சனி, 25 ஏப்ரல், 2009

ஒரு ரூபாயும் ஒரு லட்சம் கோடி ரூபாயும்

‘ஒரே ரூபாயில் இந்தியா முழுமை யையும் இணைத்துவிட்டோம் பார்த்தீர்களா... சாமானிய மக்களிடமும் செல் போனை கொடுத்துவிட்டோம் பார்த்தீர்களா... தொலைத்தொடர்பு துறையில் புரட்சியல்லவா.. இவையெல்லாம் எங்கள் சாதனையல்லவா.. மீண்டும் தொடர வாக்களிப்பீர் எங்களுக்கே...” நாடாளுமன்ற தேர்தலில் அலங்காரமாக முன் வைக்கப்படும் பிரச்சாரங்களே இவையெல்லாம்...

ஒரு ரூபாயை பற்றி ஊரெல்லாம் பேசி தம்பட்டமடிக்கும் இவர்கள், பேசாமல் மறைப்பது ஒரு லட்சம் கோடி ரூபாயை.. ஆம்.. இந்திய அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய ஒரு லட்சம் கோடி ரூபாயை தடுத்து ஒருசில “உப்புமா” கம்பெனிகளுக்கு திருப்பிவிட்ட சாதனையாளர்களாயிற்றே இவர்கள்... மறக்க முடியுமா...

தெருவில் நடந்துபோய்க் கொண்டிருக்கும் சாமானிய மனிதர்கள் முன்னால் ஒரு ரூபாயை தூக்கிப்போட்டு அதை அவர்கள் குனிந்து எடுக்கிற போது அவர்களிடமிருந்து ஆயிரக்கணக் கில் “அடித்துக்” கொண்டு போவது ஜேப்படி திருடர்களின் வாடிக்கை.. இவ்வகை திருட்டில் கீழே போடப்படும் ஒரூ ரூபாய் ஜேப்படி திருடனுடைய மூலதனமாக வும், களவாடப்படும் பணம் மக்களு டையதாகவும் இருக்கும்.. ஆனால் இங்கோ ஒரு ரூபாயும் மக்களுடையது. களவாடப்பட்ட ஒரு லட்சம் கோடி ரூபாயும் மக்களுடையதே.. ஒரு ரூபா யைக் கூட மூலதனமாக போடாமல் ஒரு லட்சம் கோடி ரூபாயை சுருட்டிக் கொண்டு போன ‘கெட்டிக்காரர்களை’ என்னதான் செய்வது.. எந்த நீதிமன் றத்தில் நிறுத்தி எப்படித்தான் தண்டிப் பது... இதோ... எளிய வழி இருக்கிறது.. மே 13 நாடாளுமன்ற தேர்தலன்று வாக்குச் சாவடிகளையே நீதிமன்றங்களாக மாற்றுவதே அந்த வழி...

-பத்ரி

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

//‘ஒரே ரூபாயில் இந்தியா முழுமை யையும் இணைத்துவிட்டோம் பார்த்தீர்களா...//
ஒரே ரூபாயில் இந்தியா முழுமையையும் ஏமாற்றி விட்டோம் பார்த்தீர்களா!