நிர்மாணம் பற்றி நிறையப் பேசு கிறீர்கள். அரசுப் பத்திரங்கள் மூலமாக எல்ஐசி திரட்டியளித்துள்ள நிதியாதாரங்கள் 3,87,532 கோடிகள், மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர்த்திட்டங்கள், சாலைகள் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்கு ரூ.82022 கோடி கள். ஆனால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவ னங்கள் கடந்த 8 ஆண்டுகளில் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்குக் கொண்டு வந்தது எவ்வளவு?

இது சாம்பிளுக்காக எழுப்பப்பட்ட ஏழு கேள்விகள். ஏராளமான கேள்விகள் இன் னும் உண்டு. 1956ல் கருவாகி, உருவாகி, வளர்ந்து, விரிந்து நிற்கிற கற்பக விருட்ச மல்லவா எல்ஐசி. இதை வெட்டி வீழ்த்த கோடாரியைத் தூக்கிக் கொண்டு அலை வது ஏன்?

-ஜீவன், மதுரை

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

After all the frauds being exposed world over and the greed driven ineffiencies of the insurance companies - AIG - should teach some lesson to us.

How do we stop this? will a public litigation work against such attrocities by the government? such inaction will take our country back to slavery. Already the opening up of the market made the uniform pay scale a mockery and screwed up the social fabric. I hope we learn some lessons from all these!